Thursday, March 18, 2010

வானவில் - ஐ.பி.எல் & மரண வாக்குமூலம்

சென்னை ஸ்பெஷல் : ஒரே நாளில் திருப்பதி தரிசனம்

IRCTC ரயில் சேவை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். சனி, ஞாயிறுகள் தவிர மற்ற தினங்களில் சென்னையிலிருந்து திருப்பதி ரயிலில் சென்று ஒரே நாளில் தரிசனம் பார்த்து வரும் அருமையான வசதி உள்ளது. அதி காலை 6.25 கிளம்பும் திருப்பதி சப்தகிரி express-ல் சென்று விட்டு, அன்று இரவு 8.30--க்கு திரும்ப சென்னை வந்து விடுகிறார்கள். பத்மாவதி அம்மையாரும் கூட தரிசனம் செய்கிறார்கள் . காலை மற்றும் மதிய உணவு, தர்ஷன் டிக்கெட், டிரைன் செலவு எல்லாம் சேர்த்து பெரியவர்களுக்கு Rs. 1200ம், குழந்தைகளுக்கு Rs.960-ம் சார்ஜ் செய்கின்றனர். AC Chair car - எனில் ருபாய் 450 அதிகம்.

படித்ததில் பிடித்தது

அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது!! - தேவ தாஸ்

IPL தமாக்கா

IPL மேட்ச்கள் ஆரம்பமாயடுச்சு. 8 டீம்கள் . ஒவ்வொரு டீமும் மற்ற டீமுடன் ரெண்டு முறை விளையாடுவது ரொம்பவே அதிகம். கொஞ்ச நாள் கழிச்சு யாருடன் யார் விளையாடியதில் யார் ஜெயித்தார் என ஞாபகம் வச்சிக்கவே முடியாது. சரியா பசங்களுக்கு பரீட்சை நேரத்தில் IPL வருது. தினம் கண் முழிச்சு பார்த்தா எல்லோரும் தூங்கிய பிறகு நாம தூக்கம் வராம முழிக்க வேண்டியிருக்கு. பார்க்கவும் முடியாம பார்க்காம இருக்கவும் முடியாம திரிசங்கு சொர்க்கமா இருக்கு!!

அய்யா சாமி

அய்யா சாமிக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகிடுச்சு; மனுஷன் இன்னும் ஒழுங்கா தோசை ஊத்த கத்துக்கலை. நிறைய தடவை தோசையை கருக்கிடுறார். அட அவருக்கு ஊத்தும் போது கருக்கினா பரவால்லைங்க. அவங்க வீட்டம்மாவுக்கு ஊத்தும் போது கருக்கிடுறார். அப்புறம்?? ம்ம்.. அப்பளம் தான்

செல் போன் விபத்துக்கள்

செல் போன் பேசியவாறே டிரைவர் வண்டி ஓட்டி சமீபத்தில் பேராவூரணி பள்ளி குழந்தை இறந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதத்தில், டிரைவர் செல் போன் பேசி மரணம் நிகழ்வது இது எட்டாவது முறையாம். எப்போது தான் வண்டி ஓட்டுபவர்களுக்கு இந்த தெளிவு வருமோ? அரசாங்கமும் சற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மீண்டும் மீண்டும் இது போன்ற செய்தி கேள்வி படுகையில் மனது ரொம்பவும் சங்கட படுகிறது.

வாரம் ஒரு சட்ட சொல்: மரண வாக்குமூலம்

மரண படுக்கையில் இருக்கும் ஒருவர் தருகிற வாக்கு மூலம் மரண வாக்குமூலம் எனப்படுகிறது. சுய நினைவுடன் இருக்கும் போது அவர் வாக்கு மூலம் தந்திருக்க வேண்டும். டாக்டர் அல்லது நடு நிலையான மூன்றாம் நபரிடம் இதனை அவர் அளிக்கலாம். இதனை நீதிபதி முன் வழங்க முடிந்தால் அதன் weightage சற்று அதிகம். மரண படுக்கையில் இருக்கும் நபர் பொய் சொல்ல மாட்டார் என்பது சட்டத்தின் எதிர் பார்ப்பு. சினிமாக்களில் நாம் இந்த காட்சி அவ்வபோது பார்த்திருக்கலாம். சில நீதி மன்றங்கள் இந்த மரண வாக்கு மூலத்தை வைத்தே தீர்ப்பு தருவதும் உண்டு, சில நேரங்களில் இதை தவிர இன்னும் evidence தேவை என்று கூறுவதும் உண்டு.


ஒரு சந்தேகம்

60 வயது-க்கு மேல் உள்ள ஆண்கள் பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலர், 30-40 வயதில் குண்டாக இருந்தவர்களும் உண்டு. ஆனால் 60 வயது -க்கு மேல் பெண்கள் பெரும்பாலும் குண்டாகவே உள்ளனர். இது ஏன்? பெண்கள் விஷயத்திலாவது மெனோபாஸ், யூடரஸ் அகற்றுதல் போன்ற காரணங்களால் வெயிட் போடுது என சொல்லலாம். ஆண்கள் ஏன் வயதான பின் ஒல்லியாகிறார்கள்? விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

24 comments:

  1. ஒரு சந்தேகம் மோகன்,

    தலைப்பு யதார்த்தமாய் வைத்ததுதானே? :-)

    இன்னொரு சந்தேகம்...

