Monday, January 24, 2011

வானவில்: தஞ்சை: பொன். வாசுதேவன்: காதல் கவிதை

மனதை பாதித்த சம்பவம்


உத்தர பிரதேசத்தில் பதினேழு வயது மைனர் பெண் புருஷோத்தம் திவேதி என்ற அரசியல் வாதியால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கம்பிளயின்ட் தர போக, அவர் திருடியதாக போலிஸ் கேஸ் போட்டு கைது செய்துள்ளது. இந்த சிறு பெண் தைரியமாக கற்பழிப்பிற்காக அரசியல் வாதி மேல் வழக்கு தொடர்ந்துள்ளார். பத்திரிக்கை மற்றும் பிற மீடியா இதனை எழுதியதும், திவேதி தனக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதால், ஆண்மை அற்றவன் ஆகி போனதாகவும், தான் கற்பழிக்க வாய்ப்பே இல்லை என்றும் சொல்கிறார். இப்படி பெருந்தலைகள் கற்பழிப்பு வழக்கில் சிக்கினால் " ஆண்மை போயிந்தே" என சொல்வது பல முறை நடக்கிறது. ருசிக்கா கொலை வழக்கில் கூட போலிஸ் அதிகாரி ரதோர் இதே கதை தான் சொன்னார். இதே போல மேலும் பல உதாரணங்கள் உள்ளன. அரசு/ டாக்டர்கள் நினைத்தால் இவற்றை பொய் என எளிதில் நிரூபிக்க முடியும். இந்தியா சுதந்திரம் ஆகி அறுபது வருடம் ஆகியும் இன்னும் நீதி மன்றங்களில் ஏழைக்கு நீதி கிடைப்பது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

தஞ்சை

எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஊர் தஞ்சை. சமீபத்தில் சென்ற போது பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை முழுதும் மெருகேறுவதை கவனித்தேன். (ஆயிரமாவது ஆண்டு விழா சில மாதங்கள் முன் நடந்த போதே சென்றேன், அப்போது அந்த விழா பற்றி பதிவெழுத எண்ணி, வேலை பளுவால் தவறி விட்டேன்..)

இந்த ஆண்டு முழுதுமே தஞ்சை விழா கோலம் பூண்டுள்ளது. இம்முறை பத்து நாட்கள் நடன திருவிழா திலகர் திடலில் நடந்து வந்தது. பல குடியிருப்பு சாலைகள் சிமென்ட் தரைகளாக மாறுகின்றன. இதற்காக ஏகப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சைக்கு நல்லது நடந்தால் நமக்கு நடந்தது போல் மகிழ்ச்சி.

பார்த்த படம் : இனிது இனிது

இனிது இனிது படம் இப்போது தான் பார்த்தேன். நல்ல வேளையாக இதன் ஒரிஜினல் தெலுங்கு படத்தை பார்க்க வில்லை. பார்த்தால் நம்மையும் அறியாமல் ஒரு பக்கம் அதனோடு ஒப்பிட்டு கொண்டே இருப்போம்.

படம் ரொம்பவே ரசிக்க முடிந்தது. கல்லூரி வாழ்க்கையை செமையாய் அனுபவித்த (என்னை போன்ற) எவருக்கும் இந்த படம் மிக பிடிக்கும். கல்லூரி முதல் நாளில் தொடங்கி கடைசி - farewell நாளில் படம் முடிகிறது. பல வித காரக்டர்கள்.. ஆனால் அனைத்திற்கும் ஒரு தனித்தன்மை/ சுவாரஸ்யம் உள்ளது. அனைவரும் பார்க்காத முகங்கள் என்பதால் நன்றாக ஒன்ற முடிகிறது. எனக்கு பிடித்தது மதுவாக வரும் ஹீரோயின் தான். Chubby ஆக பார்க்க அழகாக உள்ளார்.

ஒரு நல்ல பீல் குட் ஸ்டோரி .. தெலுங்கில் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள்.


