Monday, September 19, 2011

வானவில்: மங்காத்தா: வடகரை வேலன்:பதிவர் இதழ்

பார்த்த படம்: மங்காத்தா

நிறைய எதிர்பார்ப்போடு பார்த்தேன் மங்காத்தா. ஒரு வேளை அது தான் தவறோ என்னவோ? படம் என்னை மட்டுமல்ல, என் கூட பார்த்த யாருக்குமே அதிகம் பிடிக்க வில்லை. ஹீரோ வழக்கமான நல்லவனாய் இல்லாமல் முழுக்க முழுக்க கெட்டவனாய் இருப்பது வித்யாசம் தான். அஜித் நடிப்பு, சிரிப்பு மற்றும் டான்ஸ் ரசிக்க முடிகிறது. ஆனால் கதை தலை சுற்ற வைக்கிறது. பல விஷயங்கள் புரிய வில்லை. படம் முடியும் போது தான் அவை ஓரளவு புரிகிறது. அதற்குள் தலை வலி வந்து விடுகிறது. இடைவேளைக்கு பின் அஜீத் பேசும் வசங்களில் பாதிக்கு மேல் சென்சார் கட் செய்திருப்பதிலேயே பட குழுவினரின் சமூக அக்கறை தெரிகிறது. படம் நிச்சயம் ஹிட் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ரிலீஸ் செய்ய தேர்ந்தெடுத்த நேரம் ! ஐந்து நாள் விடுமுறையில் ரிலீஸ் செய்து நல்ல அறுவடை செய்து விட்டார்கள். மேலும் படம் சற்று வித்யாசமாக இருக்கவும் ஹிட் ஆகி விட்டது. விஜய்யின் குருவி, அஜீத்தின் ஆஞ்சேநேயா போன்ற படங்கள் அளவு அறுவை இல்லா விடினும், முழுக்க என்ஜாய் செய்து பார்க்க முடிய வில்லை.

வாசித்த விஷயம் : நண்பர் வடகரை வேலன் பஸ்ஸில் பகிர்ந்தது :

//நேற்றிரவு 10.30 அளவில் அம்மா பாத்ரூமில் தவறி விழுந்து மேல் நெற்றியில் நல்ல அடி. 4 அங்குலநீளத்தில் அரை அங்குலம் ஆழமான காயம். ரத்தம் கொட கொடவென கொட்டியது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ரத்தம் கசிவதைப் பார்த்தவர்கள் “இங்கே ட்ரீட் பண்ண முடியாது ” என்றார்கள்.

மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிட்சை செதோம். தையல் போட்டு விட்டு டாக்டர் சொன்னது , “பெரிய அள்வில் பாதிப்பில்லை, இரண்டு நாட்கள் பார்க்கலாம் வீக்கம் ஏதுமில்லை என்றால் ஒண்ணும் பிரச்சினை இருக்காது” ஸ்கேன் செய்து பார்த்ததில் பெரிதாக ஏதும் இல்லை.

நல்லவேளையாக பாத்ரூம் கதவு திறந்திருந்ததால் சரியான நேரத்திற்கு சிகிட்சை அளிக்க முடிந்தது. பூட்டி இருந்திருந்தால் ? நினைக்கவே பயமாக இருக்கு.

முடிந்த வரை பெரியவர்களுக்குத் தனி பாத்ரூம் வசதி செய்து கொடுத்து உள்பக்கம் தாளிட வேண்டாம் எனச் சொல்வது நல்லது. அல்லது பாத்ரூம் கதவு பிவிசியில் போடலாம் எளிதில் உடைத்து உதவ முடியும்.//

கடைசி இரு வரிகள் அனைவரும் அவசியம் அறிய வேண்டியது. இங்கு பகிர காரணமும் அதுவே.

