Monday, December 13, 2010

ஈசன் & ஆடு களம் பாடல்கள் விமர்சனம்படம்: ஈசன்  
இசை :ஜேம்ஸ் வசந்தன்;
****


பாடல் 1: ஜில்லா விட்டு ஜில்லா வந்த 


(பாடியவர்: தஞ்சை செல்வி ;  பாடல் : மோகன் ராஜன்  )

நாதஸ்வரத்தை வாசிக்கும் முன் ஊதி பார்க்கும் சத்தத்துடன் ரொம்ப சாதாரணமாக ஆரம்பிக்கிறது பாடல்.  ஒரு பெண்ணின் கதையை சொல்லும் மிக கனமான, வருத்தமான பாடல்.  நம் நாட்டு புற பாடல்கள் பலவும் போல கனமான விஷயத்தை அருமையான இசை வாத்தியங்களுடன் இப்பாடல் சொல்லுகிறது. எங்கள் தஞ்சை மாவட்டத்தில் விழாக்களிலும் தெருவிலும் கேட்ட பாடல்களை நினைக்க வைக்கிறது. துவக்கத்தில் கேட்கும் போது இசைக்காகவே தான் ரசிப்போம் (குறிப்பாய் திரும்ப திரும்ப ஒரே விதமாய் ஒலிக்கும் இசை - நாதஸ்வரம் என நினைக்கிறேன்.. மிக அருமை ) .  பாடல் வரிகளை  உற்று கேட்டால் மனம் கனத்து போகிறது. சமீபத்து பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்த அதே சமயம் disturb-ம் செய்த பாடல் இது.  பாடல் 2:கண்ணில் அன்பை சொல்வாளே
(பாடியவர் : பத்மநாபன் பாடல்: நா. முத்து குமார் ) 

காதலி பற்றி காதலன் பாடும் தனி (Solo) பாடல் 

"கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே..
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள் 
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்" 

என துவங்கும் போது நிறைய எதிர் பார்க்க வைக்கிறது. ஆனால் போக போக 1980 / 1990 காலத்து பாடல் கேட்பது போல் உள்ளது. "உறவென்னும் வார்த்தைக்கு அர்த்தம் இவளிடம் கண்டேன்; என்றும் இவள் சொந்தம் வேண்டும்" என்பதெல்லாம் ரொம்ப பழைய சமாச்சாரம் இல்லையா முத்து குமார் சார்?

**
இது தவிர மெய்யான இன்பம் என்ற பாடல் இரவு வாழ்க்கை பற்றி சொல்கிறது. பாடல் ஓரளவு நன்றாக இருந்தாலும் திரும்ப திரும்ப ஒலிக்கும் "மெய்யான இன்பம் இந்த போதையாலே" என்று போதையை போற்றும் வரிகளால் சற்று பிடிக்காமல் போகிறது. மற்ற பாடல்கள் நான்கைந்து முறை கேட்டும் கூட இதுவரை அதிகம் ஈர்க்க வில்லை.
**
படம்: ஆடுகளம் 
இசை : GV பிரகாஷ் குமார்
பாடல் 1: ஒத்த சொல்லால  
(பாடியவர் : வேல்முருகன் ) 

தாரை தப்பட்டையுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது பாட்டு. பாடல் முழுதும் மெட்டு அங்கங்கு மாறி கொண்டே இருப்பது ரொம்ப இனிமையாக உள்ளது. மெட்டு &  பீட் இரண்டிற்காகவும் இந்த பாடல் பலரையும் நிச்சயம் கவரும். சில இடங்களில் கோரசாக பாடுவது போல் உள்ளதால் பாடல் வரிகள் சரியே புரிய வில்லை என்பது மட்டுமே சிறு குறை. 

பாடல் 2 : யாத்தே யாத்தே 
(பாடியவர் : GV பிரகாஷ் குமார்   பாடல்: சிநேகன் ) 

செமையான இசையுடன் கூடிய பாட்டு. இந்த பட ஆல்பத்தில் முதலில் ஹிட்டான பாடல் இது தான். பாடியது இசை அமைப்பாளர் GV பிரகாஷ் குமார் என்பது ஆச்சரியமான தகவல்.  

வெள்ளை நிறமான பெண்ணை,

" வெள்ளாமை வச்சுத்தான் வெளுத்தாங்களா? உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா"  என்பது புன்னகை வர வைக்கிறது. மெதுவாகவும் பின் வேகம் கூடியும் மறு மறு படி செல்கிறது பாடல். அடுத்த வருடத்து ஹிட் பாடல்கள் லிஸ்டில் ( படம் ரிலீஸ் 2011 தானே? )இடம் பிடிக்க போகும் பாடல் 

வெற்றி மாறன் இந்த இரு பாடல்களையும் எப்படி படமாக்கியிருப்பார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். (நான் நிச்சயம் தனுஷ் ரசிகன் இல்லை !!) 

பாடல் 3: அய்யையோ நெஞ்சு அலையுதுடி 

 அப்பா & மகன் ( SPB & சரண் ) சேர்ந்து பாடிய அபூர்வ பாடல். ஆனால் பாட்டு ஒரு டூயட் !! பெண் குரலாக பிரசாந்தினி உண்டு. இந்த வயதிலும் SPB குரல் என்னமாய் குழைகிறது! இழைகிறது !! சரண் குரல் எங்கே என்று தான் தெரிய வில்லை. கேட்க கேட்க இன்னும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. 

