Wednesday, January 11, 2012

சென்னை புத்தக கண்காட்சி- Best டீல்ஸ்- பல தகவல்களுடன் விரிவான அலசல்

ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி போக சற்று அலுப்பாய் தான் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் போன வருடம் வாங்கிய புத்தகமே முழுசா படிச்சு முடிக்கலை என்கிற குற்ற உணர்வு தான். மறைந்த நண்பன் லட்சுமணனின் தம்பி அன்பு சென்னை வந்திருந்தான். " அண்ணே புத்தக கண்காட்சி போகலாமா?" என அன்போடு கேட்ட  போது தட்ட முடிய வில்லை.

போகும் வரை தான் தயக்கம். போன பின், செம ஆர்வமாகி ஏழு மணி நேரத்துக்கும் ( 2-9) மேல் செம சுத்து சுத்தினோம்.

இந்த பதிவில் பல பகுதிகள் இருக்கும். கண்காட்சி செல்வோர் அவசியம் பார்க்க வேண்டியது பெஸ்ட் டீல்ஸ் மற்றும் எச்சரிக்கை பகுதிகள். கண்காட்சி போகாதோருக்கு இந்த பகுதிகள் அதிக விருப்பம் இன்றி வெறும் data-ஆக இருக்கலாம். அவர்கள் அந்த பகுதிகளை தவிர்த்து விட்டு வாசிக்கலாம் !

*****
** இந்த முறை ஐநூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன. நான்கு நுழைவு வாயில் இருந்தாலும், துவக்க அல்லது இறுதி ஸ்டாலில் இருந்து துவங்கினால், எதை பார்த்தோம், எதை பார்க்காமல் விட்டோம் என்கிற குழப்பம் இன்றி பார்க்கலாம்.

** நுழைவு டிக்கெட் விலை வெறும் ஐந்து ரூபாய் தான். அதற்கு தரும் சீட்டு பிரிண்ட் செய்யவே ஐந்து ரூபாய் ஆயிருக்கும். அவ்ளோ திக் பேப்பரில் ஜம்முன்னு இருக்கு.

** உள்ளேயே ஜூஸ் கடை, டீ கடையெல்லாம் இருக்கு. ரெண்டு ரவுண்ட் முடித்தவுடன் ஒரு டீ அல்லது ஜூஸ் என்று இளைப்பறினால் தான் போர் அடிக்காமல் இருக்கும்.

** சிலர் பிறந்து சில மாதமே ஆன கை குழந்தையுடன் வந்திருந்தார்கள். கையில் குழந்தையுடன் எப்படி புக்கை எடுத்து பார்ப்பார்கள் என யோசனையாய் இருந்தது

** "நம்ம சென்னை " என மாதமிரு முறை வரும் இதழை பார்த்தேன். பழைய இதழ்களை ஐந்து ரூபாய்க்கு தருகிறார்கள். நான் ஒன்று தான் வாங்கினேன். வீட்டுக்கு வந்து படித்து பார்த்தால் செம சுவாரஸ்யம் !! இன்னும் நிறைய புக் வாங்கிருக்கலாம். மாபா பாண்டியராஜன் அவர்கள் குழுமம் சார்ந்த பத்திரிகை. ஆண்டு சந்தாவும் ( Rs.200 ) உள்ளது. சென்னையை ரசிப்போர், சென்னை செய்திகள் அறிய விரும்புவோர் வாங்க வேண்டிய பத்திரிக்கை.

** பட்டாம்பூச்சி ( ஸ்டால் எண்: 25) என்கிற ஸ்டால் முழுக்க
கவிஞர் நா. முத்து குமார் புத்தகங்களே ! அங்கு அமர்ந்தவர்களிடம் "உங்க பதிப்பகத்தில் வேறு யார் புக்கும் போட மாட்டீங்களா? " என கேட்க, " இந்த பதிப்பகம் மற்றும் இந்த ஸ்டால் நா. முத்து குமாருடையது" என்றார்கள். ரைட்டு !
** இதற்கு நேர் மாறாக கண்ணதாசன் பதிப்பகத்தில், கண்ணதாசன் புத்தகங்கள் மட்டுமல்லாது ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், நெப்போலியன் ஹில், கலீல் கிப்ரான் உள்ளிட்டோரின் படைப்புகள் தமிழில் மொழி பெயர்த்து கிடைக்கிறது.

** ஒரு ஸ்டாலின் வெளியே குறிப்பெடுதவாறே நகரும் போது திடீரென நிமிர்ந்தால் கையில் துப்பாக்கி ஏந்திய போலிஸ்! " குறிப்பெடுக்குறது குத்தமாயா? " என கேட்க எத்தனிக்கும் முன் அவர் அருகில் இருப்பவரை பார்த்தால், இந்து முன்னணி தலைவர் ராம. கோபாலான. அவருக்கு தான் இந்த Security !!

