Monday, January 3, 2011

வானவில் : கேபிள் சங்கர்- மன்மத அம்பு

பார்த்த படம் : மன்மதன் அம்பு 

இது காமெடி படமா சீரியஸ் படமா..  ஒன்னும் புரியலை. இதில் நடிக்க ரிகர்சல் எல்லாம் பாத்தாங்களே...எதுக்குன்னா?? படத்தில் ரசிக்க முடிந்த ரெண்டு விஷயங்கள்: நீல வானம் பாடல் concept- அருமை.  இந்த ஒரு விஷயத்துக்காகவே இந்த படம் நினைவு கூறப்படும். அடுத்து சில இடங்களில் வசனம் நன்றாயிருந்தது. மற்ற படி படம் முடியும் போது தலையை பிச்சிக்காத குறை தான். இதனை பிரிவியூ தியேட்டரில் ஓசியில் பார்த்தால் கூட "நிச்சயம் ஓடாது" என சொல்லலாம். எப்படி படத்தை வித்தாங்க.. எப்படி நம்பி தியேட்டர் காரங்க வாங்கினாங்க.. ம்ம் ..

வருஷ (ஆ)ரம்ப...  படம் இப்படியா என யாரும் என் மீது பரிதாப பட வேண்டாம். இது 2010 கடைசி நாள் பார்த்தது. இந்த வருட துவக்கத்தில் 2009-ல் வந்த ஒரு அற்புதமான படம் முதன் முறை பார்த்தேன். அது பற்றி அடுத்த வானவில்லில்...


ரசித்த கவிதை

சுதந்திரத்தை என்னால் 
உண்ண முடிய வில்லை 
சோறு கொடு ! - தமிழன்பன் 

சென்னை ஸ்பெஷல்: Hotel Rain Forest, Adyar

அடையாரில் உள்ள வெரி இன்டரஸ்டிங் சாப்பாட்டு கடை "Rain Forest ". உள்ளே காடு போல செட்டிங் செய்துள்ளனர். சின்ன சின்ன தொங்கு பாலங்கள் அதனடியில் ஓடும் ஓடை.. சில இடத்தில் மலையில் இருந்து கொட்டும் அருவி போலவும் செய்துள்ளனர்.  மரத்தாலே  ஆன தரைகள். அமரும் இருக்கைகள் கூட வித்தியாசமானவை தான். இப்போது இதே போன்ற Concept -ல் சில கடைகள் ஆங்காங்கே வந்தாலும் கூட இந்த கடை அளவுக்கு செட்டிங் அற்புதமாய் இல்லை. உணவு செம டேஸ்டியாக உள்ளது. 

ஒரே பிரச்சனை. கூட்டம்!! நாம் போனதும் நம் பெயர், நபர்கள், தொலை பேசி எண்ணை குறித்து கொள்வார்கள். இடம் காலியானதும் போன் செய்வார்கள். மாலை வேளையில் குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். போனில் முன்பே ரிசர்வ் செய்யும் வசதி உள்ளதாக அறிகிறேன். 

குழந்தைகள் நிச்சயம் செமையாய் என்ஜாய் செய்வார்கள். சென்று பாருங்கள் !


அய்யாசாமி தரும் ஹெல்த் டிப் :

பிதா மகன் படத்தில் மலச்சிக்கல் ஒரு மனச்சிக்கல் அப்படின்னு சூரியா பேசுவார். செம காமெடியான சீனுன்னாலும் இது நிஜம் தாங்க. உண்மையில் நிறைய பேருக்கு இந்த பிராப்ளம் இருக்கு. சிலர் இதுக்காக தினம் வாழை பழம் சாப்பிடுறாங்க. அதை விட நல்ல மருந்து ஒண்ணு இருக்கு. கொய்யா பழம்!! வாழை பழம் சாப்பிட்டு கூட பிரச்சனை சரியாகாதவங்களுக்கு  கொய்யா பழத்தில் நிச்சயம் வெற்றி கிடைச்சிடும். அட .. நமக்கு அப்படி தாங்க ஆச்சு.. 


கேபிள் சங்கர் புத்தக வெளியீட்டு விழா

பதிவர் நண்பர் கேபிள் சங்கர் நாளை மாலை (4/1/2011) தனது சிறுகதை தொகுப்பு வெளியீடு செய்கிறார். அவசியம் வாருங்கள். பதிவர் சந்திப்பாகவும் இது அமையும்....

விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுபவர்
பேராசிரியை : திருமதி. பர்வீன் சுல்தானா அவர்கள்
கலந்து கொண்டு சிறப்பிப்பவர்கள் :  இயக்குனர் திரு. சீனு ராமசாமி
ஒளிப்பதிவாளர்: திரு.செழியன்
நடிகர் : திரு. ஆர்.மோகன்பாலு


பதிவர்கள்
அப்துல்லா
லக்கிலுக் (யுவகிருஷ்ணா)
விதூஷ் வித்யா

ஆதிமூலகிருஷ்ணன்.
அகநாழிகை வாசுதேவன்


தேதி : 4/01/11
நேரம் : மாலை 6.00 மணி 
இடம் : டிஸ்கவரி புக் ஸ்டால்
                நெ.6. முனுசாமி சாலை
               கே.கே.நகர். சென்னை
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: 9840332666 கேபிள் சங்கர்/ 8098858248 கே.ஆர்.பி.செந்தில் “ழ” பதிப்பகம்.