வெண்ணிலவே என்று ஆரம்பிக்கும் மிக மெதுவான (ஆவ்வ்) பாடல் இந்த தொகுப்பில் திருஷ்டி பரிகாரம் போல் உள்ளது.

இதை தவிர பொல்லாதவன் படத்து  ராப் பாதிப்பில் யோகி பாடிய ராப் பாடல் ஒன்றும் உண்டு. (செண்டிமெண்ட்??). இந்த பாடல் நடுவில் வரும் கிராமத்து திருவிழா அறிவிப்புகள் சற்று சுவாரஸ்யமாக உள்ளன. 

இந்த ஆல்பம் இப்போது கேட்க நன்றாக இருந்தாலும், ஒரே பயம் படம் சன் பிக்சர்ஸ் வெளியீடு. படம் வரும் முன்பும் பின்பும் பாட்டு வரிகளை அடிக்கடி டிவியில் போட்டு அலுக்க வச்சிடுவாங்களோன்னு தோணுது :((

டிஸ்கி: வானவில் மற்றும் வாங்க முன்னேறி பார்க்கலாம் மட்டும் கடந்த சில வாரங்களாக வருவதால் சற்று மாறுதலாக இந்த பாடல்கள் விமர்சனம்...  

13 comments:

 1. அட நான்தான் போனியா? என்னை மாதிரியே நீங்களும் இசைப் பிரியர் என்பதால் உங்கள் விமர்சனம் என்னை அந்த பாடல்களை கேட்கணும் என்ற ஆவலை தூண்டியது. நன்றி மோகன்.

  ReplyDelete
 2. பாடல் விமர்சனமா?
  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. முதல் பாடல் மட்டும் கேட்டு இருக்கிறேன். மனதை மிகவும் அழுத்திய பாடல் வரிகள். மற்ற பாடல்களைக் கேட்க வேண்டும்.

  பகிர்வுக்கு நன்றி மோகன்.

  ReplyDelete
 4. அழகான இசை விமர்ச்சனம்...

  மார்கழி மாதம் வருது... சென்னையில் நிறைய இசை நிகழ்ச்சியை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதையும் விமர்ச்சனம் எழுதுங்கள்... நல்ல முயற்சி...

  ReplyDelete
 5. ஆடுகளம் இனிமேதான் கேக்கனும்.

  ஈசன் - மெய்யான இன்பம் இந்த போதையாலே, ஜில்லா விட்டு ரொம்ப பிடிச்சிருக்கு:)

  ReplyDelete
 6. //டிஸ்கி: வானவில் மற்றும் வாங்க முன்னேறி பார்க்கலாம் மட்டும் கடந்த சில வாரங்களாக வருவதால் சற்று மாறுதலாக இந்த பாடல்கள் விமர்சனம்... //

  எத வேணும்னாலும் எழுதுங்க..
  கேள்வி கேக்காம, படிப்போம் நாங்க..

  ReplyDelete
 7. நன்றி ரேகா ராகவன் சார். ரொம்ப நாள் கழித்து உங்கள் பின்னூட்டம் பார்க்கிறேன். மகிழ்ச்சி
  **
  நன்றி கணேஷ். முன்பு ராவணன் வந்து போது எழுதினேன். புது பாடல்கள் அனைத்தும் உடனே கேட்டாலும் விமர்சனம் எழுதுவதில்லை. அவ்வளவு தான்
  **
  நன்றி வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 8. நன்றி சங்கவி. கர்நாடக இசை கச்சேரி கேட்குமளவு இசை ஞானம் இல்லை நண்பா
  **
  ஹா ஹா நன்றி மாதவன்
  **
  நன்றி வித்யா.

  ReplyDelete
 9. பாடல்கள் விமர்சனப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 10. யாத்தே பாடல் நன்றாக இருந்த்தாலும் கண்ட்டினியிட்டி இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது.

  எஸ்.பி.பி பாடல்தான் என் சாய்ஸ்

  ReplyDelete
 11. விமர்சனம் அருமை. இனிமேல்தான் பாடல்களைக் கேட்க வேண்டும்.

  ReplyDelete
 12. நன்றி கோவை டு தில்லி அவர்களே
  நன்றி கார்க்கி
  நன்றி அமைதி அப்பா

  ReplyDelete
 13. //பாடல் 2:கண்ணில் அன்பை சொல்வாளே
  (பாடியவர் : பத்மநாபன் பாடல்: நா. முத்து குமார் )

  காதலி பற்றி காதலன் பாடும் தனி (Solo) பாடல் //

  இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்ங்க மோகன்.. இது காதலி பற்றி காதலன் பாடும் பாடல் இல்லீங்க.. அக்கா பற்றி தம்பி பாடும் பாடல்... வரிகள் எல்லாம்.. செம டச்சிங்..

  இந்தப் பாடலை படத்துல வேஸ்ட் பண்ணிருப்பாங்க.. ஆனா நான் என்னோட சிச்சுவேசனுக்கு சரியா யூஸ் பன்னிருக்கேன்னு நினைக்கறேன்.. பாருங்க..

  http://rameshspot.blogspot.com/2010/12/blog-post_19.html

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...