Wednesday, September 26, 2012

வானவில் : De வில்லியர்ஸ்சும், T .ராஜேந்தரும்

பார்த்த படம்: முக மூடி

இயக்குனர் மிஷ்கின் படங்களில் ஆகசிறந்த கொடுமை ! சூப்பர் மேன் டைப் கதை என்கிற அருமையான தளத்தை வைத்து கொண்டு எவ்வளவு சுவாரஸ்யமான படம் செய்திருக்கலாம் ! குழந்தைகள் தொடங்கி அனைவரையும் கவர்ந்திருக்கலாம். மிக ஏமாற்றம். முகமூடியின் கதை என்பதால் இரவிலேயே எடுத்துள்ளனர். எத்தனை பேர் தூக்கம் இன்றி பல மாதம் உழைத்துள்ளனர் . ஹும் :((



இசை அமைப்பாளர்கள் பொதுவாய் மற்றவர்கள் பேசாத போது தான் ரீ ரிகார்டிங் செய்வர். இந்த படத்தில் பேசுகிற இடத்தில கூட மியூசிக்கை விட்டு வைக்கலை. மிஸ்கினின் லோ ஆங்கில ஷாட்கள் வர வர வெறுப்பேற்றுகிறது.

மிஷ்கின் என்ற திறமை வாய்ந்த படைப்பாளியிடம் நிச்சயம் நல்ல விஷயங்களை இனி வரும் படங்களில் எதிர் பார்க்கிறோம் !


கிரிக்கெட் : கிரிஸ் கெயில் Vs டி வில்லியர்ஸ்

T20-ல் இரண்டு இணையற்ற பேட்ஸ்மேன் என்றால் அது கிரிஸ் கெயில் மற்றும் டி வில்லியர்ஸ் !.

கெயில் T20-ஐயே ஒன் டே மேட்ச் போல ஆடுகிறார். மிக அழகாய் நேரம் எடுத்து கொண்டு, லூஸ் பால்களை வெளுப்பது, பின் சுமாரான பவுலரை நாசம் செய்வது என மிக நிதானமாய் பிளான் செய்து ஆடுகிறார்

ஆனால் டி வில்லியர்ஸ் ஆட்டம் தான் நிஜ சரவடி. செகண்ட் டவுன் அல்லது தேர்ட் டவுன் இறங்கும் இவருக்கு எப்பவும் இருப்பது மிக குறைந்த பந்துகளே. அதில் இவர் ஆடும் ஆட்டம் சான்சே இல்லை ! வேக பந்து வீச்சாளரை ரிவர்ஸ் ஸ்வீப் செய்வதில் இருந்து, பல பீல்டர்கள் பவுண்டரி அருகே இருக்கும் போது கவலைப்படாமல் அடிக்கும் சிக்சர் வரை .. எனது பாவரைட் பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் தான் !

T- 20. சூப்பர் 8 அப்டேட்

சூப்பர் 8 -ல் இந்தியா இருக்கும் க்ரூப் செம கஷ்டமான அணிகள் ! மறு க்ரூப் ஓரளவு ஈசியான அணிகள் !

குருப் 1: இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள்

குருப் 2: இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான்
ஒரு அணி தன் க்ரூப்பிலிருக்கும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை ஆடவேண்டும். ஒவ்வொரு க்ரூப்பிலும் இரு அணிகள் செமி பைனல் செல்லும்.

செமி பைனல் செல்ல இந்தியா தனது மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும். அல்லது கடந்த இரு முறை போல சூப்பர் 8-உடன் திரும்ப வேண்டியிருக்கும் !

துளசி -கோபால் மணிவிழா

சென்னையில் மிக சிறப்பாக நடந்தது இவ்விழா. மாலை வரவேற்புக்கு பதிவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பல பதிவர் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு பேசிக்கொள்ள வாய்ப்பளித்த துளசி மேடமுக்கு நன்றி.


விழாவில் சென்னையில் ஏழை குழந்தைகளுக்கு ஒரு பள்ளி வைத்து நடத்தும் டாக்டர் அசோக் தம்பதியையும், மற்றும் எய்ட்சால் உயிரிழந்தவர்கள் உடலை அவர்கள் உறவினரே வாங்கி கொள்ளாத போது, தான் எடுத்து சென்று அடக்கம் செய்யும் நண்பரையும் துளசி மேடம் மேடையில் அறிமுகம் செய்தார்கள். மேலே உள்ள படத்தில் இருப்பது இவர்களே !  சேவை புரியும் இவர்களுக்கு எமது வணக்கமும் வாழ்த்துகளும் !

போஸ்டர் கார்னர்  

வழக்கமாய் கிண்டலான போஸ்டர் தான் போடுவோம். முதல் முறை ஒரு உருப்படியான போஸ்டர் பகிர்கிறேன். இத்தகவலில் சிலவாவது நமக்கு தெரியாமல் இருக்கலாம் !




T. ராஜேந்தரின் வடகறி பாடல்

இந்த வீடியோவை பார்த்ததும் முதலில் தோன்றிய எண்ணம்: மேடையில் இருப்பவர்கள் சிலரால் எப்படி சிரிக்காமல் இருக்க முடிந்தது என்று தான்.

" இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி...."... என்னா தத்துவம் !




