Saturday, January 14, 2012

டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட்: எதை பார்ப்பது? பரிந்துரை

அய்யா சாமி பண்டிகை நாட்களில் டிவி சிறப்பு நிகழ்ச்சி எதையும் விடாம ரிமோட் மூலம் மாற்றி மாற்றி பார்ப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த முறை அவருக்கு பொங்கலுக்கு எத்தனை நாலு லீவு தெரியுமா? ஒரே ஒரு நாள்!  அதுவும் பொங்கல் தினமான ஞாயிறு மட்டும் !! இதில் அய்யா சாமி மிக காண்டாகிட்டார். டிவியில் நாலு நாளும் ஸ்பெஷல் நிகழ்ச்சி உண்டு என ஆபிசில் மிகவும் வாதிட்டார். எதுவும் நடக்கலை.

பின் அவர் "திடீர் தியாகி"யாகி நான் பார்க்காட்டி என்ன, என் நண்பர்கள் பார்த்து மகிழட்டும் என நாலு நாள் டிவி நிகழ்ச்சிகளை இங்கு தொகுத்து கொடுத்துள்ளார். அடைப்பு குறிக்குள் நிகழ்ச்சியை பார்க்கலாமா வேண்டாமா என அவர் கமன்ட்டும் உள்ளது.

உங்களுக்கு சிரமம் தர வேண்டாமென அவசியம் பார்க்க வேண்டிய நிகழ்சிகளை மஞ்சள் கலரில் ஹை லைட் செய்துள்ளார். படித்து மகிழுங்கள் !
**********
14th ஜனவரி சனிக்கிழமை: போகி பண்டிகை :


சன் டிவி

10:00 – பழனி – திரைப்படம் (ஒடுங்க ஒடுங்க )

2:00 PM – காளை – திரைப்படம் – (என்னா மாதிரி படம்லாம் போடுறாங்க பாருங்க !)

4:30 PM – ரஜினிகாந்த் இன்டர்வியூ (என்னிக்கு எடுத்ததோ?)

5:30 PM – பேராண்மை – திரைப்படம் (யப்பா ஓரளவு நல்ல படம் ஒன்னாவது இன்னிக்கு போடுறாங்களே !)

9:00 PM – Celebrity Cricket League (CCL) 2 – Mumbai Heros Vs Chennai Rhinos (ஏன்யா ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சா நைட் ஒரு மணிக்கு முடியுமா? காலையில எழுந்து பொங்கல் வைக்க வேணாம்? என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு ?)
********************
கலைஞர் டிவி

10.00 மாஞ்சா வேலு   திரைப்படம்

4.30 PM யாவரும் நலம்-  திரைப்படம்  (செம படம் ! இது வரை பார்க்காட்டி அவசியம் பாருங்க !) 

*********************************************************************
15th January 2012 ஞாயிறு :  தை பொங்கல் 


சன் டிவி

08:00 – ஓய் திஸ் கொலை வெறிடி – தனுஷ் , ஐஸ்வர்யா தனுஷ் Interview

08:30 - நண்பன் படம் ஸ்பெஷல் Program

09:30 - சிறப்பு பட்டிமன்றம் – சாலமன் பாப்பையா (இது இவங்க ரெகுலர் பட்டிமன்றம்; ஜெயிக்கும் அணியில் பாரதி பாஸ்கர்; தோற்கும் அணியில் ராஜா இருப்பார் !!)

11:00 – மாப்பிள்ளை – படம் (அட பாவிங்களா ! பொங்கலும் அதுவுமா இந்த படமா பாக்குறது ! இது தான் ஸ்பெஷல் படமா? கொடுமைடா சாமி !)

2:00 PM – வேட்டைக்காரன் – படம் (ஏற்கனவே போட்டுட்டாங்க. சேனல் மாற்றும் போது தலைவி நடிக்கும் சீன இருந்தால் கொஞ்ச நிமிஷம் பார்த்து விட்டு பின் ஓடலாம் என பரிந்துரை செய்கிறோம் )

5:00 PM – நட்சத்திர கொண்டாட்டம் – வெங்கட் பிரபு வின் லூட்டி

6:00 PM– எந்திரன் – படம் – நிஜமான ஸ்பெஷல் படம்னா அது இது தான்யா !!

*********
விஜய் டிவி

8.00 சிவகுமார் உடன் நேருக்கு நேர் (ரெண்டு மணி நேர நிகழ்ச்சி. எல்லாரும் பொங்கல் கிண்டுவதில் பிசியா இருப்போம். அப்பப்போ பாக்கலாம்) 

10.00: உலக நாயகனின் விஸ்வரூபம். கமல் பேசுறாராம் !! தமிழ் டு தமிழ் டிக்ஷனரி இருந்தா பக்கத்திலேயே வச்சிக்கிட்டு பாருங்க. புரிய வாய்ப்பிருக்கு !

