Wednesday, September 19, 2012

சுந்தர பாண்டியன் - விமர்சனம்

கதை

நண்பன் காதலுக்கு உதவ போகிறார் ஹீரோ. அந்த பெண்ணோ ஹீரோவையே காதலிக்கிறாள். இடையில் சிறு கைகலப்பில் ஒருவனை பஸ்ஸில் இருந்து தள்ளி ஜெயிலுக்கு போகும் ஹீரோ வெளியே வந்து ஹீரோயினை திருமணம் செய்து கொள்ள இரு வீட்டிலும் சம்மதம் வாங்குகிறார். நண்பன் என்ன செய்தான்? ஹீரோ ஹீரோயினை கை பிடித்தாரா? விடை வெண் திரையில் காண்க !

நடிப்பு

சசிகுமார் மீண்டும் நாடோடிகள் மாதிரியே ஒரு பாத்திரத்தில் ! விஜய T. ராஜேந்தர் போல் இன்னும் எத்தனை படத்துக்கு தாடியோடு நடிப்பாரோ ? சீக்கிரம் கெட் அப் மற்றும் கதை களன் மாற்றுங்க சார் ! நட்பு- காதல் -துரோகம் என்ற களத்திலேயே தான் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி மற்றும் இந்த படமும் இருக்கிறது.


ஹீரோயின் லட்சுமி மேனன்.. அதிசயமாய் நன்கு நடிக்க தெரிந்த ஒரு நடிகை ! ஆனால் முகம் தான் அவர்கள் சொல்கிற ப்ளஸ் டூ மற்றும் கல்லூரி மாணவிக்கு பொருந்தாமல் PG படிக்கிற மாணவி போல் சில நேரம் முற்றலாய் இருக்கு ! ரேவதி மாதிரி நன்கு நடிக்க தெரிந்த ஒரு நடிகை. எனவே தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்று நம்புகிறேன் !

படத்தில் செமையாய் ஸ்கோர் செய்வது சந்தேகமே இன்றி பரோட்டா சூரி தான் ! படத்தை முழுக்க பார்க்கவும் காரணம் அவர் அடிக்கிற லூட்டி தான் ! அவருக்குள்ள வசனங்களும் சரி, அதை அவர் பேசும் விதமும் சரி அசத்தல் ! ஹீரோயின் காதலிப்பதாக சொன்னதும் " இனிமே நீ ஏண்டா தண்ணி அடிக்கிறே? அவன் இல்லே அடிக்கணும்?" என்பதும், " ஏண்டா... நானும் உன் கூடவே இருக்கேன். உனக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரியுது?" என்பதாகட்டும் அட்டகாசம்.

அப்புக்குட்டி சின்ன பாத்திரத்தில் வந்தாலும் அழகாய் செய்துள்ளார். இது மாதிரி ஆட்கள் கிராமத்தில் நிறைய பார்க்கலாம். ஒரு பெண்ணுக்கு பிடிக்கலை என்று தெரிந்த பின்னும் சுற்றுவது, அவள் வேறு ஒருவனை காதலிப்பது தெரிந்தும் தகராறு செய்வது என இயல்பாய் செய்துள்ளார்.

தென்மேற்கு பருவ காற்றில் ஹீரோவாய் வந்த விஜய் சேதுபதி வில்லன் பாத்திரத்தில் வருவது ஆச்சரியமாய் இருக்கு. பெரிய அளவு ஸ்கோப் இல்லை. ஓகே

இனிகோ பிரபாகரனுக்கு செமையான பாத்திரம். நல்ல வேளை அந்த கடைசி டுவிஸ்ட் தெரியவில்லை. சற்று சினிமாட்டிக் என்றாலும் அது நல்ல திருப்பம் தான் !

பாட்டு - சண்டை

நாலு பாட்டுகள். முதல் பாட்டு - ஹீரோ அறிமுக சாங்க். கிழவிகளுடனும் பின் தாவணி பாப்பாகளுடனும் சசிகுமார் ஆடுவது செம போர். மற்ற பாட்டு எல்லாம் மாண்டேஜ் சாங்காக வந்து கதையை நகர்த்த உதவுவதால் பரவாயில்லை. ஆனால் பாட்டை தனியே கேக்கிற மாதிரி இல்லை. பாட்டு நன்கிருந்தால் படம் ஹிட் ஆக அது உதவியிருக்கும் :((

இரண்டு சண்டைகள்- இரண்டும் இடைவேளைக்கு பின் தான் வருகிறது. கடைசி சண்டை டூ மச். நடு மண்டையில் ஓங்கி போட்டாலும் கத்தியில் குத்தினாலும் ஹீரோவுக்கு மட்டும் சினிமாவில் ஒன்றுமே ஆவதில்லை ! ஆனால் அவர் ஒரு அடி அடித்தாலே மற்றவர்கள் எழ முடியாத படி ஆகிடுது !

வசனம்-இயக்கம்

பொதுவாய் சசிகுமார் படங்களில் வசனம் நன்கு அமைந்து விடும். இங்கும் அப்படியே. சில இடங்களில் வசனம் செமையாய் இருக்கு என்றாலும் மிக அதிக நேரம் பேசி கொண்டே இருக்கிறார்கள். பேசாத இடங்கள் மிக குறைவு. கடைசி காட்சியில் சண்டை முடிந்ததும் சசி பேசுவது மிக குறைவாக ஆனால் சொல்ல வேண்டியதை சரியே சொன்னது பாராட்டுக்குரியது.

