Tuesday, April 12, 2011

வானவில்: யுத்தம் செய்- மனுஷ்ய புத்திரன் கவிதை

பார்த்த படம்: யுத்தம் செய்

மிஷ்கின் படங்களில் என்னை பெரிதும் கவர்ந்தது அவரது முதல் படமான "சித்திரம் பேசுதடி". அந்த அளவு அதன் பின் வந்த, அவரது எந்த படமும் கவர வில்லை. இளம் பெண்கள் கடத்தலும் அதனால் பெற்றோர் படும் துயரமும் தான் அஞ்சாதேயில் பின்னணியாய் இருந்தது. இப்போது யுத்தம் செய்யிலும் அதுவே ! படம் பார்ப்பவர்களை "இது நமக்கு நடந்தால்?" என்று எண்ணி பயப்பட வைக்கிறார் . பாடல்கள் அதிகம் இன்றி, எந்த காமெடியும் இன்றி நேரே கதை சொல்ல படுகிறது. சேரனுக்கு இது ஒரு வித்யாசமான படம் தான். பின்னணி இசை அசத்துகிறது. மிஷ்கின் பட ஒளிப்பதிவு & வித்யாசமான ஷாட்டுகள் முதலில் நம்மை கவர்ந்தது. இப்போது கால்களில் கேமரா வைக்கும் போது "மறுபடியுமா?" என்று தோன்றுகிறது. படத்தின் மிக பெரும் ஆச்சரியம் ஒய். ஜி. மகேந்திரன் மனைவியாக வரும் லட்சுமி ! என்ன ஒரு கேரக்டரைசேஷன் ! இத்தனைக்கும் இவர் வரும் காட்சிகளும், பேசும் வசனமும் மிக குறைவு. ஆயினும் அசத்துகிறார். தமிழுக்கு இந்த கேரக்டர் நிச்சயம் ஆச்சரியம் தான். மிஷ்கின் அடுத்தடுத்த படங்களிலாவது "டார்க் கதைகள்" தவிர்த்து & வழக்கமான கேமரா கோணங்களை மாற்றினால் நன்றாயிருக்கும்.

அய்யா சாமியும் அஞ்சு ரூபாயும் 

அய்யாசாமி பகலில் நீண்ட தூர ரயில் பயணம் சென்றார். ரயிலில் ஒரு டீ வாங்கி குடிக்க, பத்து ரூபாய் தந்தார். "மீதம் ஐந்து ரூபாய் சில்லறை இல்லை. அப்புறம் தரேன்; என் பேரை பாத்துக்கங்க; மலையன்"  என சொல்லி விட்டு போய் விட்டார் டீ விற்பனையாளர். வாசித்த புத்தகத்திலிருந்து அவ்வபோது தலையை நிமிர்த்தி மலையன் வருகிறாரா என பார்த்து பார்த்து மலைத்து போய் விட்டார் அய்யாசாமி. "ஐந்து ரூபாய்க்காக இவ்வளவு அலட்டிக்கனுமா?" என மனசு ஒரு பக்கம் சொல்ல, மற்றொரு பக்கமோ " அது எப்படி? நானே தந்தால் அது டிப்ஸ்; இது ஏமாத்துற வேலை" என மனதுக்குள் ஒரு பட்டி மன்றம் நடந்தது. ஒரு வழியாய் நான்கு மணி நேரம் கழித்து மலையனை மறுபடி பார்த்தார்.  " ஐந்து ரூபாய் சில்லறை இல்ல சார்" என இப்போதும் அவர் சொல்ல கோபமான அய்யாசாமி சொன்னார் " அப்ப இன்னொரு டீ குடுங்க".

சட்ட சொல்: வாதி/ பிரதி வாதி


சிவில் வழக்குகளில் வழக்கு தொடுப்பவர் " வாதி" (Plaintiff ) என்றும் யார் மேல் வழக்கு தொடுக்கிறாறோ அவர் " பிரதிவாதி" ( Defendant ) என்றும் அழைக்கப்படுவார். கிரிமினல் வழக்குகளில் வழக்கு தொடுப்பவர் பெயர் Complainant. குற்றம் சாட்டப்படும் நபர் "Accused ". குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனை பெற்றால் அவரை " Convict" என்பார்கள் .

ஐ. பி. எல் கார்னர் 

ஐ. பி. எல்லில் அனைத்து அணிகளும் ஒரு முறை விளையாடியுள்ளன. இந்த முறை வலுவான அணியாக தெரிவது முதலில் மும்பை ! சச்சின், மலிங்கா, ஹர்பஜன், போலார்ட் என நல்ல வீரர்களை retain செய்ததுடன், சைமண்ட்ஸ், ரோஹித் ஷர்மா போன்ற சரியான வீரர்களை எடுத்துள்ளனர். மேலும் சச்சின் வெல்லாதது ஐ. பி. எல் கோப்பை மட்டுமே என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது. சென்னை பழைய வீரர்கள் பலரை retain செய்ததால் நல்ல அணியாகவே உள்ளது. இருக்கிறதில் ரொம்ப பாவமான அணி பஞ்சாப். மிக வீக் ஆக தெரிகிறது. டில்லி அணியில் சேவாக் மற்றும் வார்னருக்கு பிறகு சரியான பாட்ஸ்மன் இல்லை. நல்ல வேக பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஸ்பின்னர்கள் யாரும் சரியாக இல்லை. எனவே டில்லியும் ஒரு வீக் அணியே. கொல்கத்தா இம்முறை யூசுப் பதான், காலிஸ் உள்ளிட்ட பல ஆள் ரவுண்டர்களை வைத்துள்ளது. பவுலர்கள் தான் சற்று சுமார் ரகம். சென்ற முறையை விட நன்றாக ஆடும் என எதிர் பார்க்கலாம்.