சென்னை ஸ்பெஷல் : அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயில் 

அசோக் பில்லரில் இருந்து ஐந்து நிமிட நடையில் அடைய முடியும் இந்த கோயிலை. பெரிய உயரத்துக்கு நிறைந்து இருப்பார் ஆஞ்சநேயர். பாச்சிலர் ஆக அசோக் நகரில் இருந்த போது அடிக்கடி செல்வது வழக்கம்.

நல்ல பிரசாதம் இலவசமாய் கிடைக்கும் !! வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி வாய்ந்த அனுமார் என்று கேள்விபட்டுள்ளேன். நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள் !!

ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்

ஆனந்த் என்று ஒரு நண்பர். என்னோடு பத்து வருடங்களுக்கு முன் பணி புரிந்தவர். இப்போது எனக்கு எக்ஸ்- கொலிக் ஆன போதும், பல ஆண்டுகளாக தினம் காலை ஒரு நல்ல எஸ். எம். எஸ் அனுப்புவார். நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கும் இந்த எஸ்.எம்.எஸ்ஸில் பலவற்றை டெலிட் செய்ய முடியாமல் மொபைலில் வைத்திருக்கிறேன். சிலவற்றை இங்கு பகிர்கிறேன். ஆனந்த் நிச்சயம் இவற்றை தானாக எழுதுவதில்லை. அவருக்கு இதே போன்ற எஸ். எம். எஸ் அனுப்பும் நண்பர்கள் உள்ளனர். ஆனந்த் என்கிற நல்ல மனிதருக்காக இந்த பகுதிக்கு ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர் என்றே பெயரிட்டுள்ளேன்

We came to earth with no friends and enemies. Situation only makes people good or bad. Forgive people who hurt you. Nothing is much greater than that in life.

பதிவர் நடத்தும் மாத இதழ் : தென்றல்

பதிவர் குடந்தைமணி தென்றல் என்கிற மாத இதழ் ஒன்றை துவங்கியுள்ளார். இதில் பல்வேறு பதிவர்களின் படைப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் பல அவர்கள் ப்ளாகுகளில் வந்தவை. சம்பந்தப்பட்ட பதிவரிடம் அனுமதி பெற்று வெளியிட்டுள்ளார் குடந்தைமணி. வீடு திரும்பலில் அவ்வப்போது பகிர்ந்த "சட்ட சொல்" பல இந்த ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்துள்ளது. ஆனால் கடைசி பக்கத்தில் நமது ப்ளாக் முகவரி தரும் போது சிறு குழப்பம் நிகழ்ந்து விட்டது. நண்பரிடம் போனில் சொன்னதும், அடுத்த முறை சரி செய்து விடுவதாய் சொன்னார். பதிவர் ஒருவர் இத்தனை முயற்சி எடுத்து புத்தகம் கொண்டு வருவது மகிழ்ச்சி தரும் விஷயம். வாழ்த்துக்கள் அன்புமணி. தொடருங்கள் !!

ரசித்த பாடல் :"மாசமா " (எங்கேயும் எப்போதும்) 

"இவ்வளவு சுவாரஸ்யமான காட்சிப்படுத்தல், சமீபத்தில் தமிழில் வேறு பாடலில் பார்க்கவில்லை" என சென்ற பதிவில் தான் "கோவிந்தா" பாடல் குறித்து சொல்லியிருந்தேன். எழுதி அடுத்த சில நாட்களிலேயே அந்த பாட்டை விட, அல்லது அதற்கு சமமான ரசனையுள்ள இன்னொரு பாடலையும் பார்க்க முடிந்தது. மாசமா என்கிற இந்த பாட்டும் கூட எங்கேயும் எப்போதும் படத்தில் இடம் பெற்ற பாடல் தான். படம் வெளியாகும் முன்னே பார்த்த இந்த இரு பாடல்கள் வைத்தே இயக்குனர் மீது மிகுந்த அபிமானம் வந்து விட்டது.
வெறும் தலையாட்டலை வைத்தே ஒரு பாடல் முழுதும் ரசிக்க வைக்க முடியுமா? முடியும் !! அது தான் இந்த பாடலில் நடந்துள்ளது. பாடல் பிடிக்க இன்னொரு காரணம்: பாடல் ஐந்தாண்டுகள் நான் கல்லூரியில் படித்த, சுற்றி திரிந்த திருச்சியில் எடுக்க பட்டது. திருச்சி சாலைகளை, ஆர்ச்களை, மலைக்கோட்டைக்கு அருகில் படிக்கட்டுகளுடன் கூடிய சாலைகளை பாடலில் பார்க்க செமையாக உள்ளது !எனக்கு வந்த கனவு

