Wednesday, June 8, 2011

ஷாரூக்கானின் 3 சூப்பர் ஹிட் இந்தி படங்கள் விமர்சனம்


மை நேம் இஸ் கான் 

ஷாருக் மற்றும் கஜோல் நடித்த மிக பிரபலமான படம் . அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் முஸ்லீம்கள் படும் வேதனையை பின்னணியாக கொண்டது. டிஸ்லெக்சியாவால் பாதிக்க பட்ட ஷாருக், ஏற்கனவே மணமாகி விவாகரத்தான கஜோலை மிக வற்புறுத்தி மணக்கிறார். கஜோலுக்கு ஏற்கனவே ஒரு பையன் உண்டு. ஷாரூக் -கஜோல் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. திடீர் சோகமாக கஜோல் பையன் பள்ளியில் வேறு ஒரு சிறுவனால் தாக்கப்பட்டு இறக்கிறான். ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால்தான் இது நடந்தது என கஜோல் கோபித்து கொண்டு பிரிகிறார். ஷாருக் அமெரிக்க ஜனாதிபதியை பார்த்து " நான் தீவிர வாதி" இல்லை என சொல்வேன்" என்று கூறி அவரை பார்க்க முயல்கிறார். இறுதியில் அவர் எப்படி பார்த்தார் என்பதை நெகிழ்வுடன் கூறுகிறார்கள். ஷாருக் எத்தனை அற்புத நடிகர் என்பதை படம் முழுதும் உணர்த்துகிறார். கஜோலும் சரியான தேர்வு. மனதை நெகிழ்த்தும் பல காட்சிகள் உண்டு. குறிப்பாய் வெள்ளம் வரும் போது அந்த ஊருக்கு ஷாருக் தேடி கொண்டு போவதும், வெள்ளம் வடிய அவர் எடுக்கும் முயற்சிகளும்..!! இந்தி சினிமா இத்தகைய வித்தியாச படங்களால் தலை நிமிர்ந்து நிற்கிறது.  

ஓம் சாந்தி ஓம்

நெஞ்சம் மறப்பதில்லை டைப் கதை. முன் ஜென்மத்தில் காதலர்களை கொல்கிறார் வில்லன். மறு பிறவியிலும் அதே நபர்கள் காதலர்களாக ! வில்லன் இன்னும் உயிரோடு..!! (நெஞ்சம் மறப்பதில்லையுடன் உள்ள ஒற்றுமை இங்குமுடிகிறது). ஷாரூக் இறந்த நாயகியின் ஆவி வந்து மிரட்டுவதாக வில்லனை பயமுறுத்துகிறார். வில்லன் எப்படி பழி வாங்கப்படுகிறார் என்பது மீதி கதை.

இந்தி சினிமா கிளிஷேக்களை கிண்டல் செய்து நிறைய காட்சிகள் எடுத்துள்ளனர். அவை இந்தி சினிமா நன்கு புரிந்தவர்களுக்கு தான் புரிய முடியும். நகைச்சுவை நம்மை அதிகம் சிரிக்க வைக்க வில்லை.

தீபிகா படுகோனேக்கு அறிமுக படம். அழகாய் இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார். ஷாரூக் வழக்கம் போல்.

மொத்தத்தில் இந்தி சினிமா உலகை அறிந்தவர்களால் தான் நன்கு என்ஜாய் செய்ய கூடிய படம். நமக்கு சற்று அன்னியமாக தான் உள்ளது.

சக் தே இந்தியா

ஷாரூக் ஹாக்கி பயிற்சியாளராக நடித்த அற்புதமான படம் .

துவக்க காட்சியில் ஷாருக் உலக கோப்பை ஹாக்கியில் இந்தியாவிற்காக ஆடி தோற்கிறார். இதனால் அவமான படுத்தப்பட்டு வீட்டையை மாற்றி கொண்டு வேறு இடம் செல்கிறார்.சில ஆண்டுகள் கழித்து பெண்கள் ஹாக்கிக்கு பயிற்சியாளராகிறார். பல்வேறு குணமுள்ள இந்த பெண்கள் முதலில் ஷாருக்கை வெறுக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் ஒற்றுமையை கொண்டு வந்து, பின் வெற்றி பெரும் அணியாகவும் மாற்றுகிறார்.

படத்தில் பல இடங்கள் அருமை. ஷாருக் இனி கோச்சாக இருக்க வில்லை என்று கூறி விட்டு அந்த பெண்களை கடைசியாக சாப்பிட வெளியே அழைத்து செல்கிறார். அங்கு சில ஆண்கள் அவர்களை கிண்டல் செய்ய, பெண்கள் சேர்ந்து அவர்களை அடித்து நொறுக்குகிறார்கள். ஹீரோ ஷாருக் அந்த இடத்தில் இருந்தும் அவர் நகரவோ, சண்டையில் பங்கேற்கவோ இல்லை. இது தான் அந்த பெண்கள் ஒற்றுமையாக வைக்கிறது. இதன் பின் ஷாருக் மனம் மாறி பயிற்சியாளராக தொடர்கிறார்.

பெண்கள் அணியை உலக கோப்பைக்கு அனுப்பனுமா என்று கேள்வி வர, தேசிய ஆண்கள் ஹாக்கி அணியுடன் விளையாடி ஜெயித்தால் போகலாம் என்கிறார்கள். ஆண்கள் அணியுடன் ஆடி ஜெயிப்பது எப்படி என்று கேள்வி இருந்தாலும் அந்த நேரத்தில் வேறு வழியின்றி ஒப்பு கொள்கிறார்கள். அந்த ஆட்டத்தில் துரதிஷ்ட வசமாக பெண்கள் தோற்றாலும், அவர்கள் ஆடிய விதம் பார்த்து அசந்து போய் உலக கோப்பைக்கு அனுப்ப தேர்வு குழு ஒப்பு கொள்கிறது.

