Monday, August 15, 2016

கவிஞர் நா. முத்துக்குமார் ......

மூன்று நாட்களாக நண்பர்களுடன் பயணத்தில் இருந்தேன்; எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் (தொலைபேசி, டிவி, Landline ) இல்லாத இடம்...

ஊருக்கு திரும்புகையில் சிக்னல் வந்ததும் முதல் செய்தியாக கவிஞர் நா. முத்து குமார் மரணம்....ஹெபடைட்டிஸ் பி எனும் அசாதாரண நோயால் இறந்துள்ளார். இந்நோய்க்கு - முன்பே வாக்சின் தரலாம்.. வந்த பின் உயிர் காப்பது சற்று சிரமம்... நமது குழந்தைகளுக்கு இந்த வாக்சின் அநேகமாய் தந்திருப்பர்.. நமக்கு போட்டிருக்க மாட்டோம் !!
********
5 ஆண்டுகளுக்கு முன் ... தமிழில் ஒவ்வொரு வருடமும் மிக அதிக பாடல்கள் எழுதியது கவிஞர் வாலி அல்லது கவிஞர் வைரமுத்துவாக இருக்கும்.. ஆனால் கடந்த 5 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் மிக அதிக பாடல் எழுதியது  நா. முத்து குமார் தான் ! அதுவும் முதல் ரேங்க்கிற்கும் அடுத்த ரேங்கிற்கும் 50 மார்க் வித்தியாசம் இருந்தால் எப்படி இருக்கும்.. ! அந்த அளவு வித்யாசம் இருக்கும் ..இவருக்கும் அடுத்த அதிக பாடல் எழுதியவருக்கும் ..

உண்மையில் நான் யோசித்துள்ளேன்: இதே ரீதியில் போனால் முத்து குமார் எத்தனை ஆயிரம் பாடல்கள் எழுதுவார்.. அநேகமாய் தமிழில் மிக அதிக திரை இசை பாடல் எழுதியவராய் நா. முத்து குமார் இருப்பார் என்று நம்பினேன்.. அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது..

பாடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் ... தரத்திலும் சிறிதும் குறைவில்லை.. குறிப்பாக யுவனுடன் சேர்ந்து இவர் இசை அமைத்த பல பாடல்கள் மிக மிக அற்புதம்..

இவர் எழுதியதில் எனக்கு பிடித்த சில பாடல்கள் :

************
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…*************
(நினைத்து நினைத்து பார்த்தேன்...)பேசிப்போன வார்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
****************
நா. முத்து குமார் அவர்களை மெட்றாஸ் கிறித்துவ கல்லூரி நடத்தும் வனம் கவியரங்கில் சில முறை சந்தித்து பேசி உள்ளேன்.. மென்மையான, நட்பான மனிதர்..

70-80 ஆண்டுகள் வாழ்ந்து ஒரு மனிதன் சாதிப்பதை விட 10- 15 ஆண்டுகளிலேயே மிக மிக அதிகமாக சாதித்து விட்டார்..

இறந்தவருக்கு துயரில்லை.. இருப்பவருக்கு தான் துயரம்...

நா. முத்து குமார் அவர்களின் குடும்பம் குறித்தே மனம் சுழல்கிறது. இந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் தைரியம் மற்றும் ஆற்றலை அவர்களுக்கு இறைவன் வழங்கட்டும் !

முக நூல் மற்றும் பதிவுலகில் அவருக்கு ஏராள நண்பர்கள் ... அவர் குடும்பத்துக்கு ஏதேனும் செய்ய முடியுமா என அவசியம் யோசியுங்கள்.. என்னால் முடிந்த பங்களிப்பை நானும் செய்வேன்.

6 comments:

 1. கண்ணீரில் என்னை நினைக்க வைத்தாய் கண்ணாளா

  ReplyDelete
 2. இறந்தவருக்கு துயரில்லை.. இருப்பவருக்கு தான் துயரம்...true.100% true.
  என்னால் முடிந்த பங்களிப்பை நானும் செய்வேன்.
  karthik amma

  ReplyDelete
 3. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 4. the nadigar sangam should take earnest efforts to realise the huge amount due to thiru muthukumar who was cheated by cine men by offering bogus cheques.

  ReplyDelete
 5. ஆழ்ந்த இரங்கல்கள்!

  ReplyDelete
 6. 'அழகே அழகே'

  'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'

  ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க

  பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்

  நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!

  ஆதலால்,

  ஒரு பாவலன் / கவிஞன்

  சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

  ஆயினும்

  நாமும்

  துயர் பகிருகிறோம்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...