Tuesday, July 3, 2018

காலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்

ப்ளாக் வந்தபின்  இவ்வளவு பெரிய இடைவெளி வந்தது இப்போது தான். காரணங்கள் பல. சுய தொழில் தொடங்கிய பின் நேரமின்மை ஒரு காரணம். இன்னும் சிலவும் உண்டு....

தொலைபேசியிலும் மெயிலிலும் தொடர்பு கொண்டு எழுத சொன்ன ... நூற்று கணக்கான.. சரி விடுங்க... இரண்டு நண்பர்களுக்காக ... (ஒருவர் வேங்கடப்பன். மற்றொருவர் புதிதாக எழுத துவங்கியுள்ள செந்தில் குமார் என்கிற பதிவர் )

வாரம் ஒரு பதிவாவது எழுத ஆசை தான். பார்க்கலாம்

காலா 

காலா - ஒரு தோல்விப்படம் என்பது இந்நேரம் தெரிந்திருக்கும்.

காலா எனக்கு பிடிக்கவே செய்தது. அதன் முக்கிய காரணம் - பீஜேபி ஆதரவாளரான ரஜினியை வைத்தே - பீஜேபி செய்யும் பல செயல்களை படம் முழுதும் கிண்டல் செய்தது தான். வில்லன் நானா படேகர் செய்யும் அத்தனை விஷயமும்  அவர் எந்த கட்சியை சார்ந்தவர் என சொல்லிவிடுகிறது. மிச்சம் மீதி சந்தேகம் இருந்தால்  ரஜினி வாயாலேயே " சுத்தம் சுத்தம் னு சொல்லி ஏமாத்துறீங்க " என ஸ்வச் பாரத்தை கிண்டலடிக்கிறார்கள்.ரஜினி படங்களை பெரும்பாலும் தியேட்டரில் பார்க்கும் நான் - ரஜினி தூத்துக்குடி சென்று வந்தபின்  பேசிய பேச்சினால் நிச்சயம் தியேட்டர் சென்று பார்க்க கூடாது என முடிவு செய்தேன். இதே வித உணர்வு நிறைய நண்பர்களிடம் இருந்தது

தூத்துக்குடி சென்று வந்து ரஜினி அவ்வாறு பேசியது மிக நல்லது ! அப்போது தான் அவர் யார் என மக்களுக்கு புரிந்தது. இல்லாவிடில் காலாவில் அவர் பேசியதை வைத்து ஏழைகளின் காவலர் என எம்ஜியார் போல ஒரு கூட்டம் பில்ட் அப் தந்திருக்கும்.

எல்லாத்துக்கும் போராட்டம்னா தமிழ் நாடு சுடுகாடு ஆகிடும் என திருவாய் அருளினார் ரஜினி. இந்த படமோ போராட்டத்தை மட்டுமே அடிப்படையாய் கொண்டது. "நம்ம உடம்பு தான் நமக்கு ஆயதம். அதை வச்சு போராடுவோம் " என மக்களை தூண்டும் சினிமா முகமும், ரஜினியின் நிஜ முகமும் படம் பார்க்கும் பல நேரங்களில் வந்து போனதுவும் படம் பிடிக்க காரணங்கள்.

ஹீரோ பில்ட் அப் சுத்தமாய் இல்லாமல் போனது (க்யா ரே செட்டிங்கா என அமர்க்களமாய் ட்ரைலரில் காட்டி விட்டு - அந்த காட்சியில் யாரோ சிலர் வந்து ரஜினியை காப்பாற்றுகிறார்கள் ) - முடிவில் ரஜினி இறந்தாரா இல்லையா என சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதது, மிக முக்கியமாக தூத்துக்குடியில் ரஜினியின் பேச்சு இவற்றால் படம் தோல்வியை தழுவினாலும் - படம் பார்க்கும் போது இந்திய, தமிழக, தூத்துக்குடி அரசியல் கண் முன்னே வந்து புன்னகையை தருவிக்கிறது. இந்த படம் பார்க்க அந்த காரணம் மட்டுமே போதும் !

இரவுக்கு ஆயிரம் கண்கள் 

கிரைம் த்ரில்லர் - ரொம்ப நீட்டி முழக்கி, சுற்று சுற்றென்று சுற்றுகிறார்கள். சஸ்பென்ஸ் தெரியும் நேரம் மட்டுமே ஆச்சரியம்.

