Tuesday, March 8, 2016

மகளிர் தினம்: ஆனந்தவிகடனில் வெளியான என் கட்டுரை

விகடனில் 2012-ல் வெளியான கட்டுரை இது.

அண்மையில் (மார்ச் 5, 2016) சென்னை கம்பனி செகரட்டரி நிறுவன பெண்கள் தின கொண்டாட்டத்தில் பேசியது அநேகமாய் இக்கட்டுரையில் சொன்ன கருத்துக்கள் தான்.  3 வருடம் ஆகியும் பெண்கள் பற்றிய கருத்து அப்படியே நீடிக்கிறது. மனதில் உள்ளதே இக்கட்டுரையிலும் - 3 வருடம் கழித்து பேச்சிலும் வெளிப்பட்டுள்ளது !
**************
பெண்மை போற்றுவோம் !

அம்மா, அக்கா, அண்ணிகளால் வளர்க்கப்பட்டவன் நான். அலுவலகத்தில் பெண் பாஸ்களுடன் பணிபுரிந்தது பல்வேறு வித்தியாச அனுபவங்களைக் கற்றுத்தந்தது.

இன்றையப் பெண்களின் உழைப்பு, பிரமிக்கவைக்கிறது. அலுவலக வேலையுடன், வீட்டில் சமையல், குழந்தைகளுக்குப் பாடம், வயதானவர்களுக்கான கவனிப்பு என, ஒருநாளில் பல வடிவம் எடுக்கிறார்கள். அதீதப் பணிச் சுமை குறித்து எந்தக் குறையும் இன்றி, மகிழ்வுடன் இந்தப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்கள், ஒவ்வொருவரும் போற்றப்பட வேண்டியவர்களே.

பெண்களின் ஒவ்வொரு கடமைகளிலும் சமூகம் அவர்களிடம் மிகச் சிறந்த பங்களிப்பையே எதிர்பார்க்கிறது. வேலைக்குச் சென்றால் பெண் என்பதால் சலுகைகள் எதிர்பார்க்க கூடாது, மாலை நேரமானாலும், இருந்து வேலை முடித்து விட்டு தான் செல்ல வேண்டும் போன்றவற்றை இன்டர்வியூவிற்கு வரும்போதே பெண்களிடம் சொல்லி விடுகிறார்கள்.

சமையல் வேலையில் சில ஆண்கள் உதவினாலும், பெரும்பாலான ஆண்கள் அதில் மட்டுமல்லாது, பிள்ளைகள் படிப்பிலும் உதவுவதில்லை என்பதே நிதர்சன உண்மை.

'செய்வன திருந்தச் செய்வது’ பெண்களுக்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது. பெண்கள் ஈடுபடும் அனைத்து வேலைகளிலும் ஓர் ஒழுங்கும் முழுமையும், அழகுணர்ச்சியும் மிளிர்வதைக் காண முடியும். பிரச்னைகளை அணுகுவதிலும் அவர்களுடைய தைரியமும் தெளிவும் ஆண்களுக்குப் பெரும் பலமாக உள்ளது. நான் சந்தித்த சில வித்தியாசமான பெண்களும் அவர்களிடம் நான் கற்றதும் பெற்றதும் இதோ...


வழக்கறிஞர் அருள்மொழி

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக, பேச்சாளராக அனைவராலும் அறியப்பட்டவர். இவரிடம் ஜூனியர் வழக்கறிஞராக நான் இருந்தேன். பொதுவாக தொடக்கக் காலத்தில் ஜூனியர்களை 'வழக்கைத் தள்ளிப்போட’ (அட்ஜார்ன்மென்ட்) மட்டுமே சீனியர்கள் அனுப்புவார்கள். ஆனால் இவரோ, தான் வர முடியாத சமயங்களில் மிகக் குறுகிய அனுபவம் இருந்தபோதும், என்னை வாதிட அனுமதித்தார். அந்த வழக்கு குறித்து தெளிவாக எடுத்துச்சொல்லி, என்னென்ன பாயின்ட்கள் பேச வேண்டும் என்று பயிற்சி தந்து அனுப்புவார். இது என்னுள் நிறைய தன்னம்பிக்கையைத் தந்தது.

