Tuesday, March 15, 2011

கிரிக்கெட் : ரயில்வே காலனி மேட்ச்

ஞாயிற்று கிழமையும் அதுவுமாய் "அதிகாலை எட்டு மணிக்கு" நண்பன் நந்து என்னை எழுப்பினான். " எழுந்திரு. ரயில்வே காலனி பசங்க மேட்சுக்கு கூப்பிட்டுருக்காங்க"

இதை கேட்டதும் உறக்கம் போய் சுறுசுறுப்பு வந்துவிட்டது. எங்கள் ஊரில் ரெண்டு டீம்கள் கிரிக்கெட் ஆடி வந்தன.நாங்கள் ஆடிய டீம் தவிர ரயில்வே காலனியில் ஒரு டீம் உண்டு. இவர்கள் எங்களிடம் பல முறை விளையாடி அத்தனை தடவையும் தோற்றுள்ளனர். அந்த நேரத்தில் வெளியூர் மேட்ச் சென்றால் சர்வ நிச்சயமாய் நாங்கள் தோற்று வந்தோம். எனவே ரயில்வே காலனி டீம் தான் எங்களுக்கு ஒரே ஆறுதல்.

"சீக்கிரமா குளிச்சிட்டு வா. பதினோரு பேரே தேற மாட்டாங்க போலருக்கு".

"ஏன் ராஜுவுக்கு என்ன ஆச்சு?"

ராஜு மட்டுமல்ல, ரவி, பாபு, மோகன் என நன்கு விளையாடும் பலரும் அன்று ஊரில் இல்லை. இது தெரிந்து தான் அன்று மேட்சுக்கு கூப்பிட்டார்களா என்ற சந்தேகம் கொஞ்சம் கூட இல்லாமல் ரயில்வே காலனியுடன் மேட்ச் என்ற மகிழ்ச்சி தான் மனம் முழுதும் நிறைந்திருந்தது.

ஒரு வழியா பதினோரு பேரை தேற்றி விளையாட ஆரம்பித்தோம். அவர்கள் அணிக்கு செந்தில் கேப்டன். எங்கள் அணியில் முக்கிய புள்ளிகள் இல்லாததால் என்னை கேப்டன் ஆக்கினார்கள். டாசில் ஜெயித்து பேட் செய்தோம். நந்து ஒரு பக்கம் விளையாடி கொண்டிருக்க மறுபுறம் விக்கட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. நான் விளையாட இறங்கினேன். நந்துவுக்கும் எனக்கும் பேட்டிங்கில் செம அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. நான் சுமாரான பாட்ஸ்மேன் தான். ஆனால் நந்துவுடன் ஆடும் போது என்னை அவுட் ஆக்குவது ஏனோ சிரமம் ! நான் சிங்கிள் எடுத்து தந்தால், அவன் மறு முனையில் வெளுப்பான். அன்றைக்கு அதுவும் நடக்கலை. நான் சீக்கிரமே ரன் அவுட் ஆகிட்டேன். எங்கள் டீம் 28 ரன்னுக்கு ஆல் அவுட்.

ரயில்வே காலனி நண்பர்கள் முகத்தில் செம மகிழ்ச்சி. முதல் முறையாய் எங்களை வீழ்த்த போகும் பரவசம் அவர்களிடம் !

அன்றைக்கு எங்களிடம் கஸ்தூரி, நந்து என இரண்டே நல்ல பவுலர்கள் தான் இருந்தனர். 20 ஓவர் மேட்சில் அவர்கள் இருவரும் ஆளுக்கு நான்கு ஓவர் போட்டு விட்டால் மற்ற ஓவருக்கு என்ன செய்வது என நான் குழம்பிய படி இருக்க, கஸ்தூரியும் நந்துவும் அதற்கு அவசியமே இல்லை என்கிற மாதிரி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தள்ளினர். ஆறு ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகள் விழுந்து விட்டது. இருவருக்கும் இன்னும் ஒரு ஓவரே பாக்கி. கஸ்தூரியும் நந்துவும் " நாங்க முடிச்சிடறோம்" என அந்த ஒரு ஓவரையும் வீசி விட்டனர். அப்போது ஆடிய செந்தில் புத்திசாலித்தனமாக அந்த ரெண்டு ஓவரில் விக்கெட் விடாமல் நின்று விட்டான்.

அவர்கள் ஜெயிக்க இன்னும் எட்டு ரன் தேவை. எங்களுக்கு ரெண்டு விக்கெட்!

மதன் என ஒரு சின்ன பையன் வேகமாய் ஓடி வந்து, மெதுவாய் பந்து வீசுவான். அவனும் நானும் தான் பந்து வீசியாகனும் . மதன் போட்ட ஓவரில் ரெண்டு ரன் எடுத்தனர். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒருவன் பவுல்ட்; ஸ்டம்ப் கீழே விழாமல் பந்து ஸ்டம்ப்புகளுக்கு இடையில் புகுந்து சென்று விட்டது. பந்து போன இடத்தை காட்டி அவுட் தான் என சண்டை போட்டு அந்த நபரை அனுப்பினோம்.

எனது அடுத்த ஓவரில் மூன்று ரன் எடுத்தனர். அவர்கள் ஜெயிக்க மூன்று ரன் தேவை. எங்களுக்கு ஒரு விக்கட்!

மதன் மறுபடி பந்து வீசினான். செந்தில் அடித்த சரியான ஷாட் கவர்சில் இருந்த பீல்டர் கையில் நேரே சென்று அமர்ந்தது ! சற்று நேரம் ஆனது நிலைமை முழுதும் புரிய !! ஆம் .. இரண்டு ரன் வித்தியாசத்தில் நாங்கள் வென்று விட்டோம்! மகிழ்ச்சியில் நாங்கள் செமையாக குதிக்க, செந்தில் சோகமாக கிரவுண்டில் உட்கார்ந்து விட்டான். ரயில்வே காலனியால் கடைசி வரை எங்கள் அணியை ஜெயிக்கவே முடிய வில்லை!

