Thursday, October 17, 2013

இலட்சுமணன் நினைவு பரிசளிப்பு விழா - சிறப்பு அழைப்பாளர் யுவகிருஷ்ணா

ண்பன் இலட்சுமணன் ... எங்களுடன் சட்டக்கல்லூரியில் படித்த நண்பன். அரிதான, அற்புதமான மனிதனான எங்கள் இலட்சுமணன் ஹீமோபீலியா நோயால் 25 வயதில் மரணமடைந்தான்.

1996-ல் இலட்சுமணன் மறைவுக்குப் பிறகு, ஓராண்டு இடைவெளியில் (1997) அவன் கவிதைகளைத் தொகுத்து சட்டக்கல்லூரி நண்பர்கள் - புத்தகமாக வெளியிட்டோம்.  அந்தக் கவிதை தொகுப்பின் பெயர் வீடுதிரும்பல் ! (அதன் நினைவாகவே நமது ப்ளாகிற்கும் அப்பெயர் வைக்கப்பட்டது )

1997- ல் இலட்சுமணன் கவிதைத் தொகுப்பு வெளியான பின் - கடந்த 16 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் அவன் நினைவாக ஏதேனுமோர் நற்காரியம்  நண்பர்கள் செய்து வருகிறோம்

பல வருடங்கள் அடையார் செயின்ட் லூயிஸ் விழியிழந்தோர் பள்ளியில் பேச்சு போட்டி மற்றும் போட்டி நடக்கும் (இலட்சுமணன் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர்; விகடனில் மாணவ நிருபர்; கவிஞர் என பன்முக தன்மை கொண்டவன்- விழி இழந்த சிறுவர்கள் என்பதால் - பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள் மட்டுமே அவர்களுக்கு நடத்த இயலும் )

புகைப்படத்தில் - வழக்கறிஞர் ரவி, வழக்கறிஞர் அமிழ்து மற்றும் வழக்கறிஞர் டெய்சியின் தாயார் - அடையார் விழி இழந்தோர் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் நடுவர்களாக ....
சிற்சில காரணங்களால் அடையார் செயின்ட் லூயிஸ் பள்ளியில் விழா நடத்த இரண்டு வருடங்களாக அனுமதி கிடைக்க வில்லை. ஆகவே புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் - 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளில் - முதல் மூன்று இடம் பிடித்த   மாணவ மாணவிகளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக பரிசுகள் வழங்குகிறோம்.

இவ்வருடம் மாணவர்களுக்கு பரிசுகள் தந்து பேச இருப்போர் இருவர்

முதலாமவர் நண்பர் ஜாக்கி சேகர் மூலம் அறிமுகமான இளம் தொழிலதிபர் -திரு. முத்துக்  குமாரசாமி. இந்த விழாவிற்கான பரிசுகள் இவர் தான் வழங்குகிறார்.

இரண்டாமவர் உங்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நண்பர் - யுவகிருஷ்ணா !

இதே பள்ளியில் படித்து  - இன்று ஒரு நிருபராக - சைபர் கிரைம் மற்றும் விஜயகாந்த் குறித்து இரு புத்தகங்கள் எழுதிய - எழுத்தாளராக வளர்ந்து நிற்பவர்.

மிக ஏழ்மை நிலையில் இருந்தும் உயர முடியும் என்பதற்கும் - படிப்பை மட்டுமே சார்ந்ததல்ல ஒருவனின் வளர்ச்சி என்பதற்கும் யுவகிருஷ்ணா மற்றும் முத்துக்  குமாரசாமி ஆகியோர் எடுத்து காட்டு.

வாய்ப்பு இருப்பின் நாளை காலை நடக்க இருக்கும் இந்த எளிய விழாவில் நீங்களும் பார்வையாளராக கலந்து கொள்ளலாம்.

விழா விபரங்கள் :

நாள் - 18 அக்டோபர் 2013

நேரம் - காலை மிகச் சரியாக 9.10 மணிக்கு

முகவரி -

அரசு மேல்நிலைப்பள்ளி
(மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் மற்றும் மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளி அருகில் )
புழுதிவாக்கம்.

**********
தொடர்புடைய பதிவு :

இலட்சுமணன் என்கிற மனிதன் 

10 comments:

 1. விழா சிறக்கவும், அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. விழா சிறக்க வாழ்த்துகள். உங்கள் நண்பர் உடல் மறைந்தாலும் அவரின் ஆன்மாவோடு நட்புறவு பாராட்டும் உங்களுக்கு பாராட்டுகள்

  ReplyDelete
 3. Anonymous6:50:00 PM

  வணக்கம்
  விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. நல்லதொரு பணி! வழக்கறிஞர் அமிழ்து! எங்கள் குடும்ப நண்பரின் தம்பி மகன்! பழக்கம் உண்டு! புகைப்படத்தில் நடுவராக கண்டதும் மகிழ்ந்தேன்! நன்றி!

  ReplyDelete
 5. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள். அலுவலகம் செல்லும் வழிதான். முடிந்தால் நானும் கலந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 7. விழா இனிதே சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. இன்று ஒரு நெகிழ்ச்சியான நாள்.

  நான் படித்த பள்ளியில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன். பள்ளிக்காலத்தில் எனக்கு யூனிஃபார்ம் உடையாக இருந்த வெள்ளைச்சட்டை, காக்கி பேண்ட் அணிந்துச் சென்றேன்.

  “இவரை மாதிரி நீங்களும் வரணும்” என்று தலைமையாசிரியர் சொல்லும்போது கூச்சத்தில் நெளிந்தேன்.

  தொழிலதிபர் முத்துக்குமாரசாமி மற்றும் தோழர் வழக்கறிஞர் Mohan Kumar ஏற்பாட்டில் நடந்த விழா இது.
  எங்கள் பகுதியில் எங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வளர்ந்து இன்று கல்வித்துறையில் உயரதிகாரியாய் பணியாற்றும் அண்ணன் டி.என்.முரளிதரன் அவர்களோடு மேடையில் அமர்ந்திருந்தேன்.

  இருபது ஆண்டு காலத்தில் என்னுடைய பள்ளி பெற்றிருக்கும் சிறப்புகளை காணும்போது கிடைத்த உணர்வுகள் கலவையானது. நாங்கள் வைத்த மரங்கள் இன்று பெரிதாய் வளர்ந்து பள்ளி வளாகம் முழுமைக்கும் நிழல் தருகிறது. பள்ளியை ஒட்டி அச்சுறுத்திக்கொண்டிருந்த மரணக்குட்டை இப்போதில்லை. நானெல்லாம் எட்டாவது வரைக்கும் டவுசர்தான். இப்போது ஆறாம் வகுப்பு மாணவனே டீசண்டாக பேண்ட் போட்டு, டக் இன் செய்து ஐடி கார்ட் மாட்டி பளிச்சென்று இருக்கிறான். எல்லாருக்கும் பெஞ்ச், டேபிள் வசதி இருக்கிறது. நாங்களெல்லாம் தரையில் உட்கார்ந்து படித்தோம். ஆறாங்கிளாஸ் படிக்கும்போது என்னுடைய வகுப்பில் 106 பேர் இருந்தார்கள். இப்போது பள்ளியின் ஒட்டுமொத்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கையே 800க்குள்தான். அப்போதெல்லாம் இறுதித்தேர்வில் 300 தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். இப்போது அசால்டாக 400 தாண்டுகிறார்கள். போன ஆண்டு முதல் மதிப்பெண் 490ஆம்.

  நம்மை நமக்கு அடுத்தத்தடுத்த தலைமுறை தாண்டி புலிப்பாய்ச்சலாக ஓடிக்கொண்டிருப்பதை காண்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் இன்று என்னை தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப்பள்ளியின் (இப்போது மேனிலை) வாண்டுப்பையனாக உணரச்செய்த தோழர் மோகன்குமாருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

  ReplyDelete
 10. intha pathivai padikkumpothu 4 varudangkalukku munnar ninga st.louis palikku vanthu potti vaichu vanthu ungal nanpar patri sonnatha niyapakam varukirathu sir. anal araikuraiyaka niyapakam varuvathal ennal muzuvathum solla mudiyavillai..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...