லட்சுமி மேனன்

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களில் மிகச் சிறந்த நிர்வாக இயக்குநருக்கான விருது பெற்ற லட்சுமி மேனனிடம் வேலைசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தை லாபத்துக்குக் கொண்டுசெல்லும் திறமை பெற்றவர். எப்போதும் புது ஆர்டர்கள் வாங்குவது, அதைத் திறம்படச் செய்வது குறித்தே யோசிப்பார்; பேசுவார். நிமிடத்தில் கோபம் வந்து, சட்டென்று அதை மறந்து, அன்பைப் பொழிவார். அனைவரும் ஓர் அம்மாவைப் போலத்தான் இவரைப் பார்ப்பார்கள். ஒருமுறை எனக்கு வேறு நல்ல வேலை கிடைத்தது. 'இவங்களை விட்டுட்டுப் போகப் போறியா?’ என, மனம் கேள்வி எழுப்பியது. தயங்கியபடியே அவரிடம் சொன்னேன். 'புதிய வேலை இன்னும் பல வாய்ப்புகளைத் தரும்’ என்று வாழ்த்தி அனுப்பினார்.

சாரா ஆரோக்கியசாமி

சென்னை மண்டல கம்பெனி செகரட்டரி இன்ஸ்டிடியூட்டின் இணை இயக்குநர் பொறுப்பில் இருப்பவர். படிப்பிலும் தொழிலிலும் எனக்கு மட்டுமல்லாது, என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு வழிகாட்டியாக இருப்பவர். எளிமைதான் இவருடைய சிறப்பு.

சென்னையின் அனைத்து கம்பெனி செகரட்டரிகள், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்த பல்வேறு தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். தினமும் உடற்பயிற்சி, டயட் உணவு என்று 15 வருடத்துக்கு முன்பு பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருக்கிறார்.

                                                                          


 வேலை நிமித்தம் இத்தகையப் பெண்களிடம் பழகியதில், அத்தனை பேரிடமும் ஓர் ஒற்றுமை. அவர்கள் சென்சிடிவ் ஆனவர்கள். தங்கள் வேலையை இன்னொருவர் குறை சொல்கிற மாதிரி சந்தர்ப்பமே வராத அளவுக்குப் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவும் சரி, அவர்கள் செய்யும் பரிந்துரைகளும் சரி அத்தனை துல்லியமாக இருக்கும். யாரேனும் கேள்வி கேட்டால், அதற்கு மிகத் தெளிவான விளக்கமான பதில் கிடைக்கும்.

பெண்களிடம் வீட்டில் மட்டுமல்ல... அலுவலகத்திலும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!

51 comments:

  1. வாழ்த்துகள்!!

    //விகடன் நிருபர் லோகநாதன் பெண்கள் தினத்துக்கு கட்டுரை கேட்டபோது //
    அப்போ ’ரொம்பப்’ பிரபல பதிவர் ஆகிட்டீங்க!! :-)))))

    (அப்போ விகடன் நிருபருக்கும் பதிவுலகம், பதிவர்கள், பிரபலப் பதிவர்கள்னு தெரிஞ்சுதான் இருக்கு, இல்லியா??) :-)))))

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  3. முதலில் வாழ்த்துகளைப் பிடிங்க மோகன்....

    தோ படிச்சுட்டு வரேன்...

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை மோகன்...

    விகடனில் வெளிவந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்!//'செய்வன திருந்தச் செய்வது’ பெண்களுக்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது. பெண்கள் ஈடுபடும் அனைத்து வேலைகளிலும் ஓர் ஒழுங்கும் முழுமையும், அழகுணர்ச்சியும் மிளிர்வதைக் காண முடியும். பிரச்னைகளை அணுகுவதிலும் அவர்களுடைய தைரியமும் தெளிவும் ஆண்களுக்குப் பெரும் பலமாக உள்ளது. நான் சந்தித்த சில வித்தியாசமான பெண்களும் அவர்களிடம் நான் கற்றதும் பெற்றதும் இதோ...
    //

    படிக்கையில் மிகவும் மகிழ்வாக உள்ளது.

    ReplyDelete
  6. நல்வாழ்த்துக்கள்.
    //அம்மா, அக்கா,-------- அதீதப் பணிச் சுமை குறித்து எந்தக் குறையும் இன்றி, மகிழ்வுடன் இந்தப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்கள், ஒவ்வொருவரும் போற்றப்பட வேண்டியவர்களே.//
    அருமையான ஆக்கம்.

    ReplyDelete
  7. விகடன் வெளியீட்டுக்குப் பாராட்டுகள்:)!

    கட்டுரை நன்று. ஆத்மார்த்தமான பகிர்வு.

