குடும்பத்தில் உள்ளோருக்கெல்லாம், பிறந்த நாள் போது சர்ப்ரைஸ் தருபவள் நீ.. உனது தனித்தன்மையில் சிறப்பான ஒன்று இது !
உனது பிறந்த நாளுக்கு உனக்கு என்ன சர்ப்ரைஸ் தருவது? உன் அளவு நான் புத்திசாலி இல்லை ! இருப்பினும் சில நினைவுகளை, எண்ணங்களை பகிர எண்ணுகிறேன்;
இது உனது 27 ஆவது பிறந்த நாள் என்பதால் - 27 விஷயங்கள் :)
1. உன்னை கடவுளின் பரிசு என்றே நானும் அம்மாவும் எண்ணுகிறோம். அம்மா கர்ப்பத்தின் போது வாமிட்டிங்கிற்கு எத்தனையோ ஊசிகள் போட்டும் நீ பாதிப்பின்றி பிறந்தது கடவுள் செயல் தான் என்பது முக்கிய காரணம்.
நாம் எல்லோருமே எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் ! திருமணத்திற்கு பின் எந்த நாடு, எந்த ஊர் போவோம் என்றே தெரியாமல் வாழும் பல்வேறு பெண்கள் இடையே - கல்யாணத்திற்கு பின்னும் - அம்மா- அப்பா கூப்பிடு தூரத்தில் நீ இருப்பதும்- நினைக்கும் போதெல்லாம் உன்னை பார்க்க முடிவதும் எங்கள் வாழ்க்கையை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கும் !
2. சிறு வயதில் விளையாட்டாய் சொன்ன விஷயங்களில் எத்தனை நடந்தே விட்டது.. !! நான் எப்படியும் வயதான பின் பிராக்டிஸ் ஆரம்பிப்பேன்; நீயும் இதே கோர்ஸ் படித்தால் - நாம் தினமும் பார்க்க முடியும் என சொன்னது அப்படியே நடந்தது ! எத்தனையோ பெற்றோர் தங்கள் தொழிலுக்கு மகன்/ மகள் வரவேண்டும் என நினைத்தாலும் பலருக்கும் இவ்வாறு நிகழ்வதில்லை ; ஆனால் நீ இதே தொழிலுக்கு வந்தது மிகப் பெரும் விஷயம்; சுய தொழிலில் இன்று சில வலிகள் இருந்தாலும் என்றோ ஒரு நாள் அவையெல்லாம் worth தான் என உனக்கு நிச்சயம் தோன்றும் !
3. கொரோனா வந்த காலத்தில் வீடு- அலுவலகம் இரண்டையும் நீ அசால்டாக சமாளித்த விதம்- உண்மையில் வேறு ஒரு ஸ்நேகாவை எங்களுக்கு காட்டியது.
சில விதத்தில் நீ பயங்கர தைரிய சாலி- ஈசியாக அழ மாட்டாய் ; ஆனால் சில விஷயத்திற்கு தேவையின்றி பயப்படவும் செய்வாய் (விடு.. கவலையோ, பயமோ இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை !)
4. நீ கடவுள் தந்த கொடை என்றால் - கூக்ளி - நீ எங்களுக்கு தந்த ஆக சிறந்த பரிசு !
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? ஆனால் சர்வ நிச்சயமாய் pet வைத்திருக்கும் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகளாவது சந்தோஷத்தை அடைகிறார்கள்; நீ இல்லாத வீட்டில் கூக்ளி தான் எங்களுக்கு ஆறுதல்; இதனை யோசித்து தான் நீ அவனை எங்களுக்கு அளித்துள்ளாய் !
பெற்ற குழந்தை கூட கடைசி காலம் வரை நம்முடன் படுத்து தூங்காது - ஆனால் உன் தம்பி இத்தனை வருடத்திற்கு பிறகும் எங்களோடு தான் உறங்குகிறான் !