** மலையாள மனோரமாவிற்கு தனி ஸ்டால். உள்ளே எட்டி பார்த்தால் முழுக்க மலையாள புத்தகங்கள் !! முல்லை பெரியாறு பிரச்சனை பற்றி எரியும் போது இந்த ஸ்டால் இங்கே எப்படி என யோசித்தவாறே நகர்ந்தேன். அடுத்த நாள் ஸ்டால் முன் பலர் ஆர்ப்பாட்டம் நடத்த இப்போது அந்த ஸ்டால் மூட பட்டுள்ளதாக அறிகிறேன்.

** வந்திருந்த பெண்கள் பெரும்பாலும் சமையல் மற்றும் குழந்தைகள் சம்பந்தமான புத்தகங்களில் தான் அதிக ஆர்வம் காட்டுவதை காண முடிந்தது. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அவர்கள் ஆர்வம் இவற்றில் தான் இருந்தது.

** அல்லையன்ஸ் பதிப்பகத்தில் ( ஸ்டால் எண் F- 24 ) சிவகுமார் எழுதிய புத்தகங்கள் கிடைத்தது. எங்கள் அண்ணன் பையனுக்கு சிவகுமார் பேச்சு மிக பிடிக்கும் என்பதால் " என் கண்ணின் மணிகளுக்கு" புத்தகம் அங்கு வாங்கினேன். மேலும் இங்கு தேவன், சோ ஆகியோரின் நூல்கள் பலவும் கிடைக்கிறது.

** ஒரு ஸ்டால் மட்டும் (ஸ்டால் எண் : F-28 ) " பச்சை கலரு ஜிங்கு சான்" என செம பச்சையாக இருந்தது. வேலை செய்வோர் கூட பச்சை கலர் கோட், பச்சை டை கட்டியிருந்தனர். என்ன என உள்ளே சென்று விசாரித்தால், "வாழிய நலம்" என்கிற "இயற்கை உணவு " சார்ந்த ஸ்டால் என தெரிந்தது. உள்ளே சென்றதுக்காக பச்சை கலர் பேனா ஒன்று இலவசமாக குடுத்தார்கள் :))

** குழந்தைகளுக்கான அறிவியல் உபகரணங்கள் மற்றும் பைனாகுலர், டெலஸ் கோப், Screw Gauge மாதிரி சமாச்சாரங்கள் ஸ்டால் எண் 273ல் கிடைக்கிறது. இங்கு நல்ல கூட்டம். நானும் ஒரு பைனாகுலர் வாங்கினேன்.

சில பயனுள்ள குறிப்புகள்

** www.viruba.com என்கிற இணைய தளத்தில் தமிழ் புத்தக தொகுப்பு, எழுத்தாளர்கள், பதிப்பக மற்றும் ஆண்டு வாரியாக பட்டியலிட்டுள்ளனர். இதனை பார்த்து என்னென்ன புத்தகம் வாங்குவது என நீங்கள் லிஸ்ட் போடலாம். புத்தக சந்தை போகும் முன்னே லிஸ்ட் தயார் செய்ய இது உதவும் !

** நண்பர்களுக்கு புத்தகம் வாங்கி அனுப்ப அங்கேயே - Professional கொரியர் அலுவலகம் உள்ளது (ஸ்டால் எண் : 72 ). Cover, Gum அட்டை பெட்டி போன்றவை அவர்களே வைத்துள்ளனர். புத்தகம், முகவரி மற்றும் அனுப்ப பணம் தந்தால் போதும் ( டெலிவரியின் போது, டெலிவரி சார்ஜ் -To Pay வசூலிக்கும் முறை இல்லையாம் !)

** கண்காட்சிக்கு வெளியே பிளாட்பாரத்தில் பழைய புத்தகங்கள் 10, 20, 30 ரூபாய்க்கு கிடைக்கின்றன. இதிலும் நல்ல புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இங்கு நீங்கள் கேட்கும் புக் இருக்காது. இருப்பதில் உங்கள் ரசனைக்கு ஏற்ற புத்தகம் இருந்தால் எடுக்கலாம் !

சில எச்சரிக்கை நியூஸ் !!

