Friday, December 17, 2010

வானவில் கராத்தே கிட்டும் தமிழ்மணம் விருதுகளும்

பார்த்த படம் : கராத்தே கிட்

ஜேடன் ஸ்மித் என்னும் சிறுவன் மற்றும் ஜாக்கி சேன் நடித்த படம். இந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தை இப்போது தான் பார்க்க முடிந்தது. 12 வயது ஜேடன் ஸ்மித்தை குங்பூவில் ஜாக்கி சேன் பயிற்சி தந்து ஒரு பெரிய டோர்னமென்ட் ஜெயிக்க வைப்பது தான் ஒரு வரி கதை. நாம் இத்தகைய கதையை எம். குமரனில் கூட ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் வைத்து பார்த்துள்ளோம். ஆனாலும் அவர்கள் எடுக்கும் விதம் very natural !


ஜாக்கி ஐம்பது வயது மனிதராக (கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ) நடித்துள்ளார். தன் மனைவி, குழந்தை எப்படி இறந்தார்கள் என ஜாக்கி சொல்லி விட்டு அழும் காட்சியில் நல்ல நடிகர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். படத்தில் எனக்கு பிடித்தது சில வசனங்கள் தான்: உதாரணத்திற்கு: " கெட்ட மாணவன்னு யாரும் கிடையாது. கெட்ட ஆசிரியர் தான் உண்டு". கிளைமாக்ஸ்சில் , " உனக்கு திறமை இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு; இன்னும் என்ன நிருபிக்கணும்?" " எனக்கு கொஞ்சம் பயம் மிச்சமிருக்கு. அது போகணும்" இப்படி.. இது வரை பார்க்கா விடில், ஒரு முறை பாருங்கள்.

பதிவுலகில் ரசித்தது 

டுபுக்கு பதிவுலகில் காமெடியாக எழுதுவதில் ரொம்ப வருடங்களாக முன்னணியில் இருப்பவர். அவ்வப்போது காணாமல் போய் மீண்டும் வருவார். அவரது சமீபத்திய பதிவான ஸ்பென்சர் நினைவுகள் செமையாய் சிரிக்க வைத்தது. வாசித்து பாருங்கள்.

சென்னை ஸ்பெஷல் 

தமிழகம் முழுதும் மழை இவ்வருடம் எக்கச்சக்கமாய் பெய்தாலும் சென்னையில் ஒட்டு மொத்தமாய் குறைவாய் தான் பெய்துள்ளது. சென்னை வானம் பார்த்த பூமி போல ஆகி விட்டது. நிறைய மழை பெய்தால் தான் போரில் தண்ணீர் இருக்கும். இல்லா விடில் கோடை மற்றும் அதன் பிந்தைய காலங்களில் புழங்கும் தண்ணீர் கூட காசு தந்து வாங்க வேண்டும். இந்த விஷயத்தில் 2011 எப்படி இருக்க போகிறதோ? சென்னையை சுற்றி பார்க்க வெளியூர் மக்கள் வர இந்த டிசம்பர் மாதம் தான் சிறந்தது. வெயில் குறைவாய் சற்று பனியுடன், பாட்டு கச்சேரிகளும், அதை கேட்க வந்த NRI -களுமாய் சென்னைக்கு டிசம்பரில் தனி கலர் வந்து விடும்.

 கிரிக்கட் கார்னர் 

நியுசிலாந்தை இந்தியா துவைத்து துவம்சம் செய்து விட்டது. டெஸ்டில் 1- 0 என்று நாம் ஜெயித்த போது அதை Under achievement என்று நினைத்தோம். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் முக்கிய புள்ளிகள் பலரும் இல்லாமலே 5 - ௦0 என கலக்கி விட்டனர். பெங்களூரில் நடந்த மேட்ச் தான் உண்மையிலே சற்று போட்டி இருந்தது. இதில் யூசுப் பதான் அடித்த செஞ்சுரி மூலம் உலக கோப்பைக்கான அணியில் துண்டு போட்டு இடம் பிடித்து விட்டார்.

