Monday, September 12, 2011

விஜய் டிவி சூப்பர் சிங்கர் : பைனல் செல்ல போவது யார்?

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் கடந்த ரெண்டு வாரங்களாக ஒய்ல்ட் கார்ட் ரவுண்ட் என எட்டு பாடகர்கள் பாடினார்கள். "இவர்களில் பைனல் செல்ல போகும் அந்த ஒரு அதிஷ்ட சாலி யார்?" என மறுபடி, மறுபடி சொன்னாலும், இந்த எட்டு பேரில் குறைந்தது இருவர் அல்லது மூன்று பேராவது பைனலுக்கு தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள் என பட்சி சொல்கிறது. யாருக்கு பைனல் செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ஒரு அலசல் இதோ:

தன்யஸ்ரீ

மிக வித்யாசமான குரல் இவருடையது. சிறந்த குரலுக்கு பரிசு தர வேண்டுமெனில் அது இவருக்கு தான் !! ரொம்ப சின்ன பெண். பள்ளியில் படிக்கிறார். ஏனோ இவரது performance போக போக சற்று டல் ஆகி விட்டது. பைனல் வாய்ப்பு குறைவு என்பதே என் கருத்து. 

ஹரிஹரசுதன் 

இவர் எப்படி டாப் டென்னிற்குள் வந்தார் என்பது அந்த ஹரிஹரசுதனுக்கே வெளிச்சம் ! பைனல் வாய்ப்பெல்லாம் நிச்சயம் இல்லை. நெக்ஸ்ட் ?

ஸ்ரீனிவாஸ் 

ஆரம்பத்தில் இவர் பாடலை மிக ரசித்துள்ளேன். பின் ஏனோ இவர் பெர்பார்மன்ஸ் குறைந்தது. (கல்யாணம்??) ஒய்ல்ட் கார்ட் ரவுண்டில் சில பாடல்கள் அற்புதமாக பாடினார். குறிப்பாக ஆரோமலே பாட்டுக்கு உயிரை குடுத்து பாடினார். (அவருக்கு குரல் தானே உயிர்? ).பைனல் வர வாய்ப்பு சற்று குறைவு தான். அதிசயமாக ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி ஆக இவர் இருந்தால் சற்று ஆச்சரியத்துடன் வரவேற்போம்.
சந்தோஷ் 
சந்தோஷ் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வர கூடியது, நடக்க முடியாத அவர் அம்மாவை ஒரு முறை அரங்கிற்கு அழைத்து வந்து அதன் காட்சிகளை வாரம் முழுதும் காண்பித்து மக்களை "கண் கலங்க" வைத்தது தான். 
சந்தோஷ் ஓரளவு நன்றாக பாட கூடியவர் எனினும், எல்லா வகை பாடல்களையும் பாட முடியும் என சொல்லி விட முடியாது. வெஸ்டர்ன் நன்கு பாடுவார். 

எனக்கு சந்தோஷிடம் பிடித்தது ஒரு விஷயம் தான். யார் நன்றாக பாடினாலும் சந்தோஷ் நிஜமாக அதனை மிக மிக ரசிப்பார். அவரை பாராட்டவும் செய்வார். இது சாய் சரண் போன்ற சிலரிடம் இருக்காது. சாய் சரண் யாரையாவது பாராட்டினால், அவர் அவுட் ஆகி போகும் போது தான் இருக்கும். இந்த விஷயத்தில் மற்ற சிலர், பிறர் பாடல்களை ரசிப்பார்கள் என்றாலும் சந்தோஷ் அளவு பிறரை மனம் விட்டு ரசிப்பதும், பாராட்டுவதும் யாரும் இல்லை எனலாம். 

பைனலுக்கு சந்தோஷ்? டவுட் தான் ! நான்கு அல்லது ஐந்து பேர் பைனலில் பாடினால், சந்தோஷ் செலக்ட் ஆக வாய்ப்புண்டு.
சாய் சரண் 

பூஜா மற்றும் சத்ய பிரகாஷை விட எந்த விதத்திலும் குறைந்த பாடகர் இல்லை. அரை மார்க் குறைவு என சொல்லி சாய் சரணை பைனலுக்கு தேர்வு செய்யாமல் விட்டதே தவறு. பூஜா மற்றும் சத்யபிரகாஷ் உடன் சாய் சரணும் நேரே பைனல் சென்றிருக்க வேண்டும். மக்களின் இந்த sympathy அவருக்கு நிறைய ஓட்டு வாங்கி தந்து, பைனல் கொண்டு சென்று விடும் என நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஒய்ல்ட் கார்ட் ரவுண்டில் சாய் சரண் பாடியதை விட மிக நன்றாக முன்பே பாடியிருக்கிறார்.எப்படி இருந்தாலும் பைனலுக்கு ஒரு நிச்சய டிக்கெட் ஆக தான் சாய் சரண் தெரிகிறார் 

