Monday, September 17, 2012

தொல்லை காட்சி பெட்டி -1

வீடுதிரும்பலில் புது பகுதியாக இன்று முதல் துவங்குகிறது தொல்லை காட்சி பெட்டி.  டிவியில் பார்க்க கூடிய நிகழ்ச்சிகள், ரசித்த சில விஷயங்கள் என எழுத ஆசை. இதனை எழுத அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை என்பதும் (பார்க்கிற எல்லா நிகழ்சிகளுக்கும் தான் நமக்கு ஒரு ஒபினியன் இருக்குமே ! ) , இத்தகைய  விமர்சனம் இணையத்தில் இப்போது யாரும் எழுத வில்லை என்பதும் தொடங்க காரணங்கள். சில வாரங்கள் முடியாமல் போகலாம். பொறுத்தருள்க !

நீயா நானாவும் கலாய்ப்பும்

கலாய்ப்பது பற்றிய நீயா நானா அருமையான விவாதமாய் இருந்தது. முதலில் ஜாலியாக துவங்கி ( "ஆமா நீ பெரிய நீயா நானாகோபிநாத்; பேச வந்துட்டே"), பின் கிண்டல் செய்வதில் உள்ள சங்கடங்களையும் மன வலியையும் பேசி நிறைவானது. கிண்டலால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தனியே அழைக்கப்பட்டு தங்கள் அனுபவம் பகிர்ந்தனர். அவர்களில் ஒரு பெண் " கிண்டல் செய்பவருக்கு சில நொடி இன்பம். ஆனால் அந்த காயம் எங்களுக்கு ஆற ரொம்ப காலம் ஆகும்" என்றது நிறையவே யோசிக்க வைத்தது !

மாறிப் போன சன் மியூசிக்

சன் மியூசிக்கில் ஒரு வாரமாய் ஏகப்பட்ட மாறுதல்கள். முன்பெல்லாம் ஒரு இளைஞன் அல்லது இளைஞி நின்று கொண்டு போனில் யாரிடமாவது பேசுவார்கள். நின்று நின்று பேசி காலி வலி வந்து நிறைய பேர் வேலையை விட்டு போய் விட்டார்கள் போலும். இப்போது நிறைய தொகுப்பாளர்கள் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். பாடலை பாடியவர், இசை அமைப்பாளர், எழுதியவர் பெயரும் போடுகிறார்கள் ( நல்ல விஷயம் ! ).  ஒரு பாடல் படமாகும் இடத்துக்கே போய் நடிகர், நடிகையிடம் பேட்டி எடுத்து அந்த ஒரு பாட்டை வைத்து அரை மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். இன்னொரு நிகழ்ச்சி பெயர்: வட போச்சே ! கொஞ்சம் ஸ்டேல் (Stale) ஆனது என மாற்றுவது சரி தான். ஒரேயடியாக மாற்றியதால் அது சன் மியூசிக் என்றே மனம் ஒப்பு கொள்ள மறுக்கிறது. போக போக பழகிடும் !

நல்ல நிகழ்ச்சி : "உன்னால் முடியும்"


விஜய் டிவியில் ஞாயிறு காலை 9 மணிக்கு " உன்னால் முடியும்" என்கிற ஒரு Talk Show வருகிறது. தமிழகத்திலிருந்து பிரபலமான ஒரு தொழிலதிபரை அழைத்து வந்து MBA மாணவர்கள் மத்தியில் எப்படி வியாபாரம் துவங்கி பிரபலமானார் என்று பேசுகிறார்கள். கோபிநாத் நடத்தும் மிக அற்புதமான நிகழ்ச்சி. யூனிவர்சல் மொபைல், அருண் ஐஸ் கிரீம், இதயம் நல்லெண்ணெய் இத்தகைய நிறுவன ஓனர்கள் வந்து மிக அருமையாக பேசினர். சின்ன அளவில் துவங்கி, பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி எப்படி முன்னேறினர் என்பது ரொம்ப ரொம்ப inspirational . டிவியில் நான் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி இது. அவசியம் பாருங்கள் என்று தைரியமாக பரிந்துரைக்கிறேன்

