Monday, August 31, 2015

தனி ஒருவன் -துப்பாக்கி பார்ட் டூ வா ? - விமர்சனம்

இன்றைய சினிமா இருக்கும் நிலையில் ஒரு நடிகர் வருடத்துக்கு 2 படம் நடித்தாலே பெரிய விஷயம்.. ஜெயம் ரவிக்கு இவ்வருடம் மூன்றாவது ரிலீஸ் இது..

அதுவும் அடுத்தடுத்த மாதங்களில் ... ஜூன் மாதம் - ரோமியோ ஜூலியட், ஜூலை - சகல கலா வல்லவன், ஆகஸ்ட்- தனி ஒருவன்.. என 3 மாதங்களில் 3 ரிலீஸ்... !! ரோமியோ ஜூலியட் கையை கடிக்காமல் ஓடியது; அடுத்த சகல கலா வல்லவன் செம அடி.. இப்போது தனி ஒருவன் மரண மாஸ் ஹிட் !

கதை



நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போராட்டம்.. குறிப்பாக அவர்களுக்குள் நடக்கும் மைண்ட் கேம்ஸ்  தான் கதை.. இதற்கு மேல் சொல்லி சுவாரஸ்யத்தை குலைக்க விரும்ப வில்லை

ஹீரோ 

சர்ர்ர்ரியான ஹீரோயிசம் நிறைந்த பாத்திரம்.. அதற்கு முழுசாய் ஜஸ்டிபை (Justify)  செய்கிறார் ஜெயம் ரவி.. எமோஷனல் காட்சிகள், குழம்பிய மன நிலை, சண்டை காட்சி என அனைத்திலும் யூனிபார்ம் போல கச்சிதம்.. ..

அரவிந்த் சாமி

இந்நேரம் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.. படத்தின் பெரும் ஆச்சரியம் அரவிந்த் சுவாமி தான்.. கடலில் வில்லனாக சொதப்பியவர், இங்கு அசத்தி இருக்கிறார்.. உண்மையில் அவருக்கு கிடைக்கும் பாராட்டில் பெரும் பகுதி இயக்குனருக்கு தான் செல்ல வேண்டும். அர்விந்த் சுவாமி வழக்கம் போல் மிக அடக்கி வாசித்துள்ளார்(Under play without over acting) .. அந்த பழைய அழகை மீண்டும் ரசிக்க முடிகிறது..

படத்தின் முடிவின் சாதா வில்லன் கதையை முடிப்பது போல் செய்யாமல், இறுதியிலும் நம் மனதில் நிறைகிற படி செய்துள்ளது அழகு..



நயன் தாரா 

ஹீரோ மற்றும் வில்லன் இன்ட்ரோவை விட நயன் முதலில் வரும் காட்சிக்கு தான் தியேட்டர் முழுக்க அவ்வளவு சத்தம் !!

பாடலுக்கு மட்டுமின்றி - கதையோடு வருகிற மாதிரி இவர் பாத்திரம் அமைக்க பட்டதே ரொம்ப நல்ல விஷயம்..

தம்பி ராமையா 

ரொம்ப ரொம்ப அழகான கேரக்டரைசேஷன்; இரண்டாம் பாதியில் இவரது பாத்திரம் நல்ல ரிலீப்... மாடுலேஷனடுன் + இவர் பேசும் பல வசனங்களை மிக ரசிக்கிறார்கள்..

திரைக்கதை - வசனம்  

வசனம் பல இடத்தில் அப்ளாஸ் அள்ளுது.. திரைக் கதை தான் நிஜ ஹீரோ. முதல் பாதி முழுதும் தோட்டா போல சீறி பறக்கிறது.. இரண்டாம் பாதியும் குட்.. ஏனோ கடைசி 10 நிமிடம் ஒரு lag வருகிற மாதிரி உணர்வு.. ( சண்டை காட்சி இன்றி கிளை மாக்ஸ் வைத்திருப்பதை பாராட்ட வேண்டும் !)

குறைவான பாடல்கள் -

நிறைய சண்டைகளுக்கு வாய்ப்பிருந்தும் அளவோடு வைத்தது.. என திரைக்கதையில் பாராட்ட ஏராள விஷயங்கள் ...

