Monday, July 12, 2010

வானவில்- மதராச பட்டினமும் கருணை கொலையும்

கொலையா? கருணை கொலையா?

அருப்புகோட்டையில் ஒரு பெண்மணி வயதானவர்களை விஷ ஊசி போட்டு சாகடித்துள்ளார். இறக்கும் தருவாயில் இருப்போர் அல்லது வயதாகி நீண்ட நாள் படுக்கையில் இருப்போரின் உறவினர்கள் சொல்லி இந்த பெண்மணி மூவாயிரம் ருபாய் பணம் வாங்கி கொண்டு இவ்வாறு செய்துள்ளார். ஒருவரின் சம்மதம் இன்றி இவ்வாறு அவருக்கு விஷ ஊசி போடுவது - கொலை செய்வது போல தான். இந்த பெண்மணி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ம்ம் நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன பார்க்கலாம் !!

முரளிதரனும் 800 விக்கட்டும்

இந்தியா - இலங்கை தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இந்திய பந்து வீச்சாளர்கள் சஹீர் கான், ஸ்ரீ சாந்த் காயம் காரணமாக விலகியுள்ளனர். கபில் தேவ் எத்தனை வருடங்கள் எந்த காயமும் இன்றி ஒரு மேட்ச் கூட விடாமல் விளாயாடினார்!!

நிற்க. முரளிதரன் 800 விக்கட் எடுக்க இன்னும் எட்டு விக்கட் பாக்கி இருக்க ஏன் அதற்குள் ரிடையர் ஆவதாக அறிவிக்க வேண்டும்? ஒரு மேட்சில் எட்டு விக்கட் எடுப்பதை நிச்சயமாக சொல்ல முடியுமா? கஷ்டமே. இது ஒரு மிக முக்கிய நிகழ்வு/ சாதனை என்னும் போது குறைந்தது இரு மேட்ச்களாவது ஆடியிருக்கலாம் அவர். பேட்டிங்கில் பிராட்மன் டெஸ்ட் சராசரி 99. 99 என்று அமைந்தது போல் முரளி 800-க்கு சில விக்கட்டுகள் குறைவாக தனது டெஸ்ட் வாழ்கையை முடிப்பாரோ என்று தோன்றுகிறது!

ரசித்த SMS

Life is not a rehearsal. Each day is a real show. No retakes. No rewinding. So give the best performance in all your roles.

ஹெல்த் டிப்ஸ்

சிறுநீரக நோய் ( சிறுநீரகத்தில் கல், மற்றும் இதர நோய்கள்) வராதிருக்க தினம் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீரை ஒரேயடியாக லிட்டர் கணக்கில் குடிப்பதை விட ஒரு மணிக்கு ஒரு முறை 300 மில்லி தண்ணீர் என்ற அளவில் குடிப்பது உடலில் எப்போதும் தண்ணீர் இருக்கும் படி பார்த்து கொள்ளும் என்று ஒரு மருத்துவர் சமீபத்தில் சொன்னார்..


மதராசபட்டினம் பாடல்கள்

ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் ஈர்ப்பது ரொம்ப அரிதாக ஆகி வருகிறது. ஆனால் மதராசபட்டினம் படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமையாய் உள்ளது.
 
 
 
குறிப்பாய் வாம்மா துரை அம்மா பாட்டில் நடுவில் வரும் பேச்சுகளுடன் சேர்த்து பாடல் சுவாரஸ்யமாக உள்ளது. பூக்கள் பூக்கும் தருணம் அருமையான மெலடி. பிரகாஷ் குமார் இந்த சிறு வயதில் அசத்தி உள்ளார். கடந்த சில நாட்களாக தினம் இரு முறை கேட்டு வருகிறேன் இந்த பாடல்களை!

இணையத்தில் ரசித்தது

அம்மாஞ்சியின் பெங்களூர் குறித்த இந்த பதிவு மனம் விட்டு சிரிக்க வைத்தது. எப்போதாவது எழுதினாலும் மனம் விட்டு சிரிக்க வைப்பவர் அம்மாஞ்சி. வாழ்த்துக்கள் அம்மாஞ்சி !!

TamilBlogger திரட்டியில் வீடு திரும்பல்

தமிழின் முக்கிய ப்ளாகுகள் அதன் சமீபத்திய பதிவுகளை காட்டும் TamilBlogger என்ற திரட்டி தமிழில் உள்ள குறிப்பிட்ட 100 ப்ளாகுகளை காட்டுகிறது. இதில் வீடு திரும்பலும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தின் இறுதியில் கடை குட்டியாய் இணைந்துள்ளது வீடு திரும்பல் பக்கம். இயலும் போது இந்த திரட்டியை பாருங்கள்.

11 comments:

 1. //ம்ம் நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன பார்க்கலாம் !!//

  இவர்கள் அம்பானி போன்றவர்களின் குடும்பபிரச்சனைகளை தீர்க்கவே நேரம் போதவில்லை. ரொம்ப முக்கியம் இந்த கேஸ். போங்க சார் ஜோக் அடிக்காதிங்க

  //முரளிதரனும் 800 விக்கட்டும் //

  :(

  //TamilBlogger திரட்டியில் வீடு திரும்பல் //

  வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 2. ஹெல்த் டிப்ஸ்//

  அவசியம் எல்லோரும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று.

  //TamilBlogger திரட்டியில் வீடு திரும்பல்//

  வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 3. ஹெல்த் டிப்ஸ் நன்று பாஸ் .

  ReplyDelete
 4. வாழ்த்துகள் மோகன்.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. நன்றி வரதராஜலு சார்; கிரிக்கட் !!!
  ****
  நன்றி கேபிள்; சினிமா செய்தி தலைப்பில் இருந்ததும் உள்ளே வந்தீர்கள் போலும் :))
  ****
  நன்றி ரோமியோ
  ***
  அமைதி அப்பா: மிக்க நன்றி
  ***
  சரவணா: நன்றி

  ReplyDelete
 7. //ம்ம் நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன பார்க்கலாம் !!//

  எதை செய்யணுமோ அதச் செய்யாது.... தேவையில்லாதை செயஞ்சுக்கிட்டே இருக்கும் .. உ.தா.
  http://idlyvadai.blogspot.com/2010/07/blog-post_07.html

  Sir, as a professional, you must be knowing better than us.

  ReplyDelete
 8. எப்ப‌டியும் ஏழு இல்ல‌ எட்டு வ‌ருஷ‌த்துக்குள்ள‌ தீர்ப்பு சொல்லிடுவாங்க‌ன்னு நினைக்கிறேன்

  முர‌ளி 8 விக்கெட் எடுக்க‌ணும்..ஆனா இந்தியா ஜெயிக்க‌ணும் ;)

  ஹெல்த் டிப்ஸ் அருமை..

  வாம்மா துரைய‌ம்மா...உதித் நாராய‌ணின் த‌மிழ் இந்த‌ பா‌ட‌லில் பெட்ட‌ராக‌ இருப்ப‌தாக‌ தோன்றுகிற‌து

  வீடு திரும்ப‌லுக்கு வாழ்த்துக‌ள் :)

  ReplyDelete
 9. நன்றி மாதவன்.
  **
  ரகு: நன்றி .

  //முர‌ளி 8 விக்கெட் எடுக்க‌ணும்..ஆனா இந்தியா ஜெயிக்க‌ணும் ;)//Nice

  ReplyDelete
 10. //TamilBlogger திரட்டியில் வீடு திரும்பல் //

  வாழ்த்துகள் மோகன்.

  As usual colorful Rainbow!

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...