Thursday, September 12, 2013

வானவில்- ஊதா கலரு ரிப்பன்-பதிவர் திருவிழா ப்ளஸ் மைனஸ்


ஏன் பதிவு எழுதலை 

"10 நாளாய் ஏன் பதிவு இல்லை ?" என ஒரே போன் மற்றும் மெயில்.. 2 வாரம் போஸ்ட் போடாம ஒதுங்கி இருக்கலாம்னு பார்த்தா முடியலை...

இப்படி இந்த பதிவை ஆரம்பிக்க ஆசை தான். ஆனால் ..........முதல் வாரம் அதிகம் பேர் கேட்கலை.

இந்த வாரம் நிறையவே விசாரிப்புகள் !

" காட்சியில் இல்லையென்றால் காணாமல் தான் போவாய் " என்று செல்லும் ஒரு கவிதை வரி.. நினைவுக்கு வருகிறது !

கம்பனி சட்டம் கெஜட்டில் வெளியாகிடுச்சு. ஆபிஸ் வேலை மற்றும் வீட்டில் செய்யும் உதவிகள் ......இதுக்கு நடுவே கிடைக்கிற கொஞ்சம் ப்ரீ டைமில் புது சட்டத்தை நிறைய படிச்சு அப்டேட் பண்ணிக்க வேண்டியிருக்கு. மேலும் வாரம் ஓரிரு இடத்திலாவது கம்பனி சட்டம் குறித்து பேச வேண்டியுள்ளது. தொடர்ந்து பதிவு எழுத முடியாமைக்கு காரணம் இது தான்.

இனி வீடுதிரும்பலில் பதிவுகள் தினம் வராது ! வாரம் எத்தனை பதிவு வரும்னு எந்த உறுதிமொழியும் கொடுக்க முடியலை. வாரம் 1 அல்லது 2 பதிவு எழுத முயற்சி செய்கிறேன் !

சென்னை பதிவர் திருவிழா 

அனைவரும் எழுதி முடித்து விட்ட செப்டம்பர் 1 பதிவர் திருவிழா பற்றிய ஒரு குவிக் ப்ளஸ் அண்ட் மைனஸ் இதோ :

ப்ளஸ்

விழா குழுவில் இருந்த நண்பர்களின் அட்டகாச பிளானிங் ; அயராத உழைப்பு . சிறு சிறு தடைகள் வந்த போதும் இலக்கை சென்று சேர்ந்தது

மதிய சாப்பாட்டில் - இம்முறை நான் வெஜ் மற்றும் வெஜ் இருந்தது .. இரண்டுமே.. நன்றாகவும்

நான்கு பதிவர்களின் புத்தகங்கள் வெளியாகியது

தம்பி சங்கவியின் புத்தக வெளியீடு 

பாமரனின் பேச்சு

சென்ற ஆண்டு விழாவின் போது இணையத்தில் அது பற்றி சிறிது மன வருத்தம் இருந்த நண்பர்களில் பலர் இம்முறை விழாவுக்கு வந்தது மிக பெரிய மகிழ்ச்சி. இணைய சண்டைகள் அதிகம் பெரிது படுத்தாமல் இருந்தால் - நீர் குமிழி போல தானே உடைந்து காலப்போக்கில் சரியாகி விடும் என தோன்றுகிறது

மதுமதியின் குறும்பட வெளியீடு (படத்தில் பங்கேற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் வந்திருந்தனர்; படம் முடிந்து அவர்கள் எழுந்து நின்ற போது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது)

கேபிள் - எனது வளர்ச்சிக்கு முதல் காரணம் வலைத்தளமே - இன்று படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவும் காரணம் அதுவே என்று பேசியது நெகிழ்வு

சுரேகா, அகிலா உள்ளிட்டோர் காம்பியரிங்கை தங்களுக்குள் சரியே பங்கிட்டு கொண்டு நிறைவாய் செய்தனர்



விழாவுக்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் புதிதாய் ஓரிரு நட்பாவது கிடைத்தது

இவ்விழா அடுத்தடுத்த வருடங்களில் சென்னையை தாண்டி நடக்க இருப்பது (அடுத்த வருடம் ஈரோட்டில் நடக்கும் என இறுதியில் அறிவிக்கப்பட்டது.. )

மைனஸ் 

விழா அரங்கம் - மாலை துவங்கி இரவு வரை செல்லும் விழாவுக்கு இவ்வரங்கம் சரியானது. ஆனால் சென்னை வெய்யிலில் - பகலில் நடந்த விழா என்பதால் சற்று சிரமத்துக்கு ஆளாக வேண்டியிருந்தது. நாங்கள் இன்னும் நல்ல அரங்கமாய் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இது விழா குழுவை சேர்ந்த எங்கள் பிழையே.