** பொன்னியின் செல்வன் பல பதிப்பகத்திலும் பிரின்ட் பண்ணியுள்ளனர்.
பெரும்பாலான பதிப்பகங்கள் அனைத்து பாகங்களும் சேர்த்து 260 முதல் 280 ரூபாய் வரை சொல்ல. விகடனில் மட்டும் இதை விட ஐந்து மடங்கு விலை அதிகம் !! ( 1600 ரூபாய் என நினைக்கிறேன்)


** கல்கி பதிப்பகத்தில் புத்தகங்கள் விலை பொதுவாய் அதிகமா இருக்கு. உதாரணமாய் வண்ண நிலவனின் உள்ளும் புறமும் மிக சிறிய புத்தகம் விலை 65 என்கிறது ! மற்ற பதிப்பகத்தில் இந்த சைஸ் புத்தகம் 40 ரூபாய் தான் இருக்கும் !


சாப்பாடு

**ஸ்டால்கள் இருக்கும் இடத்திலேயே ஆங்காங்கு மினரல் வாட்டர் கிடைக்கிறது. குடிக்க காலி பாட்டில்கள் சில நேரம் கிடைக்கிறது. சில நேரம் கிடைப்பதில்லை. நாம் போகும் போது ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டு போனால் பின் அங்கிருந்து பிடித்து கொள்ளலாம்

**லிச்சி என்கிற ஜூஸ் தான் மிக பிரபலம். நானும் அன்புவும் இரு முறை குடித்தோம். கடையில் மிக அதிக கூட்டத்துக்கிடையேயும் " லிச்சின்னா என்ன?" என கேட்டு " அது ஒரு பழ ஜூஸ்" என்று தெளிந்தோம்.

** Restaurant-ல் உணவு மிக அதிக விலை. மேலும் சாப்பாட்டு நேரத்தில் செம கூட்டம். கூட்டத்தை பார்த்து விட்டு மதியம் நாங்கள் சாப்பிடாமலே சுற்றி வந்தோம். வீட்டிலிருந்து உணவு எடுத்து சென்றால் கூட தப்பில்லை.

** சிறு சிறு கடைகள் – Burger, Ice cream போன்றவை விற்கிறார்கள். அங்கு விலை எப்படி என தெரிய வில்லை.


சிறந்த டீல்ஸ் (Best Deals)

** ஸ்டால் எண் : F-32 Lanmark பதிப்பகத்தில் ஆங்கில புத்தகங்கள் பலவும் 49 ரூபாய்க்கு கிடைக்கின்றன. உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல புத்தகங்களை அள்ளலாம். இங்கு நூறு முதல் 300 வரை விலையுள்ள ஏராளமான புத்தகங்கள் 49 ரூபாய்க்கு கிடைக்கிறது

** கிழக்கில் அன்னா ஹசாரே பற்றி ஜெயமோகன் எழுதிய புத்தகம் மலிவு விலையில் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது.   

** ஸ்டால் எண் : 191 சர்வோதயா பதிப்பகத்தில்

அர்த்தமுள்ள இந்து மதம் - பத்து பாகமும் சேர்த்து - 135 ரூபாய் !

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை - 27 ரூபாய் !

பொன்னியின் செல்வன் (அனைத்து பாகங்களும்) 270 ரூபாய்

** ஸ்டால் எண் : 112 விசா பதிப்பகத்தில்

கல்கியின் பார்த்திபன் கனவு - 80 ரூபாய்

சிவகாமியின் சபதம் - 160 ரூபாய் .

சுஜாதா நூல்கள் பல ரூ. 40 முதல் 100 வரை இங்கு கிடைக்கிறது

** விகடன் பதிப்பகத்தில் - அனைத்து விகடன் பிரசுரங்களும் ஓராண்டு படிக்க ஆண்டு சந்தா - புத்தக சந்தையில் மட்டும் ஆயிரம் ரூபாய்.

** உயிர்மை (மனுஷ்ய புத்திரன்) இலக்கிய இதழ் - ஆண்டு சந்தா - 200 ரூபாய் (வழக்கமாய் 250 போலும்)

** ஸ்டால்எண் : 208 பாலாஜி பதிப்பகத்தில் குழந்தைகள் புத்தகங்கள் ரூபாய் 30 -ல் கிடைக்கிறது

** புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி - பழைய இதழ்கள் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது

** ஐந்திணை பதிப்பகத்தில் தி. ஜானகிராமன் அற்புத நூல்கள் பல ரூ. 40 முதல் 80 விலையில் கிடைக்கிறது

வகைகள்

** குழந்தைகள் புத்தகம் கிடைக்கும் இடங்கள் :

ஸ்டால்எண் : 208 பாலாஜி பதிப்பகம் (Rs. 30 each)
ஸ்டால் எண் : 86 நவ்நீத் பதிப்பகம்
ஸ்டால் எண் : 142 அரும்பு பதிப்பகம்
ஸ்டால் எண் : 3 : Apple Publishing (Only English books)
ஸ்டால் எண் : 142 : Seasons Publishing
மேலும் F-29, F-30 , F-31

சுய முன்னேற்றம் : ஸ்டால் எண் 79 -விஜயா பதிப்பகம் (சுய முன்னேற்ற புத்தகங்கள் மட்டுமே இங்கு அதிகம் கிடைக்கிறது )

கலைஞர் கருவூலம் : கலைஞர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவர் பற்றிய புத்தகங்கள் மட்டும் இங்கு கிடைக்கிறது ( இந்த ஒரு விஷயத்தில் அம்மாவை விட ஐயா முன்னாடி நிக்கிறார் !)

