Saturday, July 3, 2010

வானவில் - ஜாக்கி சேகரும் காஞ்சனா பாட்டியும்

இணையத்தில் வாசித்ததில் பிடித்தது 

ஜாக்கி சேகர் தனது வலை உலக flashback மூன்று பதிவுகளாக எழுதியுள்ளார். அதில் கடைசி பதிவில் நிறைய பழைய படங்களை வெளியிட்டுள்ளார். சமீபத்து வலையுலக சண்டையில் மோதி கொண்ட பல நண்பர்களை ஒன்றாய்  மகிழ்ச்சியாய் சிரித்தவாறு பார்க்க எவ்வளவு நன்றாக உள்ளது!! 

இந்த பதிவை வாசித்த போது, சமீபத்தில் வந்த இந்த SMS நினைவிற்கு வந்தது

ரசித்த SMS: 

Love photoes; because the best thing about it is that, it never changes, even when the people in it change. ராவணன் -சிறு குறிப்பு


ராவணன் பார்த்தேன். படம் என்னை கவரவில்லை. ஒரு படத்தை வெறும் technical brilliance-க்காக மட்டும் ரசிக்க பட முடியாது. அதன் சம்பவங்கள், அதில் உள்ள மனிதர்களின் துயரம் நம்மை பாதிக்க வேண்டும். ராவணனில் இது நடக்க வில்லை. ஐஸ்வர்யா ராய் என்ற எண்ணமே மனதில் நிற்கிறதே அன்றி, தமிழ் பெண், கடத்தப்பட்ட பெண் என எந்த எண்ணமும் வர வில்லை. போலவே விக்ரம் மற்றும் குழுவிற்கு அவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்ற எந்த பின்னணியும் இன்றி அவர்கள் நோக்கம் மீதும் ஈடுபாடு வரவில்லை. மணி ரத்னம் படங்கள் பல எனக்கு பிடிக்கும். ராவணன் அந்த லிஸ்டில் நிச்சயம் வராது.


தமிழ் புத்தகத்தில் வாசித்தது 

"நல்லார்   எனத்தான் நனி விரும்பிக் கொண்டாரை    
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு 
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.  (நாலடியார்) "

பொருள்: 

நல்ல நண்பர் என விரும்பி ஏற்று கொண்டவரிடம் குற்றம் இருந்தாலும் பொறுத்து ஏற்று கொள்ள வேண்டும். நெல்லில் உமி இருப்பது போல், நீரில் நுரை இருப்பது போல், பூவில் மணமற்ற வெளி மடல் இருப்பது போல் குறைகள் மனிதர்களிடம் உண்டு. எனவே நண்பர் குறைகளை பொறுத்து அவர்களை திருத்த முயல வேண்டும்.

அறிவிப்பு

வாங்க முன்னேறி பாக்கலாம் தொடர் வெகு விரைவில் மீண்டும் துவங்க உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இயலும் போது எழுத எண்ணம்.சென்னை ஸ்பெசல்: காஞ்சனா பாட்டி

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய நாட்களில் குழந்தைகளை பார்த்து கொள்ளும் creche-கள் நிறைய வந்து விட்டன. அப்படி ஒரு creche-தான் காஞ்சனா பாட்டி. சிறிய அளவில் துவங்கி தற்போது சென்னையில் வேளச்சேரி, திருவான்மியூர் என பல இடங்களில் உள்ளனர். சற்று costly எனினும் நன்கு பார்த்து கொள்வதாக நண்பர்கள் சொல்கிறார்கள். குழந்தை பள்ளியிலிருந்து வந்ததும், கை, கால் முகம் கழுவ வைத்து சாப்பிட ஏதும் (அவர்களே தயார் செய்து) தருகிறார்கள். பின் அங்குள்ள மைதானத்தில் விளையாட வைக்கிறார்கள். பின் வீட்டு பாடம் செய்ய வைக்கிறார்கள். நாள் முழுதும் உள்ள சிறு குழந்தைகளுக்கு ரைம்ஸ் போன்ற CD-கள் போட்டு காட்டுகின்றனர். சாதாரண தொலை காட்சி நிகழ்ச்சிகள் காட்டுவதில்லை. இந்த குழந்தைகளுக்கு மதிய சாப்பாடும் அவர்களே தயார் செய்து தருகிறார்கள். உணவு hygienic ஆக இருப்பதாக சொல்கிறார்கள். 