லைவ் ரிலே- யில் ஆடியோ சரியாக இல்லை. அதனை சரி செய்ய எவ்வளவோ முயன்றும் அந்த நேரத்து பரபரப்பில் முடியவே இல்லை

ஒரு கல்யாணம் நடத்துவது போல நிகழ்ந்த இவ்விழாவில் இப்படி ஓரிரு குறைகள் நிகழ்வது சகஜமே ! அடுத்த வருட விழாவில் இக்குறைகள் நிகழா வண்ணம் ஜாக்கிரதையாக இருப்போம் !

போனஸ்

புத்தகத்துக்கு முகப்பு அட்டை வரைந்த தம்பி சுகுமாருக்கு நன்றி தெரிவித்த நேரம் 

சுய அறிமுகத்தில் இரண்டு நண்பர்கள் மேடையில் ஏறி பேசத்துவங்கும் முன் கைதட்டல் - பிளந்து கட்டியது. அவர்கள்.. திண்டுக்கல் தனபாலன் மற்றும் ஸ்கூல் பையன் ! நண்பர் தனபாலன் ப்ளாகில் அனைவருக்கும் கமண்ட் போடுவார். தம்பி ஸ்கூல் பையன் - முகநூலில் எல்லாருக்கும் லைக் போடுவார். இருவருக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் - தான் இந்த கைத்தட்டல் !

இனி மற்ற விஷயங்கள் செல்வோம். இவற்றில் பல முகநூலில் அவ்வப்போது பகிர்ந்தவை. முகநூலில் ஏற்கனவே வாசித்தோர் பொறுத்தருள்க ! அல்லது இந்த இடத்தில் எஸ் ஆகுக !

என்னா பாட்டுடே - ஊதா கலரு ரிப்பன்

ஊதா கலரு ரிப்பன் ....சிவகார்த்திகேயன், இமான், இயக்குனர் மூவருமே கலக்கியிருந்தாலும் முதல் மார்க் இமானுக்கு தான் !

மியூசிக், பாடல் கம்போசிஷன், மெட்டு - அனைத்தும் அசத்த .....ஆட வைக்குது இப்பாடல் !

ஒரு காலத்தில் ராஜா ரசிகன் - இன்று இமான் மற்றும் அனிருத் ரசிகனாக மாறி வருகிறேன் ...



25 வருட நட்பு 

எங்கள் சட்ட கல்லூரி நண்பர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்து இன்றோடு 20 ஆண்டுகள் ஆகிறது.

எல்லோருக்கும் தர
என்ன உண்டு என்னிடம்
புன்னகை தவிர?

- என 1993-ல் எழுதியது இதே செப் - 8 -ல் தான்

பிரேம், பாலா , டெய்சி, அமுதன், நித்தியானந்தம், பிரபு, பரிமளா , சந்துரு, பரணி போன்றோர் சென்னையிலும் - ராஜ், சதீஷ், ஸ்ரீதர் போன்றோர் திருச்சியிலும் இன்னும் பல்வேறு நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலும் இருக்கிறோம்.

25 வருட நட்பு 
என்ரோல் செய்து 20 ஆண்டுகள் ஆகிறது என்றால் - அதற்கு முன் நாங்கள் படித்ததும், திருச்சியை கலக்கியதும் 5 ஆண்டுகள்.

இந்த 25 ஆண்டுகளில் நண்பர்கள் லட்சுமணன், ஜனார்த்தனன் மற்றும் கார்த்திக் மரணம் எங்களை அவ்வப்போது உலுக்கி விட்டுப்போனது.

25 ஆண்டு கால நட்பு ! கல்லூரி காலத்தில் எங்களுக்குள் எத்தனை சண்டைகள் ...பிரிவுகள் ... கண்ணீர். ஆனால் கல்லூரி முடித்த பின் குடும்ப நட்பாய் இன்று எங்கள் உறவு தொடர்கிறது



25 ஆண்டு கால நட்பை நினைவூட்டும் வகையில் சென்னை நண்பர்கள் செப்டம்பர் 8 அன்று சந்தித்தோம்.

சிரித்து சிரித்து புரையேறிய அத்தருணங்கள் வாழ்வில் மிக இனிமையானவை !

அடுத்த சந்திப்பு பாலாவின் வீட்டில் அக்டோபர் 2 அன்று !

வீ ஆர் வெயிட்டிங் !

தலைவா..ஆஆஆஆஆ!

Watched Thalaiva.. Marana Mokkai film.....

Vijay's look and dance movements are the one and only saving grace...

Recommendation : Skip it even in Good quality DVD ......

போஸ்டர் கார்னர் 



தொட்டால் தொடரும் 

நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் பட பூஜை இன்று நடக்கிறது.