இஸ்லாமிய புத்தகங்கள் :

ஸ்டால் எண் : 445 : அஷாரத் பப்ளிஷர்
ஸ்டால் எண் : 438 : Furquan Publishers
ஸ்டால் எண் : 410 : அறிவு நாற்றங்கால்
*******
பதிவர்கள் கார்னர்

இங்கு சந்தித்த பதிவர்கள்: கேபிள், மணிஜி, KRP செந்தில், கரா, மெட்ராஸ் பவன் சிவகுமார், பிலாசபி பிரபாகர்,ஆரூர் மூனா  செந்திலு, கிருஷ்ண பிரபு , பட்டர்பிளை சூர்யா , ஹரன் பிரசன்னா

பதிவர் கரா நான் பிக் ஷாப்பர் பை வைத்திருப்பதை பார்த்து " போகும் போது இது முழுக்க நிரம்பிடுமா?" என்றார். பக்கத்திலிருந்த கேபிள் " அவரா? வாங்கிட்டாலும்..." என நக்கல் அடித்தார். ஆனால் இம்முறை நிஜமாவே இரவு கிளம்பும் போது பிக் ஷாப்பர் முக்கால் வாசிக்கு மேல் நிரம்பி தூக்க முடியாமல் தான் தூக்கி போனேன்.

சிவகுமார் & Philosophy பிரபாகர் இருவரையும் ஆங்காங்கே பார்த்தோம். முதல் முறை பார்க்கும் போது பின்னாலிருந்து சென்று இருவர் முதுகிலும் செல்ல தட்டு தட்டி கூப்பிட, கோபத்தோடு திரும்பினாலும் " நீங்களா?" என சிரித்தார்கள்.

மதியம் சாப்பிடாததால் வெளியிலிருந்து வாங்கி வந்திருந்த காரா சேவு சாப்பிட்டு கொண்டிருந்தோம். அதிலே கொஞ்சம் அவர்களுக்கும் கொடுத்து விட்டு " இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்தில் (உங்க பதிவில்) வரணும்" என மிரட்டி விட்டு கிளம்பினோம்.

ஆரூர் மூனா  செந்திலு தன் சித்தப்பா பையனை " அண்ணே இவரும் நீடாமங்கலம் தான்" என அறிமுகபடுத்தினார்

டிஸ்கவரியில் வேடியப்பனுடன் பேசி கொண்டிருக்கும் போது, கிருஷ்ண பிரபு " நீங்க தான் மோகனா? நான் கிருஷ்ண பிரபு" என சொல்லி கை குலுக்கினார். " போட்டோவில் இருக்க மாதிரியே இல்லை நீங்க" என நான் சொல்ல, " நீங்க மட்டும் என்னவாம்?" என்றார். இது தான் பதிவர்கள் ! ரொம்ப நாள் பழகின மாதிரி எடுத்தவுடனே பேச முடியும் !

**
நான் வாங்கியவை: பெரும்பாலும் சுஜாதா மற்றும் தி. ஜானகிராமன் புத்தகங்களே. பெண்ணுக்கும் மனைவிக்கும் நிறைய புத்தகங்கள் வாங்கினேன். நான் வாங்கிய/ வாசித்த புத்தகங்கள் ப்ளாகில் எழுத போகும் புத்தக விமர்சனங்கள் மூலம் அறியலாம். எனவே அந்த லிஸ்ட் இப்போதைக்கு சஸ்பென்ஸ் !!

ஹேப்பி ஷாப்பிங் Folks !!


டிஸ்கி: நாளை மாலை குடும்பத்துடன் அணில் (நண்பன்) பார்க்க போறோம் ! அதன் விமர்சனம் விரைவில்....

50 comments:

  1. அலசலுக்கு நன்றி .

    ReplyDelete
  2. இதுக்குத் தான் போட்டவே போடக் கூடாது. இன்னும் கலாய்க்கலாம்:)

    ReplyDelete
  3. ஹூம்.... வர முடியலை என்ற மனக்குறையை இந்தப்பதிவுகள் மூலம் கொஞ்சம் தீர்த்துக்கறேன்.
    நன்றி.