    ‘வீடு திரும்பல்’ வாசகர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் மோகன்..:)

    ReplyDelete
  9. கட்டுரை வெளிவந்ததற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. வாழ்த்துகள் திரு மோகன் குமார். நல்ல கட்டுரை மற்றும் பிரபலங்களின் தேர்வு...

    ReplyDelete
  11. இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  12. விகடனில் வெளியானதுக்கு வாழ்த்துகள்..

    அருமையான கட்டுரை.

    ReplyDelete
  13. அருமைத் தலைவி..
    அனுஷ்கா அவர்களைப் பற்றி சொல்லாமல் 'மகளிர் தினப் பதிவா'
    இதனை நான் ஆட்சேபிக்கிறேன்.

    ReplyDelete
  14. மனம் நிறைந்த வாழ்த்துகள் மோஹன் குமார்.
    உங்கள் கட்டுரையைப் படித்தேன் நிறைவாக இருந்தது. பாராட்டுகள்.இங்கு வருகை தரும் அனைத்து மகளிருக்கும் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. விகடன் கட்டுரையைப் படித்தேன். நிறைவாக இருந்தது. மகளிர் சார்பாக உங்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  16. Manam niraintha vaazhthukkal

    ReplyDelete
  17. மகிழ்ச்சி! வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தங்களைச் சேரட்டும்

    ReplyDelete
  19. 'பெண்மை போற்றுவோம்' அழகான கூவல். பெண்களுக்கும் பெண்மைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்தவர் போல. வாழ்த்துக்கள்.

    கட்டுரையை pdfல் இணைத்திருக்கலாமோ? பெரிதாக்கிப் படிக்க முடியவில்லை.

    ReplyDelete
  20. விகடன் பிரசுரத்திற்கு நல்வாழ்த்துகள்
    அதீதப் பணிச் சுமை குறித்து எந்தக் குறையும் இன்றி, மகிழ்வுடன் இந்தப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்கள், ஒவ்வொருவரும் போற்றப்பட வேண்டியவர்களே.

    ஆம்!

    ReplyDelete
  21. வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. வேலை நிமித்தம் இத்தகையப் பெண்களிடம் பழகியதில், அத்தனை பேரிடமும் ஓர் ஒற்றுமை. அவர்கள் சென்சிடிவ் ஆனவர்கள். தங்கள் வேலையை இன்னொருவர் குறை சொல்கிற மாதிரி சந்தர்ப்பமே வராத அளவுக்குப் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவும் சரி, அவர்கள் செய்யும் பரிந்துரைகளும் சரி அத்தனை துல்லியமாக இருக்கும். யாரேனும் கேள்வி கேட்டால், அதற்கு மிகத் தெளிவான விளக்கமான பதில் கிடைக்கும்.

    பெண்களிடம் வீட்டில் மட்டுமல்ல... அலுவலகத்திலும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!




    ...... முத்தாய்ப்பான முடிவுரை!

    .... விகடனில் வெளியான உங்கள் கட்டுரைக்காக , வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  23. Valthukal Nalla pathivu

    ReplyDelete
  24. உங்களைப் பாதித்த பெண்கள் பட்டியலும், பெண்ணின் பெருமை குறித்த கட்டுரையின் ஒவ்வொரு பகுதியும் அருமை சார்.

    ReplyDelete
  25. நல்ல கட்டுரை .., வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்.. :-)

    ReplyDelete
  27. வாவ்! வாழ்த்துக்கள் மோகன் :)

    ReplyDelete
  28. Good one. Congrats.

    இன்று பெண்கள் தினம் என்பதை மறந்து விட்டு நானும் பெண்கள் பற்றி ஒரு பதிவு போட்டு விட்டேன். ஐயோ...என்ன ஆக போகிறதோ.

    ReplyDelete
  29. பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியும், ஆண்களால் அது முடியாது... ஆண்கள் ஒரே நேரத்தில் ஒரு வேலையே மட்டுமே செய்ய முடியும்... ஆண்கள் சமையல் வேலையில் உதவி செய்ய நினைப்பதை மட்டம் தட்டுவதே பெண்கள் தான், குறிப்பாக பெற்ற அன்னை

    ReplyDelete
  30. விகடன் போன்ற வெகுஜனப் பத்திரிக்கையில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துகள் மோகன். :-)

    ReplyDelete
  31. Unedited version comming from Mohan's heart. Superb.
    B.Sathrukkanan
    Coimbatore

    ReplyDelete
  32. anbu naba unathu arumaiyana pathivu, guest selection, keep it up,continue ur service,... jcsrg

    ReplyDelete
  33. மனமார்ந்த வாழ்த்துகள் சார் !