11.00: எங்கேயும் எப்போதும் (இது தான்யா படம் ! பொங்கல் வச்சி முடிச்சுட்டு இந்த படம் போட்டுட வேண்டியது தான். இதுவரை பார்க்காதவர்கள் நிச்சயம் பாருங்க !)

4.30 PM: வேட்டை ஸ்பெஷல். மாதவன், ஆர்யா, அமலா பால் விளையாடி காட்ட போறாங்க. அமலா பாலுக்காக நிகழ்ச்சி பாக்கலாம்ப்பா !!


6.30 :PM மெரீனா திரைபடம் - ஒரு பார்வை (முடிஞ்சா பாக்கலாம். ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் நமக்கு வேண்டியவங்க. )

7.00 PM: உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஸ்பெஷல் ஷோ

9.00 PM நீயா நானா - நகரத்து பெண்களும், கிராமத்து பெண்களும் (நிச்சயம் ஸ்கிப் பண்ணிடலாம் )
***************
கலைஞர் டிவி

9.30 திண்டுக்கல் லியோனி பட்டி மன்றம் (ஒரு பக்கம் சமையல்; மறுபக்கம் இந்த நிகழ்ச்சி காதில் வாங்குதல் என்கிற முறையில் கேட்டு சிரிக்கலாம் - அய்யா சாமி )

10.30 வேல் திரைப்படம் (என்னய்யா படம் போடுறீங்க !!)

02.30 P.M – வேட்டை டீம் Live – ஆர்யா , மாதவன் , அமலா பால் & லிங்குசாமி

03.30 P.M – கோ – திரைப்படம் (இதுவரை பார்க்காட்டி பாருங்க.)


07.30 P.M – மானாட மயிலாட சீசன் 7 (அடேங்கப்பா சீசன் 7-ஆ? கலா அக்கா கலா பாட்டி ஆகும் வரை நடத்துவீங்க போல இருக்கே ?)
***********
ஜெயா டிவி


10 :30 இளைய ராஜா இசை நிகழ்ச்சி (விளம்பர நேரம் escape ஆகிட்டு மற்ற நேரம் பார்க்கலாம் )

2.30 PM 180 திரைப்படம் (ஜனவரி 1-தான் போட்டீங்க. பொங்கல் அன்னிக்கு மறுபடியுமா?)

8.00 PM ஜாக்பாட் ஸ்பெஷல்

9.30 PM அரவான் திரைப்படம் ஒரு பார்வை
*****************************************************************************
January 16, 2012 திங்கள் கிழமை :  மாட்டு பொங்கல்  


சன் டிவி

10:00 – பட்டிக்காடா பட்டணமா Conducted by ஸ்ரீகாந்த் தேவா (Part-1) முன்னாடி கங்கை அமரன் நடத்துவார். இப்போ ஸ்ரீகாந்த் தேவாவா? நான் சின்ன குழந்தையா இருக்குறதில் இருந்து இருபது வருஷமா பொங்கல்னா இந்த நிகழ்ச்சி விடாம நடத்துறாங்கய்யா !)

11:00 – மாவீரன் – திரை படம் – ராம் சரண் , காஜல் அகர்வால் நடித்த தெலுகு டப்பிங் படம்

2:00 PM – சந்தோஷ் சுப்ரமணியம் – படம் (நல்ல படம்; எத்தனையாவது தடவையா போடுறீங்க?)

5:00 PM– வயலோடு விளையாடுவோம் – Game show With திருமதி செல்வம் and தங்கம் மெகா சீரியல் குடும்பங்கள் ( நோ கமன்ட் - எங்க மாமியார் கோச்சீபாங்க)
6:00 PM– சிங்கம் – படம் – (தலைவி வாழ்க !!)
*********
விஜய் டிவி


8:00 காபி வித் அனு : அனு ஹாசன் நடிகை சினேகாவை பேட்டி காண்கிறார் (கல்யாணம் பத்தி புதுசா ஏதாவது சொல்வாரா? Any change plan ?)