எங்கள் வீட்டில் எனக்கு பெண் பார்க்கிறார்கள். (கனவில் எனக்கு கல்யாணம் ஆகலீங்கோ!!) முதல் முறை பெண்ணை தூரத்திலிருந்து பார்த்து "ஓகே" சொல்லி விடுகிறேன். அடுத்த முறை அதே பெண் என்னை பார்க்க அலுவலகம் வருகிறது. (இத பாருடா!) நான் அப்போது டைடல் பார்க்கில் உள்ள ஒரு அலுலகத்தில் வேலை பார்க்கிறேன். (க்கும்!!) என்னை பார்க்க வந்த பெண்ணை ரிசப்ஷனில் அமர்ந்திருக்கும் போது பார்த்து விட்டு அதிர்ந்து போகிறேன். பெண் செம குண்டாக, கிராமத்து பெண்ணாய் இருக்கார். "தூரத்திலிருந்து பார்த்து சரி என சொன்னது தப்பா போச்சே; கிட்ட இருந்து பார்த்திருக்கணும்" என எண்ணிக் கொண்டு, அந்த பெண்ணை பார்க்காமல் நைசாக நழுவுகிறேன்.

எனது அண்ணன்- அண்ணியை பார்த்து "பெண்ணை எனக்கு பிடிக்கலை" என்கிறேன் "என்ன இப்படி சொல்றே; புடவை எல்லாம் எடுத்தாச்சு" என அண்ணி பட்டு புடவையை காட்டுகிறார். புடவை என்னவோ நல்லா தான் இருக்கு! அப்போது பெண்ணின் அப்பாவும் இருக்கிறார் . அவர் கிராமத்தில் பெரிய ஆள் ! அவரிடம் "கல்யாண வேலைகளை கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு நினைக்கிறேன்" என சொல்ல, அவர் என்ன சொன்னார் என கேட்பதற்குள் முழிப்பு வந்துடுச்சு !! கொஞ்ச நேரம் பயமாகிடுச்சு ! "டேய் உனக்கு கல்யாணம் முடிஞ்சு 13 வருஷம் ஆச்சு. பேசாம தூங்கு" என தனக்கு தானே சொல்லிட்டு மறுபடி "கொர்..கொர்.."

இந்த கனவை காலை எழுந்து, சமைத்தவாறே, ஹவுஸ் பாஸிடம் சொல்ல அவர் சொன்ன கமன்ட்: "பேசாம அந்த பெண்ணையே நீங்க கல்யாணம் பண்ணிருக்கலாம். செம மேட்சா இருந்திருக்கும் " :((

18 comments:

 1. Anonymous9:57:00 AM

  //நிறைய எதிர்பார்ப்போடு பார்த்தேன் மங்காத்தா. ஒரு வேளை அது தான் தவறோ என்னவோ? ///

  கல்யாண வீடு... ஒரே பிரியாணி... பலருக்கு பலவிதமாய் ருசி தெரிகிறது... ஒரு டைரக்டரால் எல்லாரரயும் திருப்திபடுத்த முடியாது.. அவர் மெஜாரிட்டி ஆடியன்ஸை திருப்திபடுத்தியிருக்கார்...


  ///வாசித்த விஷயம் : நண்பர் வடகரை வேலன் பஸ்ஸில் பகிர்ந்தது ://

  நண்பரின் தாயார் விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்...

