Friday, November 5, 2010

ரஜினியும் லியோனியும் -டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

நமது பண்டிகைகள் டிவி முன் தான் செலவிடுவது என ஆகி போய் கொஞ்ச காலமாகிறது. லீவு நாளில் வேலை இல்லாமல் பின் எப்படி தான் பொழுதை கழிப்பது?  புக் படித்தால்  " குடும்பத்தோடு கூட இல்லை" என பிரச்சனை வரலாம். குடும்பத்துடன் டிவி பார்த்தால், அவர்களுடன் பொழுதை கழித்த மாதிரி ஆச்சு. இந்த வருட தீபாவளி டிவி நிகழ்சிகள் எப்புடி?? வாங்க பாக்கலாம்


**

முதலில் டிவியில் தீபாவளி சிறப்பு  படங்கள் : ம்ம்ம் என்னத்தை சொல்றது! அழகிய தமிழ் மகனுக்கு பிறகு விஜய் நாலு படம் நடிச்சு முடிச்சாச்சு. அதை தீபாவளி சிறப்பு படம்னு சன்னில் போட்டாங்க. ரிலீஸ் ஆகி மூணு வருஷம் கழிச்சு சிவாஜி இப்போ தான் கலைஞரில் !! இதனை தியேட்டர் அல்லது சிடியிலாவது இதுவரை பார்க்காமல் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன் பண்டிகை ஒன்றுமே இல்லாமல் திடீரென ஈரம் போட்டார்கள். தீபாவளிக்கு மீண்டும் சில மாதங்களில் அதே ஈரம்!! தீபாவளிக்கு முதல் நாளே விஜயில் போடப்பட்ட களவாணி தான் தீபாவளி சிறப்பு படங்களில் ஓகே. ஆனால் ஏகப்பட்ட விளம்பரங்களுடன் நான்கு மணி நேரத்துக்கு மேலாய் படம் ஓடி கொண்டிருந்தது. (நாலு மணி நேரம் தாண்டியதும் நிறுத்தியாச்சு) 

***
லியோனி பட்டி மன்றம் சிரிக்கலாம் என்ற எண்ணத்தில் அவ்வபோது பார்ப்பதுண்டு; கலைஞரில் லியோனி இம்முறை ஏமாற்றவில்லை. தலைப்பு "திரை பட பாடல்கள், படம் வெற்றி பெற உதவுகிறது / உதவ வில்லை".  வழக்கமாய் லியோனி பேச்சு தான் செம சிரிப்பாய் இருக்கும். இம்முறை இனியவன் என்ற இளைஞர் பேசியதில் வீட்டில் அனைவரும் உண்மையில் விழுந்து விழுந்து சிரித்தோம். புது பாடல்களுக்கு அவர் குடுத்த விளக்கங்கள் தான் ஹை லைட். உதாரணத்திற்க்கு ஒன்று: " லாலாக்கு டோல் டப்பிம்மா" பாட்டு பெண்களை காப்பாற்றும் பாட்டு . லாலா என்றால் திருநெல்வேலி ; டோல் டப்பி மா இவை அடுப்பு சாப்பாடு மாவு இவற்றை குறிக்கும். திருநெல்வேலியில் அடுப்பில் மாவு வேலை செய்யும் கங்கம்மா, உன் இடுப்பை திருப்பி பின்னால் பார் , இல்லா விடில் உன் புடவையில் நெருப்பு பத்திக்கும் என்ற அர்த்தம் உள்ள பாட்டு" என்றார். மேலும் பல பாடல் விளக்கங்கள் செம சிரிப்பு.  