அறிமுக இயக்குனர் பிரபாகரன் நிச்சயம் ஹிட் ஆகும் என நம்பக்கூடிய ஒரு கதையை கையில் எடுத்துள்ளார். அனாவசிய காட்சிகள் இல்லை. கதையை ஒட்டியே தான் எல்லா காட்சியும் செல்கிறது. மார்கெட் உள்ள ஹீரோ, நடிக்க தெரிந்த ஹீரோயின், நல்ல காமெடி ஆகியவை அவருக்கு கை கொடுக்கிறது. ஆனால் சசியை மீண்டும் அதே மாதிரி பாத்திரத்தில் பார்ப்பதும், பாடல்கள் மற்றும் இசையும் சற்று பின்னடைவு.

ஆபாசம் இன்றி, (கடைசி காட்சி தவிர) அதிக வன்முறை இன்றி படத்தை எடுத்தமைக்கு நிச்சயம் பாராட்டலாம்

சுந்தர பாண்டியன்- நாடோடிகள், சுப்ரமணிபுரத்துக்கு கீழே. போராளி, ஈசனுக்கு மேலே. 

ஒரு முறை பார்க்கலாம் !

23 comments:

 1. அண்ணே சினிமா விமர்ச்சனத்திலும் கலக்கறீங்க...

  ReplyDelete
 2. ஒருமுறை பார்க்கும் எண்ணமிருக்கிறது
  நல்ல அலசல் விமர்சனம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. விமர்சனம் நன்று.

  நன்றி.

  ReplyDelete
 4. சசிகுமார் படம் இதுவர பாத்ததில்லை

  ReplyDelete
 5. சினிமா பதிவா?! பதிவுக்கு நன்றி(தெரியாத, புரியாத விஷயத்துக்கு இப்படித்தான் கமெண்ட் போடுவேன்)

  ReplyDelete
 6. சசிகுமார் நடித்துள்ள புது படமா... பழைய படம் எதோதான் ரீ ரிலீஸ் என்று அல்லவா நினைத்தேன்!! :)))

  //ஒருமுறை பார்க்கலாம்//

  பார்த்துடுவோம்!

  ReplyDelete
 7. enaku oru santhegam... tha.ma 3 naa enna???

  ReplyDelete
 8. good film for time pass... (no boring scenes in this movie)

  ReplyDelete
 9. மோகன்ஜி,

  கலக்குறிங்க,சென்னை பதிவர் சந்திப்பு என்னை பொறுத்தவரை ஒரு திருப்புமுனைதான் ஏனென்றால், அதுவரை எனக்கு தெரிந்தது சில பதிவர்கள்தான்.
  1.jackie
  2.cable
  3.suvanappriyan.
  4.aanamunaa senthil
  5.krp senthil

  பதிவர் சந்திப்புக்கு பிறகு உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.
  உண்மையிலேயே உங்கள் பயணக்குறிப்புகள் ஆசியாநெட்டில் சந்தோஷ் குளங்கரா வின் "சஞ்சாரம்"
  பார்ப்பது போலிருந்தது.
  விமர்சனங்களை கண்டு பயப்படாமல் எழுதவும்.

  ReplyDelete
 10. நன்றி சங்கவி. அப்பப்போ விமர்சனம் எழுதுறேன் ரெகுலரா இல்லை

  ReplyDelete

 11. சௌந்தர்: ஆசிரியர் நீங்க சொன்னா ரைட்டு

  ReplyDelete
 12. நன்றி ரமணி சார்

  ReplyDelete
 13. மாதேவி: நன்றி

  ReplyDelete

 14. முரளிதரன்: என்ன சார். நாடோடிகள் அடிக்கடி டிவி யில் போடுவானே? அந்த படம் கூட பாக்கலையா? நாடோடிகள் நல்லாருக்கும்

  ReplyDelete
 15. ராஜி: நன்றிக்கு நன்றி

  ReplyDelete

 16. ஸ்ரீராம்: நன்றி சார். முடிந்தால் பாருங்கள்

  ReplyDelete
 17. ஜெட்லி: த. ம 3 என்றால் , தமிழ் மணத்தில் மூன்றாவது ஓட்டு அவர்கள் போட்டார்கள் என்று அர்த்தம் (தம்பி நீ எவ்ளோ சீனியர்? இது தெரியாமல் கேட்குறியே ? நீ ஓட்டுரியோன்னு டவுட்டா இருக்கு )

  ReplyDelete
 18. ஆம் நன்றி வடிவேலன்

  ReplyDelete
 19. நன்றி அசீம் பாஷா. மிக மகிழ்ச்சி நன்றி

  ReplyDelete
 20. //நட்பு- காதல் -துரோகம் என்ற களத்திலேயே தான் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி மற்றும் இந்த படமும் இருக்கிறது//
  படம் பார்க்காமல் தொ.கா. விளம்பரங்களைப் பார்த்தே என் மனைவி அடித்த கமெண்டும் இதுதான்.

  ReplyDelete
 21. மிகவும் நல்ல விமர்சனம் ....விமர்சனத்துக்கு நன்றி.......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...