5. ACS இன்ஸ்டிடியூட் மீட்டிங் ஒன்றிற்கு சென்ற நான்- மாலை மீட்டிங் முடிந்த பின்- வேறு நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்த விட்டு 11 மணி வரை இல்லம் வரவில்லை; நாள் முழுதும் உயிர்ப்புடன் இருந்த மொபைல் 10 மணிக்கு பாட்டரி தீர்ந்து ஆப் ஆகிவிட்டது. தாமதமாய் வருவேன் என்பதை சொல்லவும் இல்லை; எனது நம்பர் ரீச்சபிள் இல்லை என்றதும் - நான் டிரைவிங்கில் இருக்கும் போது - கவுன்சில் மெம்பர்கள் சிலருக்கு போன் அடித்து (இரவு 11.30 க்கு மேல்..!) அப்பாவுக்கு என்ன ஆச்சு; வீட்டுக்கு வரவில்லை என விசாரித்திருக்கிறாய்.
12 மணி அளவில் நான் வீடு வந்து சேர வீட்டுக்கு வெளியிலேயே நின்றிருந்த - உன் முதல் கேள்வி " போனுக்கு என்ன ஆச்சு? " " சார்ஜ் இல்லை ; ஆப் ஆகிடுச்சு " என சொல்ல, போனை வாங்கி சார்ஜ் இல்லாததைப் பார்த்து விட்டு- வீசி தரையில் எறிந்து விட்டாய். எனக்கு கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது..... உனக்கு என் மீது இருந்த அக்கறை பார்த்து...கோபமாய் இருந்த சித்ராவிடமும் சொன்னேன் " என் பொண்ணு என்னை எப்படி லவ் பண்றா பாத்தியா?"
6. "நீங்கள் ஹாலில் இல்லா விட்டால் வந்த உடனே....அப்பா எங்கே? என்று தான் கேட்பாள்" என்று சித்ரா சொல்வாள்.
என் அம்மா போலவே - என் முகம் பார்த்தே நான் மூட் அவுட் அல்லது டென்ஷனில் உள்ளேன் என புரிந்து கொண்டு என்ன விஷயம் - மூஞ்சே சரியில்லை என்பாய்
இவை எல்லாமே உன் அன்பை எனக்கு காட்டும் !
7. ACS தேர்தலில் நான் 3 மாதம்- வீடு ஆபிஸ் இரண்டையும் மறந்து சுற்றிக் கொண்டிருக்க ஆபிஸை நீ தான் சமாளித்தாய். ஆபிஸ் பக்கம் வராமல் நான் தேர்தலுக்கு அலைவதால் நீ என் மேல் கோபமாய் இருப்பாய் என்று தான் நினைத்திருந்தேன்; ஆனால் தேர்தல் அன்று நீயும் களத்தில் இறங்கி ஒரு நாள் முழுதும் வேலை செய்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் + மகிழ்ச்சி !
8. ஒரு உண்மையை சொல்ல வேண்டும்; நீ வந்த பிறகு தான் நம் அலுவலகம் சரியான திசைக்கு செல்ல ஆரம்பித்தது. Placement, Valuation, POSH - இந்த மூன்று துறைகளில் நாம் விரிவாக்கம் செய்ததும் நீ வந்த பிறகு நடந்தவையே !

மிக முக்கியமாய் நமது trainees & associates இடம் நீ பழகும் விதம் ! எட்டரை வருடங்களாக நமது ஆபிஸை பார்த்தவன் என்ற முறையில் என்னால் இதை சர்வ நிச்சயமாக உணர முடிகிறது !
9. என்னோடு வண்டியில் வரும் பல நேரம் பின்னால் அமர்ந்து பாட்டு பாடிக் கொண்டே வருவாய்; அம்மாவிடம் கேட்டால் என்னோடு வரும்போது பாடவே மாட்டாளே என்று சொல்கிறார் .. அதென்ன அப்பாவுடன் வரும்போது மட்டும் குஷியோ தெரிய வில்லை !