    "ஒரு சந்தேகம்" எனக்கும் உண்டு...யாராவது சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  2. //சென்னை ஸ்பெஷல் : ஒரே நாளில் திருப்பதி தரிசனம்//

    சென்னை மாதிரி மாநகராட்சிகளுக்குதான் இத்த வசதி வாய்ப்பெல்லாம். எங்களுக்கு ஏது?

    //கொஞ்ச நாள் கழிச்சு யாருடன் யார் விளையாடியதில் யார் ஜெயித்தார் என ஞாபகம் வச்சிக்கவே முடியாது//

    அத பத்தி கவலையே இல்ல எனக்கு. டெய்லி மேட்சா, ஒரே ஜாலிதான் (எனக்குதான் ஜாலி, ஹவுஸ்பாசுக்கு?)

    அய்யோ பாவம்ங்க அய்யாசாமி :)

    //அரசாங்கமும் சற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.//

    அவன் அவனுக்கு கொள்ளையடிக்கவே நேரம் இல்ல. இதையெல்லாம் முக்கியம்னா நெனைப்பானுங்க?

    //சந்தேகம்//
    எனக்கும் தெரியாதுங்க. யாராச்சும் சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  3. I have two doubts..

    1) வழக்கறிஞர், வழக்குரைஞர் - என்ன வித்தியாசம்?
    2) Advocate , Lawyer - என்ன வித்தியாசம்?

    ReplyDelete
  4. ஒருவருக்கு சட்டம் தெரிந்திருந்தாலே அவரை வழக்கறிஞர் என்று சொல்லலாம். ஆனால் நீதிமன்றம் சென்று வாதாட பார் கவுன்சலில் உறுப்பினர் ஆக வேண்டும். அப்படி ஆனவர்கள் வழக்குரைஞர்.

    lawyer என்றால்தான் அவர் வழக்குரைஞர். advocate என்றால் ஒன்றை அழுத்தி சொல்வது. உதாரணம்
    The doctor advocated a smoking ban

    ReplyDelete
  5. {60 வயது-க்கு மேல் உள்ள ஆண்கள் பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலர், 30-40 வயதில் குண்டாக இருந்தவர்களும் உண்டு.}

    பெரும்பாலும் ஆண்கள் நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள்..

    ReplyDelete
  6. அய்யா சாமிக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகிடுச்சு; மனுஷன் இன்னும் ஒழுங்கா தோசை ஊத்த கத்துக்கலை. நிறைய தடவை தோசையை கருக்கிடுறார். அட அவருக்கு ஊத்தும் போது கருக்கினா பரவால்லைங்க. அவங்க வீட்டம்மாவுக்கு ஊத்தும் போது கருக்கிடுறார். அப்புறம்?? ம்ம்.. அப்பளம் தான்

    ........ ஐயோ பாவம், அப்பளசாமி!

    ReplyDelete
  7. ஒரே நாளில் திருப்பதி தரிசனம் - இதுபோல் தி.ந‌க‌ரில் இருந்து பேருந்துக‌ளிலும் கூட்டிச்செல்கிறார்க‌ள், ச‌னி, ஞாயிறு உட்ப‌ட‌.

    ஐபிஎல் - இத்த‌னை மேட்சுக‌ள் இருப்ப‌து க‌டுப்பான‌ விஷ‌ய‌ம்தான். "அள‌வுக்கு மிஞ்சினால்" கதைதான்....

    ந‌ல்ல‌வேளை நான் இப்ப‌வே தோசை ஊத்த‌ க‌த்துகிட்டேன் ;)

    செல் போன் விபத்துக்கள் - நானும் ப‌டித்தேன், த‌ண்ட‌னைக‌ள் க‌டுமையாகாம‌ல் இந்த‌ மாதிரி டிரைவ‌ர்க‌ள் திருந்த‌ப்போவ‌தில்லை :(

    //ஆண்கள் ஏன் வயதான பின் ஒல்லியாகிறார்கள்? //

    நீங்க‌ ஒல்லியாயிட்டீங்க‌ளா? ஹி..ஹி....:)))

    ReplyDelete
  8. //கார்க்கி said..."ஒருவருக்கு சட்டம் தெரிந்திருந்தாலே அவரை வழக்கறிஞர் என்று சொல்லலாம். ஆனால் நீதிமன்றம் சென்று வாதாட பார் கவுன்சலில் உறுப்பினர் ஆக வேண்டும். அப்படி ஆனவர்கள் வழக்குரைஞர். lawyer என்றால்தான் அவர் வழக்குரைஞர். advocate என்றால் ஒன்றை அழுத்தி சொல்வது. உதாரணம் The doctor advocated a smoking ban"//

    Thanks kaarkki.

