Friday, January 20, 2012

காஞ்சிபுரம்: குமர கோட்டமும் அருமையான ஒரு மெஸ்சும்

ஏகாம்பரேஸ்வரர் என்கிற சிவன் (அப்பா) கோயிலுக்கும், காஞ்சி காமாட்சி என்கிற அம்மா கோயிலுக்கும் நடுவில் இருக்கிறது இந்த முருகன் கோயில். (இந்த பசங்க எப்பவும் அம்மா- அப்பாவுக்கு நடுவில் தான் இருக்கும் போல !!)


குமர கோட்டம் என்கிற இந்த கோயில் மிக விசேஷமானது. வழக்கமான கோயில் போல நேராக இல்லாமல் மிக கோணலாக வளைந்து இருக்கிறது... இந்த வடிவில் வேறெங்கும் கோயில் இல்லை என்கிறார்கள்.


காஞ்சியில் பல்வேறு கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஆங்காங்கு உடைந்து காணப்படும். ஆனால் இங்கு உள்ள சிற்பங்கள் தெளிவாக, அழகாக உள்ளன. ஒரு வேளை சற்று புதிய கோயில் என்பதால் இருக்குமோ என்னவோ ?

சிற்ப வேலைப்பாடுகள் தெளிவாய்
பாம்பன் சுவாமிகள் காஞ்சிபுரம் வந்து விட்டு இந்த கோயிலுக்கு வராமல் சென்று விட்டாராம். அவரை முருகன் சிறுவனாக சென்று இந்த கோயிலுக்கு மறுபடி அழைத்து வந்ததாக புராண கதை உள்ளது.கோயிலுக்கு வெளியே பிரகாரத்தில் கிருபானந்த வாரியாருக்கு சிலை ஒன்று உள்ளது. அதன் அருகே உள்ள கோயில் அலுவலகத்தில்  கோயில் குறித்து விசாரித்து கொண்டிருக்க, ரொம்ப ஆர்வமாய் விசாரிக்கிறாரே இந்த ஆள் என, ஒரு புது மாலையை என்னிடம் குடுத்து " அந்த வாரியார் சிலைக்கு இந்த மாலையை போடுங்க சார்" என்றார் அங்கிருந்தவர்.


கந்த சஷ்டி திருவிழாவின் போது கூட்டம் நிரம்பி வழியுமாம். இங்குள்ள முருகன் மிக அழகாக இருக்கிறார் என்பது உபரி தகவல்
****
குமர கோட்டம் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது கோகுல் மெஸ். மிக அருமையான சாப்பாடு இங்கு கிடைக்கிறது. இவர்களுக்கு காஞ்சி காமாட்சி கோயில் பின் பக்க வாசல் அருகே இன்னொரு பிரான்ச் உள்ளது. அங்கு தான் முதல் நாள் இரவு டிபன் சாப்பிட்டோம். மெஸ் என்றதும் சற்று தயங்கி தயங்கி வந்த மனைவியும், மகளும் கோகுல் மெஸ்ஸில் சாப்பிட்டு செம குஷி ஆகி விட்டார்கள். இட்லி பூ மாதிரி மென்மையா இருந்தது. சைட் டிஷ் அனைத்தும் அருமை. சப்பாத்தி நன்றாக இருந்தது. இவை எல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி இருந்தது ஆனியன் தோசை. முதல் நாள் இரவு சாப்பிடும் போதே அவர்கள் குமர கோட்டம் எதிரே உள்ள மற்றொரு கோகுல் மெஸ் பற்றி கூறி விட்டனர்.
எனவே மறு நாள் காலை இங்கு சாப்பிட்டோம். பொங்கல் மற்றும் பூரி. செம tasty!! பின் நேற்றைய பாதிப்பில் ஆனியன் தோசை கேட்டு சாப்பிட்டோம். (ஆளுக்கு மூணு ஐட்டமா என நினைக்காதீர்கள். உதாரணமாய்  ஒரு தோசை வாங்கினால் ஆளுக்கு கொஞ்சம் பிய்த்து எடுத்து விடுவோம் !!) காபியும் கூட திவ்யமா இருந்தது. ஒவ்வொரு வேளைக்கும் சாப்பாடு மூவருக்கும் சேர்த்து நூறு ரூபாய்க்குள் தான் வந்தது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் !!