ரசித்த கவிதை

நீ முதல் முறை
என்னை தலை சாய்த்து
கடைக்கண்ணால் பார்த்த போது
என் உள்ளத்தில் முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்க வில்லை.
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்.
எங்கே இன்னொரு முறை என்னைப்பார் ! - மீரா

(மீராவின் கனவுகள் + கற்பனைகள் =காகிதம் என்ற இந்த கவிதை தொகுப்பு மிக பிரபலம். ஒரு காலத்தில் கல்லூரியில் படிப்போர் காதலை சொல்ல இந்த புத்தகத்தை வாங்கி பரிசளித்து விடுவார்கள்!! முழுதுமே காதல் நிரம்பி வழியும் கவிதைகள் )

சென்னை ஸ்பெஷல்: திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி

தலப்பா கட்டு பிரியாணி என்ற பெயரில் பலரும் கடை வைத்துள்ளனர். இதில் ஒவ்வொன்றும் வெவ்வேறு குருப். நிறைய டூப்ளிகேட்டுகள் உண்டு.

"திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி" என்ற பெயரில் ஒரு நிறுவனம் வேளச்சேரி நூறடி ரோடில் (விஜய நகர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சற்று தொலைவில்) தரமான பிரியாணி வழங்கி வருகிறார்கள். அட்டகாசமான பிரியாணிக்கு உத்தரவாதம் தலப்பா கட்டி பிரியாணி.குடும்பத்துடன் சென்று கூட சாப்பிடுமளவு நீட்டாக உள்ளது வளாகம். சுவையும் அருமை.

ரசித்த SMS:

Every job is a self portrayal of the person who does it. Autograph your work with excellence.

அய்யாசாமி ரசித்த டுவிட்டர்

நடு ராத்திரி மெசேஜ் அனுப்பி பிராட்பேன்ட் கனக்சன் வேணுமான்னு கேக்குறீங்களே.. யாருடா நீங்கல்லாம் ?

வீடுதிரும்பலை தொடரும் இருநூறு நண்பர்கள்

வீடுதிரும்பலை தொடர்வோர் எண்ணிக்கை இருநூறை எட்டியுள்ளது. சச்சின் போல் ரொம்ப நாளாக 190-களில் நொண்டி அடித்து விட்டு இப்போ இரு நூறாகி விட்டது. இன்னும் மூணு பேர் வந்தா இருநூறு இன்னும் ரெண்டு பேர் வந்தா இருநூறு என மனம் குழந்தை போல் கவனித்து கொண்டிருக்க, பதிவு வெளி வரும் போதெல்லாம் "You have a new follower at Indli " என்று ஓரிரு மெயிலாவது வரும்.. "யப்பா.. இங்கே வாங்கப்பா" என மனதுக்குள் கூவுவது அவர்களுக்கு எங்கே கேட்க போகிறது? :)))

தொடரும் இருநூறு நண்பர்களுக்கும், பின்னூட்டம் மூலம் ஆதரிக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றி !!

இருநூறாவதாக தொடரும் நண்பர் சக பதிவர், சக வழக்கறிஞர், சக எழுத்தாளர், சக கவிஞர் பொன். வாசு தேவன் (கடைசி ரெண்டும் வாசு சொல்லலாம்; நீ??என்கிறது மனசாட்சி)

அதென்னவோ நூறு, நூற்றைம்பது, இருநூறு எல்லாமே நன்கு தெரிந்த நண்பர்கள், பதிவை பற்றி நேரிலும் பின்னூட்டத்திலும் பேசுபவர்களே! குறிப்பிட்ட எண் வரும் போது திடீர்னு காணாம போயிட்டு , மறுபடி வந்து " மீ தி 100 ; மீ தி 200 " அப்படின்னு சொல்றாங்களோ? டவுட்டு !

19 comments:

 1. அடிச்சி ஆடுங்க சச்சின்... 200க்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. 200 ஆ.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. 200 ----- Super!!!

  Congratulations!!!

