Sunday, April 30, 2017

பாகுபலி -2 சினிமா விமர்சனம்

ந்திய திரை உலகில் இப்படி ஒரே படம் ...இரண்டு பாகங்கள் வந்திருக்குமா என தெரியவில்லை..பல செகண்ட் பார்ட் படங்கள் -முதல் படத்தின் வெற்றியால் அடுத்த சில ஆண்டுகள் கழித்து புதிதாய் - அதன் தொடர்ச்சியாய் வருவது போல புதிதாய் யோசித்து எழுதப்படும். இங்கு கதை எழுதிய போதே இரண்டு பாகம் என முடிவெடுத்து விட்டார் ராஜமவுலி. இதற்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும் ! முதல் பாகம் தோல்வி என்றால் அடுத்த பாகம் பற்றி யோசித்திருக்கவே முடியாது !

நல்ல வேலையாக முதல் பாகம் வெற்றி..அதில் பதில் சொல்லாமல் விட்ட பல விஷயங்கள் -இரணடாம் பாகம் மேல் எதிர்பார்ப்பை கூட்டியும் விட்டது.

நிச்சயம் முதல் பாகத்தை விட அட்டகாசமான ஒரு படைப்பு.. பாகுபலி 2. முதல் பாகம் தந்த மகிழ்வை விட அதிக பட்ச சந்தோசம்..அனுபவத்தை தரவே செயகிறது (ஒரு சில விஷயங்களில் மட்டுமே முதல் பாகம் - இதை விட அருமை..என்னவென பின்னர் பார்க்கலாம் )

கதை

தந்தையை கொன்றவனை பழி வாங்கி, ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றுவது தான் பாகுபலி 2

ஆனால் மேற்சொன்ன வரி -கடைசி 20 நிமிடம் மட்டுமே. 2 மணி நேரத்திற்கும் மேல் செல்லும் அமரேந்திர பாகுபலியின் கதை நெஞ்சை உருக்கி விடுகிறது

மேலோட்டமாக பார்த்தால் இப்படம் மகாபாரத்தில் இருந்து inspire ஆனதோ என யோசிக்க தோன்றுகிறது..ராஜ்யத்துக்காக சண்டையிடும் (ஒன்று விட்ட) சகோதரர்களின் போராட்டம் தான் இரு கதையிலும் மைய புள்ளி.

Related image

பிளஸ்

ஒன்றா இரண்டா..அடுக்கி கொண்டே போக வேண்டும்.

முதல் விஷயம்; கதை மற்றும் திரைக்கதை; அது பல்வேறு ஆச்சரியங்களை, துரோகங்களை, நேர்மையைச்  சொல்லி செல்கிறது. இந்த கதையால் தான் பிரம்மாண்டம் துவங்கி மற்ற அனைத்துமே சாத்தியம் ஆனது

அடுத்தது.. பிரபாஸ்..என்ன ஒரு அற்புதமான பாத்திரம்...அந்த தந்தையுடையது. சத்தியத்துக்காக  யாரையும் எதிர்க்கும், தன் ஆட்சியை கூட விட்டுத்தரும் இத்தகைய பாத்திரம்...வாவ் ! ப்ரபாஸ் அதற்கு மிக பொருத்தம்  !  சிரிப்பு, நக்கல், கோபம், ஏமாற்றம் இப்படி அத்தனை உணர்வுகளையும் காட்ட வேண்டிய கேரக்டர்..இதை விட அற்புத பாத்திரம் வாழ்நாளில் கிடைத்து விடாது

அனுஷ்கா .. அழகின் உச்சத்தில் படம் துவங்கி பெரும்பான்மை காட்சிகளும் எடுத்து விட்டனர். அனுஷ்கா கடைசியாய் அழகாய் இருந்த படம் " என்றே விளம்பரம் செய்யலாம் !

என்ன ஒரு அனாயசமான ஹீரோயின் அறிமுக காட்சி...அனுஷ்கா வரும் முதல் காட்சியிலேயே அசத்தி விடுகிறார். போலவே -தவறு செய்யும் எவரையும் எதிர்த்து கேட்கும் தைரியம்.. மாமியாருக்கும் இவருக்கும் நடக்கும் பல உரசல்களில் நெருப்பு பறக்கிறது

சத்யராஜ் - கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்பதே முக்கிய பேச்சாக இருந்தாலும் இப்படம்   பார்த்து முடிக்கும் போது நீங்கள் கட்டப்பாவை வெறுக்க மாட்டீர்கள்;விரும்பவே செய்வீர்கள். படத்தின் மிக முக்கியமான, ரசிக்க வைக்கும் காரெக்டர் சத்யராஜுக்கு.  அட்டகாசமாய் செய்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் பாத்திரம் பல வண்ணங்களில் பயணிக்கிறது. பிறந்த குழந்தையை ராஜாவாக அறிவிக்கும் காட்சியெல்லாம் goosepumps வரவைக்கும் காட்சிகள். இது போன்ற கைதட்டல் வாங்க வைக்கும் காட்சிகள் (யானை மீது பிரபாஸ் ஏறும் காட்சி. சண்டைக்கு நடுவே சில நொடியில் அனுஷ்காவிற்கு 3 அம்புகள் விட சொல்லித்தரும் காட்சி) ஆங்காங்கு வந்த வண்ணமே உள்ளது ....