10. உனது கல்யாண ஏற்பாடுகளின் போது நமக்கு சிற்சில சண்டைகள் வந்த வண்ணம் இருந்தது; நீ தேவையின்றி மிக அதிக செலவு செய்கிறாய் என்பது என் எண்ணம். அவ்வப்போது நான்இதை சொல்லிக் கொண்டே இருந்தாலும் மண்டப அலங்காரம் உள்ளிட்ட சில விஷயங்களில் நீ விடாப்பிடியாய் நின்று grand ஆக செய்து விட்டாய்.
உண்மையில் திருமணம் முடிந்த பிறகு தான் நீ செய்த செலவுகள் எல்லாம் தேவையான ஒன்று- நான் தான் புரிந்து கொள்ளாமல் தடுக்க எண்ணினேன் என்று தோன்றியது
11. நீ, நான், அம்மா எத்தனையோ ஊர்களுக்கு பயணம் சென்றுள்ளோம்; அவை ஒவ்வொன்றுமே மறக்க முடியாத நினைவுகள்; கூக்ளி பயலால் இப்போது நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெளியூர் செல்லவே முடிய வில்லை !
நாம் நடித்த கொடைக்கானல் ஸ்கிட் இரண்டரை மணி நேரம்- சினிமா போல் ஓடியது; அது முடிந்து- அடுத்த சில நிமிடங்களில் டிரஸ் மாற்றி விட்டு வந்து Campfire - ல் நீ மற்ற பெண்களுடன் சேர்ந்து போட்ட ஆட்டம் - உண்மையில் நாங்களே திருஷ்டி வைக்கும் அளவு இருந்தது ! என்னடா இந்த பொண்ணு எல்லா பக்கமும் சிக்ஸர் அடிக்கிறா என்று பலரும் நினைத்திருக்க கூடும் !
13. நம் அலுவலகத்தில் இருந்த/ இருக்கும் பலரும் உன்னைப் பற்றி சொல்லும் ஒரு விஷயம்: "ரொம்ப ரொம்ப நல்லா சொல்லி தருவாங்க - ஈஸியா புரியிற மாதிரி - தெளிவா சொல்லி குடுப்பாங்க" ; நிச்சயம் இது ஒரு மிக நல்ல திறமை .. குறிப்பாய் பிறருக்குப் பயன் படும் விதமான திறமை !
உனக்கு பிடித்த ஒரு quote : We raise by lifting others !
14. சின்ன வயதிலிருந்தே சந்தோஷமாய் இருப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்கிற மாதிரி தான் நடந்து கொள்வாய் ! சந்தோஷமான சூழலை - நீயாகவே உருவாக்கிக் கொள்வாய்.. இன்னமும் இது தொடர்ந்தாலும், தற்போது அலுவலக பொறுப்புகளால் இது சற்றே குறைந்துள்ளது என எண்ணம் எனக்கு ..
15. அம்மா- அப்பாவிடமிருக்கும் பல நல்ல விஷயங்கள் உன்னிடம் உண்டு உதாரணமாய் - என்னிடம் இருக்கும் எழுத்து மற்றும் பேச்சு திறன், அம்மாவின் தைரியம் மற்றும் நல்ல டேஸ்ட் !
16. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் : எனது சோசியல் மீடியாவின் அட்மின் நீ என்பது ! குறிப்பாய் வீடியோக்கள் - படங்கள் - சில நேரம் வார்த்தை கோர்வை -இவை உன்னையே சார்ந்தது- நேரில் பலரும் குறிப்பிடும் போது " என் பெண் தான் செய்தாள் " என பெருமையாய் சொன்னாலும், கேட்டவர்களிடம் மட்டும் தான் சொல்கிறேன்.. இந்த விஷயம் தெரியாதோர் தான் மிக அதிகம் !