நிச்சயம் பல லாஜிக் மிஸ்டேக் உள்ளது.. ஆனால் பற பற கதையில் அது மறந்து போகிறது..

இயக்கம் 

ஜெயிக்க ஆசை மட்டும் போதாது .. வெறி வேண்டும்..

ஓரிரு தோல்விக்கு பிறகு   - முதல் படம் போல அதீத வெறியோடு உழைத்துள்ளார் மோகன் ராஜா (எம். ராஜாவிலிருந்து  மோகன் ராஜா என்ற பெயர் மாற்றம் அவருக்கு நன்றாகவே வொர்க் அவுட் ஆகி உள்ளது !)

ஜெயம் ரவி - நயன்தாராவிடம் காதலை சொல்லும் சீன் அட்டகாசம்.. அந்த காட்சியை எவ்வளவு சுவாரஸ்யமாக கற்பனை செய்துள்ளனர் என ஆச்சரியமாக இருந்தது.. இப்படி வசனமே இல்லாமல் - இயக்குனரின் புத்திசாலி தனம் மூலம் சில காட்சிகள் கை தட்டலை அள்ளுகிறது..




தியேட்டர் நொறுக்ஸ்

சத்யம் நிறுவன தியேட்டர்களில் - வெள்ளி கிழமை ரிலீஸ் ஆகும் நல்ல படங்களுக்கு செவ்வாய் கிழமை இரவே டிக்கெட் புல் ஆகி விடுகிறது.. ரிவ்யூ நல்லா இருக்கு என தெரிந்த பின் பார்க்கணும் என்றால் சிறு தியேட்டர்களை தான் நாடணும்  !

ரொம்ப நாள் கழித்து (After 7 years) எங்க ஊர் குமரன் தியேட்டர் சென்றோம்.. சனிக் கிழமை சென்று டிக்கெட் கிடைக்காமல் திரும்பி, மறு நாளைக்கு புக்கிங் செய்து விட்டு வந்தோம் !!

குமரன் தியேட்டர் இப்படம் போலவே இனிய ஆச்சரியம் தந்தது.. முழு ஏ. சி.. அருமையான இருக்கைகள்.. நல்ல சவுண்ட் சிஸ்டம்.. சுத்தமான கழிப்பறை.. இணையத்தில் முன் பதிவு என எங்க மடிப்பாக்கத்தில் இவ்வளவு நல்ல தியேட்டரா என கிள்ளி பார்த்து கொள்ள வேண்டியுள்ளது..

தனி ஒருவன் - FINAL ANALYSIS

உண்மையில் இப்படத்தை விஜய்  நடித்த துப்பாக்கி உடன் தான் ஒப்பிட வேண்டும். அங்கு ஹீரோ ராணுவ அதிகாரி. இங்கு போலீஸ். அப்படம் போலவே தனி  மனிதனாக பெரும் கூட்டத்தை வீழ்த்துகிறார் ஹீரோ..



நிச்சயம் துப்பாக்கியின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்ல வில்லை; ஆனால் அதே genre ; திரைக்கதையில் அதே ஸ்பீட் !

அஜீத் நடித்திருந்தால் - இப்படம் இன்னும் சில மடங்கு வெற்றி அடைந்திருக்கும் (விஜய் எனில் - துப்பாக்கி போலவே இருக்கு என சொல்ல வாய்ப்பு அதிகம்; எனவே அஜீத்தை சொன்னேன் )

த்ரில்லர் + சஸ்பென்ஸ் + ஆக்ஷன் கதைகள் சரியான திரைக் கதையுடன் சொல்ல பட்டால் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.. அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.. நிச்சயம் பிற மொழிகளுக்கு இப்படம் (Re make) சென்று விடும்..

ராஜா.. அடுத்த பட திரை கதைக்கு நிறைய நாள் எடுத்து கொண்டு இதே தரத்துடன் தர வேண்டும் ..

தனி ஒருவன்.. Racy thriller ! Dont miss it !!

1 comment:

  1. நானும் ரசித்தேன். கில்லி படத்திற்குப் பின் வெகு ஸ்பீட் படம் என நான் உணர்கிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...