    இந்த லைச்சி பழம் சண்டிகர் பக்கம் ஏகத்துக்கும் விளையுது.
    பழங்களைப் பறிச்சு மார்கெட்டில் தண்ணீரில் போட்டு வச்சுருப்பாங்க.இல்லைன்னா அங்கே அடிக்கும் வெயிலுக்கு உள்ளே இருக்கும் ஜூஸெல்லாம் வத்திப்போயிரும்:-)

    ReplyDelete
  4. I miss the Chennai book fair. சென்ற முறை சென்னையில் இருந்த போது என் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த முறை டி.வில் புத்தக கண்காட்சி பற்றிய செய்தியை பார்த்த போது அடுத்த முறை சென்னை போகும் போது அவசியம் போக வேண்டும் என இப்போதே கோரிக்கை வைத்து விட்டாள். அதற்குள் எத்தனை ஹாரி பாட்டர் வர போகிறதோ?

    புத்தக விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன். சென்ற முறையும் நிறைய விமர்சனங்களை படித்ததுதான் புத்தகங்களை தேர்வு செய்து வாங்க வசதியாக இருந்தது.

    ReplyDelete
  5. சென்ற வருடத்தை விட கிழக்கின் வெளியீடுகள் இந்த வருடம் கொஞ்சம் கம்மின்னு நினைக்கிறேன். நான் ஞாயிற்றுகிழமை போயிருந்தேன். மறுபடியும் காணும் பொங்கல் அன்னைக்கு போகலாம்னு ஒரு ஐடியா இருக்கு...பார்ப்போம்!

    ReplyDelete
  6. Anonymous10:52:00 AM

    பைனாகுலர் விற்கும் ஸ்டால், கூரியர் ஸ்டால் போன்ற தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. Anonymous10:54:00 AM

    பொன்னியின் செல்வன் எல்லாராலும் பிரிண்ட் செய்யப்படுகிறது. ஆனால் விகடன் சில நாட்களுக்கு முன்பு 1350 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை 950 ரூபாய்க்கு தந்தது. முன்பதிவு செய்து விட்டேன். இப்போது அந்த ஆபர் இல்லை. ம.செ.வின் ஓவியங்கள் அதில் இருப்பதுதான் ஹைலைட்!!

    ReplyDelete
  8. Anonymous10:56:00 AM

    நீங்கள் வாங்கிய புத்தங்களில் லிஸ்ட்டை தயவு செய்து போடவும். பிறருக்கு அவசியப்படலாம். காராச்சேவு சபை குறிப்பில் பதியப்பட்டு விட்டது :)

    ReplyDelete
  9. கண்காட்சியை பற்றி விவரமா சிறப்பாக எழுதியிருக்கீங்க மோகன்.நான் இங்க பெங்களூரில இருந்துண்டு வர முடியாததால உங்க பதிவுகளைப் படித்து சந்தோஷம் அடைகிறேன்.

    ReplyDelete
  10. Anonymous12:14:00 PM

    அண்ணே, தகவலுக்கு நன்றி. நீங்கள் வாங்கிய புத்தங்களின் பெயர்களை குறிப்பிட்டால் தான் என்னால் விடுபட்ட புத்தகங்களை வாங்க முடியும்.

    ReplyDelete
  11. /நீங்கள் வாங்கிய புத்தங்களில் லிஸ்ட்டை தயவு செய்து போடவும். பிறருக்கு அவசியப்படலாம்/

    Yes, I too recommend for the list.

    ReplyDelete
  12. பதிவை படித்ததும் கண்காட்சிக்கு நானும் உங்களுடன் வந்த உணர்வு...

    ReplyDelete
  13. மிகுந்த சிரத்தையுடன் அனைத்து விவரங்களையும் சேகரித்து அளித்த விதம் அருமை. சென்னை நண்பர்களுக்கு மிக உபயோகமாய் இருக்கும். புத்தகப் பட்டியலைப் பார்க்க விமர்சனம் எழுதும் வரை காத்திருக்கவேண்டுமா:)? ட்ரெய்லர் போல இப்பவே பட்டியலை அறிவியுங்கள்!

    ReplyDelete
  14. நல்ல அலசல். ஏக்கத்தை உண்டாக்கி விட்டது.

    இங்கயும் அடுத்த மாதம் உலக புத்தக கண்காட்சி நடைபெறும் என்று நினைக்கிறேன். இது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறையா என்பது நினைவில்லை.இரண்டு மூன்று தமிழ் பதிப்பகங்கள் ஸ்டால் இருக்கும். அதில் வாங்குவோம்.

