Saturday, April 23, 2016

திருச்செந்தூர் - ஒரு பயண அனுபவம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று - திருச்செந்தூர். இந்தியாவின் தென் மேற்கு முனையில் இருக்கிறது.

முருகன் சூரனை வதம் செய்த இடம் - போரில் இந்த இடம் முழுதும் ரத்தத்தால் நனைந்தது என்பதால் - இவ்விடத்துக்கு செந்தூர் என்று பெயர் வந்தது. முருகனுக்காக திரு விகுதி சேர்ந்து திருச்செந்தூர் ஆனது

பெரிய கோவிலின் அருகிலேயே பீச் இருப்பது மிக அழகான சூழல். நிறைய ஓபன் ஸ்பேஸ் இருப்பதால் காற்று பிய்த்து கொண்டு அடிக்கிறது கோவில் பிரகாரத்தில் பீச்சை பார்த்த படி சுற்றி வருவதே இனிமையான அனுபவமாக இருக்கிறது
டாக்டர் வெங்கடப்பன், அவர் மகன் பிரகாஷ் உடன் கோவில் வெளியே 

அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. மதியம் நடை சாத்தப்படுவதே இல்லை !

சபரிமலை செல்லும் பக்தர்களில் - குறிப்பிட்ட பகுதியினர் பெருமளவில் வருவதால் மார்கழி, தை (டிசம்பர், ஜனவரி ) மாதங்களில் கூட்டம் மிக அதிகமாய் காணப்படுகிறது
*************
இந்த வீடியோவில் கோவில் மற்றும் பீச் காணலாம்:



நாங்கள் சென்ற நேரம் சென்னையிலிருந்து இன்னொரு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் குடும்பமும் வந்திருந்தனர். அவர்களோடு ஒரு ஆண் கிளியும் ! உயர் நீதி மன்றத்தில் மரம் வெட்டும்போது அதிலிருந்த பொந்திலிருந்து குட்டி கிளியாக எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர். எவ்வளவு ஆசையாக அந்த குடும்பத்துடன் ஒட்டி கொண்டது அந்த கிளி ! ஏறக்குறைய குழந்தையை வைத்திருக்கும் படி தான் அதனை வைத்திருந்தனர். எந்த கூண்டும் இன்றி கைகளுக்குள்ளேயே வைத்திருந்தனர் அந்த கிளியை ! அவர்கள் சொன்னால் அவ்வளவு அழகாய் பேசுகிறது ! அவர்கள் சொன்னதும் எங்கள் ஒவ்வொருவரிடமும் வந்தது அக்கிளி. ஊரில் எங்கள் கிளிகளை விட்டு விட்டு போனதால் அந்த கிளியை பார்த்து மிக ஆசை, ஆசையாய் நாங்கள் மிக கொஞ்சினோம்



கோவில் உள்ளே செல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வை கண்டோம். சுற்றியள்ள இடங்களில் இருந்து நடைபயணமாக வருவார்கள் இல்லையா அப்படி கோவிலுக்கு வந்த ஒரு பெரிய பக்தர் கூட்டம் .. சாமியை பார்க்கும் முன்பு பூஜை செய்து கொண்டிருந்தது. சரியான துள்ளல் இசை, பக்தி பாட்டு என டெம்போ ஏற ஏற அங்கிருந்த ஒரு அம்மணி சாமி ஆடியது செம சுவாரஸ்யமாக இருந்தது வீடியோவில் பாருங்கள்



சபிக்கப்பட்ட தினமான - அந்த டிசம்பர் 26 கடல் சார்ந்த பகுதியான திருச்செந்தூரையும் தாக்கியிருக்கிறது. ஆனால் கோவில் இருந்த இடம் பீச்சிற்கு மிக அருகில் இருந்தும் கோவில் உள்ளே மட்டும் தண்ணீர் நுழையவே இல்லை ! கடல் உள்வாங்கி விட்டது !  " சுனாமி வென்ற முருகன் " என்று அதன் பின் அழைக்க துவங்கி விட்டனர் நம் மக்கள் !

இங்கு வழங்கப்படும் பன்னீர் இல்லை பிரசாதம் பிரபலமானது. ஒரு இலையில் திருநீரை வைத்து மடித்து பாடம் செய்யப்பட்டது போல் தருகிறார்கள். (எல்லா பக்தர்களுக்கும் இது தரப்படுவதில்லை. கோவிலில் வேலை செய்வோர் யாரேனும் தெரிந்தால் மட்டுமே வாங்க முடியும்)

குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து இந்த இலைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றின் 12 நரம்புகளும் தெளிவாக தெரிகிறது; இதனை முருகனின் பன்னிரு கரத்துடன் ஒப்பிட்டு பன்னிரு இலை என்று சொல்லப்பட்டு அதுவே பன்னீர் பிரசாதம் ஆகி விட்டது.



கோவிலின் உள்ளே தினம் குறைந்தது 300 பேருக்காவது அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் கோவிலில் இருந்து சற்று தொலைவில் " நகரத்தார் விடுதி" என்று சொல்லப்படும் இடத்தில் தினம் 100 பேருக்கு மிக தரமான உணவு அன்னதானம் தரப்படுகிறது. நகரத்தார் விடுதி இந்த பகுதியில் மிக பிரபலம் என்பதால் யாரை கேட்டாலும் அடையாளம் காட்டுவார்கள்

திருச்செந்தூர் நல்ல உணவிற்கு பெயர் போனது. இங்கு சரவண பவன் உட்பட நல்ல ஹோட்டல்கள் பல உண்டு.