    ReplyDelete
  34. congrats, Mohan. very good article.

    ReplyDelete
  35. Good sense of write up! your aspirations stand up with the guidance of Great Women! Superb!

    ReplyDelete
  36. வாழ்த்துகள் சார். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  37. நண்பர்களே உங்கள் ஒவ்வொருவர் கமன்டும் என்னை மிக மகிழ்வித்தது. திருச்சூர் செல்லும் அவசரத்தில் உள்ளதால் உங்கள் கமன்டுகளுக்கு தனி தனியே பதில் தர முடிய வில்லை.

    மிக நன்றி. மிக்க மகிழ்ச்சி. Thanks a ton !

    ReplyDelete
  38. விகடன் வெளியீட்டுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  39. கட்டுரை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்!
    http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete
  40. விகடனில் உங்கள் எழுத்துகள்.....பாராட்டுகள்.

    ReplyDelete
  41. migha arumaiyana katturai.. manamarntha valthugal.. Ramasundaram

    ReplyDelete
  42. பின்னூட்டமிட்ட

    ஹுசைனம்மா
    சிவகுமார்
    வெங்கட்
    சாதிகா
    ஆசியா ஓமர்
    ராமலட்சுமி
    தேனம்மை
    சமுத்ரா
    நித்திலம் மேடம்
    துளசி கோபால் மேடம்
    அமைதி சாரல்
    மாதவன்
    வல்லி சிம்மன்
    இளங்கோ
    மிடில் கிளாஸ் மாதவி
    அமைதி அப்பா
    நிலா மதி
    அப்பா துரை
    ரிஷபன்
    ரத்னவேல் நடராசன்
    சித்ரா
    தர்மா
    துரை டேனியல்
    வரலாற்று சுவடுகள்
    பால ஹனுமான்
    ரகு
    ஷர்புதீன்
    ஆதி மனிதன்
    சூர்ய ஜீவா
    RVS
    அர்ஜுன்
    jcsrg
    திண்டுக்கல் தனபாலன்
    ராம்வி
    மாதவன்
    கோவை2தில்லி
    காஞ்சனா மேடம்

    கே.பி ஜனா
    ஸ்ரீராம்
    சுந்தர்

    ***
    அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. எனக்கு கிடைத்த சிறு மகிழ்வை நீங்கள் அனைவரும் கொண்டாடியது ரொம்ப மகிழ்வாக உள்ளது. இணையம் எத்ததனை நண்பர்களை எனக்கு அளித்துள்ளது! நன்றி நண்பர்களே !

    ReplyDelete
  43. ஹுசைனம்மா: பெண்கள் பற்றிய பதிவை பத்தி பேசாம, பிரபல பதிவர்னு கலாய்க்கிறீங்க :))

    **
    அப்பா துரை : இப்போது நன்கு படிக்கிற மாதிரி இணைப்பு (jpg format )சேர்த்து விட்டேன்

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. தங்கள் வேலையை இன்னொருவர் குறை சொல்கிற மாதிரி சந்தர்ப்பமே வராத அளவுக்குப் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவும் சரி, அவர்கள் செய்யும் பரிந்துரைகளும் சரி அத்தனை துல்லியமாக இருக்கும். யாரேனும் கேள்வி கேட்டால், அதற்கு மிகத் தெளிவான விளக்கமான பதில் கிடைக்கும்.

    பெண்களிடம் வீட்டில் மட்டுமல்ல... அலுவலகத்திலும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது -- அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  47. நல்ல பதிவு மோகன் ... இன்று தான் படித்தேன்... எனக்கும் அருள்மொழி மேடம் ஒரு வழக்குக்காக பல நாள் சந்திக்கும் அனுபவம் கிடைத்தது ... தெளிவான பெண்மணி...

    சாரா மேடம் பற்றி சரியாக போட்டு இருக்கிறீர்கள்... கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கும் முதல் வேலை வாங்கித்தந்து இருக்கிறார்கள்... விகடனில் வந்தது அவர்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம்; சாரா மேடமுக்கு தெரியும் :)

      Delete
  48. Fantastic post sir

    ReplyDelete
  49. வாழ்த்துக்கள் ஜி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...