  முடிந்த வரை பெரியவர்களுக்குத் தனி பாத்ரூம் வசதி செய்து கொடுத்து உள்பக்கம் தாளிட வேண்டாம் எனச் சொல்வது நல்லது. அல்லது பாத்ரூம் கதவு பிவிசியில் போடலாம் எளிதில் உடைத்து உதவ முடியும்.//

  நிச்சயம் இது யோசிக்கவேண்டிய விஷயம்  ///ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்


  We came to earth with no friends and enemies. Situation only makes people good or bad. Forgive people who hurt you. Nothing is much greater than that in life.///

  ரொம்ப அருமையான வரிகள்... தொடர்ந்து இதுபோல வரிகளை பகிரவும் நண்பரே

  /////பதிவர் நடத்தும் மாத இதழ் : தென்றல்

  பதிவர் குடந்தைமணி தென்றல் என்கிற மாத இதழ் ஒன்றை துவங்கியுள்ளார். ////

  நண்பரின் முயற்சி வெற்றியடை என் வாழ்த்துக்களும்


  ////ரசித்த பாடல் :"மாசமா " (எங்கேயும் எப்போதும்) ////

  பார்க்கனும் போல இருக்கே


  ///எனக்கு வந்த கனவு///

  ////இந்த கனவை காலை எழுந்து, சமைத்தவாறே, ஹவுஸ் பாஸிடம் சொல்ல அவர் சொன்ன கமன்ட்: "பேசாம அந்த பெண்ணையே நீங்க கல்யாணம் பண்ணிருக்கலாம். செம மேட்சா இருந்திருக்கும் " :((//

  குட் பஞ்ச் :)

  ReplyDelete
 2. குடும்ப‌த்தோடு சென்று பார்த்தீர்க‌ளா? க‌ண்டிப்பாக‌ த‌விர்த்திருக்க‌லாம். சில‌ காட்சிக‌ளும், 'பீப்'க‌ளும் ப‌ட‌த்திற்கு க‌ரும்புள்ளிதான். ஆனால் ப‌ட‌ம் என‌க்கு பிடித்திருந்த‌து.

  வ‌ட‌க‌ரை வேல‌ன் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ஸ் க‌ண்டிப்பாக‌ ப‌ய‌னுள்ள‌ ப‌கிர்வு

  க‌ன‌வு - வ‌ர‌வ‌ர‌ நிறைய‌ ப‌ட‌ம் பாக்க‌றீங்க‌ன்னு நினைக்கிறேன். உங்க‌ ஹ‌வுஸ் பாஸ் க‌மெண்ட் :))

  ச‌ட்னிக்கு அப்புற‌ம் வேற‌ எதுவும் ட்ரை ப‌ண்ண‌லியா? என் ஃப்ரெண்ட் ஒருத்த‌ர் பொங்க‌ல் அருமையா ச‌மைப்பார். இந்த‌ க‌மெண்ட் உங்க‌ ஹ‌வுஸ் பாஸ் க‌ண்ணில் ப‌ட‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை வேண்டிக்கொள்கிறேன் :))

  ReplyDelete
 3. ஷீ நிசி : அனைத்து பகுதிகளையும் அலசி அற்புதமாக எழுதி உள்ளீர்கள். ரொம்ப மகிழ்ச்சி. நன்றி

  ***
  ர‌கு said...

  //என் ஃப்ரெண்ட் ஒருத்த‌ர் பொங்க‌ல் அருமையா ச‌மைப்பார். இந்த‌ க‌மெண்ட் உங்க‌ ஹ‌வுஸ் பாஸ் க‌ண்ணில் ப‌ட‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை வேண்டிக்கொள்கிறேன் :))

  ஏன் இந்த கொலை வெறி !! நிச்சயம் உங்க கமென்ட் படிப்பார். (கமென்ட் & ரிப்ளை படிக்க ஆரமிச்சாச்சு)