11:00 முரண் திரைப்படம் (இது வரை பார்க்கா விடில், நேரம் இருந்தால் பார்க்கலாம்)


2.30 PM: அவன் இவன் திரைப்படம் (ஒரு புது படம் கிடைச்சா அடுத்தடுத்த மாசம் விடாம போட்டுடுவாங்க விஜய் டிவியில் !)
***************
கலைஞர் டிவி : No special program for மாட்டு பொங்கல் !!
******
ஜெயா டிவி


10 :30 இளைய ராஜா இசை நிகழ்ச்சி (அன்னிக்கு ஆபிசில் இருப்பேன். பார்க்க முடியாதே :((

கார்த்திகா, விஜய் அன்டனி, தனுஷ் ஆகியோரின் பேட்டி இன்று ஒளி பரப்பாகிறது (என்னடா பண்டிகை நாளில் சினிமா நடிகைகளிடம் பேட்டி எடுக்கும் வழக்கம் ஒழிஞ்சிடுமொன்னு நினைச்சேன். ஜெயா டிவி பழசை மறக்காம இருக்காங்க )
*********************************************************************************
17th January 2012 செவ்வாய் கிழமை: காணும் பொங்கல்  


ஜெயா டிவி : 


10 :30 இளைய ராஜா இசை நிகழ்ச்சி

5.30 PM. ஆட்ட நாயகன் திரைப்படம் (ஹீரோவே மறக்க நினைக்கும் படம்)

*********
விஜய் டிவி 

11:00 ௦௦ பொய் சொல்ல போறோம் திரைப்படம் 


2.30 PM மைனா திரைப்படம்
****
நேயர்களே !! நாலு நாளும் டிவி பாருங்கள் !! உங்க வீட்டு கரண்டு பில்லு நல்ல்ல்ல்லா ஏறட்டும் !!
*********
டிஸ்கி:
நண்பன் : நிச்சய வெற்றி விமர்சனம் - இங்கே

29 comments:

  1. 18 ஆன் தேதிதான்மனித முகங்களைபார்த்து சிரிப்போமா?,,,,

    ReplyDelete
  2. அதென்ன சார்..
    சிங்கம், வேட்டைக்காரன் -- ரெண்டுமே தீபாவளிக்குத்தான போட்டாங்க அதே டி.வில.. மறுபடியும் அதேவா..
    சரக்கு இல்லேன்னா விட்டுட வேண்டியதுதான.. (என்னோட பிலாகு போஸ்ட் மாதிரி..)

    ReplyDelete
  3. விமலன் said...
    18 ஆன் தேதிதான்மனித முகங்களைபார்த்து சிரிப்போமா?,,,,
    ***
    ஆமாம் சார் ஆமாம் !!

    ReplyDelete
  4. மாதவா: சன், விஜய், ஜெயா எல்லாரும் இதே மாதிரி தான் செய்றாங்க.

    டிவி நிகழ்ச்சி பத்திய இந்த பதிவை எவ்ளோ பேர் படிக்கிறாங்க!! ம்ம் எல்லாரும் அய்யாசாமி மாதிரி தான் இருக்காங்க !!!

    ReplyDelete
  5. இதெல்லாம் பாக்க முடியுமா தெரியல,
    ஊர்ல பொங்கல் வைச்சு,மாடு குளிப்பாட்டி,கொம்புக்கு பெயின்ட் அடிச்சு பல வேலைகள் கிடக்கு,நான் ஒரே பிசி,அவ்வ்வ்வ்

    ReplyDelete
  6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மோகன் :)

    இந்த மாதிரி பண்டிகை நாட்கள்ல டிவி நிகழ்ச்சி பத்தி தெரிஞ்சுக்க உங்க பதிவை படிப்பதோட சரி. விளம்பர இடைவேளையின்போது ஒளிபரப்பாகும் இந்த நிகழ்சிகளை எல்லாம் பார்க்க பொறுமை இல்லை. நண்பர்களை சந்திக்கணும், அப்புறம் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கணும். இதுதான் என்னோட பொங்கல் ப்ளான் :)

    திங்கள் கிழமை கூடவா ஆஃபிஸ் இருக்கு? so sad :(

    ReplyDelete
  7. கோகுல் : நிஜமான பொங்கல் கொண்டாடுறீங்க போல. மகிழ்ச்சி

    ReplyDelete
  8. ரகு: விளம்பர இடைவேளையின் போது வேறு சேனல் போயிடனும். உங்கள் பொங்கல் பிளான் நல்லாருக்கு

    சனிகிழமை, திங்கள் ரெண்டு நாளும் ஆபிஸ் உண்டு :(((

    ReplyDelete
  9. ஆஹா... சன் டிவியில காஜல் செல்லம் நடிச்ச படம் போடுறாங்களா... இது தெரியாம போச்சே...

    ReplyDelete
  10. Anonymous11:52:00 PM

    யாவரும் நலம்...பேவரிட் பிலிம். ஒளிப்பதிவு அட்டகாசம். இளையராஜா நிகழ்ச்சி பார்த்தாக வேண்டும்.

    ReplyDelete
  11. Anonymous11:53:00 PM

    @ பிலாசபி பிரபாகரன்

    வாய்க்குள்ள போன கொசுவை சீக்கிரம் துப்பிடுங்க..

