Saturday, August 1, 2015

வானவில் - கேளடி கண்மணியும் புத்தம் புது காலையும்

டிவியில் ரசித்த - கேளடி கண்மணி

இயக்குனர் வசந்த்தின் முதல் படம்.. ஆசை, ரிதம் போன்ற நல்ல படங்கள் பின் எடுத்தாலும், அவை எதுவும் கேளடி கண்மணி தரத்திற்கு இணையாக அமைய வில்லை.

பாடகர் SPB முதல் படம் என்பதால் ஆங்காங்கு சற்று செயற்கையாக தெரிகிறார்.. ராதிகா, அஞ்சு, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் அட்டகாசமாக பொருந்துகிறார்கள்..

மூச்சு விடாமல் பாடிய பாட்டு என சொல்லி மண்ணில் இந்த காதலன்றி பாட்டு மிக அதிக பிரபலமாகி படம்  நன்கு ஓட காரணமாக இருந்தது.. நீ பாதி- நான் பாதி மற்றும் கற்பூர பொம்மை ஒன்று - இரண்டும் இன்றும் பலர் ரசிக்கும் பாடல்கள்..

இப்போது பார்க்கையிலும் மிக ரசிக்கும் படி இருந்தது..

ஆனந்த விகடனில் 50 மார்க்குக்கு மேல் வாங்கிய ஒரு சில படங்களில் ஒன்று...  !

அழகு கார்னர்நீயா நானா

வரதட்சணை பற்றி நீயா நானாவில் - ஒரு அணி - ஏன் வேண்டாம் என்றும் மறுபக்கம்- அது ஏன் வேண்டும் என்றும் பேசினர் ..

வரதட்சணை ஏன் வாங்கப்படுகிறது என்பதற்காக பேசிய அனைவரையும் - கோபிநாத்தே "தப்பு; தப்பு" என மடக்கி விட்டார்.. வரதட்சணை தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை- ஆயினும் அவர்களை- முழுவதும் பேசவாவது விட்டிருக்கலாம்.. .

நிகழ்ச்சி முழுதுமே  மிக சிலரே திரும்ப திரும்ப பேசினர் ... இவ்வளவு ஏன் .. சிறப்பு விருந்தினர் என ஒரு பெண்மணி வந்து.. ஒரு வார்த்தை கூட பேசவில்லை !!

கலக்க போவது யாரு

விஜய் டிவி யில் கலக்க போவது யாரு  புது சீசன் ஆரம்பித்துள்ளனர்... முதல் வாரம் பெர்பார்மென்ஸ் ரொம்ப ரொம்ப சுமார். .. பிரியங்கா, தாடி பாலாஜி போன்றோர் ஜட்ஜ் ஆக அமர்ந்துள்ளனர்.. இதென்ன.. தகுதி சுற்றா, அப்புறமாவது நன்றாக இருக்குமா என தெரிய வில்லை. இதே தரத்தில் போனால் நிகழ்ச்சி அம்பேல் ஆகி விடும்..

என்னா பாட்டுடே : புத்தம் புது காலை

அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக பதிவான ஒரு அற்புத பாட்டு - "புத்தம் புது காலை .. பொன்னிற வேளை ".. இளையராஜா- பாரதிராஜா அற்புத காம்பினேஷனில் உருவானது...

படத்தில் அந்த பாடல் இடம் பெறவே இல்லை; இசை தட்டுகள் - ரேடியோ இவை மூலமே பிரபலமான இப்பாட்டை சென்ற ஆண்டு வெளியான மேகா படத்தில் பயன் படுத்தியிருந்தனர்...

நமது மனதில் நீங்கா இடம் பெற்ற இப்பாடலை நல்ல வேளையாக - கெடுக்காமல் - மிக அழகாக படமாக்கியிருந்தனர்.

வீடியோவுடன் ரசிக்க - ராஜாவின் இசை ஒரு காரணமென்றால் - இன்னொரு காரணம் அந்த அழகிய ஹீரோயின்.. வாவ்... வாட் அ பியூட்டி ... ! இன்னும் ஒரு சுற்று இளைத்தால் செம சூப்பர் ஆக இருப்பார் !

பாடலை ரசிக்க குட்டி குட்டியாய் பல விஷயங்கள் உண்டு.. அழகான ஒளி வெள்ளம்... குழந்தை மூலம் முத்த பரிமாற்றம் நடப்பது... ஹீரோயினின் புன்னகை.. இப்படி பல...

பார்த்து மகிழுங்கள்..படித்ததில் பிடித்தது 

கலாம் அவர்கள் பற்றி வந்த சில எதிர் மறை பதிவுகள் பற்றி ஜெயமோகன் மிக அற்புதமான பதில் தந்துள்ளார். அண்மையில் படித்ததில் மிக ரசித்த பதிவு இது...

கலாம்- கேள்விகள்

சூப்பர் சிங்கர் 

சூப்பர் சிங்கர் இந்த வாரம் மறைந்த எம். எஸ்.வி நினைவை போற்றும் வகையில் - அவரது பாடல்கள் இசைக்கப்பட்டன. மேலும் தினம் வெவ்வேறு சிறப்பு விருந்தினர் வந்து பேசினர் .. இதில் எம். எஸ்.வி அவர்களின் ட்ரூப்பில் இசை அமைத்தோர் வந்து பேசியது மிக அற்புதமாகவும், நெகிழ்வாகவும் இருந்தது. போலவே வாணி ஜெயராம் பல விஷயங்களை கண்ணீரை அடக்கிய படியே பேசினார்.....

இம்முறை சூப்பர் சிங்கரில் பல நல்ல பாடகர்கள் இருப்பது தெரிகிறது. விஜய் டிவி இழுத்தடிக்காமல் சுறுசுறுப்பாய் கொண்டு சென்றால் நன்றாயிருக்கும்....

3 comments:

 1. ---அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக பதிவான ஒரு அற்புத பாட்டு - "புத்தம் புது காலை .. பொன்னிற வேளை ".. இளையராஜா- வைரமுத்து- பாரதிராஜா என்ற அற்புத காம்பினேஷனில் உருவானது...----

  நண்பரே,

  அருமையான பாடல். ஆனால் தவறான தகவல். இந்தப் பாடலை எழுதியது கங்கை அமரன். வைரமுத்து அல்ல , பேசாமல் வாடி என் கப்பங்கிழங்கே பாடலை எடுத்துவிட்டு இந்தப் பாடலை படத்தில் வைத்திருக்கலாம்.

  ReplyDelete
 2. நான் பின்னூட்டமிட நினைத்தை காரிகன் எழுதி விட்டார்.

  ReplyDelete
 3. இது
  சுவாரஸ்யமான
  பதிவு!!!

  .

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...