Related imageபின்னணி இசை நன்று

ஒளிப்பதிவு  ஒவ்வொரு ஷாட்டிலும் தெறிக்கும் பிரம்மாண்டம்.. இவை இரண்டையும் ரசிக்க தியேயேட்டரில் பார்த்தால் மட்டுமே சாத்தியம்

ராணா -  அட்டகாசமான உடல்- நரித்தந்திரம்.. இந்த பாத்திரத்துக்கு வேறு எவரும் பொருந்தியிருக்கவே முடியாது

நாசரின் கர்ஜனையும் தந்திரமும்..படம் நெடுகிலும் வருகிறது (கடைசியில் இவரை மட்டும் கொல்லாமல் விடுகிறார்கள் . அடுத்த பாகம் பற்றி மிக லேசான எண்ணம் இருக்குமோ என்னவோ )

பாடல் காட்சிகளில் மட்டுமே டப்பிங் படம் என தெரிகிறது; மற்ற காட்சிகளில் உதட்டசைவு மிக சரியாக பொருந்துகிறது. இரு மொழி படம் போல....தமிழ், தெலுகு இரண்டு வசனமும் பேசி நடித்த மாதிரி இருக்கிறது லிப் சிங்க் பார்க்கும் போது !

மைனஸ் 

இந்த படத்துக்கு மைனஸ் சொல்ல மனமே வரவில்லை; இருப்பினும் ஒரு தலைப்பட்சமாக - சும்மாவே படத்தை உயர்த்தி பிடிக்கிறேன் என நினைக்க கூடாது எனதற்காக மட்டுமே சில மைனஸ் சொல்கிறேன்

பாடல்கள் ரொம்ப சுமார் (முதல் பார்ட் பாடல்கள் நன்று ) போலவே போர் காட்சிகளிலும் முதல் பாகம் இதை விட அருமை. (இருப்பினும் மீண்டும் சொல்கிறேன் .....சந்தேகமே இல்லை..முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமே சிறந்தது )

முதல் பாதியில் வரும் அனுஷ்கா சம்பந்தமான இரு பாடல்களையும் வெட்டி கடாசி விடலாம்.போர் !! இந்த இடங்கள் படத்தின் வேகத்தை லேசாய் குறைக்கிறது 

பைனல் அனாலிசிஸ் 

இப்படத்துக்கு 120/ 150 ரூபாய் தருவதும் சரி - பாடம் காண 3 மணி நேரம் செலவிட்டதும் சரி.. தவறு என நினைக்க வாய்ப்பே இல்லை !

ராஜமவுலி.. இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்திய திரை உலகின் சிறந்த படங்களை பட்டியலிட்டால் பாகுபலியை ஒதுக்கி விட்டு பேசமுடியாது !

Awesome experience.. Emotional Roller coaster ride.. Cinema lovers.. Don't miss it.Watch it in theaters !

*****
அண்மை பதிவு

பவர் பாண்டி & காற்று வெளியிடை : சினிமா விமர்சனம்

4 comments:

 1. உங்க விமரிசனம் சரியாத்தான் இருக்கு. (பாடல் ஹிட் ஆகலை என்பது உள்பட) .ஆனால், கடைசி 20 நிமிட சண்டைக் காட்சி ரொம்பப் பெரிய பூச்சுத்தல், அயர்வா இருக்கு. நிறைய காட்சிகளில் அனுஷ்கா, அவங்களோட 'கவர்ச்சி'யை இழந்திருப்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. அதிலும் 2 பாடல் காட்சி, ஒண்ணு, அந்தக் காலத்திலேயே எடுத்து வைத்திருக்கணும். இல்லைனா, கிராபிக்ஸ் வேலை. அதுவும் இல்லைனா, டூப்பை வைத்து எடுத்திருக்கணும். படத்துல அந்த ரெண்டு பாடல்காட்சிலதான் அவங்க பழைய அனுஷ்கா மாதிரி இருக்காங்க. பிரபாஸோட டெடிகேஷன் அனுஷ்கா கிட்ட இல்லைனு தான் தோன்றியது.

  மற்றபடி படம் சூப்பர் என்பதில் சந்தேகமே இல்லை. ரெண்டு பாகமும் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

  ReplyDelete
 2. பார்க்க வேண்டும். அனுஷ்க்கா அழகிழந்து விட்டாரா? நான் நம்ப மாட்டேன்!

  ReplyDelete
 3. தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி நெல்லை தமிழன்

  ஸ்ரீராம்: ஹா ஹா ரைட்டு; நன்றி

  வெங்கட்: நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...