Saturday, October 1, 2016

வானவில்: இன்கம் டேக்ஸ் ரீபண்ட் அனுபவம்-ஓடாதே-விஜய் டிவி ஸ்பெஷல்

வாசித்த நாவல் : சுஜாதாவின் "ஓடாதே"

புதிதாய் திருமணமான ஒரு ஜோடி - ஏனோ தொடர்ந்து துரத்தப்படுகிறார்கள். முன்பின் தெரியாதவர்கள் - அப்புறம் போலீஸ் என தொடர் ஓட்டம்...

கணேஷ் - வசந்த் யார் இவர்களை துரத்துகிறார்கள் என துப்பறிய - ஒரு பெரிய அரசியல் வாதி கொலைக்கும்  விஷயத்துக்கும்   சம்பந்தம் இருப்பது  தெரிகிறது;கணேஷ் சாமர்த்தியத்தால் அவர்  கொல்லப்படாமல்  தப்புகிறார்.

இறுதியில் - அவர் எதிர் -கட்சிக்காரர்  -அவரை கொல்ல முயன்றதே மத்திய அரசு  தான் என்கிற திடுக்கிடும் செய்தியுடன் நாவலை நிறைவு  செய்கிறார்.

புது மண தம்பதிகள் ஓடி கொண்டே இருப்பது நமக்கு அயர்ச்சியை தருகிறது. வசந்த் வந்த பின் தான் கதை சுவாரஸ்யம் ஆகிறது. இறுதி பகுதி - பக்கா சுஜாதா ஸ்டைல் முத்திரை

ஓடாதே - சுஜாதா அதி தீவிர ரசிகர்களுக்கு மட்டும் !

அழகு கார்னர் ஹெல்த் கார்னர் 

நடக்கும் போது நாம் எரிக்கும் கலோரிகள் அதிகமாக ஒரு எளிய வழி... நடக்கும் வேகத்தை சற்றேனும் மாற்றுவது; முதலில் மிதமாகவும், பின் வேகத்தை சற்று கூட்டி நடந்தாலே - காலுக்கு வேலை அதிகமாகி நிச்சயம் அதிக கலோரிகள் (குறைந்தது 20 % அதிகமாக!!) எரிப்போம் என்று கூறுகிறார்கள்.

நடை பயிற்சி செய்பவர்கள் எனில் உங்கள் கவனத்துக்கு இந்த செய்தி !


என்னா பாட்டுடே : இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன 

மேனேஜ்மென்ட் வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிற ஒரு விஷயம்:கீப் இட் சிம்பிள்; எந்த விஷயத்தையும் எளிமையாக வைத்து கொள்ளுங்கள். அதிக காம்ப்ளக்ஸ் ஆக்கி கொள்ள கூடாது என்பது தான் அவர்கள் சொல்லும் செய்தி.
அது இந்த பாட்டுக்கு எத்தனை பொருந்துகிறது !

எளிமையான வரிகள், சிம்பிள் மெட்டு, குறைவான இசை கருவிகள் (இங்கு ஆர்கெஸ்டராவில் ஏராள வயலின்கள் வாசிப்பது ஆச்சரியமாக உள்ளது! பாடல் கேட்கும் போது தெரியவே இல்லை )

திரையில் -இப்பாடலில் கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள் வரும் என்பதால் - ரகுமான் இசை அமைத்த நிகழ்ச்சியில் இருந்து - இந்த பாடலின் ஒளிவடிவம் பகிர்கிறேன்

விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா அசத்தும் பாட்டு.. கேட்டு ரசியுங்கள் !இன்கம் டேக்ஸ் ரீபண்ட் அனுபவம் 

சென்ற ஆண்டு எனக்கு இன்கம் டேக்ஸ் அதிகமாக பிடித்து விட்டனர். கணிசமான தொகை என்பதால் - ஆடிட்டர் நண்பர் ஒருவரை அணுகி ரீபண்ட்க்கு விண்ணப்பித்தேன். ஏனோ அரசு எந்திரம் என்பது - யானை  வாய்க்குள்  சென்று கரும்பு  போலவே எண்ணம்.. பணம் திரும்ப வருவது சிரமம் என நினைத்தேன். ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் சில வாரங்களில் ரீ பண்ட் வந்து விட்டது !

சில படிப்பினைகள் :

நிறுவனத்தில் வரி பிடிக்கும் போது கவனமாய் சரியாய் தான் பிடிக்கிறார்களா என கவனிப்பது மிக அவசியம்; அதிகம் பிடித்தால் - உடன்  அணுகினால் தான்   அடுத்த மாதத்தில் சரி செய்ய முடியும். தவற விட்டால் ரீ பண்ட்  தான் சென்றாக வேண்டும்

ரீ பண்ட் அதிக தொகை எனில் ஆடிட்டர் மூலம் செல்வது நல்லது; அவர்கள் அறிவுரையால் தான் நான் தைரியமாக விண்ணப்பித்தேன்.

தொல்லை காட்சி : விஜய் டிவி ஸ்பெஷல்

* கிங்ஸ் ஆப் டான்ஸ் இறுதி - போட்டிக்கு வழக்கம் போல் பிரபு தேவா நடுவராக வந்திருந்தார்.சில டீம்கள் அசத்தின. இம்முறை 2 டீமுக்கு (ஒன்று குட்டீஸ் டீம்) சேர்ந்து வின்னர் பட்டம் கொடுத்தனர். அறிவித்த பரிசு தொகை 5 லட்சம். இறுதியில் ஜெயித்த 2 டீமுக்கும் ஆளுக்கு 5 லட்சம் என கூறினர் !

* நீயா நானா நேரத்தை ரொம்ம்ப்ப வருஷம் கழிச்சு மாத்திருக்காங்க ! ஞாயிறு இரவு 8.30க்கெல்லாம் வந்துடுது !! சொல்லவே இல்ல!!

* சிரிப்புடா என ஒரு நிகழ்ச்சி தினம் இரவு 9.30க்கு வருது; அதற்கு பேர் வெறுப்புடா என வைத்திருக்கலாம் ! தாங்க முடியாத அறுவை .. சீக்கிரம் இந்த நிகழ்ச்சியை மாத்தி தொலைங்கப்பா ! சே !

2 comments:

  1. தற்சமயம் வருமான வரி ரிட்டன்ஸ் ஆன்லைனில் செய்ய வேண்டியுள்ளது - ரீஃபண்ட் மிக விரைவில் வந்து விடுகிறது. incometaxefiling இணையதளத்தில் எக்ஸெல் யுடிலிட்டி டௌன்லோட் செய்து உபயோகித்துப் பாருங்கள் மிகவும் எளிது!!
    சிரிப்புடா வெறுப்புடா சரி தான்! நிஷா செய்யும் வம்புகள் ரசிக்கும் படி இல்லை!!

    ReplyDelete
  2. Online Return filing வசதி வந்த சில ஆண்டுகளாகவே விரைவிலேயே Refund வந்து விடுகிறது. நிறைய முன்னேற்றங்கள், மாற்றங்கள் உண்டு.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...