பிரவீன் 

பிரவீனை ஆரம்பத்தில் அவர் அரங்கில் செய்கிற ஸ்டைலுக்காக ரசித்திருக்கிறேன். மற்றபடி International Contestants-க்கு ஒரு representative ஆக தான் அவர் டாப் டென்னில் வந்துள்ளாரே தவிர, பைனல் வருவதற்க்கேல்லாம் அவருக்கு வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை.

கௌஷிக் 

ஏனோ எனக்கு கௌஷிக்கை அதிகம் பிடிப்பதில்லை (அவர் பாடும் போதெல்லாம், அடிக்கடி க்ளோஸ் அப்பில் வயதுக்கு மீறிய மேக் அப் மற்றும் உடையுடன் காண்பிக்கும் அந்த பெண்மணியும் ஒரு காரணம்)ஆனால் கௌஷிக் ரொம்ப நன்றாக பாடுவதாக வீட்டில் அனைவரும் சொல்கின்றனர். ஜட்ஜஸ் கூட நிறைய பாராட்டுகின்றனர். இவரும் பைனலுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி ஆக இருக்கலாம் !

மாளவிகா: 
எஸ். மதுமிதா போன பின் நான் ஆதரிக்கும் நபர் மாளவிகா என்பது இந்த ப்ளாகை நீங்கள் தொடர்ந்து வாசிப்பவர் எனில் நிச்சயம் தெரிந்திருக்கும். பாடலை நன்கு என்ஜாய் செய்து பாடுவது இவர் ஸ்பெஷாலிட்டி. பல வித பாடல்களும் பாடுகிறார். சாய் சரணுடன் இவரும் பைனல் வருவார் என நம்புகிறேன். பைனலில் சற்று கிளாமர் கோஷன்ட் மீடியா மக்களுக்கு தேவை. வெறும் பூஜா என்கிற பெண்ணுடன் நிறுத்தினால் கிளாமர் கோஷன்ட் சற்று குறைவாக இருக்கும். இதனாலேயே இன்னொரு பெண் (மாளவிகா) வருவார் என நினைக்கிறேன். 

மொத்தத்தில்:

நிச்சயம் பைனல் வர வாய்ப்புள்ளவர்கள்: சாய் சரண் & மாளவிகா 
 
சீனிவாஸ், கௌஷிக் மற்றும் சந்தோஷ் இவர்களில் யாரேனும் ஒருவர் சர்ப்ரைஸ் ஆக உள்ளே நுழைந்தாலும் நுழையலாம்!

இந்த வாரம் நாலு நாள் ஏதேதோ கதை பேசிட்டு கடைசி ஐந்து நிமிடத்தில் தான், பைனல் வருவது யார் என அறிவிப்பார்கள். அப்போது மட்டும் சேனலை மாற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆமாம் ..யார் பைனல் வருவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? 

12 comments:

 1. First comment. No comment. Sorry....

  நான் இந்த சூப்பர் சிங்கர், சுப்ரீம் சிங்கர் எல்லாம் பார்ப்பதில்லை. அதனால் அது பற்றி நோ கமெண்ட்ஸ்.

  ReplyDelete
 2. 'சாய் சரண்' அல்லது 'கௌஷிக்' அல்லது 'சந்தோஷ்' - இவர்களில் ஒருவர்தான் இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பது என் கணிப்பு.

  சாய் சரண்: strong contestant for பூஜா and சத்யா, இவர் இறுதி போட்டிக்கு போக முடியாத அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை என்பதை wild card பங்களிப்புகள் பறைசாற்றியது. நீங்கள் கூறியது போல் அனுதாப அலை இவரை கரை சேர்க்கலாம்.

  கௌஷிக்: சில நாட்களில் அற்புதமாக பாடுவார், சில நாட்களில் சாதாரணமாக பாடுவார், கணிக்க முடியாத நல்ல பாடகர். wild card பங்களிப்புகள் அருமை, இறுதிக்கு எதிர்பார்க்கலாம்.

  சந்தோஷ்: பட்டம் வெல்ல இரண்டாவது முறையாக சூப்பர் சிங்கரில் போராடி வரும் நல்ல பாடகர். நடுவர்களின் அபிமானம், அதிக ரசிகர்கள், இறுதி போட்டிக்கு இவரை அழைத்து செல்லலாம்!