அணியிலேயே அனுபவம் அதிகமான பெண் மிக திமிராய் இருக்க, ஷாருக் முதலில் எல்லா மேட்சுகளிலும் அவளை தேர்வு செய்யவில்லை. ஒரு முக்கிய கட்டத்தில் அவள் அனுபவம் தேவைப்பட, ஷாருக் பேசி அவள் களம் இறங்குகிறாள். அதன் பின் கடைசி வரை அவள் ஆட்டம் அதிரடி தான். போலவே திருமணம் நிச்சயமான ஒரு பெண் தனக்கென்று identity வேண்டுமென வருங்கால கணவனிடம் போராடி அணியில் ஆடுகிறாள். இவள் தான் அணியில் கேப்டன். இவள் கேப்டன் ஆவதற்கு பெரும் எதிர்ப்பு இருந்தாலும் தன் ஆட்டத்தால் தன்னை நிரூபிக்கிறாள்.

மேட்ச்களிலும் பல நெகிழ்வான சம்பவங்கள். படம் முடிவில் ஷாரூக் தன் சொந்த வீட்டுக்கு செல்லும் போது இம்முறை ஊரே வாழ்த்தி வரவேற்கிறது. இதுவரை பார்க்கா விடில் அவசியம் பாருங்கள். தவற விட கூடாத படம் இது.

7 comments:

  1. இரண்டும் மூன்றும் பார்த்திருக்கிறேன். முதலாவதைப் பார்க்கும் ஆர்வம் தருகிறது தங்கள் பார்வை.

    ReplyDelete
  2. பார்க்க ஆவலைத் தூண்டியுள்ளீர்கள்!

    ReplyDelete
  3. ஓம் சாந்தி ஓம் மட்டும் பார்த்திருக்கிறேன். ஏனோ ஷாருக் மேல் விருப்பம் இருப்பதில்லை.குச் குச் ஹோத்தா ஹை பிடித்திருந்தது...அது கூட கஜோல் நடிப்புக்காகத்தான்! அந்த டைட்டில் சாங் கேட்டு விட்டு பார்த்த படம் அது! ஓம் சாந்தி ஓம் கூட ஆகோமே தேரி பாடலுக்காகப் பார்த்தது!

    ReplyDelete
  4. நன்றி ராமலட்சுமி. தமிழ் படங்களை விட இந்தி படங்கள் நிறைய பார்ப்பீர்கள் போலும்
    **
    நன்றி மிடில் கிளாஸ் மாதவி
    **
    நன்றி ஸ்ரீராம்; குச் குச் ஹோத்தா ஹை பார்க்கலை. எனக்கு ஷாரூக் மேல் மிக அதிக விருப்பம் எல்லாம் இல்லை; சமீபமாக இந்தி படங்கள் வரிசையாக நிறைய பார்த்தேன். அதில் மூன்று படங்கள் ஷாரூக் படமாக இருக்கவே ஒன்றாக எழுதி விட்டேன்
    **

    ReplyDelete
  5. மிக குறைவான கமெண்ட் வாங்கி இந்த பதிவு சாதனை படைத்துள்ளது. இது வரை 309 பேர் வாசித்தும் கமெண்ட் போட்டது 3 பேர் தான் !! இந்த பதிவில் கமென்ட் போட்ட அந்த மூன்று அன்பு நெஞ்சங்களுக்கு மீண்டும் நன்றிகள்

    ReplyDelete
  6. //மறு பிறவியிலும் அதே நபர்கள் காதலர்களாக//

    இல்லை மோகன், Auditionக்கு வரும் தீபிகாவை ‘சாந்தி’யைப்போலவே இருப்பதால் அவரை நடிகையாக்கிவிடுவார்கள், அவ்வளவுதான். இரண்டாம் பாதியில் காதலர்கள் போன்று அவர்களை காண்பிக்கவில்லை.

    //ஒரு பெண் தனக்கென்று identity வேண்டுமென வருங்கால கணவனிடம் போராடி அணியில் ஆடுகிறாள். இவள் தான் அணியில் கேப்டன். இவள் கேப்டன் ஆவதற்கு பெரும் எதிர்ப்பு இருந்தாலும் தன் ஆட்டத்தால் தன்னை நிரூபிக்கிறாள்//

    அந்த நபர் அவளுடைய கணவன்தான். ’வருங்கால’ அல்ல :)

    ஓம் ஷாந்தி ஓம்...கிட்டதட்ட 20 முறைக்கும் மேல் டிவிடியில் பார்த்திருக்கிறேன் :)

    Don & Kal Ho Naa Hoவும் ஷாரூக்கின் நல்ல படங்களே....ஷாரூக்கை பிடித்தவர்களுக்கு!

    ReplyDelete
  7. ரகு: உங்களுக்கு ஷாரூக் பிடிக்கும் என்பது தெரியும். தவறுகளை திருத்தியமைக்கு நன்றி.

    ஓம் சாந்தி ஓம் என்னால் ஒரு முறையே முழுக்க பார்க்க முடியலை. நீங்கள் இருபது முறை பார்த்தீர்களா? Taste always differ.

    எனக்கு இந்த மூன்று படங்களில் மிக பிடித்தது சந்தேகமே இன்றி சக் தே இந்தியா தான்.இன்னும் ஓரிரு முறை பார்க்க சொன்னால்கூட பார்ப்பேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...