Monday, March 28, 2011

அம்மாபேட்டை கிரிக்கெட் டோர்னமெண்ட்

தஞ்சாவூருக்கருகே உள்ளது அம்மா பேட்டை. இதன் அருகில் உள்ள உக்கடை என்ற ஊரின் கிரிக்கெட் டீம் தொடர்ந்து அம்மா பேட்டையில் கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தி வந்தனர். அப்படி ஒரு டோர்னமென்ட் பற்றி தான் இந்த பதிவு. 

எங்கள் சீனியர் டீமில் உள்ள எல்லோரும் வேலை கிடைத்து வெவ்வேறு ஊருக்கு சென்று விட, என் வயதை ஒத்தவர்கள் தான் டீமில் இருந்தனர். எங்கள் டீமில் சிலரை அறிமுக படுத்துகிறேன்:

ரவி: ரவி தான் ஓபனிங் பேட்ஸ்மன். தன்னை "கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்" என சொல்லி கொள்வான். பாஸ்ட் பவுலிங்கை உரித்து எடுப்பான். ஆப் சைடில் ரொம்ப அருமையாக ஆடுவான். இந்த இரண்டு ப்ளஸ்களால் எல்லா அணியும் ரவியை மிகவும் மதிப்பார்கள். ஆனால் ரவிக்கு உள்ள வீக்னெஸ் எங்களுக்கு தான் தெரியும். எப்படி ஆப் சைடில் ஸ்டிராங்கோ அதற்கு நேர் எதிராய் லெக் சைடில் செம வீக். இதை கூட போக போக கொஞ்சம் சரி செய்து கொண்டு, லெக்சைடில் பந்து வந்தால் சிங்கிள் எடுக்க கற்று கொண்டான். அடுத்த வீக்னெஸ் மெதுவாக பந்து வீசினால் உடனடியாக அவுட் ஆகி விடுவான். அவன் கூட பிறந்த ட்வின் சகோதரனான ராமு மிக சாதாரண பவுலர். ஆனால் ராமு பந்து போட்டால் ரவி " போங்கடா.. இவன் எல்லாம் பந்து போட்டா ஆட மாட்டேன்" என்று கத்துவான். காரணம் ராமு நின்று நிதாரணமாய் ஸ்டம்ப் நோக்கி போட்டால் உடனடியாக ரவி பவுல்ட் ஆகி விடுவான். ஆனால் ரவி ஓபனிங் என்பதால் வேக பந்து வீச்சை மட்டுமே சந்தித்து வெளுத்து கட்டினான். இந்த டோர்னமெண்டில் எங்கள் அணியில் மட்டுமல்ல அனைத்து டீம்களிலும் அதிக ரன் எடுத்தது ரவி தான் !

பாபு: ரவியுடன் சேர்ந்து ஆடும் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மன். பொறுமையாய் ஆடி ரவிக்கு நிறைய ஸ்டிரைக் தந்து விடுவான். மேலும் இந்த டோர்னமெண்ட்டில் பாபு ஓபனிங் பவுலிங்கும் போட்டான் !! அவன் வேக பந்து வீச்சாளனும் கிடையாது, ஸ்பின்னும் இல்லை. எதோ ஒரு சென்டிமெண்டில் அவனை தொடர்ந்து ஓபனிங் பவுலிங் போட வைத்தனர்.

பிரபா: இவன் தான் டீம் கேப்டன். உள்ளூரில் எங்களுக்குள் டீம் பிரித்து ஆடும் போது கூட கேப்டன் ஆக இல்லாத பிரபா எப்படி டோர்னமென்ட் ஆடும்போது கேப்டன் ஆனான் என்பது ஒரு புதிரே. பிரபா ஒரு பவுலர். ஆப் கட்டர் பந்து வீசுவான். இந்த டோர்னமெண்டில் எங்கள் அணிக்காக அதிக விக்கட்டுகள் எடுத்தது இவன் தான். ஒரு மேட்சுக்கும் அடுத்த மேட்சுக்கும் இடையில் உள்ளூரில் ஆடும் போது பொடியன்கள் கூட இவன் பவுலிங்கை அடித்து நாசம் செய்வார்கள். ஆனால் வெளியூரில் இவன் ஆப் கட்டர்கள் புரியாமல் அவுட் ஆகி கொண்டே இருந்தனர்.

சரி டோர்ணமண்டிற்கு வருவோம். லீக் ஆட்டத்தில் எங்கள் அணி தொடர்ந்து நன்கு ஆடி அசத்தியது. மற்ற அணிகள் டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுப்பார்கள். நாங்களோ பவுலிங் எடுப்போம். எதிர் அணியை குறைந்த ரன்களுக்கு அவுட் ஆக்கி விட்டு. அந்த ரன்களை எளிதில் அடித்து ஜெயிப்பதே எங்கள் வழக்கமாய் இருந்தது. பெரும்பாலும் விக்கெட் இழப்பின்றியோ, ஓரிரு விக்கெட் மட்டுமே இழந்தோ வென்று வந்தோம். எங்களுக்கே இது ஆச்சரியமாய் தான் இருந்தது.