கிராமத்தில் உள்ளது போல் தாழ்வாரம்; இதன் அடியில் தான் சாப்பாட்டு மேசை 

பழங்காலத்து வீட்டை மெஸ் ஆக்கியுள்ளனர். கதவுகளை பாருங்கள்

காமாட்சி கோயில் பின் புறம் அருகே உள்ள மற்றொரு பிரான்ச் 
கோகுல் மெஸ்ஸில் முறுக்கு சீடை, அப்பளம் உள்ளிட்டவை கிடைக்கின்றன. நாங்கள் அரிசி அப்பளம் வாங்கி வந்தோம். மிக மிக அருமையாய் இருந்தது.

முறுக்கு சீடை, அரிசி அப்பளம்

காஞ்சிபுரம் சென்றால் அவசியம் ஒரு விசிட் அடியுங்கள் கோகுல் மெஸ்சுக்கு !
***********

தொடர்புடைய பதிவுகள் :


பகுதி 1: காஞ்சி பயணக்கட்டுரை மினி டிரைலர்

பகுதி 2 : காஞ்சி: ஏகாம்பரேஸ்வர் கோவிலும் ஒரு நல்ல துணிக்கடையும்

பகுதி 3 : காஞ்சி காமாட்சி அம்மனும், காஞ்சியில் தங்க நல்ல இடமும்

*************

அடுத்த பதிவில் :

உலகிலேயே சித்திர குப்தனுக்கு ஒரே கோயில் -விவரங்கள்

எந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்..? எத்திசையில் விளக்கு ஏற்ற கூடாது?- கோயிலில் படித்த தகவல்கள்

ஆமை வடிவில் சிவனுக்கு பூஜை செய்த விஷ்ணு..

இன்னொரு நல்ல ஹோட்டல் அறிமுகம்

37 comments:

 1. பராவயில்லையே.....கோவிலுக்கு போனதோடு இல்லாமல் அப்படியே சாப்பாட்டு கடை பற்றியும் ஒரே பதிவில் போட்டு விட்டீர்களே...ஹிஹி ஹி ..நானாய் இருந்தால் ..இன்னொரு பதிவு போட்டு இருப்பேன்

  ReplyDelete
 2. அட நம்ம பேர்ல சூப்பரா ஒரு மெஸ் அந்த பக்கம் போற வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் போய் பாத்துடலாம்.

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு பாஸ்

  ReplyDelete
 4. இரண்டு நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க.குமரக்கோட்டம் கோவில்,கோகுல் மெஸ்..நன்றி.

  ReplyDelete
 5. Anonymous12:04:00 PM

  நானும் சில நாட்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த போது அந்த மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கேன் அண்ணே. போட்டோவில் நீங்கள் மட்டும் தானே உள்ளீர்கள் குடும்பத்தினரை காணுமே.

  சில நாட்கள் பதிவில் இருந்து வெளியில் இருந்து மீண்டும் வந்தால் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. நாம் பழைய படி செட் ஆகிறதுக்கு 4 நாள் ஆகிடும் போல.

  ReplyDelete
 6. எங்க ஊருக்கு போயிட்டு வந்திருக்கீங்க. மகிழ்ச்சி. சித்திரகுப்தன் கோயிலுக்கு போயிட்டு வந்தீங்களா? அவருக்கு இங்கே மட்டும்தான் கோயில் இருக்குன்னு சொல்றாங்க...

  ReplyDelete
 7. குமரக்கோட்டம் மற்றும் கோகுல் மெஸ் குறித்த தகவல்கள் காஞ்சிக்கு செல்லும் போது பயன்படும். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. Hi,
  Thanks a lot. That is my favourite koil in all over India. That is where I had played when I was a small girl. Now that place is all cemented. Variayaar used to come and lecture there. We had Bommalattam, theatre, and what not during the festival times. I wonder whether they screen movies now.

  Nostalgic.

  I believe the koil is a positive one, and genuine prayers are always answered.

  Thanks a lot , I will cherish these lovely photographs.

