Monday, December 6, 2010

வானவில்: மன்மதன் அம்பு & நரசிம்


டிவி பக்கம்: மன்மதன் அம்பும் பதிவர்கள் நிகழ்ச்சியும்

விஜய் டிவியில் மன்மதன் அம்பு பட பாடல்கள் வெளியீடு ஐந்து மணி நேரத்திற்கும் மேல் போட்டார்கள். ஆவ்வ்..  ரெண்டு மணிக்கு மேல் நாலு மணி வரை விடாமல் பார்த்தேன். (காரணம் கடைசியில்) கமலுக்கு வயதாகி விட்டது நன்கு தெரிகிறது. பாடல்கள் ஏற்கனவே கேட்டாகி விட்டது. சில பாடல்கள் வழக்கமான தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டைலில் உள்ளன. பெரிதாக கவர வில்லை. போக போக ஒரு சில பிடிக்கலாம். 
நிகழ்ச்சிக்கு வருவோம். ஜூனியர் சுப்பர் சிங்கர் சிறுவர்களை பாட வைத்து ரொம்ப நேரம் ஓட்டினார்கள்.  மாதவன், திரிஷா, கமல் என ஒவ்வொருவருக்கும் இன்ட்ரோ தந்து அவர்கள் பாடல்கள் பாடி, ஒரு வழியாய் பாடல் வெளியிட்டனர். கமல் எழுதிய கவிதை பற்றி நிச்சயம் பதிவர்களே பல விதமாய்  விவாதிப்பார்கள் என நினைக்கிறேன்.
பதிவர் நண்பர்கள் கேபிள், பலா பட்டறை ஷங்கர், பொன். வாசு போன்றோர் பங்கு பெற்ற நந்த லாலா சினிமா விவாதம்  இந்நிகழ்ச்சி முடிந்ததும் வருமென பார்த்திருந்தேன். சினிமா விவாதம் நிகழ்ச்சி ரெண்டரைக்கு வர வேண்டியது. மன்மதன் அம்பு சிறப்பு நிகழ்ச்சியால் நாலு மணிக்கு மேல் தான் வந்தது. அதிலும் சிக்கு புக்கு பற்றி பேசி இன்றைய கதையை முடித்து விட்டனர். ம்ம்ம் நண்பர்கள் நிகழ்ச்சி அடுத்த வாரம் தான் வரும் போலும்..என்னை போல பார்த்து ஏமாந்தவர்கள் எத்தனை பேரோ? 

ரசித்த SMS: 

No one knows what he is capable of until he tries. 

சம்பவம் 


சமீபத்தில் வீட்டுக்கு பக்கத்தில் வழக்கமாய் செல்லும் மளிகை/ காய்கறி கடைக்கு சென்றேன். அங்கேயே ஒரு சிறு PCO போன் உள்ளது. அதில் நெடு நேரமாக ஒரு சிறு பெண் ( 12 அல்லது 13 வயது தான் இருக்கும் ) பேசி கொண்டிருந்தாள். ரொம்ப நேரமாக பேசுவதால் சற்று நேரம் கழித்து கவனிக்க, சர்வ நிச்சயமாக தன் ஆண் நண்பனுடன் பேசுகிறாள் என்பது புரிந்தது. " வச்சிடுறேன்..வச்சிடுறேன்.." என பத்துக்கும் மேற்பட்ட தடவை சொல்லி அதன் பின்னும் ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்தாள். அவள் வீட்டில் நிச்சயம் போன் இல்லாமல் இருக்காது. வீட்டிற்கு தெரியாமல் பேசுவதால் தான் இப்படி! எனக்கு மிக மனதை தொந்தரவு செய்தது அவள் வயது தான். 12 அல்லது 13 என்பது நிச்சயம் காதலிக்கும் வயது இல்லை. அந்த பக்கம் பேசியவன் நல்லவன் போல் தெரிய வில்லை.  கடைக்காரரிடம் " இந்த கொடுமையெல்லாம் நீங்க பார்க்க வேண்டியிருக்கே" என கேட்க " ஆமாம்" என்றார் வருத்ததுடன்.  அந்த பெண் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வீடு வந்து சேர்ந்தேன்.