    லிச்சி இங்கு கோடைக் காலங்களில் கொத்து கொத்தாய் தண்ணீரில் போட்டு விறபார்கள். வெளித்தோற்றம் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போன்றும் உள்ளே நுங்கு மாதிரியும் சற்று புளிப்பு சுவையுடன் இருக்கும்.உஷ்ணத்தைத் தணிக்கும்.

    ReplyDelete
  15. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி சென்னையில் நடக்கும்போது மனது அடித்துக் கொள்கிறது.... அங்கு இல்லையே என....

    ஃபிப்ரவரியில் இங்கும் ஒரு புத்தகக் கண்காட்சி நடக்கும்... இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை.... அதில் சில தமிழ் பதிப்பாளர்களும் வருவார்கள்... அதில் தான் நாங்கள் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும்.....

    ReplyDelete
  16. Unga Pathivai padicha piragu enakkum angu poga vendum enru thonrukirathu Sir! Arumai. Muzhumai.

    ReplyDelete
  17. நான் நேத்து அங்கே வந்தேன்

    ReplyDelete
  18. மோகன் குமார்,

    படம் வரைந்து பாகம் குறிக்காத குறையா புத்தக சந்தைக்கு செல்லவிருப்பவர்களுக்கு கையெடு தயாரிச்சுட்டிங்களே !

    நல்ல விரிவான,தெளிவான அனுபவப்பதிவு. இரட்டை தூரதரிசினி/தொலைநோக்கி வாங்கினிங்களா? எப்படி இருக்கு உருப்பெருக்கும் திறன்? விலைக்கட்டுப்படியா இருந்தா நாமளும் ஒன்னு வாங்குவோம்ல! நானும் இப்படித்தான் புத்தக சந்தைக்கு போய்ட்டு வேற கடைங்க இருந்தா அதை நோட்டம் விட்டுக்கிட்டு இருப்பேன் :-))

    ReplyDelete
  19. வாங்கின புத்தகங்களைப் படிக்க முடியாமல் அடுத்த வருடம் வாங்குவது... ஹிஹிஹி.. எல்லாருக்கும் இருக்கும் guilt.
    ஒரு வருடத்துக்குள் படித்து முடிக்காத புத்தகங்களை நூலகத்துக்கு தானமாகக் கொடுத்தால் நிறைவு கிடைக்கும் (படிக்கத்தான் முடியலே..)

    ReplyDelete
  20. //இரட்டை தூரதரிசினி/தொலைநோக்கி வாங்கினிங்களா?

    என்ன இது? புதுசா இருக்குதே?

    ReplyDelete
  21. பயனுள்ள பதிவு தலைவரே :)

    ReplyDelete
  22. நேற்றுதான் சென்று வந்தேன். உங்கள் பதிவைப் படித்தப் பின்பு, எனக்கு சந்தேகமே வந்துவிட்டது நான் அங்குதான் சென்று வந்தேனா என்று!

    மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள். அங்கே இவ்வளவு விஷயங்களை கவனிக்கலாம் என்பதை இப்பொழுதான் புரிந்துக் கொண்டேன்.

    நான் முதல் முறையாக சென்றதால் கொஞ்சம் பிரமிப்பு இருந்தது. எதை வாங்குவது என்பதில் குழப்பம் இருந்தது உண்மையே!

    நான் எடுத்துப் பார்த்து வாங்கலாம் என்று நினைத்து, வாங்காமல் வந்த புத்தகங்கள் பத்து இருக்கும். காரணம், நான் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அதை எனது கையிலிருந்து பறித்து மீண்டும் ஸ்டாலில் அதே இடத்தில் வைக்கும் வேலையை சிறப்பாக 'அமைதி அம்மா' செய்தார்! அதற்கு அவங்க சொன்ன விளக்கம், "இந்தப் புத்தகம் மாதிரியே நம்ம வீட்டில் இருக்கு. நீங்கதான் எடுத்துப் படிக்கிறதில்ல"

    கடைசியாக 'பத்தாயிரம் மைல் பயணம்' என்கிற திரு வெ.இறையன்பு அவர்கள் எழுதிய புத்தகத்தை வாங்கினேன். நான் சென்ற சமயம் அவரும் 'புதிய தலைமுறை' ஸ்டாலில் இருந்தார். புத்தகத்தில் அவருடைய கையெழுத்துடன் பெற்றது கூடுதல் மகிழ்ச்சி! இங்கே, திரு வெ.இறையன்பு அவர்கள் இருந்ததால் "அமைதி அம்மா" தடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பது கூடுதல் தகவல்.