சன்னுக்கு வந்த சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே 

சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே நிகழ்ச்சி மிக பிரபலம் ஆகியது, நிகழ்ச்சி ஆதித்யாவிலிருந்து சன்னுக்கும் வந்ததில் தெரிகிறது. சன்னில் ஞாயிறு காலை 11 மணிக்கு சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே அதே பெயரில் வருகிறது. இங்கு ஒரு சின்ன மாறுதல் வழக்கமாய் வேஷ்டி சட்டையில் வரும் இமான் ஜீன்ஸ் பேண்ட்டில் அதே மாதிரி கலாய்க்கிறார். நாம் வீடுதிரும்பலில் எழுதிய ராசியோ என்னவோ, அதன் பின் இப்போதெல்லாம் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் சொல்லி விடுகிறார் இறுதியில் !

டிவியில் படம்: கற்றது தமிழ்

கலைஞர் டிவி ஆறாம் ஆண்டு சிறப்பு நிகழ்சிகள் கொண்டாடி மகிழ்ந்தது. கற்றது தமிழ் துவங்கி அரை மணிக்கு பின் பார்த்தேன். வித்யாசமான கான்செப்ட். பதிவெழுத ஆரம்பித்த புதிதில் இங்கு எழுதிய விமர்சனம் நினைவில் வந்து வந்து போனது. அஞ்சலி மேக் அப் இன்றி பார்க்க ரொம்ப சுமாராய் இருந்தார். முதல் படம் என்கிற அளவில் நடிப்பு ஓகே. ஜீவா நடிப்பு இம்முறை பார்க்கும் போது இன்னும் அசத்தியது. ராம் என்கிற அற்புத இயக்குனர் அந்த படம் எடுத்து ஐந்தாறு வருடம் ஆகியும் இன்னும் வேறு படம் ரிலீஸ் செய்யலை என்பது மனதை தைக்கிறது. பாலு மகேந்திரா + மகேந்திரன் கலந்து செய்த கலவையாய் இருக்கும் ராமின் இயக்கம். விரைவில் அவர் நடித்து இயக்கும் படம் வெளியாக உள்ளது. காத்திருக்கிறோம் ராம் ! 

சூப்பர் சிங்கர் அப்டேட்

டாப் 5-க்கு ஒரு வழியாய் வந்து சேர்ந்துள்ளது சூப்பர் சிங்கர். இனி வெளியானவர்கள் உள்ளே வர ஒரு ஒய்ல்ட் கார்ட் ரவுண்ட் வைத்து அவர்களும் வந்ததும் குவார்டர் பைனல், செமி பைனல் போன்றவை நடக்கும். இந்த வாரம் தாண்டவம் டீமில் விக்ரம், இசை அமைப்பாளர் GV பிரகாஷ்,   பாடகி சைந்தவி ஆகியோர் வந்தனர். செலிபரேஷன் ரவுண்ட் என யாரையும் அவுட் ஆக்கலை. தினம் ஐம்பதாயிரம் பரிசு என்று வைத்து சுகன்யா மற்றும் பிரகதி இரு முறை ஐம்பதாயிரம் வென்றனர். மற்றவர்களுக்கு அல்வா. அனு இப்போது நன்கு பாட ஆரம்பித்துள்ளார். "உள்ளத்தில் நல்ல உள்ளம்" என்ற ஒரு நல்ல பாட்டை பாடியதில் இன்னமும் ஓட்டி கொண்டிருக்கிறார் கெளதம்.கொஞ்ச நாள் ஜவ்வு மாதிரி இழுத்து இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வரும் சூப்பர் சிங்கர் 

கல்யாண மாலை 

ரொம்ப வருடமாக வரும் இந்த நிகழ்ச்சியை எப்போதாவது சற்று நக்கலுடன் பார்ப்பேன். ( 25 வயசுல கல்யாணம் ஆன கொழுப்பு !) சில நேரம் பாவமாகவும் இருக்கும்.