17. சிவகார்த்திகேயன் fan ஆன உன்னுடன் அநேகமாய் அனைத்து சிவகார்த்திகேயன் படங்களும் முதல் நாளே பார்த்திருக்கிறேன் - சிவா நடித்ததால் மட்டும் மொக்கை படமான மிஸ்டர் லோக்கல் பார்த்து விட்டு கூட நல்லா இருக்கு என்பாய் நீ ! இதில் ரெமோ முதல் நாளே படம் பார்க்க இரவு நேரம் நெடுந்தூரம் பைக்கில் சென்று வந்தது இன்னும் நினைவில் இருக்கு !
மிக மிக focus ஆக படிப்பு, படிப்பு என்றே இருந்து விட்டாய் - வெளி உலக அனுபவம் சற்று குறைவே (புது ஆட்களுக்கு - நீ பேசும் விதத்தில் இது தெரியாது ) - இதற்கு நேர் மாறாக அஷ்வின் மிக அதிக உலக அனுபவம் கொண்டவர்-
நீ நிறைய புதுப்புது அனுபவங்கள் பெறவேண்டும் - புது விஷயங்கள் - மனிதர்கள்- இவைகள் மூலம் தான் இவை கிடைக்கும்
19. தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் மிக அதிக மகிழ்வான காலம் என்றால் அது நீ குழந்தையாக இருந்த காலம் தான்- ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை உன்னுடன் மட்டுமே செலவிடுவேன்- நீ பேசும் பேச்சுக்கள், விளையாட்டு இவற்றால் நான் சிரித்து கொண்டே இருந்த காலம் என்றால் அது மட்டும் தான் ! குறிப்பாய் நாள் முழுதும் பார்க்காமல் மாலை பார்க்கும் போது நீ ஓடி வந்து ஏறிக்கொள்வாய் - அந்த கணம் சந்தோஷத்தின் உச்சம் !
20. சிறு வயதில் எவ்வளவு கொஞ்சி முத்தங்கள் தந்துள்ளேன்- ஆனால் சற்று பெரியவள் ஆன உடனே அதை நிறுத்தி விட்டாய் !
21. நீ பெரியவள் ஆனது ஒரு அரை ஆண்டுத் தேர்வின் போது நிகழ்ந்தது; தேர்வு பாதிக்காமல் - அதே நேரம் நெருங்கிய உறவினர்களை அழைத்து சிறு விழாவும் நடத்தி விட்டோம் - போலவே - நீடாமங்கலம் பாட்டி இறந்த நேரம் உனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் தேர்வு பாதிக்காமல்- தஞ்சை சென்று வந்தோம் - இவை எல்லாமே இயற்கை மற்றும் கடவுளின் அருள் உனக்கு எப்போதும் இருப்பதையே காட்டுவதாக நினைக்கிறேன்
22. மன உறுதி உனக்கு ரொம்பவே அதிகம் ! மிக குறைவாக உண்பது - இரவில் அல்லது காலையில் சாப்பிடாமலே இருப்பது இதெல்லாம் என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் !
23. உனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும் - சுவாதி மற்றும் மகேஷ் உடன் உனக்கு இருக்கும் அழகான நட்பு நாங்கள் எப்போதும் ரசிக்கும் விஷயம்;
24. நன்றாகப் பாட தெரிந்தவள் நீ- ரசித்துப் பாடுவாய் - அதனாலேயே அது அருமையாய் இருக்கும்; இந்த கால பாட்டுக்கள் மட்டும் இன்றி எங்கள் கால இளையராஜா பாட்டுக்கள் வரை நீ விரும்பிப் பாடுவது ஆச்சரியமான விஷயம் !
25. பள்ளியில் படித்த போது உங்கள் வகுப்பில் நான் வந்து ACS கோர்ஸ் பற்றி பேசியது;
26. உனது திருமணம்.. எவ்வளவு விரைவாய் நடந்தது ! நம்பவே முடியவில்லை !