  ReplyDelete
 4. Anonymous11:13:00 AM

  200 க்கு வாழ்த்துக்கள் அண்ணே! :)
  //இனிது இனிது //
  எனக்கு சரியான டைமிங். இங்க பே சானல்ல இந்த மாதம் அந்தப் படம் ஓடுது. ஒரு ஆர்வம் இல்லாம இருந்துது, இப்போ கண்டிப்பா பார்த்துவிடுகிறேன் அண்ணே!

  ReplyDelete
 5. 200க்கு வாழ்த்துகள். வானவில் பகிர்வும் நன்று.

  ReplyDelete
 6. வாழ்த்துக்*கல்* மோகன்..நானும் தஞ்சைக்கு போவேன்

  ReplyDelete
 7. 200 க்கு வாழ்த்துகள் மோகன் குமார்.

  உத்திரபிரதேச 17 வயது இளம்பெண் கற்பழிப்புச்செய்தி மனதைப் பாதித்தது.

  ReplyDelete
 8. வானவில் பகிர்வுகளுக்கு நன்றி.

  இருநூறுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 9. 200-க்கு வாழ்த்துக்கள் மோகன். வழமை போல வண்ணங்கள் அனைத்தும் அருமை.

  நட்புடன்

  வெங்கட்
  http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_24.html

  ReplyDelete
 10. தஞ்சை பெரிய கோவில் படத்தையும் போட்டிருக்கலாம். பார்க்கும் போதெல்லாம், அதன் கம்பீரம் நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.

  இருநூறுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்.

  இருநூறு பற்றி தாங்கள் எழுதுதியது அநேக பதிவர்களின் மனதில் தோன்றுவதுதான்.

  சிறப்பான வானவில்.

  ReplyDelete
 11. இருநூறு நண்பர்கள்...
  வாழ்த்துகள்

  ReplyDelete
 12. நன்றி முரளி; யாரு சச்சின் ?? :))
  **
  மாதவன் & சித்ரா: நன்றி
  **
  பாலாஜி: நன்றி நல்லாருக்கும் பாருங்க
  **
  நன்றி வித்யா

  ReplyDelete
 13. வாழ்த்துக்*கல்*லுக்கு நன்றி மணிஜி
  **
  சரவணா: நன்றி நண்பா
  **
  வெங்கட் & ராமலட்சுமி: நன்றி
  **
  நன்றி அமைதி அப்பா. படம் தேடி போட நேரமில்லாததால் முடியலை.
  **
  இளங்கோ: நன்றி நண்பரே

  ReplyDelete
 14. Congrads for 200 . நீங்க ரொம்ப நல்லவருண்ணே....தானுண்டு ஜிம் உண்டுன்னு இருக்கீக... இருங்க
  இருங்க :)

  ReplyDelete
 15. 200 க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. அப்ப நான் 199 வதா இத கவனிக்கலையே கொஞ்சம் பொறுத்திருந்தா நாம 200 ஆகியிருக்கலாமே!
  வட போச்சே!

  ReplyDelete
 17. மரா: நன்றி. பஸ் பக்கம் வர்றதில்லைன்னு அப்படி சொல்றீங்களா? அலுவலகத்தில் பஸ் ஓட்ட முடியாது.
  **
  நன்றி கோவை2தில்லி மேடம்
  **
  மைதீன்: பாத்தீங்களா? இப்படி எல்லாரும் 200-ல் சேருவோம், 300-ல் சேருவோம்னு நினைச்சா எழுதுறவங்க பாவம் இல்லே? நன்றி.

  ReplyDelete
 18. டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துகள். என்னதான் பெரீய்ய்ய்ய வக்கீல்னாலும், இதெல்லாம்கூட மகிழ்ச்சி தரத்தான் செய்யுது, இல்லை? :-)))))) சின்னச் சின்ன ஆசைகள்....

  மீராவின் கனவுகள்.. புஸ்தகம் இப்ப வாங்கிருக்கீங்களா, ஏஏஏஏஏன்? இல்லை முன்னாடி கிடைச்சதா? :-)))))))))

  ReplyDelete
 19. ஹுஸைனம்மா : மீரா புத்தகம் கல்லூரி காலத்தில் படித்தது தான். என்னா டவுட்டு :))

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...