    ReplyDelete
  23. மோகன்,

    //**லிச்சி என்கிற ஜூஸ் தான் மிக பிரபலம். நானும் அன்புவும் இரு முறை குடித்தோம். கடையில் மிக அதிக கூட்டத்துக்கிடையேயும் " லிச்சின்னா என்ன?" என கேட்டு " அது ஒரு பழ ஜூஸ்" என்று தெளிந்தோம்.//

    இந்த லிச்சி ஜூஸ் காரன் எந்த ஊரில எந்த கண்காட்சினாலும் கடையப்போட்டுறானுங்களே. பாண்டில இந்த வீக் எண்ட் ஒரு கணினி கண்காட்சி நடந்துச்சு அங்கேயும் இந்த கடை தான் :-)))

    என்னது தெளிஞ்சுச்சா ? சரக்கு அடிச்சுட்டு போனிங்களா :-))
    (பேரக்கேட்டாலே தெளியுதே ,ரொம்ப பவர்ஃபுல் ஜூஸ் போல)

    --------------------

    அப்பாதுரை,

    இரட்டை தூரதரிசினி/தொலை நோக்கி= Binocular

    ஹி..ஹி எப்படி நம்ம மொழியாக்கம் :-))

    ---------------

    ReplyDelete
  24. நண்பர்கள் அனைவர் கமன்டுக்கும் பதில் நிச்சயம் நாளை போடுகிறேன். குட் நைட் !!

    ReplyDelete
  25. உங்கள் பதிவை படிக்கும் போது ,நேரில் பார்த்த ஒரு திருப்தி.அது போல் பிரமாண்ட புத்தக காட்சி திருச்சியில் வைத்தால் நல்ல இருக்கும்.என்ன சென்னைபுத்தக வர முடியாது(தூரம்) என ஒரு வருத்தம் மட்டுமே.

    பரவயில்லை பல புத்தகங்களை உங்கள் விமசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  26. கோவை நேரம் said...

    அலசலுக்கு நன்றி
    **

    நன்றி கோவை நேரம் அவர்களே !

    ReplyDelete
  27. நீச்சல்காரன் said...

    இதுக்குத் தான் போட்டவே போடக் கூடாது. இன்னும் கலாய்க்கலாம்:)

    **
    ஆமாங்க நீச்சல் காரன். போட்டோ மட்டுமல்ல யார் என்கிற identity காட்டாமல் எழுதினால் இன்னும் நல்லது என தோன்றுகிறது

    ReplyDelete
  28. லைச்சி பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி துளசி கோபால் மேடம். நிறைய ஊர் போவதால் உங்களுக்கு நிறைய தகவல் தெரிகிறது
    **

    ReplyDelete
  29. ர‌கு said...

    சென்ற வருடத்தை விட கிழக்கின் வெளியீடுகள் இந்த வருடம் கொஞ்சம் கம்மின்னு நினைக்கிறேன். நான் ஞாயிற்றுகிழமை போயிருந்தேன். மறுபடியும் காணும் பொங்கல் அன்னைக்கு போகலாம்னு ஒரு ஐடியா இருக்கு...பார்ப்போம்!

    ***********
    இம்முறை கிழக்கு ஸ்டால் ரொம்ப பெரிதல்ல ஆனால் இரண்டு கடை போட்டிருக்காங்க ரகு.

    எனக்கு எப்பவும் ரெண்டு முறை போகும் பொறுமை இல்லை. ஒரே முறை தான் பெரும்பாலும் போவேன்.
    **

    ReplyDelete
  30. @ சிவகுமார் : பொன்னியின் செல்வன் குறித்த தகவல்களுக்கு நன்றி சிவா. அன்று தங்களுடன் நிறைய பேச முடியலை. பிறகு போனில் பேசுவோம்
    **

    ReplyDelete
  31. RAMVI said...

    கண்காட்சியை பற்றி விவரமா சிறப்பாக எழுதியிருக்கீங்க மோகன்.நான் இங்க பெங்களூரில இருந்துண்டு வர முடியாததால உங்க பதிவுகளைப் படித்து சந்தோஷம் அடைகிறேன்.

    **********
    நன்றி ராம்வி.
    **

    ReplyDelete
  32. ஆரூர் முனா செந்திலு said...


    அண்ணே, தகவலுக்கு நன்றி. நீங்கள் வாங்கிய புத்தங்களின் பெயர்களை குறிப்பிட்டால் தான் என்னால் விடுபட்ட புத்தகங்களை வாங்க முடியும்.

    *********
    செந்தில், உரிமையோடு பல நண்பர்கள் கேட்டதால் லிஸ்ட் இப்போ எழுதியாச்சு
    **

    ReplyDelete
  33. செல்வராஜ் ஜெகதீசன் said...

    /நீங்கள் வாங்கிய புத்தங்களில் லிஸ்ட்டை தயவு செய்து போடவும். பிறருக்கு அவசியப்படலாம்/

    Yes, I too recommend for the list.