குடந்தை அருகே உள்ள ஆலங்குடி குருஸ்தலம் - ஆக கருதப்படுவது போல, திருச்செந்தூர் அருகே உள்ளவர்கள் குரு பெயர்ச்சியின் போது பெரும் திரளாக இங்குள்ள குரு - சந்நிதியில் வந்து வணங்குகிறார்கள். கோவிலில் குருவிற்கு தனி (பெரிய) சந்நிதி உண்டு

இந்த கோவிலில் இரண்டு மூலவர் சந்நிதி உண்டு. ஒரு மூலவருக்கு கேரள முறைப்படி வழிபாடு நடக்கிறது. இன்னொரு மூலவருக்கு தமிழக முறைப்படி வழிபாடு தொடர்கிறது

முருகன் சந்நிதிக்கு அருகிலேயே உள்ள பஞ்சலிங்க குகையும் ( ரொம்ப குனிந்து ,வளைந்து செல்ல வேண்டும் )கோவிலுக்கு வெளியே உள்ள வள்ளி குகையும் பலரும் விரும்பி செல்லும் இடங்களாக உள்ளன.

திருச்செந்தூருக்கு அருகில் தான் சரவண பவன் ஓனர் கட்டிய வன திருப்பதி கோவிலும் உள்ளது நீங்கள் காரில் திருச்செந்தூர் செல்கிறீர்கள் என்றால் வழியில் வன திருப்பதிக்கும் ஒரு விசிட் அடிக்கலாம் !

15 comments:

  1. Anonymous4:50:00 PM

    trichendur Temple is located in South East in India..Temple is located near Bay of Bengal....

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு! ஒரு முறை சென்று வந்துள்ளேன்! மீண்டும் செல்ல தூண்டுகிறது உங்கள் பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் நன்றி

      Delete
  3. எங்க ஊருக்கு மிக அருகில்தான் உள்ளது திருச்செந்தூர். என்னுடைய இளவயதில் அநேகமாக எல்லா ஞாயிறும் திருச்செந்தூர் கடற்கரையில்தான்.. அப்போதெல்லாம் கடற்கரை இன்னும் அழகாக மணல் வெளேரென இருக்கும்,
    அப்புறம் சுனாமியின் போது திருச்செந்தூரில் கடல் 1 கி.மீ. உள்வாங்கியது. அன்றையதினம் 3மணி அளவில் நான் கடற்கரைசென்றபோதுகூட கடலின் உள்ளே வெகுதூரம் வரை பாறைகள் தெரிந்தன..மாலை 5மணிக்குமேல்தான் கடலலைகள் கரையைத்தொட ஆரம்பித்தன.

    ReplyDelete
    Replies
    1. உமா மேடம் தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

      Delete
  4. திருச்செந்துர்ர் சென்றிருக்கின்றேன். அழகிய கடலுடன் ஆலயம்.

    மீண்டும் தர்சித்ததில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. // கேரள பார்டரில் இருப்பதால் - ஒரு மூலவருக்கு கேரளா முறைப்படி வழிபாடு நடக்கிறது.//
    எப்படிங்க? திருச்செந்தூர் கேரளா எல்லையிலா இருக்கு?

    ReplyDelete
  6. திருச்செந்தூர் பகுதியை நான் சார்ந்தவனாய் இருந்தபோதிலும், நீங்கள் சொன்ன நகரத்தார் விடுதி உணவக தகவல் எனக்கு புதிது. ஆனால் திருச்செந்தூரில் சரவணபவன் ஹோட்டல் இல்லை, வனதிருப்பதியில் மட்டும்தான் இருக்கிறது.

    ReplyDelete
  7. நன்றி. திருச்செந்தூரில் சன்னதி தெருவில் அமைந்திருக்கும் நகரத்தார் அன்னதான விடுதியில் நித்ய அன்னதானம் முதல் பந்தி இறையடியார்களுக்கும் ( சாமியார்கள்) பின்பு பக்தர்க
    ளுக்ளும், விடுதியில் தங்கி உள்ள நகரத்தார்களுக்கும் சிறப்புடன் வழங்கப்பெறுகிறது. (சுமார் 100-125 நபர்கள்) மேலும் ஒவ்வொரு கார்த்திகை நட்சத்திர தினத்தில் 300-500 நபர்களுக்கு அன்னதானம் சிறப்புடன் திருமுருகன் திருவருளால் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சிறப்புடன் நடைபெற வேண்டி முருகப்பெருமான் திருவருளையும் . பக்தர்களின் ஆசிகளையும் வேண்டி வணங்குகின்றோம்.
    தங்கள்
    ந.மோகனசுந்தரம்
    காரியக்காரர்.
    திருச்செந்தூர் நகர அன்னதான் விடுதி.
    plnmohan@gmail.com

    ReplyDelete
  8. Nice to recollect my old memories through this article.Nice article.

    ReplyDelete
  9. Nice to recollect my old memories through this article.Nice article.

    ReplyDelete
  10. "ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள்"


    Sir can u please post this details ..please ..

    ReplyDelete
  11. ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள்"


    Sir can u please post this details ..please .

    ReplyDelete
  12. ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள்"


    Sir can u please post this details ..please .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...