செமி பைனல் வரை தோற்காமலே வந்து விட்டோம். செமி பைனல், டோர்னமென்ட் நடத்தி வந்த உக்கடை அணியுடன் நடந்தது. அந்த  அணி முதலில் பேட் செய்தது. உக்கடை அணியின் கேப்டன் விளையாடும் போது, நான் மிட் விக்கெட்டில் நின்று கொண்டிருந்தேன். எனது பீல்டிங் பற்றி சொல்ல வேண்டுமெனில், சென்னை -28 படத்தில் பிரேம்ஜி எப்படி "நல்ல பீல்டரோ" அதே போல் தான் நான். அந்த படத்தில் அவர் சொல்லும் " டேய் நான் எப்பவாவது கேட்ச் பிடிச்சு பார்த்திருக்கியா?" தான் நமக்கும் ஒத்து வரும். உக்கடை அணியின் கேப்டன் அடித்த ஒரு ஷாட் என் தலைக்கு மிக மேல், நன்கு தள்ளி சென்று கொண்டிருந்தது. எதற்கும் இருக்கட்டுமே என நான் கையை நீட்ட, பந்து அதிர்ஷ்ட வசமாய் என் கையில் ஒட்டி கொண்டது. பேட்ஸ்மன் விக்கித்து நின்று விட்டார். நல்ல பீல்டருக்கே அது செம கேட்ச் தான். எங்க டீம் ஆட்கள் சிரி சிரியென சிரித்து தீர்த்தனர்.

எங்கள் அணி மறுபடி விக்கெட் இழப்பின்றி அந்த ஸ்கோரை அடித்து ஜெயித்தது. இப்போது எல்லா அணிக்கும் நீடாமங்கலம் அணி என்றால் ஒரு கிலி வந்து விட்டது.

இறுதி போட்டி தஞ்சை அணியுடன். நாங்கள் மிக நம்பிக்கையுடன்  இருந்தோம். தஞ்சை அணியில் முந்தய ஆட்டங்களில் ஆடாத புது வீரர்களை களம் இறக்கி விட்டனர். இவர்களில் சிலர் டிஸ்ட்ரிக்ட் மட்டும் லீக் போட்டிகள் ஆடுபவர்கள். முதலில் ஆடிய தஞ்சை அணி மற்ற அணிகளை போல் இன்றி எங்கள் பவுலிங்கை துவைத்து எடுத்து விட்டனர். 140 ரன் போல அவர்கள் எடுக்க, அதனை எடுக்க முடியாமல் எங்கள் அணி ஆல் அவுட் ஆகியது. பெரிய டோர்னமென்ட் வெல்லும் ஆசை இப்படியாக முடிந்தது

இருந்தாலும் "அம்மாபேட்டை டோர்னமெண்டில் ரன்னர்ஸ் தெரியுமா? " என ரொம்ப நாள் சொல்லி கொண்டு தான் இருந்தோம் !

11 comments:

 1. இருந்தாலும் "உக்கடை டோர்னமெண்டில் ரன்னர்ஸ் தெரியுமா? " என ரொம்ப நாள் சொல்லி கொண்டு தான் இருந்தோம் !


  ....original "Chennai 600008"
  :-)))

  ReplyDelete
 2. அந்த டோர்ணமேன்டினால் உங்களுக்கு கிடைத்த மற்றுமொரு பயன் என்ன தெரியுமா ?

  ReplyDelete
 3. Anonymous11:29:00 AM

  //பந்து அதிர்ஷ்ட வசமாய் என் கையில் ஒட்டி கொண்டது //
  நல்லவேளை அம்பயர் "நோ பால்"னு சொல்லல.. ஹி ஹி.. ;)

  ReplyDelete
 4. பள்ளிப் பருவத்தின் பெரும் பகுதியையை கிரிகெட்டோடு கழித்திருப்பீர்கள் போல் தோன்றுகிறதே, உண்மையா?
  நீங்கள் எழுதும் விதம் படிக்க நன்றாக உள்ளது.
  நன்றி.

  ReplyDelete
 5. சீஸனுக்கு ஏற்ற தொடர்:)!

  ReplyDelete
 6. முதன்முதலில் தோற்ற கதை :)

  ReplyDelete
 7. //முதலில் ஆடிய தஞ்சை அணி மற்ற அணிகளை போல் இன்றி எங்கள் பவுலிங்கை துவைத்து எடுத்து விட்டனர்//

  தஞ்சாவூர்னா சும்மாவா?

  ReplyDelete
 8. மோகன் : கேபில்/கே.ஆர்.பி/உலகநாதன் புத்தக வெளியீட்டு விழாவில் தங்களை பார்த்தேன். அடுத்தமுறை சந்திக்கும் போது இன்னும்...

  ReplyDelete
 9. நன்றி சித்ரா.
  **
  இன்னொரு நன்மை இந்த பதிவு தானே மாதவா? ரைட்டு நன்றி
  **
  பாலாஜி சரவணா: ஹிஹி நன்றி
  **
  நன்றி அமைதி அப்பா சார்
  **
  ராமலட்சுமி நன்றி

  ReplyDelete
 10. ராமசாமி: ஆம் நன்றி
  **
  ஆதி மனிதன்: ஹும் ரைட்டு
  **
  யோகேஷ்: அப்படியா? சரி.. அடுத்த முறை பேசுவோம்.

  ReplyDelete
 11. //நன்றி அமைதி அப்பா சார் //

  சார் எதற்கு? 'அமைதி அப்பா' போதுமே!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...