  ReplyDelete
 4. //தனி பாத்ரூம் வசதி செய்து கொடுத்து உள்பக்கம் தாளிட வேண்டாம் எனச் சொல்வது நல்லது. அல்லது பாத்ரூம் கதவு பிவிசியில் //

  வெளிநாடுகளில் பாத்ரூம் கதவை வெளியிலிருந்து லாக்கை நீக்கித் திறக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும். புதிதாய் வீடுகட்டுபவர்கள் அதுபோல தாழ் வைப்பது நல்லது. (பாத்ரூமிற்கு மட்டுமல்லாமல், வயதானவர்கள், குழந்தைகள் அறைக்கும்கூட)

  அதுவரை வேலன் கூறியதுபோல, கதவைத் தாழிடாமல் சும்மா அடைத்துவைப்பதே நல்லது.

  மற்ற கமெண்டுகள் பின்னர்.

  ReplyDelete
 5. நல்ல பகிர்வுகள். கதவுத் தாழ் விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

  //அவருக்கு இதே போன்ற எஸ். எம். எஸ் அனுப்பும் நண்பர்கள் உள்ளனர்.//

  க்ரூப் எஸ்.எம்.எஸ் அனுப்ப என சர்வீஸ் ப்ரொவைடர்கள் இருப்பதாகவே எண்ணுகிறேன். உறுதியாகத் தெரியவில்லை.

  ஹவுஸ் பாஸ் ராக்ஸ்:)!

  ReplyDelete
 6. //விஜய்யின் குருவி, அஜீத்தின் ஆஞ்சேநேயா போன்ற படங்கள் அளவு அறுவை இல்லா விடினும்// ஹா ஹா ஹா!

  பாத்ரூம் தாழ் விஷயம் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ரொம்பவே முக்கியம்

  எல்லா விஷயங்களும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 7. //முடிந்த வரை பெரியவர்களுக்குத் தனி பாத்ரூம் வசதி செய்து கொடுத்து உள்பக்கம் தாளிட வேண்டாம் எனச் சொல்வது நல்லது. அல்லது பாத்ரூம் கதவு பிவிசியில் போடலாம் எளிதில் உடைத்து உதவ முடியும்.//

  மிகவும் சரி.பகிர்வுக்கு நன்றி.

  கடைசியில்-- கனவுக்கு உங்கள் மனைவின் பதில் சூப்பர்.

  ReplyDelete
 8. எனது namadukural.blogspot.com (கவிதைகுரல்) வலைத்தளத்திலும் இதுபோன்று தினமும் ஹைககூ மற்றும் புத்தக விமர்சனம் அன்றாட அரசியல் நையாண்டி எஸ்.எம்.எஸ். அனுப்புபவர்களிடமிருந்து பெறுகிறேன். அதில் சிலவற்றை பகிரவும் செய்திருக்கிறேன்.

  ReplyDelete
 9. பாத்ரும் கதவு அனைவரும் யோசிக்க வேண்டியது. அதோடு டைல்ஸ்... இதிலும் கவனம் வேண்டும்.

  ReplyDelete
 10. பதிவர் தென்றல் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 11. thanks for sharing that head injury incident. old people,children and young with seizure disorder(fits) should be asked not to lock bathroom doors. and we ll have to check their BP and baseline blood investigations-Hemogram,blood sugar,urea,creatinine,lipid profile and urine routine examination.. once in 3-6 months for all above 45 yrs(just takes 250-300 bucks)also yearly health check up esp for cancer screening.i think most of the population can afford that and for poor,GHs do sufficiently good job. we only need awareness.please share this with all of your friends.
  every part of veedu thirumbal was good, as usual.

  ReplyDelete
 12. //முடிந்த வரை பெரியவர்களுக்குத் தனி பாத்ரூம் வசதி செய்து கொடுத்து உள்பக்கம் தாளிட வேண்டாம் எனச் சொல்வது நல்லது. அல்லது பாத்ரூம் கதவு பிவிசியில் போடலாம் எளிதில் உடைத்து உதவ முடியும்.//

  நல்ல யோசனை.