நிறைய இடங்களில் சிரிக்க முடிந்ததால்  இந்த நிகழ்ச்சி நன்கு என்ஜாய் செய்ய முடிந்தது. 
**
இந்த லியோனி பட்டி மன்றம் கலைஞரில் நடக்கும் போதே விஜயில் கமல் பேட்டி!! விளம்பர இடைவெளிகளில் மாறி மாறி பார்த்த வரையில் வாலி, வைரமுத்து, ஞான சம்பந்தன், கலைஞர் என அனைவரும் கமல் ஒரு மிக சிறந்த கவிஞர் என சொல்லி வாய்த்த மாதிரி பேசினார்கள்.வேற ஒண்ணும் இல்ல.. மன்மதன் அம்புல கமல் நாலு பாட்டு எழுதுறாருள்ள!! அதான் !! அப்புறம் கமல் ஆர்.சி சக்தி போன்றோருடன் இருந்த புகை படங்களை காட்டி பேசி கொண்டிருந்தார். (கேட்டாச்சு !! கேட்டாச்சு!!) வழக்கம் போல் இருந்தது கமல் பேச்சு.   கமலின் இந்த பேட்டி புரிந்தது என்று சொன்னால் என்னை அறிவு ஜீவி என நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அது உண்மை இல்லை என்று சொல்ல எனக்கும் அதே அளவு உரிமை உண்டு. (ஹிஹி.. கடைசி வரிகள் கமல் பாதிப்பு )
**
தீபாவளிக்கு வந்த புது பட பாடல்களில் இது வரை டிவியில் பார்த்த வரை " மைனா" படத்தின் "ஜிங் சிக்கா" பாடல் செம டப்பங்குத்தாய் உள்ளது. பீட் & டியூன் அருமை. இசை இமானாம். நம்ப முடிய வில்லை!!!
**
விஜய் டிவியின் சிறப்பு நீயா நானா தலைப்பு : வெற்றி பெற அதிகம் தேவை: கடின உழைப்பா; அதிர்ஷ்டமா? பிரபு சாலமன், வெங்கடேஷ், நந்தினி  போன்ற இயக்குனர்கள் மேலும் பல சின்ன திரை நட்சத்திரங்கள் ( நோ ரெகுலர் பப்ளிக்) கலந்து கொண்ட நிகழ்ச்சி. இந்த தலைப்பு திரை உலகில் வெற்றி பெற தேவை உழைப்பா அதிர்ஷ்டமா என்றே சென்றது. திரை உலகம் மற்ற துறைகளில் இருந்து மிக வித்யாசமானது. அதன் நடை முறை, ரூல்கள் பிற துறைகளுக்கு (உதாரணமாய் ஒரு அலுவலகத்தில் பணி புரிபவருக்கு) ஒத்து போகாது. தலைப்பு ஓரளவு நன்றாயிருந்தாலும் கலந்து கொண்டவர்கள் பேச்சு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. 

**
மிக அதிக நாட்களாய் விளம்பரம் செய்யப்பட்ட " எந்திரன் உருவான கதை" - ஓரளவு சுவாரஸ்யமாய் இருந்தது. இதில் கவனித்த சில துளிகள்:

* ரஜினிக்கு பெரும்பாலும் டூப் இருந்த மாதிரி தெரியலை; ஒன்று ரஜினி; அல்லது கம்பியுடர் கிராபிக்ஸ். நாம் கிராபிக்ஸ் என நினைத்த பல இடங்களில் ரஜினியை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார்கள்.

* ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பல நேரங்களில் கேமராவை தோளில் சுமத படியே ஓடுகிறார். பாவம்.. செம வெயிட் .. கடும் உழைப்பு..

* படம் பார்த்த போது ஐஸ்வர்யா ராயை  அதிகம் ரசிக்கலை.  படம் நடந்தஷூட்டிங் ஸ்பாட்  இடங்களுடன் (Live  ) பார்த்த போது அவரது நடன அசைவுகளை ரசிக்க முடிந்தது.
***
டிவியில் செய்திகள் அல்லது விளம்பரம் வரும் இடைவெளியில் சுட சுட எழுதப்பட்ட பதிவு. 

புத்தாடை, இனிப்பு, ஓரிரு உறவினர்கள் வீட்டுக்கு செல்வது, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் வெடியுடன் வழக்கம் போல் கழிந்தது தீபாவளி.. 

ம்ம் இன்னும் ஒரு வருஷம் ஆகும் அடுத்த தீபாவளி  வர.. 

17 comments:

 1. சுடச் சுட விமர்சனம் அருமை.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 2. இத்தனை சீக்கிரமாவா? அமர்க்களம்!

  ReplyDelete
 3. //புக் படித்தால் " குடும்பத்தோடு கூட இல்லை" என பிரச்சனை வரலாம்//

  அப்போ தீபாவ‌ளி நாளில் இந்த‌ ப‌திவு எப்ப‌டி? இதுக்கு நீங்க‌ கொஞ்ச‌மாவ‌து வாங்கி க‌ட்டிருக்க‌ணுமே

  ReplyDelete
 4. // நாம் கிராபிக்ஸ் என நினைத்த பல இடங்களில் ரஜினியை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார்கள்.//

  Very true.

  I am impressed with the making of the film, though I didn't watch this program fully & intentionally.

  ReplyDelete
 5. ரஜினி வயதுக்கு இப்படி கஷ்டப்பட தேவையே இல்லை..ஆனாலும் அவரின் இந்த உழைப்பு பிரமிக்க வைக்கிறது

  //ம்ம் இன்னும் ஒரு வருஷம் ஆகும் அடுத்த தீபாவளி வர.. //

  எங்களுக்கு அடுத்த மாசம் இன்னொரு தீபாவளி இருக்கே :))

  ReplyDelete
 6. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  ReplyDelete
 7. சுட சுட தீபாவளி டி. வி. நிகழ்ச்சிகள் பற்றி விமர்சனம் போட்ட உங்களுக்கு உடனே பின்னூட்டம் இடாவிட்டால் எப்படி?