சிறு பட்டிமன்ற டைப் விவாதம் கூட நடக்கும். இம்முறை எனது ஆசிரியர் பத்மஸ்ரீ. மனோகரன் அவர்கள் மிக அட்டகாசமாய் பேசியதை பார்த்து அசந்து போனேன். மனோகரன் அவர்கள் CA இன்ஸ்டிடியூட்டில் President ஆக இருந்தவர். டேக்ஸ் டியூஷன் சென்றுள்ளேன். மிக நல்ல மனிதர். ஏழைகளிடம் பணமே வாங்க மாட்டார். " சார் எங்க பாமிலி கஷ்டத்தில் இருக்கு. பாதி பணம் தர்றேன்" என்று அவரிடம் கேட்டு அப்படியே தருவோர் பலர். இன்போசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இயக்குனர் ஆக இருந்துள்ளார்/ இருக்கிறார் அவர் இந்தியா பற்றி சொன்னதில் ஒரு முக்கிய கருத்து மட்டும் சொல்கிறேன் "அமெரிக்க மக்கள் தொகை தேங்கி விட்ட ஒன்று. ஐரோப்பிய மக்கள் தொகை குறைந்து வரும் ஒன்று. சீன மக்கள் தொகையில் வயதானவர்களே அதிகம். இந்திய மக்கள் தொகையில் மட்டும் தான் 48 % - 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். இத்தனை இளைஞர்களை கொண்ட நம் இந்தியா வருங்காலத்தில் மிக பெரும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் ".

நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டு விழா 

நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டு விழா ஜெயா டிவி யில் நடந்ந்ந்ந்ந்ந்தது ! பின்னே ? ராஜா வரவே முக்கால் மணி நேரம் ஆச்சு. நீதானே- யிலிருந்து முதல் பாட்டு பாடியது ஒண்ணரை மணி நேரம் கழித்து. ராஜா சில பழைய பாட்டு ரிகார்ட் செய்த போது நடந்த சுவாரஸ்ய நினைவுகளை சொன்னது அருமையா இருந்தது. வழக்கமாய் மேடையில் கலாய்க்கும் சந்தானமே (படத்தில் அவர் இருக்கிறது இப்ப தான் தெரியும் !) ரொம்ப அடக்கி வாசித்தார். பாரதிராஜா பேச்சு மிக நெகிழ்ச்சி. படத்தில் நிறைய பாட்டு கேட்க கேட்க பிடிச்சிடும் என நம்பிக்கை வருது !

42 comments:

 1. வணக்கம்..டிவி நிகழ்ச்சியினால் ரொம்ப பாதிக்கபட்டு இருப்பீங்க போல

  ReplyDelete
 2. தொல்லைகாட்சி என்று சொல்லி விட்டு எல்லாம் நல்லதாகவே சொல்லி இருக்கறீங்க..

  ReplyDelete
 3. எந்த நிகழ்ச்சியுமே தொடர்ந்து பார்ப்பதில்லை மோகன்.

  நேற்று நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டு விழா ஒரு மணி நேரம் தொடர்ந்து பார்த்தேன். ரொம்ப இழுத்து விட்டார்கள் - அணைத்து விட்டேன்...

  மற்ற நிகழ்ச்சிகள் பற்றி கருத்து சொல்ல ஒன்றும் இல்லை - ஏனெனில் பார்ப்பதில்லை!

  த.ம. 3

  ReplyDelete
 4. சரியான தலைப்பு:)! தொல்லை.. என அதன் பக்கம் அதிகம் செல்வதில்லை ஆதலால் நல்ல நிகழ்ச்சிகளும் நழுவிப் போகின்றன. இரண்டையும் வகைப்படுத்தித் தொடருங்கள்.

  ReplyDelete
 5. புதிய தலைமுறை மற்றும் விஜய் தொலைக்காட்சியில் வரும்
  சில நிகழ்சிகள் தவிர மற்ற எந்த ஊடகமும் வெறுப்பாய் தான் உள்ளது நண்பரே...

  ReplyDelete
 6. ஹப்பா... இத படிச்சு முடிக்கும் போதே கண்ணை கட்டுது. எப்படி சார் இவ்ளோ ப்ரோக்ராம் பார்க்கறிங்க.. டைம் கிடைக்குதா உங்களுக்கு!! பார்த்ததோட அழகா பதிவும் போடறிங்க.. நிறைய டைம் எடுக்குமே...