கேபிள் ஒரு எளிமையான அற்புதமான மனிதர். பதிவுலகில் நுழைந்த பொழுதில் எத்தனையோ சிறு சிறு சந்தேகங்களை தொலைபேசி அல்லது நேரில் கேட்ட போதும் புதியவன் என்று எண்ணாது பொறுமையாய் விளக்கியவர். 2010 -ல் ப்ளாகில் வந்த எனது சுய முன்னேற்ற தொடரை பார்த்து விட்டு நண்பர் அகநாழிகை வாசுவிடம் புத்தகமாய் போட சொல்லி பரிந்துரைத்தவர்.

மேல் பாராவில் சொன்னது எனக்கு நடந்தது. இதே அனுபவம் ஏராள இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும்.. சுரேகா, கே. ஆர். பி உட்பட !

நண்பர்கள் அனைவரையும் " தலைவரே" என்று இவர் சொல்வது மிக ரசிக்கும்படி இருக்கும் ... !



ப்ளாக் என்கிற மீடியாவை சரியாக பயன்படுத்தி - கொஞ்சம் கொஞ்சமாய் - உதவி இயக்குனர், வசனகர்த்தா என்று உயர்ந்து - இன்று படம் இயக்கும் நிலைக்கு வந்துள்ள கேபிள் சங்கரிடம் - தத்தம் துறையில் நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதை கற்று கொள்ளலாம் !

தொட்டால் தொடரும் வெற்றிபெறவும், சினிமா துறையில் உங்களுக்கென்று ஒரு தடம் பதிக்கவும் வாழ்த்துக்கள் தலைவரே !

ஒரு சிறு விளம்பர இடைவேளை ...

வெற்றிக்கோடு புத்தகம் சென்னை சென்னை அகநாழிகை புத்தக கடையிலும், டிஸ்கவரி புக் பேலஸிலும் கிடைக்கிறது. 

டிஸ்கவரி புத்தக கடையில் நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் வெற்றிக்கோடு புத்தகத்தை வாங்கலாம் !

http://discoverybookpalace.com/products.php?product=வெற்றிக்கோடு


வெற்றிக்கோடு புத்தகம் ஆன்லைனில் பெற

http://www.wecanshopping.com/products/வெற்றிக்-கோடு-%21.html

புத்தக வெளியீடு சமயம் எழுதியவை :

** உச்ச பட்ச சந்தோஷ மனநிலையில் உள்ளேன்

வெற்றிக்கோடு புத்தகம் முழுதும் ஒரு முறை இன்று வாசித்தேன் ; வாழ்நாளில் நான் செய்த உருப்படியான காரியம் என இப்புத்தகம் நினைவில் கொள்ளப்படும்.

மிக நிறைவாக உள்ளது. - நானும் ஒரு புத்தகம் எழுதி விட்டேன் என்ற நிறைவல்ல - இதன் Content - அதிலுள்ள உண்மை - இவை மட்டுமே தரும் நிறைவு.... இந்த நிறைவுக்கு முன் , அச்சீட்டின் போது புத்தகத்தில் நிகழ்ந்த சில சின்னச்சின்ன குறைகள் அடி பட்டு போகின்றன...

இப்புத்தகத்தை வாசிப்போரிடம் கொண்டு சேர்க்கும் மார்கெட்டிங் வேலைகளில் நானும், அகநாழிகை வாசுவும் ஈடுபட்டுள்ளோம் தான் ! ஆனால் அதை விட பெரிய மார்கெட்டிங் இனி தான் நடக்க உள்ளது. அது - புத்தகத்தை வாசிக்கும் பலர் - தங்கள் வாய் மொழியால் நண்பர்களுக்கு செய்ய இருக்கும் பரிந்துரை . ....!

***********
சின்ன வயதில் எந்த நல்ல விஷயம் நடந்தாலும் முதலில் அம்மாவிடம் சொல்ல/ காண்பிக்க நினைப்பேன். இப்போது? வேற யார் ? ஹவுஸ் பாஸ் தான் !

வெற்றிக்கோடு புத்தகம் இன்று கையில் கிடைத்ததும் - அடுத்த அரை மணியில் அம்மணி அலுவலகம் சென்று - முதல் பிரதியை கொடுத்து விட்டு வந்தேன் !

புத்தகம் குறித்து மனைவி வேலை செய்யும் HTL -லிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கருத்துகள் நிரம்ப மகிழ்ச்சியை தருகிறது

**************
இல்லாமற் போகுமோ
சரித்திரத்தில் ஒரு சிற்றிடம்
எனக்கு

20 வருடங்களுக்கு முன் எழுதியது .....

இன்று முதல் புத்தக வெளியீடு !
**************
முதல் முறையாக புத்தகத்தில் பலர் ