Tuesday, October 22, 2013

ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார் !


நல்ல மனம் வாழ்க !

இது போன்ற மனிதர்களால் தான் நாட்டில் மழை பெய்யுது !

***************
டெனால்டு ராபர்ட் originally shared:

ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்"

படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.”


அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள்.

விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.

“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள - படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது”


*******
நன்றி: கூகிள் பிளஸ்சில் இச்செய்தியைப் பகிர்ந்த டெனால்டு ராபர்ட் &  ஜோதிஜி

16 comments:

  1. ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது”


    பெருமைப்படவைக்கும் தகவல்கள்..!

    ReplyDelete
  2. சிறப்பான மனிதர். வளரட்டும் இவரது தொண்டு....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. நெசவாளர்கள் என்றாலே ஏழ்மை தானே... இங்கு இது போல் பல நல்ல உள்ளங்கள் உள்ளன...

    ReplyDelete
  4. நேரம் இருந்தால் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

    கருத்து இடலாம்... இப்போது நண்பர்கள் ஆகி விட்டீர்களே...... ஹா... ஹா...

    புரிந்து கொண்டால் நன்றி...

    ReplyDelete
  5. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,
    பாராட்டப்பட வேண்டிய நபர். அன்னாருக்கு எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  6. காமராஜருக்கு இணையாக அல்லது அவருக்கு மேலானவர் என்று கூட சொல்லலாம்.கர்மவீரருக்கு அரசு பலம் இருந்தது.ஆனால் இவர் ஒரு தனி மனிதராக சாதிக்கிறார்.மென் மேலும் இவர் பணி சிறக்க வாழ்த்துவோம்.

    ReplyDelete
  7. நல்ல மனிதரை பத்தி அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. தன்நலம் கருதாது நற்சேவை புரியும் அவரை வாழ்த்துவோம்.

    ReplyDelete
  9. சிறப்பானதோர் மனிதர் பற்றி தகவல் சொன்னமைக்கு நன்றி மோகன்குமார்.....

    ReplyDelete
  10. அவருடைய செயல் எனது கண்களில் நீர் தளும்பச் செய்துவிட்டது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  11. நல்லார் ஒருவர் உள்ளறேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை

    ReplyDelete
  12. மலைகள், கிணறு, கல் உடைக்கும் போயர் ஜாதி மக்களின் குழந்தைகளுக்கு...
    ஒரு நல்ல உள்ளம் திண்டுக்கல்லில் இலவச பள்ளிக்கூடம் ஏற்படுத்தி, குழந்தைகளை படிக்க வைக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அந்த நல்ல மனிதன் விலாசம் என்ன என்று சொன்னால் நலம்!

    பின்குறிப்பு:
    ஜாதி பேரை கூறியே ஆக வேண்டியதினால் மட்டுமே, நான் இங்கே ஜாதி பேரை சொனேன்.
    இருந்தாலும், என்னை மன்னிக்கவும்

    ReplyDelete
  13. நல்ல மனிதருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கும் வணக்கத்திற்கும் உரியவர்

    ReplyDelete
  15. ஒரு அருமையான மனிதரை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.வாழ்த்தும் வணக்கமும்!

    ReplyDelete
  16. பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு அன்பும் நன்றியும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...