9எழுத்தாளர் சுஜாதாவின் மிக புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று.1960 களின் இறுதியில் குமுதத்தில் தொடராக வெளிவந்தது.
20 ஆண்டுகளுக்கு முன் முதன் முறை படித்த போது அசந்து போனேன். பின் வேறு சில முறை வாசித்துள்ளேன். தற்போது மீண்டும் ஒரு முறை !!
கதை
முதல் அத்தியாயத்தில் ஒரு கொலை நடக்கிறது. நன்கு தெரிந்த ஒருவர் - ஒரு வீட்டுக்கு சென்று அங்குள்ள இளைஞனுடன் சற்று பேசி கொண்டிருந்து விட்டு அவனை நைலான் கயிறால் நெரித்து கொல்கிறான்.

கொலை பழி அதற்கு சற்று முன் வந்து சென்ற இன்னொருவன் மேல் விழுகிறது. அவன் கணேஷை அணுக - கணேஷ் சாதுரியமாக வாதாடி வழக்கை உடைக்கிறான்.. இது முதல் ஏழெட்டு அத்தியாயங்கள்.. கணேஷ் இத்துடன் விடை பெறுகிறான் (இக்கதை எழுதும் போது வசந்த் உதயமாக வில்லை !!)
அந்த கொலையை செய்தது யார் என ரிட்டயர் ஆகும் நிலையில் உள்ள ஒரு போலிஸ் அதிகாரி துப்பு துலக்கி கடைசி அத்தியாயத்தில் கண்டறிகிறார்...

அப்படி என்ன வித்யாசம் ?
வழக்கமான ஒரு கொலை- அதை துப்பறியும் போலிஸ்.. என்பது தான் கதை எனினும் திரைக்கதை - பாணி அந்த காலத்துக்கு நிச்சயம் புதிது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் சுனந்தாவின் டயரியில் இருந்து என்று ஒரு சில பத்திகள் மிக சுவாரஸ்யமாக வந்தோ கொண்டேயிருக்கும்.. நிச்சயம் இந்த பெண் இப்போது இல்லை; அவள் மரணத்துக்கு காரணமானவன் தான் முதல் அத்தியாயத்தில் கொல்லப்பட்டான் என்பது நமக்கு தெரியும். இருப்பினும் கொன்றது யார்.. என்பது ஊகிக்க முடியாத ஒன்று தான்..
மேலும் இறுதியில் அந்த போலிஸ் அதிகாரி ஐ. பி. சி க்கு வெளியே ஒரு நியாயம் நடந்திருக்கிறது; இன்றைய தினம் நான் ரிட்டயர் ஆகி விட்டேன்; உன்னை கைது செய்யவோ, போலீசிடம் மாட்டி தரவோ விரும்ப வில்லை என்று சொல்லி விட்டு செல்வது - நிச்சயம் அந்த காலத்தில் ஒரு புதிதான முடிவாக இருந்திருக்கும்.
பல விஷயங்களை சுஜாதா முயன்று பார்த்துள்ளார். இறங்கினான் என்பதை அடுத்தடுத்த வரியில் சொல்வது, சுனந்தாவின் டயரி குறிப்பு இவை எல்லாமே அவர் செய்து பார்த்த புதுமையே...
உண்மையில் 20 வருடம் முன் வாசிக்கும் போது இருந்த திகைப்பும் ரசிப்பும் இப்போது கிட்ட வில்லை என்பது உண்மை தான்...
இருப்பினும் சுஜாதா ரசிகர்கள் அனைவரும் படிக்க/ ரசிக்க வேண்டிய ஒரு புத்தகம் நைலான் கயிறு..

நான் படித்துள்ளேன்! சுவாரஸ்யமான நாவல்!
ReplyDeleteநான் படித்துள்ளேன்! சுவாரஸ்யமான நாவல்!
ReplyDeleteஆமாம்... இந்த புதினம் நானும் படித்திருக்கிறேன்...
ReplyDeleteஇந்தக் கதை காமிக்ஸ் வடிவிலும் வந்தது. (இது பற்றிய குறிப்பு
'சுஜாதாவிடம் சில கேள்விகள்' என்ற எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன்..
இணைப்பு: www.nizampakkam.blogspot.com/2012/05/sujaathaa100-100.html
)
பிறகு ராணி முத்துவிலும் வந்தது.
சமீபத்தில் குமுதத்தில் மீண்டும் இந்த நாவல் தொடராக வந்து கொண்டிருந்தது.ஏற்கனவே படித்திருந்ததால்.மீண்டும் படிப்பதில் ஆறாம் சற்று குறைவாகவே இருந்தது
ReplyDelete'நைலான் கயிறு ' மாதிரியான ஒரு நாவலை சுஜாதாவைத் தவிர வேறு யாராலும் எழுதமுடியாது - என்று அப்போதைய குமுதம் பொறுப்பாசிரியரும் பிரபல எழுத்தாளருமான அமரர் ரா கி ரங்கராஜன் அவர்கள் தம் மகனிடம் கூறினாராம். (ரா.கி. ரா. வின் மகன் என்னுடன் சிடி யூனியன் வங்கியில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார்.) இதை விட வேறு பாராட்டு வேண்டுமா?
ReplyDelete