    ReplyDelete
  12. Anonymous11:56:00 PM

    // நாலு நாளும் டிவி பாருங்கள் !! உங்க வீட்டு கரண்டு பில்லு நல்ல்ல்ல்லா ஏறட்டும் !!//

    'ஆற்காடு' இல்லாவிடில் நம் காட்டில் மழைதான் :)

    ReplyDelete
  13. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //தமிழ் டு தமிழ் டிக்ஷனரி இருந்தா பக்கத்திலேயே வச்சிக்கிட்டு பாருங்க. புரிய வாய்ப்பிருக்கு !//

    ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  15. பொங்கல் நிகழ்ச்சி தொகுப்புக்கு நன்றி. நெட்டில் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் செய்து விட்டீர்கள்.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. பிரபா:ஆமாம். இதுக்கு தான் நம்ம ப்ளாக் பக்கம் அடிக்கடி வரணும்கிறது :))

    ReplyDelete
  17. சிவகுமார்: நன்றி . நேற்று புத்தக கண்காட்சி வர முடியலை. வட பழனி சென்றீர்களா? வேறு தகவல் இருந்தால் தெரிவியுங்கள்

    ReplyDelete
  18. நன்றி கருணாகரசு. தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  19. ஆமினா: நன்றி

    ReplyDelete
  20. நன்றி ஆதிமனிதன். பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  21. //மூன்றாவது டெஸ்ட் மூன்றாம் நாளே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். முதல் ரெண்டு டெஸ்ட்டும் கடைசி (5 வது) நாள் கூட போகலை.//

    ஸாரே ரொமப சீக்கரம் ஜோதிட நிலையம் ஆரம்பிக்கலாம், சரியாக கணிக்கின்றீர்களே......
    டெண்டுல்காரின் 100வது 100, கமலின் மருதநாயகம் எது முதல் கணிக்க முடியுமா?

    ReplyDelete
  22. நான் டி.வீ நிகழ்ச்சிகள் எதையும் பார்க்கவில்லை எனினும், உங்கள் முன்னோட்டம் அற்புதம். குறிப்பாக,
    " முன்னாடி கங்கை அமரன் நடத்துவார். இப்போ ஸ்ரீகாந்த் தேவாவா? நான் சின்ன குழந்தையா இருக்குறதில் இருந்து இருபது வருஷமா பொங்கல்னா இந்த நிகழ்ச்சி விடாம நடத்துறாங்கய்யா !)"
    வெகுவாக ரசித்தேன். உண்மை தான். கடந்த 10 வருடங்களாக, எந்த வகையிலும்,மாற்றமில்லை தான்.

    ReplyDelete
  23. அட பரவாயில்லையே... சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட் நல்லா இருக்கு.... பார்ப்பவர்களுக்கு உபயோகமா இருக்கும்...

    ReplyDelete
  24. தமிழ் டு தமிழ் டிக்ஷனரியா? ஏன் அப்படிச் சொல்றீங்க? கமலஹாசன் தமிழ் புரியாதா? (எனக்கு அப்பவே தெரியும்..இருவது வருசம் முந்தியே சந்தேகம் :)

    ReplyDelete
  25. வாசகன்: ஏன் சார் மருத நாயகம் படத்தோட சச்சின் செஞ்சுரிய செக்குறீங்க. சச்சின் சீக்கிரம் அடிச்சிடுவார் சார்
    **

    ReplyDelete
  26. விரிவான தங்கள் கருத்துக்கு நன்றி டாக்டர் வடிவுக்கரசி

    ReplyDelete
  27. வெங்கட் நாகராஜ் said...

    அட பரவாயில்லையே... சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட் நல்லா இருக்கு.... பார்ப்பவர்களுக்கு உபயோகமா இருக்கும்...
    **********

    நன்றி வெங்கட்.

    ReplyDelete
  28. அப்பாதுரை: என்ன சார் கமல் பேச்சு பற்றி தாங்கள் அறியாததா? TV பேட்டிகளில் பல நேரம் அவர் சொல்ல வருவதை நேராக சொல்ல மாட்டார். சுற்றி வளைத்து சொல்வதை நாம் புரிந்து கொள்வது கஷ்டம். அதனால் தான் அப்படி சொன்னேன் :)

    ReplyDelete
  29. //டிவியில் நாலு நாளும் ஸ்பெஷல் நிகழ்ச்சி உண்டு என ஆபிசில் மிகவும் வாதிட்டார்/

    உடம்பு சரியில்லைன்னா லீவு கேப்பாய்ங்க; ஊருக்குப் போக லீவு கேப்பாய்ங்க... நீங்க என்னடான்னா.... :-)))))

    யாராவது இனி பெண்கள்தான் டிவி அதிகம் பாக்கிறாங்கன்னு எழுதட்டும், இங்க கையக்காட்டி அனுப்புறேன்!! :-)))))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...