வி(லை)ஷ  வாசி 

சென்ற வாரத்தில் காய்கறி சென்று வாங்கினேன். சரியே ரெண்டு நாளுக்கு ரூ. 140 ஆனது. வாங்கி விட்டு திரும்பும் போது அலுவலகத்தில் வேலை பார்க்கும் அட்டண்டர் போன்ற நபர்கள் தான் மனதில் நிழலாடினர். இவர்கள் எப்படி காலம் தள்ளுகிறார்கள் என. மறு நாள் கேண்டினில் உள்ள பையனிடம் கேட்டேன். "காய்கறி விலை எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கே; எப்படிவீட்டில சமாளிக்கிறீங்க!!" காண்டிராக்டில் வேலை செய்யும் இவனுக்கு மாத சம்பளம் மூன்று அல்லது நான்காயிரம் இருக்கலாம். அவன் சொன்ன பதில் மனதை அறுத்தது. "சார் காய்கறி எல்லாம் வாங்கியே ரொம்ப மாசம் ஆச்சு சார். ரெண்டு வேலையும் வெறும் சாதம் வச்சிட்டு கடையிலே தயிர் வாங்கி ஊத்தி சாப்பிடுறோம். அவ்ளோ தான்" .. 

எதனால் காய்கறிக்கு இந்த நிலை..புரியவே இல்லை.. எப்போது சரியாகும்? நிற்க...விரைவில் தேர்தல் வருகிறது!! 

22 comments:

  1. //சுதந்திரத்தை என்னால் உண்ண முடிய வில்லை சோறு கொடு ! //

    நல்லாயிருக்கு

    //வாழை பழம் சாப்பிட்டு கூட பிரச்சனை சரியாகாதவங்களுக்கு கொய்யா பழத்தில் நிச்சயம் வெற்றி கிடைச்சிடும்.//

    தலைவா.. அருமையா லேகியம் விக்கிறீங்க.. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..;-))

    ReplyDelete
  2. மலைக்க வைக்கும் காய்கறி விலை...

    ReplyDelete
  3. ..எதனால் காய்கறிக்கு இந்த நிலை..புரியவே இல்லை.. எப்போது சரியாகும்?..

    பண ஆசை குறையும் போது...

    ReplyDelete
  4. விலை காரணமா, அசைவம்தான் பல வீடுகளில் வாரம் ஒரு முறை இருக்கும். இப்ப சைவத்துக்கே அந்தக் கதியா? கேட்கவே கொடுமையா இருக்கு.

    ReplyDelete
  5. வானவில் வழக்கம்போலவே வண்ணக்கலவை.

    ரெயின் ஃபாரஸ்ட் - என் வேலைய நீங்க செய்றீங்களா. எரிச்சல் தரும் இரண்டு விஷயங்கள். ஒன்று ரொம்ப நேரம் காக்க வைத்தல். முன்னமே டேபிள் ரிசர்வ் செய்திருந்தாலும். இரண்டாவது ஹோட்டலினுள் அதிக சத்தம்.

    ReplyDelete
  6. நன்றி தலிவா.. மறக்காம வந்திருங்க..

    ReplyDelete
  7. // "சார் காய்கறி எல்லாம் வாங்கியே ரொம்ப மாசம் ஆச்சு சார். ரெண்டு வேலையும் வெறும் சாதம் வச்சிட்டு கடையிலே தயிர் வாங்கி ஊத்தி சாப்பிடுறோம். அவ்ளோ தான்" .. //

    வெங்காயம் உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது!

    ReplyDelete
  8. வானவில்லின் வண்ணங்கள் அருமை. விலைவாசி விஷவாசி ஆகிவிட்டது!
    கொய்யாப்பழம் மட்டுமல்ல, அதன் இலைகளுக்குக்கூட மருத்துவ குணங்கள் உண்டு. இலைகளை கொதிக்கும் தண்ணீர்ல் போட்டு வேதுபிடிக்க, ஜலதோஷம், தலைவலி அகலும்...

    ReplyDelete
  9. Anonymous12:17:00 PM

    //சங்கவி said...
    ..எதனால் காய்கறிக்கு இந்த நிலை..புரியவே இல்லை.. எப்போது சரியாகும்?..

    பண ஆசை குறையும் போது... //

    தேர்தல் தேதி அறிவிக்கும் போது :(

    ReplyDelete
  10. நல்ல தொகுப்பு, பல விவரங்களுடன்.

    ReplyDelete
  11. காய்கறி மேட்டரு கவலையாத்தான் இருக்கு..
    எல்லா பொருட்களுமே வேலை ஏறிடிச்சு....
    நாமலாம் பரவாயில்லை.. தேவையான அளவு சம்பாதிக்கறோம்..
    தினக் கூலித் தொழிலாளர்களோட நெலமைய நெனைச்சா..?