அதிலும் எல்லா விதத்திலும் நல்லவரான அஷ்வின் அமைந்தது எங்களுக்கு மிக மகிழ்ச்சியான விஷயம் ! நாம் பலருக்கும் முடிந்த நன்மைகள் செய்துள்ளதால் தான் இப்படி அமைந்தது என்பது அம்மாவின் நம்பிக்கை !
27. வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை நமக்காக ஒளித்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை !
உன்னோடு சேர்ந்து அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை காண நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம் !

நாங்கள் தனியே பயணம் செய்யும் போது நிச்சயம் உன்னை நாங்கள் மிஸ் செய்யவே செயகிறோம்.. உன்னை போல் அட்டகாசமாய் பிளான் செய்ய எங்களால் முடியாது; அஷ்வின் இந்த விஷயத்தில் மிகக் கொடுத்து வைத்தவர் ! டூரில் அவர் ஜாலியாக உன் கூட வந்தால் போதும் !
12. நீயும் நானும் சேர்ந்து நடித்த ஸ்கிட் - கொடைக்கானலில் ஒரு முறை- சென்னையில் ஒரு முறை- இவை என்றுமே மறக்க முடியாத அனுபவங்கள்- இரண்டு முறையும் எத்தனையோ பேர் முடித்த உடன் வந்து பாராட்டினர்
12. நீயும் நானும் சேர்ந்து நடித்த ஸ்கிட் - கொடைக்கானலில் ஒரு முறை- சென்னையில் ஒரு முறை- இவை என்றுமே மறக்க முடியாத அனுபவங்கள்- இரண்டு முறையும் எத்தனையோ பேர் முடித்த உடன் வந்து பாராட்டினர்
நாம் நடித்த கொடைக்கானல் ஸ்கிட் இரண்டரை மணி நேரம்- சினிமா போல் ஓடியது; அது முடிந்து- அடுத்த சில நிமிடங்களில் டிரஸ் மாற்றி விட்டு வந்து Campfire - ல் நீ மற்ற பெண்களுடன் சேர்ந்து போட்ட ஆட்டம் - உண்மையில் நாங்களே திருஷ்டி வைக்கும் அளவு இருந்தது ! என்னடா இந்த பொண்ணு எல்லா பக்கமும் சிக்ஸர் அடிக்கிறா என்று பலரும் நினைத்திருக்க கூடும் !
13. நம் அலுவலகத்தில் இருந்த/ இருக்கும் பலரும் உன்னைப் பற்றி சொல்லும் ஒரு விஷயம்: "ரொம்ப ரொம்ப நல்லா சொல்லி தருவாங்க - ஈஸியா புரியிற மாதிரி - தெளிவா சொல்லி குடுப்பாங்க" ; நிச்சயம் இது ஒரு மிக நல்ல திறமை .. குறிப்பாய் பிறருக்குப் பயன் படும் விதமான திறமை !
உனக்கு பிடித்த ஒரு quote : We raise by lifting others !
14. சின்ன வயதிலிருந்தே சந்தோஷமாய் இருப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்கிற மாதிரி தான் நடந்து கொள்வாய் ! சந்தோஷமான சூழலை - நீயாகவே உருவாக்கிக் கொள்வாய்.. இன்னமும் இது தொடர்ந்தாலும், தற்போது அலுவலக பொறுப்புகளால் இது சற்றே குறைந்துள்ளது என எண்ணம் எனக்கு ..
15. அம்மா- அப்பாவிடமிருக்கும் பல நல்ல விஷயங்கள் உன்னிடம் உண்டு உதாரணமாய் - என்னிடம் இருக்கும் எழுத்து மற்றும் பேச்சு திறன், அம்மாவின் தைரியம் மற்றும் நல்ல டேஸ்ட் !
16. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் : எனது சோசியல் மீடியாவின் அட்மின் நீ என்பது ! குறிப்பாய் வீடியோக்கள் - படங்கள் - சில நேரம் வார்த்தை கோர்வை -இவை உன்னையே சார்ந்தது- நேரில் பலரும் குறிப்பிடும் போது " என் பெண் தான் செய்தாள் " என பெருமையாய் சொன்னாலும், கேட்டவர்களிடம் மட்டும் தான் சொல்கிறேன்.. இந்த விஷயம் தெரியாதோர் தான் மிக அதிகம் !
17. சிவகார்த்திகேயன் fan ஆன உன்னுடன் அநேகமாய் அனைத்து சிவகார்த்திகேயன் படங்களும் முதல் நாளே பார்த்திருக்கிறேன் - சிவா நடித்ததால் மட்டும் மொக்கை படமான மிஸ்டர் லோக்கல் பார்த்து விட்டு கூட நல்லா இருக்கு என்பாய் நீ ! இதில் ரெமோ முதல் நாளே படம் பார்க்க இரவு நேரம் நெடுந்தூரம் பைக்கில் சென்று வந்தது இன்னும் நினைவில் இருக்கு !
ஏனோ இப்போது சிவகார்த்திகேயன் படங்கள் முதல் நாள் அல்ல- தியேட்டரில் சென்று பார்ப்பதே உனக்கு குறைந்து விட்டது ! (சிவகார்த்திகேயன் பிறந்தது கூட 17 ஆம் தேதி தான்- பிப்ரவரி - 17!)
18. எல்லாமே நல்ல விஷயமாய் சொல்லி விட்டால் எப்படி ? ஒரு விஷயத்தையாவது மாற்றிக் கொள்ள சொல்ல வேண்டும் இல்லையா? மொபைலுடன் - சோசியல் மீடியாவுடன் செலவிடும் நேரத்தை குறைத்து மனிதர்களிடம் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்து ; 50க்கு பிறகு தான் மனிதர்கள் தேவை எங்களுக்கு புரிகிறது; இவ்வளவு நாள் வேலை -வேலை என இருந்த நாங்கள் - இப்போது தான் மனிதர்களை தேடி செல்கிறோம் - நீயாவது முதலில் இருந்தே மனிதர்களுடன் நெருக்கமாய் இரு- உனக்கு பெயர் என ஸ்நேகா என வைத்ததே அப்படி இருப்பாய் என்பதற்காக தான் !
18. எல்லாமே நல்ல விஷயமாய் சொல்லி விட்டால் எப்படி ? ஒரு விஷயத்தையாவது மாற்றிக் கொள்ள சொல்ல வேண்டும் இல்லையா? மொபைலுடன் - சோசியல் மீடியாவுடன் செலவிடும் நேரத்தை குறைத்து மனிதர்களிடம் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்து ; 50க்கு பிறகு தான் மனிதர்கள் தேவை எங்களுக்கு புரிகிறது; இவ்வளவு நாள் வேலை -வேலை என இருந்த நாங்கள் - இப்போது தான் மனிதர்களை தேடி செல்கிறோம் - நீயாவது முதலில் இருந்தே மனிதர்களுடன் நெருக்கமாய் இரு- உனக்கு பெயர் என ஸ்நேகா என வைத்ததே அப்படி இருப்பாய் என்பதற்காக தான் !
மிக மிக focus ஆக படிப்பு, படிப்பு என்றே இருந்து விட்டாய் - வெளி உலக அனுபவம் சற்று குறைவே (புது ஆட்களுக்கு - நீ பேசும் விதத்தில் இது தெரியாது ) - இதற்கு நேர் மாறாக அஷ்வின் மிக அதிக உலக அனுபவம் கொண்டவர்-
நீ நிறைய புதுப்புது அனுபவங்கள் பெறவேண்டும் - புது விஷயங்கள் - மனிதர்கள்- இவைகள் மூலம் தான் இவை கிடைக்கும்
19. தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் மிக அதிக மகிழ்வான காலம் என்றால் அது நீ குழந்தையாக இருந்த காலம் தான்- ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை உன்னுடன் மட்டுமே செலவிடுவேன்- நீ பேசும் பேச்சுக்கள், விளையாட்டு இவற்றால் நான் சிரித்து கொண்டே இருந்த காலம் என்றால் அது மட்டும் தான் ! குறிப்பாய் நாள் முழுதும் பார்க்காமல் மாலை பார்க்கும் போது நீ ஓடி வந்து ஏறிக்கொள்வாய் - அந்த கணம் சந்தோஷத்தின் உச்சம் !