ஹீரோயின் அழகு. ....ஆனால் எப்போதாவது தான் வருகிறார்.

Image result for iravukku aayiram kangal

பார்த்து 2 வாரம் ஆனபின் கதை என்ன என்றால் - மூளையை கசக்க வேண்டியுள்ளது.

த்ரில்லர் வகையறா விரும்புவோர் - 2 மணி நேரம் பொழுது போக வேண்டுமெனில் பார்க்கலாம்.

நடிகையர் திலகம் 

பள்ளியில் படிக்கும் போது பாசமலர் பார்த்து விட்டு கண்ணீர் விட்டிருக்கிறேன். துடுக்குத்தனமான பாத்திரங்களில் நடிக்கும் சாவித்திரி வாழ்வில் இத்தனை பிரச்னைகள்  இருந்திருப்பது இப்போது தான் தெரிகிறதுகுறிப்பாக ஜெமினியின் பாத்திரம்.. உண்மையில் படத்தில் ரொம்ப அடக்கி வாசித்திருக்கிறார்கள். அவர்கள் குடும்ப நண்பரான ஆடிட்டர் ஒருவர் முகநூலில் ஜெமினி சாவித்ரியை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார், சொத்துகளை அபகரித்தார் என எழுதியதை படிக்க மேலும் அதிர்ச்சி

சாவித்ரி கதையை நேரடியாய் சொல்லியிருக்கலாம். எனோ ஒரு ரிப்போர்ட்டர் பார்வையில் படம் செல்கிறது

கீர்த்தி மற்றும் துல்கர் இருவரும் அற்புத நடிப்பு. கீர்த்தி பல கோணங்களில் சாவித்ரியை நினைவு கூர்கிறார்.

திரை பிரபலங்கள் பலருக்கும் இருக்கும் பிரச்சனை தான். ஒரு காலம் வரை வாய்ப்புகள் நிறைய இருக்கும். பின்னர் வாய்ப்பு குறைந்ததும் தானாக சொந்த படம் எடுப்பார்கள். அது தோல்வியானால் சொத்தின் பெரும்பகுதி இழந்து விடுவார்கள். சாவித்ரிக்கும் அதுவே நிகழுகிறது.

கூடுதலாக இன்கம் டாக்ஸ் ரைட், விடாத குடிப்பழக்கம் - என தொடர் சோதனைகள்

ஒரு பிரபலத்தின் சிறிது சிறிதான முன்னேற்றம் மற்றும் அவர் வீழ்ச்சீ இரண்டும் சொல்கிறது படம்

சாவித்ரி என்றால் யார் என்றே தெரியாத என் மகள் மற்றும் அவள் தோழிகள் பலருக்கும் இப்படம் மிக பிடித்திருக்கிறது !

நல்ல சினிமா விரும்புவோர் அவசியம் பார்க்க வேண்டிய படம் !

7 comments:

 1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைத்தளம் பக்கம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்..... உங்கள் பயணக் கட்டுரைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்

  ReplyDelete

 2. வலைப்பக்கம் வருகைக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து வாருங்கள்

  ReplyDelete
 3. Welcome sir after long days. Daily i had visited your page

  ReplyDelete
 4. நன்றி ஐயா ,
  தங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்து கிடந்த என்னை போன்றோருக்கு.

  ReplyDelete
 5. //அவர்கள் குடும்ப நண்பரான ஆடிட்டர் ஒருவர் முகநூலில் ஜெமினி சாவித்ரியை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார், சொத்துகளை அபகரித்தார் என எழுதியதை படிக்க மேலும் அதிர்ச்சி//

  Link please

  ReplyDelete
 6. நடிகையர் திலகம் திரைப்படம் மனதை கனக்க செய்தது ... வரவை மறந்து செலவு செய்யும் இந்த தலைமுறைக்கு சாவித்ரியின் வாழ்க்கை ஒரு சிறந்த பாடம் ...

  ReplyDelete
 7. மிக்க நன்றி அருண் அவர்களே

  அவர்கள் உண்மைகள்: நன்றி நண்பா; முயல்கிறேன்

  மகிழ்ச்சியும் நன்றியும் சிவா !

  மிக்க நன்றி பிள்ளை நிலா

  முகிலன் : லிங்க்: இதோ

  https://www.facebook.com/venkatasivakumar.ca/posts/2045537509099847

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...