அய்யாசாமி ரசித்த டுவிட்டர்

என்ன தான் கணக்கில் பெரிய புலியா இருந்தாலும், குக்கர் ஆப் ( off ) செய்ய வேண்டிய சரியான நேரத்தை எந்த ஆணாலும் சொல்ல முடியாது. (அடடா.. நம்ம படுற கஷ்டத்தை சரியா சொல்லிருக்காங்கப்பா).


தமிழ் மணம் விருதுகள்

தமிழ் மணம் ஆண்டு விருதுகள் பரிந்துரை முடிந்து வாக்களிப்பு நடந்து வருகிறது.  நான் பரிந்துரைத்த பதிவுகள் இதோ: 

சுய தேடல், பகுத்தறிவு, ஆன்மிகம் பிரிவில்: இதற்கு வாக்களிக்க   இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த பிரிவில் "வாங்க முன்னேறி பார்க்கலாம் : பகுதி 8 அன்பு"  பதிவு உள்ளது.

தமிழ் மொழி, கலாச்சாரம், வாலாறு, தொல்லியல் பிரிவில் :

இதற்கு வாக்களிக்க  இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த பிரிவில் "எழுத்தாளர் சுஜாதாவுடன் சில அனுபவங்கள்"  பதிவு உள்ளது.

பெண்கள் பிரச்சனைகள் திருமங்கைகள் வாழ்வியல் சிக்கல்கள் பிரிவில்: இதற்கு வாக்களிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த பிரிவில் "வேலைக்கு செல்லும் பெண்கள்"  பதிவு உள்ளது.

ஒவ்வொரு பதிவர் நண்பருக்கும் தனித்தனியே மெயில் அனுப்பியுள்ளனர். அதிலிருந்து நேரே தமிழ் மணம் சென்று(ம்)   அந்தந்த பிரிவில் வாக்களிக்கலாம்.

தொடர்ந்து வீடு திரும்பல் வாசிக்கும் நண்பர்கள் உங்கள் அன்பை காண்பிக்க வேண்டிய தருணம் இது. அவசியம் வாக்களியுங்கள். என்னையும் ஆதரியுங்கள். :)))

21 comments:

 1. நல்ல பகிர்வு. ”கராத்தே கிட்” இன்னும் பார்க்கவில்லை. தமிழ்மணம் ஓட்டு அளித்து விடுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி மோகன்.

  ReplyDelete
 2. Anonymous8:20:00 AM

  //கராத்தே கிட் //
  நானும் மிக ரசித்தேன் அண்ணா!

  //டுபுக்கு //
  இப்போவே பாலோவர் ஆயிடுறேன் :)

  //சென்னையை சுற்றி பார்க்க //
  :))

  ReplyDelete
 3. வானவில் வழமை போல் அருமை.

  ட்விட்டர் வாசகமும்.. அய்யாச்சாமி புலம்பலும்..:))!

  டுபுக்கு.. வாசிக்கிறேன்.

  தமிழ்மணம் விருது. கண்டிப்பா ஜனநாயகக் கடமையை ஆற்றிடுவோம்:)! வெற்றிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. நிச்சயம் ஆதரிப்போம்...

  ReplyDelete
 5. கராத்தே கிட் நானும் பார்த்திருக்கிறேன். ஜேடன் ஸ்மித் செம சூட்டிகை..

  தமிழ்மண விருதுகளில் வெற்றிபெற வாழ்த்துகள்..

  ReplyDelete
 6. I enjoyed the movie, "The Karate Kid"

  ReplyDelete
 7. ஒட்டு ரெண்டு ரூப மேனிக்கு ஆறு ரூபா (பெரிசுதான்) என்னோட பாங்க அக்கவுண்டுல... வேணா. வேணா.. டாக்சு பிராபுலமாகிடும்.. கேஷாவே தந்துடுங்க..

  ReplyDelete
 8. ம்ம் ரைட்டு... தல..! இதோ ஓட்டு குத்திட்டா.. போச்சு..!!
  வாழ்த்துகள் வெற்றி பெற.