  //அமெரிக்க மக்கள் தொகை தேங்கி விட்ட ஒன்று. ஐரோப்பிய மக்கள் தொகை குறைந்து வரும் ஒன்று. சீன மக்கள் தொகையில் வயதானவர்களே அதிகம். இந்திய மக்கள் தொகையில் மட்டும் தான் 48 % - 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். இத்தனை இளைஞர்களை கொண்ட நம் இந்தியா வருங்காலத்தில் மிக பெரும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் ".// - நல்ல விஷயம்... நடந்தால் மேலும் சந்தோசம் தான்..

  உன்னால் முடியும் - நிகழ்ச்சி பார்க்கும் ஆவல் வருகிறது சார்.. பகிர்விற்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 7. தொலைக்காட்சியை புட்டு புட்டு வெச்சிட்டீங்க..

  ReplyDelete
 8. UNNAL MUDIYUM IS A GOOD & MUST SEE PROGRAMME.

  ReplyDelete
 9. அவ்வப்போது உன்னால் முடியும், நீயா.. நானா..? பார்ப்பதுண்டு...

  மற்ற நிகழ்ச்சிகள் - மின்சாரம் இருக்கணுமே ...

  ReplyDelete
 10. சுவாரஸ்யம்தான்.
  பத்மஸ்ரீ மனோகரன் அவர்கள் சொல்வது ஊக்கமளிக்கிறது.
  நீ.எ.பொ. வ. = உண்மைதான்! ரொம்ப இழு இழு என்று இழுத்தார்கள். வி ஐ பிக்களுக்குப் பிடித்த பாடல் வரிகளை அங்கேயே உடனே உடனே கார்த்திக் ரெண்டு ரெண்டு வரி இழுத்தது சுவை. குறிப்பாக ஆசை நூறு வகை!

  ReplyDelete
 11. சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க.. நிகழ்ச்சி விடை தெரிந்தும்கூட வேண்டுமென்றே நிறையப் பேர் தப்புத் தவறுமாக சொல்கிறார்கள். மொத்த நிகழ்ச்சியுமே பில்டப்போ என்றுதான் எனக்குத் தோணுது. (சிலசமயம் பார்த்ததுல) மத்தபடி தொலைக்காட்சி பாக்கற பழக்கம் இல்லாததால முழுசா கருத்து சொல்ல முடியலை. பார்த்த உங்க பொறுமைக்கு ஒரு சல்யூட்.

  ReplyDelete
 12. அதிகமாக தொல்லைக்காட்சி பார்க்காவிட்டாலும் ஒருசில நிகழ்ச்சிகள் அருமையே.நீயா நானா கலாய்ப்பு அருமை அதிலும் பெண்கள் நன்றாக கலாய்த்தார்கள்.
  ’வீடுதிரும்பலில் எழுதிய ராசியோ என்னவோ, அதன் பின் இப்போதெல்லாம் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் சொல்லி விடுகிறார் இறுதியில்’--ஆமாங்க நல்லவிஷயம் நடந்திருக்கு.

  ReplyDelete
 13. ள், ரசித்த சில விஷயங்கள் எழுத அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 14. நான் பார்த்தவரை சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க.. நிகழ்ச்சி டுபாக்குர் நிகழ்ச்சின்னு நினைக்குறேன். ஒரு நிகழ்ச்சியில தமிழ்நாட்டு அரச சின்னமான கோபுரம் எந்த ஊர் கோபுரம்ன்னு கேட்டதுக்கு, ஒரு சென்னைவாசி, அதிலும் படித்து அரசு வேலையில் இருப்பவர் வடபழனி கோவில் கோபுரம்ன்னு சொன்னார். அதிலிருந்து அந்த நிகழ்ச்சியை நான் பார்ப்பதே இல்லை.

  ReplyDelete
 15. நல்ல தொகுப்பு...

  ReplyDelete
 16. நான் டிவியே பார்ப்பதில்லை நியூஸ் உள்பட.., ஆனா, ஜெயா ப்ளடிவில ஞாயிறு மாலை 5.30 டூ 6.00 ஆதித்யா தொகுத்து வழங்கும் கேளுங்கள் நிகழ்ச்சி மட்டும் டைம் கிடச்சு டிவி ரிமோட் கிடைச்சா பார்ப்பேன்.