  ReplyDelete
 9. மனமும் வயிறும் நிரம்பியது :)

  ReplyDelete
 10. //ஒரு வேளை சற்று புதிய கோயில் என்பதால் இருக்குமோ என்னவோ ?//

  புதிய கோயில் இல்லை மோகன். இதுவும் பழைய கோயில்தான். ஆனால் சில வருடங்க்ளுக்கு முன் கோயில் முழுக்க புதுப்பித்தார்கள்.

  கோகுல் மெஸ் எனக்கு புதுசு. ஊருக்கு போகும்போது ஹோட்டலில் சாப்பிட அம்மா அனுமதிப்பதில்லை.

  யுவகிருஷ்ணாவும் காஞ்சிபுரமா?

  ReplyDelete
 11. //யுவகிருஷ்ணாவும் காஞ்சிபுரமா?//

  ஆமாங்க. காஞ்சிவரம் பக்கத்துலே சிறுணை. ஆனா இப்போ அங்கே எந்த கனெக்‌ஷனும் இல்லை :-(

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. அருமையான பதிவு.
  பயனுள்ள தகவல்கள்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. பலருக்கும் பயனாகும் வகையில் சிறப்பான பகிர்வு.

  தூணில் வேலைப்பாடுகள் மிக அழகு.

  தொடரக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 15. அழகிய படங்கள். வாரியாருக்கு மாலை போடச் சொன்னார்கள் சரி, அப்புறமாவது விவரம் சொன்னார்களா இல்லையா...! கோகுல் மெஸ் தகவல்கள் கோவில் தகவலை விட சுண்டியிழுக்கிறது...(நான் சாப்பாட்டு ராமனாக்கும்! ) ஆனியன் ரவா சாப்பிட்டுப் பார்த்திருக்கலாமே...! அரிசி அப்பளம் காரமாக இருந்ததா...?

  ReplyDelete
 16. மனசுக்கும் சரி வாய்க்கும் சரி திருப்தியான தகவல்கள்!
  http://kbjana.blogspot.com/2012/01/blog-post_18.html

  ReplyDelete
 17. கோவை நேரம் said...
  கோவிலுக்கு போனதோடு சாப்பாட்டு கடை பற்றியும் ஒரே பதிவில் போட்டு விட்டீர்களே...ஹிஹி ஹி ..நானாய் இருந்தால் ..இன்னொரு பதிவு போட்டு இருப்பேன்
  நன்றி கோவை நேரம். அங்கே நிறைய கோவில் உண்டு. வெறும் கோயில் மட்டும் எழுதினால் போர் அடிக்குமே என கோயில் உடன் வேறு ஒரு தகவலும் சேர்த்து தருகிறேன்.
  ***

  ReplyDelete
 18. கோகுல் said...
  அட நம்ம பேர்ல சூப்பரா ஒரு மெஸ் அந்த பக்கம் போற வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் போய் பாத்துடலாம்.
  **
  ஹா ஹா நன்றி கோகுல். நிஜமா நல்ல மெஸ். ரொம்ப hygienic. நிச்சயம் முயற்சி பண்ணுங்க
  ***

  ReplyDelete
 19. K.s.s.Rajh said...
  நல்ல பகிர்வு பாஸ்
  **
  நன்றி ராஜா
  ***

  ReplyDelete
 20. RAMVI said...
  இரண்டு நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க.குமரக்கோட்டம் கோவில்,கோகுல் மெஸ்..நன்றி.
  ********
  நன்றி ராம்வி
  ******

  ReplyDelete
 21. ஆரூர் மூனா செந்தில் said...
  நானும் சில நாட்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த போது அந்த மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கேன் அண்ணே. போட்டோவில் நீங்கள் மட்டும் தானே உள்ளீர்கள் குடும்பத்தினரை காணுமே.
  **
  கோகுல் மெஸ்ஸில் நீங்களும் சாபிட்டுருக்கீன்களா? மகிழ்ச்சி. ப்ளாகில் மனைவி, மகள் போட்டோ போடுவதேயில்லை செந்தில்
  **

  ReplyDelete
 22. யுவகிருஷ்ணா said...
  எங்க ஊருக்கு போயிட்டு வந்திருக்கீங்க. மகிழ்ச்சி. சித்திரகுப்தன் கோயிலுக்கு போயிட்டு வந்தீங்களா?
  **
  நன்றி யுவா. காஞ்சிபுரம் உங்க ஊர் என இப்போ தான் தெரியும். சித்திர குப்தன் கோயில் பற்றி அடுத்த பதிவில் எழுதுவேன்

  ReplyDelete
 23. கோவை2தில்லி said...
  குமரக்கோட்டம் மற்றும் கோகுல் மெஸ் குறித்த தகவல்கள் காஞ்சிக்கு செல்லும் போது பயன்படும். பகிர்வுக்கு நன்றி
  ****
  மிக மகிழ்ச்சி நன்றி கோவை2தில்லி madam.