பார்த்த சினிமா : பொக்கிஷம் 


"பொக்கிஷம்" படம் இந்திய தொலை காட்சிகளில் முதல் முறையாக கலைஞர் டிவியில் பார்த்தேன். யப்பா சேரனுக்கு என்ன ஒரு தைரியம்!! என்ன தைரியத்தில் இப்படி ஒரு படம் எடுத்திருக்கார்!! இந்த காலத்தில் இப்படி ஒரு படமா? பார்க்காமல் காதல், கடித காதல், சுத்த தமிழ் என கொல்கிறார் நம்மை. தமிழ் நடிகர்களில் கறி சாப்பிடுவதில் ஸ்பெஷலிஸ்ட் ராஜ் கிரண் என்றால் அழுவதில் ஸ்பெஷலிஸ்ட் சேரன் தான். என்னமா அழுகிறார் தெரியுமா! தைரியம் இருந்தால் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சிவாஜி போல சில நேரம் முக பாவம் காட்டுகிறார். அசுந்துட்டேன் போங்க. இவரின் தவமாய் தவமிருந்து எனக்கு மிக பிடித்த படம். சுத்தமாய் பிடிக்காத பட்டியலில் பொக்கிஷம் சேரும். உருப்படியான ஒரே விஷயம் இந்த படத்தில் வரும் " நிலா நீ வானம் காற்று மழை" பாடல் தான். ஹோட்டலுக்கு சாப்பிட போன நாங்கள் இந்த படத்தை பார்க்க அவசரமாய் வீடு வந்தோம். படம் ஆரம்பித்து 45  நிமிஷம்  ஆகியிருந்தது. கடைசியில் அனைவரும் பேசி கொண்டது " நல்ல வேளை 45  நிமிஷம்  லேட்டா வந்தோம்"  

அய்யாசாமி தரும் எச்சரிக்கை : 

"ஓட்டலுக்கு போய் பார்சல் வாங்கினால் நீங்க ஆர்டர் செய்த எல்லாம் கவரில் போட்டுட்டாங்களா என சரியா செக் பண்ணி வாங்குங்க. அடையார் ஆனந்த பவன், ஹாட் சிப்ஸ் தொடங்கி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள துர்கா பவன் வரை பல தடவை எனக்கு சப்பாத்தி போல ஏதாவது ஒரு ஐட்டம் குறைவா வச்சிடுறாங்க. அதுக்குன்னு மறுபடி அவ்வளவு தூரமா போக முடியும்? இருக்கிறதை வச்சி வாங்கி கட்டிக்கிட்டு சாப்பிட வேண்டியது தான். இது தான்னு இல்லை.. துணி கடையில் கூட சில நேரம் ஒரு சில பொருளை கவரில் போடாம விட்டுடுறாங்க. டிபன் மாதிரி இதை விட்டுட முடியுமா? அது எந்த ஊரா இருந்தாலும் மறுபடி போய் வாங்கிட்டு வர வேண்டியது தான். இப்போல்லாம் எது வாங்கினாலும் ஒன்னுக்கு ரெண்டு முறையா செக் பண்ணிட்டு தான் வீட்டுக்கு வர்றது..சொல்றதை சொல்லிட்டேன். ஏதோ நீங்களாவது வீட்டம்மா கிட்ட பாட்டு வாங்காம தப்பிச்சிக்குங்க ! " 

இணையத்தில் ரசித்தது 

நரசிம் எழுதிய கல்லூரி காலம் பற்றிய பதிவு வரிக்கு வரி ரசிக்க வைத்தது. அநேகமாய் வாசித்திருப்பீர்கள்.  (நர்சிம்முக்கு நானா அறிமுகம் தரனும்?) இல்லையேல் ஒரு முறை வாசியுங்கள் . உங்கள் கல்லூரி காலம் நிச்சயம் நினைவில் வரும்.. 