20. சிறு வயதில் எவ்வளவு கொஞ்சி முத்தங்கள் தந்துள்ளேன்- ஆனால் சற்று பெரியவள் ஆன உடனே அதை நிறுத்தி விட்டாய் !
ஏதேனும் நீ சாதித்தால் - பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றில் மட்டும் நைசாக ஒரு முத்தம் கொடுப்பேன்; அதையே ஒழுங்காய் வாங்காமல் ஓடி விடுகிறாய் !
21. நீ பெரியவள் ஆனது ஒரு அரை ஆண்டுத் தேர்வின் போது நிகழ்ந்தது; தேர்வு பாதிக்காமல் - அதே நேரம் நெருங்கிய உறவினர்களை அழைத்து சிறு விழாவும் நடத்தி விட்டோம் - போலவே - நீடாமங்கலம் பாட்டி இறந்த நேரம் உனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் தேர்வு பாதிக்காமல்- தஞ்சை சென்று வந்தோம் - இவை எல்லாமே இயற்கை மற்றும் கடவுளின் அருள் உனக்கு எப்போதும் இருப்பதையே காட்டுவதாக நினைக்கிறேன்
22. மன உறுதி உனக்கு ரொம்பவே அதிகம் ! மிக குறைவாக உண்பது - இரவில் அல்லது காலையில் சாப்பிடாமலே இருப்பது இதெல்லாம் என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் !
23. உனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும் - சுவாதி மற்றும் மகேஷ் உடன் உனக்கு இருக்கும் அழகான நட்பு நாங்கள் எப்போதும் ரசிக்கும் விஷயம்;
கசின்-களான அவர்கள் சகோதரர்கள் இல்லாத குறையைப் போக்குவர் என நினைக்கிறேன்; போலவே வினோத்தும் கூட !
24. நன்றாகப் பாட தெரிந்தவள் நீ- ரசித்துப் பாடுவாய் - அதனாலேயே அது அருமையாய் இருக்கும்; இந்த கால பாட்டுக்கள் மட்டும் இன்றி எங்கள் கால இளையராஜா பாட்டுக்கள் வரை நீ விரும்பிப் பாடுவது ஆச்சரியமான விஷயம் !
25. பள்ளியில் படித்த போது உங்கள் வகுப்பில் நான் வந்து ACS கோர்ஸ் பற்றி பேசியது;
நீ மதுரை சென்ற போது 10 நாள் பார்க்க முடியாமல் ஒரு நாள் EDP கிளாஸ் கேட்டு வந்து எடுத்தது..இந்த இரண்டு நிகழ்வுகளும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- காரணம்- நான் ஆசிரியராக - நீ மாணவியாக இருந்த இடங்கள் இவை !
26. உனது திருமணம்.. எவ்வளவு விரைவாய் நடந்தது ! நம்பவே முடியவில்லை !
அதிலும் எல்லா விதத்திலும் நல்லவரான அஷ்வின் அமைந்தது எங்களுக்கு மிக மகிழ்ச்சியான விஷயம் ! நாம் பலருக்கும் முடிந்த நன்மைகள் செய்துள்ளதால் தான் இப்படி அமைந்தது என்பது அம்மாவின் நம்பிக்கை !
27. வாழ்க்கை இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை நமக்காக ஒளித்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை !
உன்னோடு சேர்ந்து அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை காண நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம் !
No comments:
Post a Comment