Saturday, October 8, 2016

ரெமோ- சினிமா விமர்சனம்

ரெமோ

கதை

பெண்களை கண்டாலே ஒதுங்கி/ ஓடி போகும் சிவகார்த்திகேயனுக்கு - கீர்த்தியை கண்டதும் காதல்  வருகிறது; நிச்சயம் முடிந்த பெண்ணான அவருடன் இருக்க நர்ஸ் வேஷம் போடுகிறார்; பின் அவரை எப்படி கைப்பிடித்தார் என்பது ரெண்டரை மணி நேர கதை

Image result for remo images

ப்ளஸ்

சந்தேகமென்ன.. சிவா தான் ! குறிப்பாக நர்ஸ் கேரக்டர் மட்டும் தான் படத்தை இறுதி வரை எழுந்து வராமல் உட்கார்ந்து பார்க்க வைக்கிறது; சர்வ நிச்சயமா நாமே சைட் அடிக்கிற அளவு அட்டகாசமா காட்டிருக்காங்க. அதிலும் சிவா நர்ஸ் வேஷத்தில் இருக்கும் போது அருகில் கீர்த்தியின் அழகு சுத்தமாய் ஈடுபடலை !

இந்த பாத்திரத்தில் ஹியூமரும் பிச்சு உதறுறாங்க. யோகி பாபு - நர்ஸ் பின்னாடி அலையும் காட்சிகள் அவ்வை ஷண்முகி மணிவண்ணனின் உல்ட்டா என்றாலும் - சிரிக்க முடிகிறது


கீர்த்தி அழகு + நடிப்பு இரண்டும் ஓகே; பெரிதாய் சிரித்தால் வாய் காது வரை நீள்கிறது; அளவோடு சிரித்து வளமோடு வாழ்ந்தால் மிக ரசிக்கும்படி இருப்பார்.

பாடல்கள் ஓரிரண்டு ஓகே ; பின்னணி இசை நிச்சயம் ரசிக்கும் படி செய்துள்ளார் அனிருத்

ஒளிப்பதிவு ஸ்ரீ ராம் - ஹீரோ - ஹீரோயின் இருவரையும் அழகாய் காட்டுவதும் சரி - சென்னையை ரொமான்டிக் நகரமாய் காட்டுவதிலும் சரி மின்னுகிறார்

Image result for remo keerthi suresh

மைனஸ்

ஒரிஜினாலிட்டி இல்லாத கதை- திரைக்கதை தான் பெரிய மைனஸ் ; அவ்வை ஷண்முகி- காதல் மன்னன் போன்ற படங்களின் கதை மனதில் வந்து வந்து போகிறது..

கடைசி அரை மணி நேரம் ஏன் அப்படி ஜவ்வு மாதிரி இழுக்கணுமோ தெரியலை; அப்பாடா கிளைமாக்ஸ் வந்துடுச்சு என நினைக்கும் நேரம்- பாட்டு வருது; அப்புறம் 4 கிளைமாக்ஸ் வருது !

இரண்டாம் பாதியில் நர்ஸ் சம்பந்தமான காட்சிகள் குறைவு; படம் சீரியஸ் காதல் காட்சிகளுக்கு நகரும்போது - கொட்டாவி வருகிறது !

லாஜிக் ஓட்டைகள்- நிறைய..

திருமணம் நிச்சயம் ஆன டாக்டர் - பத்தாம் வகுப்பு பெயில் ஆன - 27 வயது வரை வேலைக்கே போகாத ஒருவனை - பேர் என்ன- எங்கு  வேலை பார்க்கிறான் என தெரியாமலே லவ் பண்ணுவாரா?

இந்த அடிப்படை ஓட்டை தான் படத்துடன் ஒன்ற முடியாமல் செயகிறது

இறுதி அனாலிசிஸ் 

remo-rating

நர்ஸ் காட்சிகள் + ஹியூமர் அதிக படுத்தியிருந்தால் படம் பெரும் வெற்றி பெற்றிருக்கும்

இப்போதும் மிக மிக சரியான டைமிங்கில் நல்ல மார்க்கெட்டிங் செய்து வெளியிடுவதால் கையை கடிக்காமல் தப்பி விடும் (வரும் புதன் வரை பலருக்கு விடுமுறை; வியாழன்-வெள்ளி தாண்டினால் அடுத்த வீக் எண்டு வந்து விடுகிறது - எனவே 10 நாள் நல்ல ஓட்டம் உறுதி )

ரெமோ- சிவாவிற்கு இது எதிர் நீச்சல் அல்ல- காக்கி சட்டை அல்லது மான் கராத்தே.. அவ்வளவே !

நர்ஸ் பாத்திரம் + காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம் ! 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...