ரசிக்கும் விஷயம் : கத்ரினா கைப்


அழகு = கத்ரினா கைப். (இப்போதைக்கு)

இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை

(சல்மான், ரன்பீர் கபூர் போன்ற வில்லன்களையோ, கத்ரினா பற்றிய தவறான வேறு சில விஷயங்களோ பின்னூட்டத்தில் பகிர்ந்து என்னிடம் சாபம் பெறாதீர்கள்..) :))

25 comments:

  1. அய்யா சாமி செய்த மிஸ்டேக் நானும் பலதடவை செய்த பின் இப்போது கவனமாய் இருக்கிறேன்:)!

    sms பகிர்வு நன்று. உண்மையும்.

    கல்லூரிக் காலம் வாசித்திருக்கிறேன். சுவாரஸ்யம்.

    விஜய் டிவியில் பதிவர் நிகழ்ச்சி இப்போதுதான் அறிகிறேன். அடுத்தவாரமா? சரி:)!

    ReplyDelete
  2. //அந்த பெண் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வீடு வந்து சேர்ந்தேன்//

    me too
    :(

    ReplyDelete
  3. Anonymous9:03:00 AM

    //அய்யாசாமி மேட்டர் //
    நானும் அனுபவப் பட்டிருக்கேன் ;)

    //சம்பவம் //

    :(

    //பொக்கிஷம் //
    அந்தப் படத்துல வேலை செஞ்ச கலை இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர் அண்ணா.

    ReplyDelete
  4. மன்மதன் அம்பு - ஜால்ரா சத்தம் காதை கிழித்தது. அதிலும் அந்த குட்டிப் பெண்கள் ஐட்டம் சாங்காய் பாட கடுப்பாகி டிவியை ஆஃபிட்டேன்.

    பொக்கிஷம் - சேரனோட மேக்கப். என்ன கொடுமை சார் இது?

    வானவில் பகிர்வு நன்று.

    ReplyDelete
  5. பார்சல் மட்டுமல்ல பாக்கி சில்லறை ( நோட்டு)வாங்கும்போதும் சரி பார்த்துக்கொள்வது நல்லது! :)

    ReplyDelete
  6. ஆமா இந்த பாலகுமாரன் பத்தி எழுதப்போறீங்களா? இல்லையா? :)

    ReplyDelete
  7. ..அந்த பெண் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வீடு வந்து சேர்ந்தேன்...

    நிறைய பேர் இப்படி இருக்காங்க.. என்ன செய்வது வயசுக்கோளாறு...

    ReplyDelete
  8. நல்ல வேளை 45 நிமிஷம் லேட்டா வந்தோம்" ///

    படம் முடிஞ்ச பிறகு வந்திருந்தா.

    ReplyDelete
  9. நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  10. அதுமட்டுமில்லை. தற்போது எல்லா இடங்களிலும் எலக்ட்ரானிக் ஸ்கேனிங் மூலம் விலை பட்டியலை ஸ்கேன் செய்வதால் சில சமயம் ஒரே பொருளை இரண்டு தடவை பில் செய்வதும், வாங்காத பொருளுக்கு பில் செய்வதும் வழக்கமாகிவிடுகிறது.

    நான் பல தடவை அது போல் பில்லை சரிபார்த்து கடையிலேயே தவறுகளை திருத்தி உள்ளேன்.

    ReplyDelete
  11. Nice one........

