Wednesday, December 30, 2015

2015- டாப் 12 தமிழ் படங்கள்

ல்லா வருடமும் சிறந்த 10 படங்கள் நமது ப்ளாகில் எழுதுவதுண்டு. சென்ற வருடம் மட்டும் மிஸ் ஆனது.

எனது ரசனையில் 2015 ன் டாப் 12 ... இதோ..

No: 12 - டார்லிங் 

Image result for darling tamil movie cast

GV பிரகாஷ் குமார் ஒரு ஹீரோவா என்ற கேள்வியை போக்கி, எதிர் பாராத காமெடி கலாட்டாவாக இருந்தது. தியேட்டரில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது. கொடுத்த காசுக்கு முழு வொர்த்... கருணாஸ் மற்றும் கோஸ்ட் கோபால் வர்மா (ராஜேந்திரன்) அலப்பறைகள் அட்டகாசம். நிகில் கல்ராணி.. இனிய புது வரவு.. வரும் ஆண்டில் இவரை இன்னும் பல படங்களில் தமிழ் சமூகம் கண்டு மகிழலாம்..

No: 11 - இன்று நேற்று நாளை புதிய இயக்குனர் ரவிக்குமாரின் வித்தியாச கதை சொல்லும் பாணி.... டைம் மிஷின்  எனும் நல்ல கான்செப்ட்.. இன்னும் நன்றாய் எடுத்திருக்கலாம் என தோன்றினாலும், நிச்சயம் கவனிக்கத்தக்க, பாராட்ட வேண்டிய முயற்சி..

No: 10- ஐ ரொம்ப சாதாரண கதை.. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.. ஷங்கரின் மிக சுமாரான பட வரிசையில் சேரும்..

டாப் 10ல் இடம் பிடிக்க ஒரே காரணம்.. விக்ரம் என்ற நடிகரின் அற்புதமான பெர்பாமென்ஸ் .. அந்த உழைப்பை நிராகரிக்க முடியாது என்ற காரணத்துக்காகவும், ரகுமானின் சில இனிய பாடல்களுக்காகவும் நினைவு கூறத்தக்கது "ஐ"  !

No: 9 - ஒ காதல் கண்மணி கடல் என்ற தோல்விக்கு பின் மணிரத்னம் - மீண்டும் நிமிர வைத்த படம். லிவ்விங் டுகெதர் பற்றி பேசிய கதை.. துல்கர் மற்றும் நித்யா மேனன் இருவரின் இயல்பான நடிப்பு.. இளைஞர்களை வெகுவாய் கவர்ந்தது.

No: 8 - என்னை அறிந்தால் கவுதம் மேனன் - ஒரே போலிஸ் கதையை கொஞ்சம் மாற்றி மாற்றி எடுப்பார் (ஹீரோ மனைவி வில்லனால் கொல்லப்படுவது அநேகமாய் தொடரும்.. ) இருப்பினும் என்னை அறிந்தால் அஜீத் மற்றும் அருண் விஜய் இருவரால் ரசிக்க முடிந்தது. சில பாடல்களும்  - அவற்றை படமாக்கிய விதமும் அழகு.

No: 7 பசங்க -2

வருட இறுதியில் வந்து குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவர்ந்தது பசங்க -2
பசங்க முதல் பாகம் வெளியான போது - எனது தேர்வில் அப்படம் - அவ்வருடத்தின் நம்பர் : ஒன் படமாக இருந்தது ! பசங்க -2 இவ்வருடம் ஏழாவது இடத்தில்...

நமது ப்ளாகில் பசங்க -2 விமர்சனம் 

No: 6 - நானும் ரவுடி தான் இந்த வருடம் நயன்தாரா பல வெற்றி படங்களில் நடித்தார்.. காது கேளாத அவரது பாத்திரம் வெகு அழகான சித்தரிப்பு. காமெடி என்றால் விஜய் சேதுபதி பிச்சு உதறிடுவார் என்பதற்கு இன்னொரு எ-கா இப்படம். ஜாலி பீல் குட் மூவி..

நானும் ரவுடி தான் : விமர்சனம்  

No: 5: 36 வயதினிலே 

மலையாள மொழி மாற்று படம் தான். ஆனால் தமிழிலும் மிக ரசிக்கும் படி எடுத்திருந்தனர். நடிகர் சூர்யா இவ்வருடம் எடுத்த இரு படங்களும் நல்ல மெசேஜ் உள்ளவையாக இருந்ததுடன் வெற்றி படங்களாகவும் அமைந்தது !

No: 4 - பாபநாசம் த்ரிஷ்யம் என்று மலையாளத்தில் சக்கை போடு போட்ட படம்- தமிழிலும் பாமிலி ஆடியன்சை கட்டி போட்டது. கமலுக்கு இவ்வருடம் 3 படங்கள் வெளியானாலும் இதுவே மிகப்பெரும் வெற்றிப்படம்..

No: 3- காக்கா முட்டை 

விருது வாங்கும் படங்கள் வசூலில் சாதனை புரிவதில்லை என்கிற வழக்கத்தை பொய்யாக்கியது காக்கா முட்டை .எளிய கதை.. சொல்லப்பட்ட விதம்.. அதன் களம்.. சிறுவர்களின் உலகம்.. இயல்பான நடிப்பு.. ரசிக்கும் படியான கிளைமாக்ஸ்  என இவ்வருடம் மிக அதிகம் ரசிக்கப்பட்ட + லாபம் சம்பாதித்த படங்களில் ஒன்று..

No: 2- பாகுபலி 

விஷுவல் ப்ரில்லியன்ஸ் ! என்ன ஒரு பிரம்மாண்டம் ... 


கதை எழுதும் போதே ரெண்டு பாகம் என முடிவெடுத்த தைரியம்.. முடியும் போது படக்கென்று ஒரு கேள்வியுடன் முடிக்கும் புத்தி சாலித்தனம் ..

துவக்கத்தில் சற்று போர் அடித்தாலும் போக போக அசரடித்த படம்.. நேரடி தமிழ் படம் இல்லை என்கிற ஒரே காரணத்தால் இரண்டாம் இடத்தில்.

No: 1 - தனி ஒருவன் 

இவ்வருடம் பெரும் ஆச்சரியத்தை தந்த கமர்ஷியல் வின்னர். ரீ மேக் ராஜாவா இப்படத்தை இயக்கியது ? (இந்த பையனுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன் !)அரவிந்த் சாமி பாத்திரம் + நடிப்பு தான் ஹைலைட்; கதையை வில்லன் பாத்திரத்தில் துவங்கி, வில்லன் பாத்திரத்திலேயே முடிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவியும் தன் பங்கை மிக சரியே செய்திருந்தார்.. தமிழில் இவ்வருட  ப்ளாக் பாஸ்டர் ஹிட் - இதுவே !

தனி ஒருவன் : விமர்சனம் 

*********
டிஸ்கி : காஞ்சனா - 2 வசூலில் முதல் 3- இடத்துக்குக்குள் வந்திருக்கும்; இருந்தாலும் என்னை கவராததால் - இந்த லிஸ்ட்டில் சேர்க்கவில்லை.
*********
2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2011ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2009 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

3 comments:

 1. வணக்கம்
  நல்ல படங்களின் தொகுப்பு.. பகிர்வுக்கு நன்றி.
  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. பசங்க -2மட்டும்பார்க்கவில்லை.
  மற்றையன பார்த்ததில் மகிழ்கின்றேன்.

  ReplyDelete
 3. பசங்க -2மட்டும்பார்க்கவில்லை.
  மற்றையன பார்த்ததில் மகிழ்கின்றேன்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...