  ReplyDelete
 17. அஃபீஸ் போகனும், மதனிக்கு வீட்டு வேலைகளில் ஹெல்ப் பண்ணனும், இதில்லாம கேமரா கொண்டு போய் படமெடுத்து பதிவை தேத்தனும்..., இம்புட்டு வேலைகளுக்கு இடையே இம்புட்டு டிவி நிகழ்ச்சி பார்க்குறீங்களே?!நீங்க கிரேட்தான் சகோ

  ReplyDelete
 18. நல்ல பகிர்வு. இப்போதைக்கு சூப்பர் சிங்கர் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 19. அதான் டிவி பக்கமே போவதில்லை.

  ReplyDelete
 20. இந்நிகழச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது இருக்கும் அழகு உங்கள் பதிவிலும் இருந்தது ரசிக்க முடிந்தது..
  வாழ்த்துக்கள் தொடர்ந்து விமர்சியுங்கள்

  ReplyDelete
 21. சிலநேரங்களில் பார்ப்பதுண்டு.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. விமரிசனம் சுவையாக இருந்தது.

  ReplyDelete
 24. கோவை நேரம்: ரைட்டு அடுத்த தடவை பாத்துக்கலாம் (ரொம்ப திட்டினா வீட்டம்மா என்னை திட்டுறாங்க)

  ReplyDelete
 25. நண்டு : நன்றி நண்பா

  ReplyDelete

 26. வெங்கட்: பரவால்ல நீங்க நல்லவர்

  ReplyDelete
 27. ராமலட்சுமி மேடம்: நீங்கள் சொல்வது நல்ல கோணம்; உன்னால் முடியும் போல அரிதான நல்ல நிகழ்ச்சி அறிமுகம் செய்வோம்

  ReplyDelete

 28. மகேந்திரன்: நன்றி நண்பா

  ReplyDelete
 29. சமீரா : நன்றி ! துணி மடிப்பது உள்ளிட்ட வேலை செய்து கொண்டே பார்ப்பேன். திங்கள் டு வெள்ளி ஒரு மணி நேரத்துக்கு மேல் டிவி பார்ப்பதில்லை. வார கடைசியில் ஐந்தாறு மணி நேரம் பார்க்கிற மாதிரி ஆகிடுது. சில நேரம் கணினியில் இருந்து கொண்டே டிவி பார்ப்பதும் உண்டு.

  ReplyDelete
 30. மதுமதி: நன்றி கவிஞரே

  ReplyDelete
 31. ஷனுக்: ஆம் உன்னால் முடியும் மிக நல்ல ப்ரோகிராம் !

  ReplyDelete

 32. தனபாலன் சார்: ஆம் உண்மை தான்

  ReplyDelete
 33. ஸ்ரீராம்: பலரும் நீ. ஏ. பொ பார்த்துள்ளது தெரிகிறது நன்றி

  ReplyDelete
 34. பாலகணேஷ்: //சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க.. //எனக்கு அப்படி தோணலை அண்ணே நன்றி

  ReplyDelete

 35. உமா மேடம்: ஒரே நேரத்தில் நம் பதிவு ரெண்டு, மூணு படித்தமைக்கு மிக நன்றி

  ReplyDelete
 36. ராஜ ராஜேஸ்வரி : நன்றிங்க

  ReplyDelete
 37. ராஜி said...

  அஃபீஸ் போகனும், மதனிக்கு வீட்டு வேலைகளில் ஹெல்ப் பண்ணனும், இதில்லாம கேமரா கொண்டு போய் படமெடுத்து பதிவை தேத்தனும்..., இம்புட்டு வேலைகளுக்கு இடையே இம்புட்டு டிவி நிகழ்ச்சி பார்க்குறீங்களே?!நீங்க கிரேட்தான் சகோ
  *******
  நம்ம கஷ்டம் உங்களுக்காவது தெரியுதே. அந்த பதிவு தேத்தனும் என்ற வார்த்தையில் எதோ பொறாமை தெரியிற மாதிரி இல்லை :))

  ReplyDelete
 38. கோவை டு தில்லி நன்றிங்க

  ReplyDelete
 39. ஹாட் கார்த்திக்: மிக மகிழ்ச்சி

  ReplyDelete

 40. மாதேவி: நன்றிங்க

  ReplyDelete

 41. ஜனா சார்: மகிழ்ச்சி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...