    ReplyDelete
  12. அந்தச் சிறுமி... பரிதாபமும், கோபமும் ஒருசேர வருகிறது!! நேற்று ஆசிரியர் மதுரை சரவணனும் இதையொட்டி ஒரு பதிவு எழுதியிருந்தார், பாருங்க:

    http://veeluthukal.blogspot.com/2010/12/blog-post_05.html

    பொருட்கள், பில்களைப் பரிசோதிக்காமல் கடையை விட்டுக் கிளம்புவதில்லை நாங்கள். அனுபவம்தான் ஆசான்!!

    ReplyDelete
  13. அப்ப பதிவர் நிகழ்ச்சி அடுத்த வாரம்தானா?

    ReplyDelete
  14. வானவில்லின் வண்ணங்கள் நன்று. தொலைபேசியில் பேசிய பெண் - வருத்தம் தான் மிஞ்சுகிறது. பகிர்வுக்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  16. நன்றி ராமலட்சுமி; ஆம் அடுத்த வாரம் வர கூடும். பாருங்கள்.
    **
    பெயர் சொல்ல : நன்றி
    **
    பாலாஜி: அப்படியா? செட்டிங் போல தெரியவே இல்லை. தகவலுக்கு நன்றி
    **
    வித்யா: " டிவியை ஆஃபிட்டேன்" இது என் அண்ணன் மகன் சிறு வயதில் உபயோகிக்கும் வார்த்தை (ஆஃபிட்டேன்). நன்றி
    **
    கேபிள்: நன்றி
    **
    ஷங்கர். பாலகுமாரன்?? எழுதுறேன் நண்பா (தொடர்ந்து படிக்கிறீங்கன்னு தெரியுது. அதுக்கு நன்றி )
    **
    நன்றி சங்கவி

    ReplyDelete
  17. தமிழ் உதயம்: ஹா ஹா நன்றி
    **
    நன்றி சித்ரா
    **
    ஆதி மனிதன்: இப்படி வேறு நடக்கிறதோ? தகவலுக்கு நன்றி; ஜாக்கிரதையா இருக்கணும்
    **
    நன்றி வழி போக்கன் யோகேஷ்
    **
    ஹுஸைனம்மா: வாசித்தேன் :((
    **
    வெங்கட் : நன்றி
    **
    கோவை டு தில்லி : மிக்க நன்றி

    ReplyDelete
  18. அந்த சிறுமி குறித்த சம்பவம் என்னை போலவே பலரையும் பாதித்ததை உணர்கிறேன். இது நடந்து சில வாரங்களாகியும் இன்னும் மனதை விட்டு போகாமல் இப்போது தான் எழுதினேன்; எழுதுவதில் தயக்கம் இருந்தது; நீ ஏன் ஒட்டு கேட்டாய் என நினைக்க கூடுமோ என. ஆனால் நான் எப்படி உணர்ந்தேனோ (12 வயது சிறுமி !!) அதே விதமாய் பலரும் உணர்ந்தது ஆச்சரியமாய் உணர்கிறேன்.

    ReplyDelete
  19. // சுத்த தமிழ் என கொள்கிறார் நம்மை //

    யூ மீன் கொல்கிறார்??

    ReplyDelete
  20. நன்றி அப்துல்லா மாற்றி விட்டேன்

    ReplyDelete
  21. மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
    http://ta.indli.com/user/vaduvursomu

    ReplyDelete
  22. என்னதான் பெத்தவங்க பாத்து பாத்து அக்கறையோட கண்டிப்பும் கலந்து வளர்த்தாலும், இந்தகாலத்து பசங்க/பொண்ணுங்க எல்லாம் பிஞ்சுலேயே பழுத்துடுறாங்க..
    கண்டிப்பா இவுங்கெல்லாம் பட்டுதான் திருந்துவாங்க..
    ஆனா இவுங்களால, இவுங்கள பெத்தவங்க அவமானப் படாம இருக்கணும்.. அதான் என்னோட கவலை..

    ReplyDelete
  23. இப்பொழுதுதான் பார்த்தேன். பகிர்விற்கு நன்றி தல

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...