  ReplyDelete
 9. நன்றி வெங்கட்.
  **
  நன்றி பாலாஜி. டுபுக்கு வாசியுங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்
  **
  ராம லக்ஷ்மி..நன்றி "ஜன நாயக கடமை.. "
  **
  மிக்க நன்றி சங்கவி
  **

  ReplyDelete
 10. நன்றி வித்யா
  **
  நன்றி சித்ரா
  **
  மாதவன்: ம்ம் :))
  **
  வாங்க பிரவீன்.. நன்றி

  ReplyDelete
 11. "என்னை பற்றி உண்மையாக யாரேனும் ஒரு வரி சொன்னால் அதை வைத்து ஒரு வாரம் உயிர் வாழ்வேன்" -

  ஒரு வாரமல்ல. சில சமயம் ஒரு தலைமுறை மாறுதலை தந்து விடும்.

  உங்களை ஆதரிப்பது எனது கடமை.

  வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. தமிழ் மண விருதுகள் பெற நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 13. Karate Kid.. is very nice movie..

  வாழ்த்துக்கள்..! :-)

  ReplyDelete
 14. மிக்க நன்றி ஜோதிஜி
  **
  வணக்கம் சீனா சார். நன்றி
  **
  நன்றி ஆனந்தி; கருத்துக்கும் தொடர்வதற்கும்

  ReplyDelete
 15. // தொடர்ந்து வீடு திரும்பல் வாசிக்கும் நண்பர்கள் உங்கள் அன்பை காண்பிக்க வேண்டிய தருணம் இது.

  //

  பயபுள்ள இன்னா நைஸா மெரட்டுது!!

  :))

  ReplyDelete
 16. டுபுக்குவின் ஸ்பென்சர் கதை சூப்பர். பகிர்ந்தமைக்கு நன்றி.

  தமிழ்மண விருதுக்கான VOTE பட்டனை கிளிக் செய்தேன். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. கிளிக் செய்தால் மட்டும் போதுமா?

  ReplyDelete
 17. ஆதி மனிதன் said
  // தமிழ்மண விருதுக்கான VOTE பட்டனை கிளிக் செய்தேன். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. கிளிக் செய்தால் மட்டும் போதுமா? //

  இல்லை, உங்களுக்கு வந்த மெயில் மூலம் தமிழ் மணம் சென்று ஒவ்வொரு பிரிவிலும் பிடித்த பதிவை தேர்வு செய்ய வேண்டும் (ஒரு சில பிரிவுக்கு மட்டும் கூட வாக்களிக்கலாம்) அப்படி தேர்வு செய்த பின் நீங்கள் தேர்வு செய்த பதிவுகள் பெயர்கள் அது காட்டும். கீழே" உங்கள் தேர்வை உறுதி செய்க" என்ற லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் ஓட்டு சென்று சேரும்.

  ReplyDelete
 18. அப்துல்லா said

  பயபுள்ள இன்னா நைஸா மெரட்டுது!!

  :))

  ஹா ஹா ரசித்து சிரித்தேன் அண்ணே

  ReplyDelete
 19. 10 வருடங்கள் முன்பு, டிஸம்பரில் ஊருக்கு வர நேர்ந்தபோது, (முன்காலத்து குளிரைக் கணக்கில் கொண்டு) ஸ்வெட்டர்களோடு வந்தால், குளிர் என்பதே இல்லை!! இப்பவும் அப்படித்தானா?

  பதிவுலகத் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. ஓட்டுப் போட்டுவிடுகிறேன்!!

  ReplyDelete
 20. அண்ணே மிக்க்க நன்றி எனது பதிவை உங்களுக்கு பிடித்த பிரிவில் குறிப்பிட்டதற்கு. நிறைய நியூ கஸ்டமர்ஸ் பிடிச்சு குடுத்தி இருக்கிறீர்கள்.. அமைண்ட உங்க கணக்கில் வைத்துக் கொள்கிறேன் :)))))

  ReplyDelete
 21. இப்பதான் உங்க லிங்க் பிடிச்சு வந்தேன். சுருக்கமா இருந்தாலும் படிக்கறவங்களுக்கு படம் பாக்கணும்னு ஒரு நினைப்பு வர வைக்கும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...