முதல் சில ஆட்டங்கள் மட்டும் டிவியில் பார்த்தாலும் அதன் பின் முழுதும் பார்ப்பதில்லை. இரவு மேட்ச் முடிய பன்னிரண்டு ஆகி விடுகிறது என்பது முக்கிய காரணம்.

ரசித்த எஸ். எம். எஸ்

பசங்க ஏன் லவ் பண்றாங்கன்னா, பிரண்ட்ஸ் இருக்காங்க; எப்படியும் சேத்து வச்சிடுவாங்கன்னு தைரியத்தில தான்

பொண்ணுங்க ஏன் லவ் பண்றாங்கன்னா, பேரண்ட்ஸ் இருக்காங்க; எப்படியும் பிரிச்சு வச்சிடுவாங்கன்னு தைரியத்தில தான்

பாய்ஸ் பீ கேர்புல்.

விகடனில் சுகா எழுதும் மூங்கில் மூச்சு

ஆனந்த விகடனில் சமீப கடந்த பத்து வாரமாக வெளி வரும் சுகாவின் மூங்கில் மூச்சு தொடர் வாசிக்கிறீர்களா? திருநெல்வேலி தமிழில் அற்புதமான, சுகமான எழுத்து !! சுகா தமிழ் சினிமா உலகில் துணை இயக்குனராக உள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் ஒரு ப்ளாகரும் கூட. இவர் வலைப்பூ பெயர் வேணுவணம். மூங்கில் மூச்சில் பல பகுதிகள் ரசிக்கும் படி இருந்தன. பாலு மகேந்திரா பற்றிய பதிவும், சினிமா காரர்களுக்கு வீடு கிடைப்பதில் உள்ள சிரமமும் நான் மிக ரசித்து சிரித்த பகுதிகள். இது வரை வாசிக்கா விடில், அவசியம் வாசியுங்கள்.

ரசித்த கவிதை 

நவீன தாம்பத்தியம்

அவள்
தன் உடலைக் கொடுத்தாள்
தன் மனதைக் கொடுத்தாள்
தன் தூக்கத்தைக் கொடுத்தாள்
தன் விசுவாசத்தைக் கொடுத்தாள்
தன் உழைப்பைக் கொடுத்தாள்
தன் சம்பாத்தியத்தைக் கொடுத்தாள்
தன் செலவுகளின் கணக்கினைக் கொடுத்தாள்

அவனுக்கு நிறையவே இல்லை
அவள் மின்னஞ்சலின்
கடவுச் சொல்லைக் கொடுக்கும் வரை.
                                                -மனுஷ்ய புத்திரன்

14 comments:

  1. நல்ல தொகுப்பு... அசத்தல் வானவில்!

    ReplyDelete
  2. //அவனுக்கு நிறையவே இல்லை
    அவள் மின்னஞ்சலின்
    கடவுச் சொல்லைக் கொடுக்கும் வரை. //

    ஆன்(ண்) -லயன் அக்கவுண்ட் கெடையாதா அந்தம்மாவுக்கு ? அதன் கடவுச் சொல்லையும்
    கொடுக்கவேண்டுமே.. அதான் கேட்டேன்

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு. நானும் "மூங்கில் மூச்சு" - ஐ படித்து வருகிறேன். நல்ல தொடர்.

    ReplyDelete
  4. யுத்தம் செய் நிறைய லாஜிக் சொதப்பல்கள். காலைக் காமிக்கும்போதெல்லாம் கடுப்பாகத்தானிருந்தது.

    வானவில் வண்ணக் கலவை:)

    ReplyDelete
  5. மிக நல்ல தொகுப்பு. அதிலும் ம.பு வின் கவிதை யதார்த்ததை வார்த்தையால் எரிக்கிறது. அருமை.

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு மோகன். ஐ.பி.எல் கார்னர் - :( தினம் தினம் 12 மணி நேரம் வரை கிரிக்கெட் பார்க்க முடியாது!!

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான தொகுப்பு:)!

    // சுகா தமிழ் சினிமா உலகில் துணை இயக்குனராக//

    இவர் இயக்கத்தில் ‘படித்துறை’ எனும் படம் வெளி வர இருக்கிறது.

    ReplyDelete
  8. வழக்கமான வானவில்.

    அது சரி, அய்யாசாமியை யாரும் ஏமாற்ற முடியாது போல:-))))!

    ReplyDelete
  9. வானவில் வர்ணஜாலம்!

    ReplyDelete
  10. அந்த எஸ். எம். எஸ். சூப்பர் ஜோக்... மனுஷ்ய புத்திரன் கவிதை பிரமாதம்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு திரு மோஹன் குமார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நன்றி சித்ரா
    **
    மாதவன் : நன்றி
    **
    நன்றி நாகசுப்ரமணியன்
    **
    வித்யா: நன்றி
    **
    கனா காதலன்: மகிழ்ச்சி நன்றி
    **
    வெங்கட்: ஆம் தினம் இரவு நெடு நேரம் விழிக்க பிடிக்காமல் மேட்ச்கள் பிடிப்பதில்லை
    **

    ReplyDelete
  13. சுகா பற்றிய தகவலுக்கு நன்றி ராமலட்சுமி
    **
    அமைதி அப்பா: நீங்க வேற.. அவர் ஏமாந்த விஷயம் எத்தனை எழுதிட்டேன்
    **
    நன்றி மாதவி
    **
    நன்றி ஜனா சார்
    **
    அட பிரசன்னா: தேன்க்சப்பா
    **
    ரத்னவேல் சார்: நன்றி
    **

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...