Sunday, September 1, 2013

அகவொளி பதிப்பக இரு நூல்கள் வெளியீட்டு விழா - படங்கள் ​+ சிறு குறிப்பு

கவொளி பதிப்பகத்தின் இரு புத்தகங்கள் வெளியீட்டு விழா இன்று சைதாபேட்டையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

சதீஷ் சங்கவியின் " இதழில் எழுதிய கவிதைகள்" தொகுப்பை தாமோதர் சந்துரு அவர்கள் வெளியிட - மணிஜி அவர்கள் பெற்று கொண்டார் .

வால் பையன் புத்தகம் பற்றி மிக நகைச்சுவையாக பேசினார் !

அடுத்து " வெற்றிக்கோடு " புத்தகத்தை கேபிள் சங்கர் வெளியிட - ஜாக்கி சேகர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்

தொடர்ந்து ஜாக்கி சேகர், வழக்கறிஞர் தேவகுமார், கவிஞர் பத்மஜா நாராயணன், நண்பர் அதியமான் ஆகியோர் வெற்றிக்கோடு பற்றி தங்கள் கருத்துகளை விரிவாய் பேசினர்.

அவர்கள் பேசிய கருத்துகளில் நினைவில் உள்ளதை (நேரமிருப்பின்) பின்னர் பகிர்கிறேன்.

தேவாவின் பேச்சு கன்னி பேச்சு போலவே  தெரிய வில்லை ! அசத்தி விட்டான் !

ஜாக்கி மற்றும் பத்மஜா இருவர் குடும்பத்திலும் உடல்நல குறைவான நிலையில் தத்தம் மகள் இருந்த நிலையிலும் ஒரே நாளில் புத்தகத்தை வாசித்து விட்டு - விழாவில் கலந்து கொண்டு புத்தகம் பற்றி மிக மிக விரிவாய் பேசியது மனதை நெகிழ்த்தியது   !

என்ன தவம் செய்தனை .....இத்தகைய நண்பர்களை பெற !

நினைவில் இருந்தவரை வந்திருந்த பதிவர்கள்/ எழுத்தாளர்கள்  :

எழுத்தாளர் வா. மு. கோமு
மணிஜி
தாமோதர் சந்துரு
கேபிள் சங்கர்
ஜாக்கி சேகர்
அதிஷா
அகநாழிகை வாசுதேவன்
பால கணேஷ்
கே. ஆர். பி செந்தில்
பத்மஜா நாராயணன்
கண்ணன் ராமசாமி (கரா)
அதியமான்
ஸ்கூல் பையன்
பட்டிக்காட்டான் ஜெய்
முக நூலில் பதிவெழுதும் அன்பு சிவன்

இதனை தவிர சட்ட கல்லூரியில் என்னுடன் படித்த வழக்கறிஞர் நண்பர்கள் ...

பிரேம்குமார்
பாலமுத்து குமார்
அமுதன்
தேவகுமார்

மற்றும்

ACS இன்ஸ்டியூட்டை சார்ந்த

நாகராஜன்
பாலசுப்ரமணியம்

(அநேகமாய் நான் ஓரிரு பதிவர்கள் பெயரை மறந்திருப்பேன். பின்னூட்டத்தில் தவற விட்ட நண்பர்கள் பெயரை சொல்லுங்கள் நண்பர்களே !)

**********
விழா முடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது மாலை 7.30 மணிக்கு நமது புத்தகம் அட்டை லே அவுட் செய்த சுகுமார் சுவாமிநாதனிடம் இருந்து ஒரு எஸ். எம். எஸ்.

இன்றைய விழாவில் எடுத்த புகைப்படங்கள் 8 மணிக்குள் பகிர்ந்தால் நாளை - சென்னையில் மட்டும் சர்குலேட் ஆகும் ஒரு செய்தித்தாளில் அதனை பகிர்கிறேன் என சொல்லியிருந்தார்

அகநாழிகை வாசுவிடம் சொன்னதும் உடன் அவர் அனுப்பி வைக்க ...இன்றைய புத்தக வெளியீடு விழா பற்றிய படம் நாளை சென்னை அவினியூ என்ற செய்தி தாளில் சிறு செய்தியாக வருகிறது.மிக்க நன்றி சுகுமார் !

*********
முகநூலில் நண்பர் திரு அன்பு சிவம் அவர்கள் விழா மற்றும் புத்தகம் பற்றி எழுதியது இதோ:

கவொளிப் பதிப்பகத்தின் இரு புத்தக அறிமுக விழாவிற்குச் சென்றிருந்தேன்.

முதல் புத்தகம் தம்பி சதீஷ் சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகள். சதீஷ் முத்தத்திற்கு மொத்த குத்தகையாளர் என்பதால் முதல் கவிதைத் தொகுதியின் தலைப்பே இனிக்கும் இதழாய் இருந்ததில் வியப்பில்லை. சற்றே மேலோட்டமாகப் பார்த்த போது கவிதைகளில் தெரியும் நயமும் ரசனையும் நன்கு புரிந்தது.