  தீபாவளி அன்று டி. வி. நிகழ்ச்சிகள் பார்க்க வாய்ப்பில்லையே என்று சிறிது ஆதங்கம் ஓரத்தில் இருந்தது. உங்கள் சிறப்பு கண்ணோட்டத்தில் அது பாதி குறைந்து விட்டது. நன்றி.

  ReplyDelete
 8. உங்களுக்குப் பொறுமை ஜாஸ்தி நண்பா..:-))

  ReplyDelete
 9. ராகவன் சார் & ஜனா சார் நன்றி; உங்கள் இருவரின் பின்னூட்டம் கூட சுட சுட கிடைத்தது
  **
  ரகு: ம்ம்ம் சரியா பாயின்ட்ட பிடிச்சீங்க. நீங்கள் பாகவதர் வழக்கு பற்றி எழுதும் போதே நினைத்தது தான்: நீங்க வக்கீல் ஆயிருக்கலாம் :))
  **
  நன்றி மாதவன்.
  **
  அட வெற்றி: அப்படியா? சந்தோசம். வாழ்த்துக்கள்
  **
  நன்றி ஸ்வேதா அவர்களே
  **
  ஆதி மனிதன் நன்றி; நீங்கள் வெளி நாட்டில் உள்ளீர்களா? தங்கள் கருத்துக்கு நன்றி
  **
  கார்த்திகை சார்: கலாய்க்கிறீங்க ரைட்டு ; TV பார்த்ததற்கு ஓரு பதிவு கிடைத்தது. ஹிட் கவுண்டர் மூலம் கவனித வரை இந்த பதிவை வாசித்தோர் எண்ணிக்கை மிக மிக அதிகம். இது ஆச்சரியமாய் இருக்கிறது

  ReplyDelete
 10. சுடச் சுட விமர்சனம் – சூப்பரான விமர்சனம். தீபாவளி இனிந்தே முடிந்தது – அடுத்த தீபாவளிக்கு இன்னும் ஒரு வருஷமா????

  ReplyDelete
 11. நிகழ்ச்சிகள் நானும் பார்த்தேன். ஆனால் மாறி மாறி பார்த்து எதையும் முழுதாக பார்த்த திருப்தியில்லை!

  ReplyDelete
 12. ரஜினியின் பேட்டி அவ்வளவு திருப்தியாக இல்லை. பாவம்... அறுபது வயதுக்கு மேல் உள்ளவரை இவ்வளவு வேலை வாங்கி உள்ளார்கள்.

  உங்கள் டிவி நிகழ்ச்சிகள் குறித்த கண்ணோட்டம் நன்கு. இன்னும் விரிவாக இருந்திருக்கலாம்.

  ReplyDelete
 13. உண்மை தான் மோகன் சார்..
  ஒரு நிகழ்ச்சியும் ரசிக்கும்படி இல்லை.. மேக்கிங் ஆஃப் எந்திரனும், சிவாஜியும் தான் நேற்றைய (TV) தீபாவளியை உயிர்ப்போட வைத்திருந்தன..

  ReplyDelete
 14. Kamal looked very odd (no spelling mistake) in the show ( Kabi with Anu ) Good coverage.

  ReplyDelete
 15. நன்றி வெங்கட். என்னை போலவே நீங்களும் இன்னும் ஒரு வருஷம் ஆகும் என்கிறீர்கள். தீபாவளி தானே நாம் அனைவரும் கொண்டாடும் பெரிய பண்டிகை. அது தான் !!

  **
  நன்றி எஸ். கே அவர்களே
  **

  எஸ் said :
  //உங்கள் டிவி நிகழ்ச்சிகள் குறித்த கண்ணோட்டம் நன்கு. இன்னும் விரிவாக இருந்திருக்கலாம்//
  இன்னும் விரிவாகவா? இதுக்கே சில பேர் கிண்டல் பண்றாங்க..
  **
  ஆம் மணிகண்டன் நீங்க சொல்வது சரிதான்
  **
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன்
  **

  ReplyDelete
 16. மோகன் ஜி....

  கலக்கலான தொகுப்பு செய்திகள்...

  //கமலின் இந்த பேட்டி புரிந்தது என்று சொன்னால் என்னை அறிவு ஜீவி என நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அது உண்மை இல்லை என்று சொல்ல எனக்கும் அதே அளவு உரிமை உண்டு. (ஹிஹி.. கடைசி வரிகள் கமல் பாதிப்பு )//

  என்னை மிகவும் கவர்ந்தது இது...

  அதே பாதிப்பு என்னுள் ஏற்படுத்தியதை இங்கே வந்து பார்க்கவும்...

  மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html

  ReplyDelete
 17. ஆமாம். நான் வெளிநாட்டிலும் உள்நாட்டின் வெளிநாட்டிலும் (வெளி மாநிலங்களிலும்) மாறி மாறி சுற்றுபவன். தற்போது வெளிநாட்டில் உள்ளேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...