டிவி பக்கம்: Zee - Top 10 செய்திகள்

கலைஞர் செய்திகள் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாகவும் மக்கள் மிக மகிழ்வாக வாழ்வதாகவும் சொல்ல, ஜெயா செய்திகளோ நாட்டில் ரத்த ஆறு ஓடுவதாக சொல்கிறது. இந்த இரண்டு மாதிரியும் (extremes ) இல்லாமல், சுவாரஸ்யமாக உள்ளது இரவு பத்து மணிக்கு Zee தமிழ் தொலை காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகள். Top 10 செய்திகள் என, தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு என ஒவ்வொன்றிலும் அன்றைய சிறந்த 10 செய்திகளை சுவாரஸ்யமாக தருகிறார்கள். முடிந்தால் பாருங்கள்.


15 comments:

 1. தமிழ் புத்தகத்தில் வாசித்தது .....

  நல்லா இருக்கு மோகன்.

  ReplyDelete
 2. ungal அறிவிப்பை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 3. ungal அறிவிப்பை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 4. எல்லாம் நல்லா இருக்கு மோகன்.

  ReplyDelete
 5. அந்த குறுந்தகவல் விசயம் ரொம்ப நல்லாருக்கு.

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு மோகன்.

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு மோகன். தொடரை, தொடரவும்.

  ReplyDelete
 8. r u referring the KNACHANAI (started by Srinivasan (xaviers college student MA Folklore) or is there any new crech named kanchana paati

  ReplyDelete
 9. Anonymous4:59:00 AM

  ராவணன் முடிவு சரியில்லை. இல்லாட்டி எங்கியோ போயிருக்கும்

  ReplyDelete
 10. Short Message (SMS) but length meaning..

  //வாங்க முன்னேறி பாக்கலாம்//

  waiting..

  //டிவி பக்கம்: Zee - Top 10 செய்திகள்//

  Rightly said.

  ReplyDelete
 11. உலக்ஸ்: நன்றி
  ****
  நன்றி கேபிள்
  **
  ராமசாமி கண்ணன்: நன்றி
  ***
  சரவணா குமார் & ராஜா ராம்: நன்றி
  ***
  ராம்ஜி: அந்த creche யார் நடத்துகிறார்கள் என தெரியலை. மன்னிக்க.
  ***
  சின்ன அம்மணி ..அப்படிங்கறீங்க? எனக்கெனவோ படம் மனசை பாதிக்கவே இல்லை
  ***
  மாதவன்: நீங்க அந்த செய்திகள் பார்ப்பதுண்டா?
  ***

  ReplyDelete
 12. ப‌திவுல‌க‌ம்....ப்ச்..நோ க‌மெண்ட்ஸ் :((

  ராவ‌ண‌ன் ஒரு பிர‌மாத‌மான‌ விஷுவ‌ல் ட்ரீட்..ஐஸ்வ‌ர்யா ராயை இந்த‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌டுத்தி வேறெந்த‌ இய‌க்குன‌ராவ‌து ந‌டிக்க‌ வைப்பாரா என்ப‌து ஐய‌மே...ஆனால் திரைக்க‌தையில்தான் ம‌ணிர‌த்ன‌ம் ஏமாற்றியிருக்கிறார் :(

  நால‌டியார்க்கும் முத‌ல் செய்திக்கும் தொட‌ர்பு இருக்கா? (ஹி..ஹி..கொளுத்தி போடுற‌துன்னு முடிவான‌துக்க‌ப்புற‌ம்...)

  தொட‌ரை தொட‌ராம‌ விட்டுடாதீங்க‌ :)

  'காஞ்ச‌னா பாட்டி' வேள‌ச்சேரியில் பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன். டிசிஎஸ் அருகில் இருக்கும்..க‌ரெக்ட்டா?

  ReplyDelete
 13. காஞ்சனா பாட்டிக்கு சென்னையில் நிறைய இடங்களில் கிளை உண்டு. ஃபீஸ்:((

  ReplyDelete
 14. நன்றி ரகு.. ஆம்.. அந்த creche TCS பக்கத்தில் தான் உள்ளது.
  ***
  Vidya : Thanks for the comment.

  ReplyDelete
 15. நல்லதொரு ஒரு பகிர்வு. உங்கள் தொடரை தொடருங்கள். எதிர்பார்ப்புகளுடன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...