பதிவர் பக்கம்  

ஜெய தேவ் தாஸ் என்கிற பெயர் ப்ளாக் உலகில் ஏற்கனவே பிரபலம் ! சமுத்ரா, வீடுதிரும்பல் போன்ற தளங்களில் முன்பு மிக விரிவாய் கமன்ட் போடுவார். பெங்களூரில் வசிக்கும் தாஸ் சில மாதங்களாக தனக்கான புதிய தளம் துவக்கியுள்ளார். எழுதிய நான்கைந்து பதிவுகளிலேயே பரவலாய் பலரின் பார்வையும் இவர் மேல் பட்டுள்ளது. பிரபல பதிவரை கலாய்க்க ஊட்டி போனேன் என்கிற இவர் பதிவு பயண கட்டுரைக்கு முதல் முயற்சி. குறிப்பாக ATM பின் குறித்த இவரின் பதிவை அவசியம் வாசியுங்கள் ! வாழ்த்துகள் தாஸ் !

33 comments:

  1. //முகமூடி//

    முதல் பாதி கூட பரவாயில்லை...இரண்டாம் பாதி ஏதோ அவசர அவசரமாக எடுத்தது போல இருந்தது

    ஆபீசுக்கு கால் பண்ணி, I have severe 'Chronic Obstructive Lung Disease', so I can't come todayன்னு சொன்னா, ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன் :))

    ReplyDelete
  2. //De வில்லியர்ஸ்சும்//

    ஏன் இந்த தங்க்லீஷ் வெறி? :))

    முன்னெல்லாம் பட டைட்டில்ல "Harris ஜெயராஜ்"னு வரும்...அது போல!

    ReplyDelete
  3. ரகு: சும்மா ஜாலிக்கு தான். கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே என்று தான் :)))

    ReplyDelete
  4. முகமூடி - படம் பார்க்கவில்லை...

    போஸ்டர் கார்னர் : நன்றி...

    பதிவர் பக்கம் : பார்க்கிறேன்...

    ReplyDelete
  5. நான் இன்னும் முகமூடி படம் பார்க்கவில்லை...உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. வானவில்- கலர்ஃபுல் :-)

    ReplyDelete
  7. வழமை போல வானவில் அருமை. வடகறி! :))

    ReplyDelete
  8. போஸ்டர் கார்னர் : நன்றி...

    ReplyDelete
  9. ரொம்ப தைரியம் தான் முகமூடியெல்லாம் ஏன் போறீங்க??

    ReplyDelete
  10. அருமையான கலவை வானவில்..

    ReplyDelete
  11. மேடையில் இருப்பவர்கள் சிலரால் எப்படி சிரிக்காமல் இருக்க முடிந்தது என்று தான்.//- இதே டவுட் தான் சார் எனக்கும்.. என்னால சிரிப்பா அடக்கமுடியாம சிரிச்சிட்டேன்.. பாவிங்க கல்லு குண்டு மாதிரி எப்படிதான் மேடைல இருந்தனுன்களோ தெரியல...
    உங்கள் போஸ்டர் நல்ல உபயோகம் சார்.. நியூஸ் தவிர எல்லாமே எனக்கு புதுசு.. பகிர்விற்கு நன்றிகள்..

    ReplyDelete
  12. நீங்க சொல்லியிருக்கற மேட்டர் எல்லாம் அருமைன்னாலும் அந்த போஸ்டர் கார்னர் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. சூப்பரய்யா.

    ReplyDelete


  13. பல் சுவைப் பதிவு கலக்கல்!

    ReplyDelete
  14. /துளசி மேடம் மேடையில் அறிமுகம் செய்தார்கள்./

    பாராட்டுக்குரிய மனிதர்கள்!

    ReplyDelete
  15. "சேவை புரியும் இவர்களுக்கு எமது வணக்கமும் வாழ்த்துகளும் !" எனது வாழ்த்துக்களும்.

    வட கறி பாடல் :)))

    ReplyDelete
  16. மோகன்................!!! ஒரே வார்த்தை............. உங்க மனசு ரொம்ப விசாலம்!! கடையில வியாபாரம் நல்லா நடக்குது!! நன்றி.

    ReplyDelete
  17. ஒரு ஊதல் சத்தம் வருகிறதே - எங்கிருந்து தருகிறார் ராஜேந்தர்?

    ReplyDelete

  18. ப்ரியா: நன்றி

    ReplyDelete
  19. வாங்க அமைதி சாரல்: நன்றி

    ReplyDelete

  20. வெங்கட்: திருச்சியில் இன்டர்நெட் கனக்ஷன் வந்துடுச்சோ? நன்றி

    ReplyDelete
  21. நன்றி சமுத்ரா

    ReplyDelete
  22. நன்றி சமுத்ரா

    ReplyDelete
  23. அமுதா கிருஷ்ணன் :))

    ReplyDelete

  24. கோவை 2தில்லி : நன்றிங்க

    ReplyDelete
  25. சமீரா: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  26. பாலகணேஷ்: போஸ்டர் பலருக்கும் பிடித்தது தெரிகிறது நன்றி

    ReplyDelete

  27. வணக்கம் ராமானுசம் ஐயா தங்கள் வரவுக்கு நன்றி

    ReplyDelete

  28. ராமலட்சுமி மேடம்: ஆம் நன்றி

    ReplyDelete
  29. மாதேவி: வாங்க மேடம் நன்றி

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete

  31. தாஸ்: மகிழ்ச்சி. வியாபாரம் நன்கு நடக்கட்டும் மகிழ்ச்சி கலக்குங்க

    ReplyDelete

  32. அப்பாதுரை : எப்படின்னு தெரியலை. அவர் தானாவே கூட சவுண்ட் விட கூடிய ஆள் தான்

    ReplyDelete
  33. முகமூடி 'கிடைத்தால்' பார்க்கலாம் என்கிறீர்களா வேண்டாமா?!!

    கெயில்-டி விலியர்ஸ்.. இருவருமே ரசிக்கக் கூடியவர்கள். இப்போது கூட கெயில் 'அடித்து'க் கொண்டிருக்கும் மேட்ச் ஆரம்பித்திருக்கிறது!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...