  ReplyDelete
 24. Vetrimagal said...
  Hi,
  Thanks a lot. That is my favourite koil in all over India. That is where I had played when I was a small girl.
  ****
  மேடம். தங்கள் Comment மிக மிக சந்தோசம் தந்தது. இத்தகைய பதிவு எழுதுவதில் நிஜமாய் பலன் உள்ளது என்பது உங்கள் போன்றோரை சந்தோஷ படுத்துவது மூலம் அறிய முடிகிறது மிக நன்றி !

  ReplyDelete
 25. ரிஷபன் said...
  மனமும் வயிறும் நிரம்பியது :)
  *******
  நன்றி ரிஷபன் சார்
  **

  ReplyDelete
 26. ரகு: நீங்க Proper காஞ்சிபுரமா? பக்கத்தில் வேற ஊர் என நினைத்திருந்தேன்

  ReplyDelete
 27. ரத்னவேல் ஐயா: நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 28. ராமலட்சுமி மேடம். சிங்கப்பூர் மாதிரி சைலண்ட்டா எங்காவது போயிட்டு வந்துடீங்களா? ஒரு வாரம் நம் ப்ளாகில் மட்டுமல்ல எங்குமே உங்களை பார்க்க முடியலை :)

  ReplyDelete
 29. ஸ்ரீராம். said...
  ஆனியன் ரவா சாப்பிட்டுப் பார்த்திருக்கலாமே...! அரிசி அப்பளம் காரமாக இருந்ததா...?
  *****
  ஸ்ரீராம்: ஆஹா ஆனியன் ரவா கூட சூப்பரா இருக்கும். உங்க சாய்ஸ் குட். அரிசி அப்பளம் காரமா இல்லை. மொரு மொறுன்னு வழக்கமான அப்பளத்தை விட அருமையா இருந்தது

  ReplyDelete
 30. கே. பி. ஜனா... said...
  மனசுக்கும் சரி வாய்க்கும் சரி திருப்தியான தகவல்கள்!

  மிக்க நன்றி ஜனா சார்

  ReplyDelete
 31. ஆம்:)! நல்ல அவதானிப்பு.

  ReplyDelete
 32. நல்ல கவரேஜ்..

  ReplyDelete
 33. அன்புள்ள மோகன் குமார்,

  மிக அருமையான நடை + சுவையான தகவல்கள். பல முறை ஏற்கனவே காஞ்சீபுரம் போயிருந்தாலும், உங்கள் பதிவைப் படித்தவுடன் மீண்டும் போகத் தோன்றுகிறது. அய்யாசாமி கலக்குகிறார்...

  காஞ்சிபுரம் பற்றி சுஜாதா வர்ணனையை இங்கு 'தேடல்' கதையில் நீங்கள் காணலாம்...

  http://balhanuman.wordpress.com/2010/05/26/

  ReplyDelete
 34. குமரகோட்டம் சின்ன பிள்ளையா இருக்கும்போது போனது. அந்த நினைவுகளை விசிறிவிட்டது உங்கள் பதிவு. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 35. //வழக்கமான கோயில் போல நேராக இல்லாமல் மிக கோணலாக வளைந்து இருக்கிறது//

  படத்தில் எதுவும் தெரியலையே?

  ReplyDelete
 36. நல்ல தகவல்கள் மோகன்....

  சாப்பாடு பற்றிய தகவல்களும் நன்று. நிச்சயம் உதவும்....

  ReplyDelete
 37. உங்கள் பதிவின் பின்னுரைகளை படித்தபிறகு இன்னும் மகிழழ்ச்சி! நான் சிறு வயதில் இருந்து படித்த காஞ்சீ, நான் விரும்பும் பதிவர்களையும் இணைக்கிறது!!!

  உங்களுக்கு மறுபடி, வணக்கம்!

  Special bonding!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...