  இங்கிலாந்தில் நான் இருந்த போது, அந்த வீட்டின் பாத்ரூமுக்கு தாழ்பாள் கிடையாது. ஹவுஸ் ஓனரிடம் கேட்ட போது, இங்கு பாத்ரூம்களில் தாழ்பாள் இருக்காது. ஆமாம் உங்களுக்கு ஏன் தாழ்பாள் வேண்டும் என கேட்டாரே ஒரு கேள்வி? நானும் எனது நண்பரும் மட்டும் அப்போது அவ்வீட்டில் தங்கி இருந்தோம். கதவுக்கு மேல் துண்டை போட்டு விட்டு உள்ளே செல்வது தான் ஒரே அடையாளம்.

  ReplyDelete
 13. அந்த பாட்டுல அந்த தோள்பட்டைய குலுக்கும் உத்தி ரொம்ப கூல்.

  பெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக் - பர பர பேட்டி

  ReplyDelete
 14. Anonymous1:09:00 PM

  அருமையான தகவல்

  Without Investment Data Entry Jobs !

  FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

  ReplyDelete
 15. நல்ல பகிர்வுகள்..

  கனவு :-))))))))

  //முடிந்த வரை பெரியவர்களுக்குத் தனி பாத்ரூம் வசதி செய்து கொடுத்து உள்பக்கம் தாளிட வேண்டாம் எனச் சொல்வது நல்லது. அல்லது பாத்ரூம் கதவு பிவிசியில் போடலாம் எளிதில் உடைத்து உதவ முடியும்.//

  ரொம்பச்சரி. அதே மாதிரி தரையில் சொரசொரப்பான டைல்கள் போடுவதும், சுவரில் ஆங்காங்கே கைப்பிடிகளை பதித்து வைப்பதும், அவர்கள் வழுக்கி விழுவதை கொஞ்சம் தவிர்க்கும்.

  ReplyDelete
 16. ஹுசைனம்மா; ஆம் . நீங்கள் சொன்னது சரியே.
  **
  நன்றி ராமலட்சுமி. ஆனந்த் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து வரும் SMS தகவல்களை தன் பிற நண்பர்களுக்கு தான் அனுப்புகிறார். க்ரூப் எஸ்.எம்.எஸ் சர்வீஸ் ப்ரொவைடர்கள் மூலம் அல்ல. நன்றி
  //ஹவுஸ் பாஸ் ராக்ஸ்:)!

  :))
  **
  நன்றி மாதவி மேடம்
  **
  ராம்வி
  //கடைசியில்-- கனவுக்கு உங்கள் மனைவின் பதில் சூப்பர்.//
  எல்லா லேடிசும் லேடிஸை தான் சப்போர்ட் பண்றீங்க :))

  ReplyDelete
 17. அன்புமணி: தங்கள் வலைத்தளம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி
  **
  டாக்டர் வடிவுக்கரசி. மிக விரிவான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. வீடுதிரும்பல் குறித்த பாராட்டு மகிழ்ச்சி தருகிறது
  **
  ஆதி மனிதன்: இங்கிலாந்திலுமா? அந்த ஐடியா பல இடங்களில் கடைபிடிக்க படுகிறது
  **
  இளைய தர்ஷன்: ஆம் தோள் பட்டை குலுக்கல் வைத்தே அந்த பாட்டு செய்துள்ளனர்.
  **
  அமைதி சாரல்: பாத் ரூம் பற்றி நீங்கள் தந்த எச்சரிக்கை மிக்க சரி நன்றி

  ReplyDelete
 18. நண்பரின் பொறுமை மற்றும் அக்கறையுடனான செயலுக்கும் நட்புக்கும் பாராட்டுக்கள்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...