    ReplyDelete
  12. விலைவாசி பத்தி நினைச்சாலே கவலைதான் வருது.
    எனக்கு ஒரு டவுட்டு, காய்கறி ஏன் மலிவு விலைல ரேஷன் கடைல தரக் கூடாது? ஒரு வேளை, அதில கமிஷன் அடிக்க முடியாதோ?

    ReplyDelete
  13. நன்றி கார்த்திகை பாண்டியன். புத்தாண்டு வாழ்த்துகள்
    **
    ஆம் யோகேஷ்.நன்றி
    **
    சங்கவி: தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியா முழுதும் தற்போது காய்கறி விலை அதிகமாயுள்ளது.
    **
    ஹுசைனம்மா: ஆமாம். இப்போ காய்கறி வாரம் ஒரு நாள் சாப்பிடும் குடும்பங்கள் நிறைய உள்ளன.

    ReplyDelete
  14. நன்றி வித்யா. ரெயின் பாரஸ்டில் நாங்க பொதுவா பேர் குடுத்துட்டு ஒரு ரவுண்ட் சுத்திட்டு வருவோம். போன் செய்தவுடன் சாப்பிட வந்துடுவோம்
    **
    கேபிள்: ரைட்டு
    **
    ஜனா: சொன்னீங்க சார். நிஜம் தான்
    **
    வெங்கட்: கொய்யா பழத்தில் இவ்ளோ நல்லது இருக்கா? நன்றி
    **
    பாலாஜி: ஹா ஹா நன்றி

    ReplyDelete
  15. நன்றி ராமலட்சுமி
    **
    ஆம் மாதவன். சாதாரண மனிதர்களுக்கு தான் பெரிய கஷ்டம்.
    **
    பெயர் சொல்ல: செமையா யோசிக்கிறீங்க. :))

    ReplyDelete
  16. 'Rain Forest' concept அமெரிக்காவில் ஏற்கனவே பிரபலமான ஒன்றுதான். நீங்கள் கூறியது போலவே மிகவும் அற்புதமாக காடு மற்றும் வனவிலங்குகள் செட்டிங் அமைத்து இருப்பார்கள்.

    சென்னையிலும் வந்திருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் பர்ஸ் தாங்குமா?

    ReplyDelete
  17. தமிழ் மனத்தில் சரியாக நூறு! வாழ்த்துக்கள்.

    //சென்ற வாரத்தில் காய்கறி சென்று வாங்கினேன். சரியே ரெண்டு நாளுக்கு ரூ. 140 ஆனது. வாங்கி விட்டு திரும்பும் போது அலுவலகத்தில் வேலை பார்க்கும் அட்டண்டர் போன்ற நபர்கள் தான் மனதில் நிழலாடினர்.//

    பிறரைப் பற்றிய உங்களின் அக்கறையும், அன்பும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  18. @the ever rising vegetable price.....
    may be when we moderate our monetary and purchasing needs. a friend of mine does nt go to malls, restaurants, for branded products and places like them ., even to theaters which do not deserve the ticket rates.We are now trying to support and follow him though not successful completely.but , sure the answer is only when we moderate our needs. nobody is to blamed. i would blame myself in the first place. what abt you sir?

    ReplyDelete
  19. நன்றி ஆதி மனிதன். விலை சற்று கூட தான்
    **
    அன்பிற்கு நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  20. டாக்டர்: கருத்துக்கு நன்றி மேடம். நாங்கள் மால்கள் அதிகம் செல்வதில்லை. காய்கறி விஷயத்தில் சாதாரண மனிதர்கள் பாதிப்பது ரொம்ப பாவமாய் உள்ளது

    ReplyDelete
  21. நூறுக்கு வாழ்த்துக்கள்!

    அப்பாடா, இனிமேல் உங்கள் பதிவிலேயோ என் பதிவிலேயோ என்னை பிரபலம் எனக் குறிப்பிட மாட்டீர்கள்தானே:))! நானில்லை பிரபலம்:)!

    Jokes apart, நூறு எனும் எண் எப்போதும் கவனத்துக்கு உரியது. நீங்கள் நூறுக்குள் வந்திருந்தால் கூட இத்தனை கவனிக்கப் பட்டிருந்திருப்பீர்களா எனத் தெரியவில்லை.

    பலதரப் பட்ட விஷயங்களை அலசுவதை தொடருங்கள். வாங்க முன்னேறிப் பார்க்கலாம், வானவில் இரண்டும் பேசப்படுகிற தொகுப்புகளாய் இவ்வருடமும் அமையட்டும்.கடந்த வருடம் நடுவிலே ஓர் இடைவெளி விட்ட தவறை இவ்வருடம் செய்யாதிருக்க இந்த ‘நூறு’ அங்கீகாரம் உங்களுக்கு உதவட்டும்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மோகன் குமார்!

    ReplyDelete
  22. அதற்காக அடுத்தவருடமும் நூறிலே நிற்க வேண்டுமென சொல்லவில்லை:))!

    பத்துக்குள் வர வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...