    ReplyDelete
  9. கல்யாணமான உடனே குடும்ப பாரத்த சுமக்கறாங்களே அதனாலயா...

    ஏய் எங்கப்பா கார்க்கி கொஞ்சம் காப்பாத்தப்பா..

    :))

    ReplyDelete
  10. நீங்கதானா அந்த அய்யாசாமி??

    ReplyDelete
  11. முப்பது வயதிற்கு மேல் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்புகளில் ஏற்ப்படும் மாற்றங்களால் உடல் எடை குறையுமாம்.

    Source:
    http://www.funtrivia.com/askft/Question28641.html

    ReplyDelete
  12. செல் போன் விபத்தை நாமும் ஒரு காரணம் ஆகிவிடுகிறோம் . ஸ்கூல் வேன் எங்க இப்ப இருக்குன்னு வீட்டுல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி கேகுறங்க தலைவரே !!!

    ReplyDelete
  13. Anonymous4:28:00 AM

    அய்யாசாமிக்கு இன்னும் தோசை சரியா ஊத்த தெரியாதா? வீட்டுக்கு வீடு அப்படித்தான் போலிருக்கு.
    எங்க வீட்டு அய்யா சாமியும் அப்படித்தான்

    ReplyDelete
  14. சரியா பசங்களுக்கு பரீட்சை நேரத்தில் IPL வருது//
    பசங்களுக்கு ஒன்னும் பிரச்சினை கிடையாது.பெற்றோருக்குத்தான் BP எகிறுது.

    ReplyDelete
  15. நல்லாருக்கு வானவில். சீக்கிரமே தோசை ஊத்தக் கத்துக்கோங்க.

    ReplyDelete
  16. ராஜாராம்; வாங்க. தலைப்பு சுவராஸ்யத்துக்காக வைத்தது.
    *********
    வரதராஜலு .பூ said... //எனக்குதான் ஜாலி, ஹவுஸ்பாசுக்கு?)//எல்லா ஹவுஸ்பாசுக்கும் கிரிக்கட் பிடிக்காது..
    *********
    Madhavan: Lawyer என்றால் சட்டம் படித்தவர். Advocate எனில் சட்டம் முடித்து பார் கவுன்சிலில் register செய்தவர். Advocate can only appear before court.
    *********
    கார்க்கி: நன்றி
    *********
    நன்றி அறிவன். நீங்க சொல்றது உண்மை தான்; ஆனா என் அப்பாவை பார்த்தா அவருக்கு இன்றும் சுகர் இல்லை. 40 வயதில் குண்டா இருந்தவர் 60-க்கு மேல் ஒல்லியா இருக்கார். அதை மாதிரி பலரை பார்த்ததில் தான் எழுதினேன்.
    *********
    நன்றி சித்ரா
    *********
    ர‌கு said... //ந‌ல்ல‌வேளை நான் இப்ப‌வே தோசை ஊத்த‌ க‌த்துகிட்டேன் ;)// ம்ம்.. ரெடி ஆகிடீங்கன்னு சொல்லுங்க
    *********
    ஷங்கர் நன்றி
    *****
    ஜெட்லி: ஐயா சாமி நான் மட்டுமல்ல
    *******
    மன்னார்குடி: தகவலுக்கு மிக்க நன்றி. நானும் உங்க ஊர் பக்கம். நீடாமங்கலம் தாங்க
    *******
    ரோமியோ: சரியா சொன்னீங்க
    *******
    சின்ன அம்மணி: அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி :))
    *****
    அமைதி அப்பா: நன்றி; பசங்களும் பாக்க முடியாம போகுதே!!
    *****
    வாங்க புலி கேசி நன்றி
    *****
    நன்றி கேபிள்
    ****
    விக்கி: ரைட்டு

    ReplyDelete
  17. நண்பரே...

    உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்....

    http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_19.html

    ReplyDelete
  18. // அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது!! - தேவ தாஸ்// அடுத்த வரி: அபிமானம் மாறாது... நல்ல பாடல்!

    ReplyDelete
  19. // அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது!! - தேவ தாஸ்// அடுத்த வரி: அபிமானம் மாறாது... நல்ல பாடல்!

    ReplyDelete
  20. // அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது!! - தேவ தாஸ்// அடுத்த வரி: அபிமானம் மாறாது... நல்ல பாடல்!

    ReplyDelete
  21. // அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது!! - தேவ தாஸ்// அடுத்த வரி: அபிமானம் மாறாது... நல்ல பாடல்!

    ReplyDelete
  22. //ஆண்கள் ஏன் வயதான பின் ஒல்லியாகிறார்கள்?

    இனிப்பு வந்திடுவதாலோ. ஹி ஹி ஹி ..

    வக்கில்சார். நல்ல வழக்குகள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...