மேட்ச் நடந்ததென்னவோ ரெண்டரை மணி நேரம். ஆனால் நாங்கள் அந்த மேட்ச் பற்றி மதியம் முதல் இரவு வரை, கட்டை சுவரிலும் எங்கள் கடையிலும் அமர்ந்து பேசி பேசி தீர்த்தோம்.. ம்ம்ம் அது ஒரு காலம் !!

21 comments:

 1. You are a great captain then :)

  ReplyDelete
 2. ராமசாமி.. பதிவை வெளியிட்டு விட்டு தமிழ் மணம் & இன்ட்லியில் இணைப்பதற்குள் கமெண்டா ? அசத்துறீங்க பாஸ்.

  நிஜத்தில் நான் ஒன்னும் பெரிய கேப்டன் இல்லை. அன்று ஜெயித்தது எங்களின் ரெண்டு பவுலர்களால்; மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டத்தால்

  ReplyDelete
 3. நல்ல விறுவிறுப்பான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அதென்னவோ தெரியலை.. யாருமே தோத்த மேட்சைப் பத்தி எழுறதே இல்லை..
  நா எழுதலாம்னு பாத்தா. நாங்க தோத்ததே இல்லையே ?
  எத்தனை மேச்சு வெளையாடி தோக்காமா சாதனை பண்ணோம் தெரியுமா ?
  எப்படியா ...?
  கண்டுபிடுங்க பாக்கலாம் ?

  ReplyDelete
 5. 'சென்னை-28’ படம் பாத்தியளோ :-)

  ReplyDelete
 6. நன்றி ரத்னவேல்
  **
  மாதவா: சோகத்தை பதிவு வேறு செய்து மேலும் வயலின் வாசிக்கணுமா என்ற எண்ணத்தால் தோல்வியை பகிராமல் உள்ளார்களா? ஆனால் க்ளோசா தோற்ற மேட்சுகள் மறக்கவே மறக்காது

  நீங்க தோற்காததன் ரகசியம்.. தோற்கிற மாதிரி இருந்தா சண்டை போட்டு ஜகா வாங்கிடுவீன்களோ? அல்லது அம்பயர் உங்க ஆள் என்பதால் தோற்கவே மாட்டீர்களோ?
  **
  மரா: வாங்க சார். நைட் பதிவு போட்டா தான் இந்த பக்கம் வருவீங்க போல இருக்கு.

  மரா !! நாங்க ஜெயிக்க கூடாதா? :))தஞ்சாவூர் காரரா இருந்துட்டு நம்மளை சந்தேக படுறீங்களே? உங்க தஞ்சாவூரோட நாங்க ஆடிய மேட்ச் பத்தியும் இந்த சீரிஸில் எழுத போறேன்

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. இனிய நினைவுகள்தான்.

  ReplyDelete
 9. பதிவு அருமை!

  ReplyDelete
 10. மலரும் நினைவுகள் ஒன் டே மாட்ச் போல விறுவிறுப்பு.

  ReplyDelete
 11. ஹாஹாஹா.. பழைய அனுபவங்களை அதுவும் க்ரிக்கெட் விளையாடின அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் சுகமே அலாதி.

  ReplyDelete
 12. Anonymous7:30:00 PM

  //மேட்ச் நடந்ததென்னவோ ரெண்டரை மணி நேரம்.//
  ஆனாலும் எத்தனை வருடம் தாண்டியும் நினைவுகள் இருக்குமே! :)

  ReplyDelete
 13. அண்ணே , கொசுவர்திகளை சுத்த வைக்கரீன்களே

  ReplyDelete
 14. மேட்ச் அனுபவம் ஆடினதை விட அதைப் பற்றிய விமர்சனங்களால் ஜீவிக்கிறது அழகாய்.

  ReplyDelete
 15. //மேட்ச் நடந்ததென்னவோ ரெண்டரை மணி நேரம். ஆனால் நாங்கள் அந்த மேட்ச் பற்றி மதியம் முதல் இரவு வரை, கட்டை சுவரிலும் எங்கள் கடையிலும் அமர்ந்து பேசி பேசி தீர்த்தோம்.. ம்ம்ம் அது ஒரு காலம் !!//

  இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்ததை, இன்றும் பசுமையான நினைவுகளோடு எழுதுகிறீர்கள். அதானால், அன்றைய தினத்தில் உங்களின் மகிழ்ச்சி எப்படி இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது . நல்ல பகிர்வு .

  ReplyDelete
 16. வக்கீலய்யா: தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வாருங்கள் கருத்தினையும் பகிருங்கள்..
  http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html

  எனக்கு கிரிக்கெட்பத்தி ஒன்னுமே தெரியாது அப்படின்னு சொல்லிட்டுதான் கருதிடலை. ஆனாலும் விறுவிறுப்பாக கொண்டுசென்ற பதிவுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. நல்ல பிளாஷ் பேக்!

  ReplyDelete
 18. நன்றி ஸ்ரீராம்
  **
  நடராஜ் : நன்றி
  **
  பிரணவம் ரவி குமார்: நன்றி
  **
  நன்றி ராம லட்சுமி
  **
  விக்னேஸ்வரி: நன்றி
  **
  நன்றி பாலாஜி சரவணா

  ReplyDelete
 19. எல் கே: நன்றி
  **
  நன்றி ரிஷபன் சார்
  **
  அமைதி அப்பா: நன்றி
  **
  நன்றி மலிக்கா
  **
  பெயர் சொல்ல: வாங்க சார் நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...