இரண்டாவது புத்தகம் வீடு திரும்பல் மோகனின் வெற்றிக் கோடு. தமிழில் சுய முன்னேற்றம் குறித்த பல புத்தகங்கள் வந்து விட்டது. இதுவும் இன்னொன்றோ என்ற சந்தேகம் இருந்தது. வாங்கிப் படித்ததும் புரிந்தது இது பத்தோடு பதினொன்றல்ல என்பது. எந்த ஒரு மனிதன் நான் இந்தத் தவறைச் செய்தேன். அதனால் அல்லலுற்றேன். இதை நீயும் செய்யாதே துன்பத்திற்கு ஆளாகாதே என்று கூறுகிறானோ அவனது பாடங்கள் நிச்சயம் பயனுள்ளவையாகவே இருக்கும்.

சமீப காலமாக நான் எழுதி வரும் மீண்டும் மீண்டும சொல்வேனில் நான் சொல்ல நினைத்த சில விஷயங்களை மோகன் குமார் தனது நுாலில் சொல்லிவிட்டார். அத்தகைய விஷயங்களை நீக்கி மீண்டும் மீண்டும் சொல்வேன்.

மோகன் குமாரின் எழுத்து எளிமையானது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் எது முக்கியம் என்பதை எடுத்துரைக்கிறது. சற்றே எளிமையாகத் தெரியும் சில வாக்கியங்கள் உள்ளே ஒரு கடலை ஒளித்துக் கொண்டிருக்கிறது. உதாரணங்கள்

• நாம் எந்த ஒரு சிறு தவறும் செய்யக்கூடாதெனில், ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்தால்தான் முடியும்.

• வாழ்வில் வென்ற பல வெற்றியாளர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

• கடவுளாலும் மாற்ற முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது.

தமிழில் சமீப காலத்தில் வந்திருக்கும் சுய முன்னேற்றப் புத்தகங்களில் வெற்றிக் கோடு நிச்சயம் வித்தியாசமானது. ஏதோ ஒரு மூலையில் வாழும் ஒரு மனிதனுக்கு இது வெற்றியைக் கொடுத்தாலும் போதும். அது மோகனுக்குக் கிடைத்த வெற்றி.

வாழ்த்துக்கள் சதீஷ் !

வாழ்த்துக்கள் மோகன் !
*************************
மிக குறுகிய அவகாசத்தில் வாசித்து விட்டு அற்புத கருத்துரை வழங்கிய நண்பர்களுக்கு சிறிய நினைவு பரிசு !  ( பேனா !)
*****************
புத்தகம் குறித்து அருமையாய் பேசினீர்கள் ஜாக்கி ; என் நண்பன் தேவா உங்கள் பேச்சு மிக பிடித்திருந்ததாக போனில் தெரிவித்தான் !

Photo 

************
பதிவர்கள் சிலரை தான் இயக்கம் புது படத்தில் எப்படி களாய்த்துள்ளார் கேபிள் என்ற விபரம் இன்று சொன்னார் ..விபரங்கள் விரைவில்.. தனியே பகிர்கிறேன்***********
புத்தக வெளியீட்டில் நெகிழ வைத்த தங்கள் பேச்சை நாளைய விழாவிலும் எதிர்பார்க்கிறேன் - பத்மஜா மேடம்; நீங்கள் பேசியதை பின்னர் எழுதி தந்தால் - நிச்சயம் அடுத்த பதிப்பில் - புத்தகத்தில் அது சேர்க்கப்படும் !

Photo: இன்று அகநாழிகை புத்தக உலகில் நடைபெற்ற, மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தக வெளியீடு

விழா நடந்த ஹால் !

Photo


*********
விழா குறித்து முகநூலில் இன்று நான் பகிர்ந்த  சில விஷயங்கள் :

முதல் முறையாக புத்தகத்தில் பலர் ஆட்டோகிராப் வாங்கியபோது சங்கோஜமாக இருந்தது ! ஆட்டோகிராப் போடும் அளவா வளர்ந்து விட்டோம் ! நம்ப முடிய வில்லை !
*************
Bala Subramanian, a young Company Secretary who attended today " Vetrikkodu :" book release function has posted the following message in his timeline; Do not know how to share from there. Hence copying and sharing it here:

Bala Subramanianposted to Mohan Kumar
15 minutes ago near Chennai ·

Extremely privileged to be present at the book launch ceremony with all the well known writers. Buying the book before it is officially launched tomorrow is like going to a preview show for a Rajnikanth movie on the eve of its release. Thank you Mohan Kumar Sir for giving us the book.

Looking forward to read the book and the feedback will follow soon. — feeling excited.
*************
அற்புதமான நண்பர்கள். நிறைவான விழா. மறக்க முடியாத நாள் !

நெகிழ்ந்த மனதுடன் உறங்க செல்கிறேன். நாளை பதிவர் விழாவில் சந்திப்போம் !

11 comments:

 1. புத்தக வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது குறித்து மிக்க மகி\ழ்ச்சி மோகன் குமார் மற்றும் சங்கவி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...!!!

  ReplyDelete
 3. மிகவும் மகிழ்ச்சி மோகன் குமார். இன்னும் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் மோகன் குமார்!

  ReplyDelete
 5. I was also in the book release function :)

  ReplyDelete
 6. வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
 7. வாழ்த்துகள் இன்னும் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்மோகன்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்மோகன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...