    ***********
    நன்றி செல்வராஜ் ஜெகதீசன். இப்போ லிஸ்ட் தனி பதிவா சேர்த்தாச்சு
    **

    ReplyDelete
  34. சங்கவி said...

    பதிவை படித்ததும் கண்காட்சிக்கு நானும் உங்களுடன் வந்த உணர்வு...

    ****
    நன்றி சங்கவி

    ReplyDelete
  35. ராமலக்ஷ்மி said...

    மிகுந்த சிரத்தையுடன் அனைத்து விவரங்களையும் சேகரித்து அளித்த விதம் அருமை. சென்னை நண்பர்களுக்கு மிக உபயோகமாய் இருக்கும். புத்தகப் பட்டியலைப் பார்க்க விமர்சனம் எழுதும் வரை காத்திருக்கவேண்டுமா:)? ட்ரெய்லர் போல இப்பவே பட்டியலை அறிவியுங்கள்!

    #########
    நன்றி மேடம்.

    **

    ReplyDelete
  36. கோவை2தில்லி said...


    நல்ல அலசல். ஏக்கத்தை உண்டாக்கி விட்டது.

    **
    ரெண்டு ஸ்டால் இருக்கும் அதில் எடுப்போம் என்பது வருத்தத்தை தருகிறது. நம் சொந்த ஊரை
    விட்டு தள்ளி இருப்பதில் உள்ள சங்கடங்கள் இவை :((

    ReplyDelete
  37. வெங்கட் நாகராஜ் said...

    ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி சென்னையில் நடக்கும்போது மனது அடித்துக் கொள்கிறது.... அங்கு இல்லையே என....

    ***
    நன்றி வெங்கட். ஒரு முறை பொங்கல் சமயம் இங்கே வர பாருங்க

    ReplyDelete
  38. துரைடேனியல் said...

    Unga Pathivai padicha piragu enakkum angu poga vendum enru thonrukirathu Sir! Arumai. Muzhumai.
    ******
    நன்றி துரை டேனியல்
    ****

    ReplyDelete
  39. Gopi Ramamoorthy said...
    நான் நேத்து அங்கே வந்தேன்
    ***
    கூப்பிட்டுருக்கலாமே கோபி ! என் தொலை பேசி எண் இல்லையா? சென்னை வந்துட்டு பேசாம கூட போனா எப்படி?
    ***

    ReplyDelete
  40. வவ்வால் said...

    இரட்டை தூரதரிசினி/தொலைநோக்கி வாங்கினிங்களா? எப்படி இருக்கு உருப்பெருக்கும் திறன்? விலைக்கட்டுப்படியா இருந்தா நாமளும் ஒன்னு வாங்குவோம்ல!

    ********
    நன்றி வவ்வால்; தங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது

    பைனாகுலர் வாங்கினோம். நல்லா இருக்குன்னு தான் நினைக்கிறேன். நூறு ரூபாய் தான் விலை.

    ReplyDelete
  41. Rathnavel said...

    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.
    *****
    நன்றி ஐயா

    ReplyDelete
  42. அப்பாதுரை said...

    ஒரு வருடத்துக்குள் படித்து முடிக்காத புத்தகங்களை நூலகத்துக்கு தானமாகக் கொடுத்தால் நிறைவு கிடைக்கும் (படிக்கத்தான் முடியலே..)

    *****
    நன்றி அப்பா துரை; நான் வாசித்த புத்தகங்களை தான் ஒரு பள்ளி நூலகத்துக்கு தந்து வருகிறேன்

    ReplyDelete
  43. அருண்மொழித்தேவன் said...
    பயனுள்ள பதிவு தலைவரே :)
    ******
    நன்றி ரோமியோ

    ReplyDelete
  44. அமைதி அப்பா: என்னை நிறைய புகழ்வது உங்கள் வழக்கம். ஆனா மகிழ்ச்சியா தான் இருக்கு என்பதையும் சொல்ல தான் வேண்டும்.

    ReplyDelete
  45. நன்றி மழை சாரல். மகிழ்ச்சி

    ReplyDelete
  46. anna, naanum than unga kuda book fair la round adichaen. but ivlo matter ra yedi anna observe panni kalakitinga? simply superb.

    ReplyDelete
  47. anna, naanum than unga kuda book fair la round adichaen. but ivlo matter ra yedi anna observe panni kalakitinga? simply superb.

    ReplyDelete
  48. அன்பு: நன்றி

    ReplyDelete
  49. I dont find "contact us" details for viruba.com. I want to tell them to update their list. I found only 1 book of "Author VAALI" while I know few more titles which he has written viz. Paandavar boomi, Naanum indha nootrandum etc.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...