  மாளவிகா: அதிக அலட்டல், wild card performance not up to the mark, no chance for final!

  பொறுத்திருந்து பார்க்கலாம்!

  ReplyDelete
 3. நான் இந்த சூப்பர் சிங்கர், சுப்ரீம் சிங்கர் எல்லாம் பார்ப்பதில்லை. அதனால் அது பற்றி நோ கமெண்ட்ஸ் except the following.

  மாளவிகா:

  ஃபைனலுல பாடப்போற பாட்டு..
  "வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்.. ..."
  பாட்டோட டான்சும் உண்டா ?

  நோ.. நோ.. நோ.. நோ வயலேன்ஸ் ஆண் மீ !! மீ பாவம்..
  நாந்தான் சொன்னேனே..
  "நான் இந்த சூப்பர் சிங்கர், சுப்ரீம் சிங்கர் எல்லாம் பார்ப்பதில்லை."

  ReplyDelete
 4. AAnaa unmayil makkal than ottu pottu
  therndhu edukurangala?

  ReplyDelete
 5. இன்று தெரிந்துவிடும்.... நான் பார்க்க வில்லையெனிலும்.... :)

  ReplyDelete
 6. சாய்சரண் நிச்சயம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. Anonymous8:45:00 PM

  நான் ஓட்டு போட்டது... சாய்சரண், சந்தோஷ், கெளஷிக், தன்யஸ்ரீ...

  இதுல வைல்ட் கார்ட்ல சந்தோஷ் அல்லது கெளஷிக் வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்

  சாய்சரண் கண்டிப்பா ஃபைனல்ல இருப்பான்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 8. அருமையான அலசல்... சாய்சரண் திறமைமிக்க பாடகர்...

  ReplyDelete
 9. ஏனோ என‌க்கு சூப்ப‌ர் சிங்க‌ர் நிக‌ழ்ச்சி கொஞ்ச‌ம் கூட‌ பிடிக்க‌வில்லை. ஒரு சில‌ முறை பார்த்த‌தோடு ச‌ரி. நிறைய‌ மிகைப்ப‌டுத்த‌ல்க‌ள் குவிந்துகிட‌ப்ப‌து போன்ற‌ ஒரு உண‌ர்வு ஏற்ப‌டுகிற‌து.

  //பின் ஏனோ இவர் பெர்பார்மன்ஸ் குறைந்தது. (கல்யாணம்??) //

  மோக‌ன்ன்ன் சார்ர்ர்ர்ர் :)))))))))))

  ReplyDelete
 10. // வெங்கட் நாகராஜ் said...

  இன்று தெரிந்துவிடும்.... நான் பார்க்க வில்லையெனிலும்.... :) //

  அடுத்த பதிவுல, மோகன் சார் சொல்லிடமாட்டாரா என்ன..
  எதுக்கு வேஸ்டா புரோகிராம் பாக்கணும்..

  ReplyDelete
 11. வருகைக்கு நன்றி ஆதி மனிதன்
  ***
  புபேஷ்: தெளிவாக அலசி உள்ளீர்கள். மிக்க நன்றி
  ***
  மாதவா: :))
  ***
  ராஜேஸ்வரன்: எனக்கும் அதே டவுட் உண்டு.
  **
  வெங்கட்: ரிசல்ட் தெரிஞ்சிடுச்சு. சாய் சரண் & சந்தோஷ் பைனல் சென்றுள்ளனர்.
  **

  ReplyDelete
 12. சென்னை பித்தன்: நீங்க சொன்னது போல் சாய் சரண் வந்துட்டார் !
  **
  ஷீ நிசி: எத்தனை பேருக்குங்க ஓட்டு போட்டுருக்கீங்க ? உங்க ஊகம் சரியா தான் இருந்திருக்கு (Except for Koushik)
  **
  நன்றி செந்தமிழ்
  **
  ரகு: நிஜமாவே சீனிவாசுக்கு கல்யாணம் இந்த நிகழ்ச்சி நடுவில் நடந்தது. சீனி ஏற்கனவே முழு நேரமா வேலை பார்ப்பவர். அப்புறம் கல்யாணம் வேறு. எனவே ப்ராக்டிஸ் செய்ய நேரம் குறைந்ததால் பெர்பார்மான்ஸ் பாதிக்கும் தானே?
  **
  மாதவா: உன் நம்பிக்கைகாக தான் வானவில்லில் யார் ஜெயித்தார்கள் என சொல்லியிருக்கேன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...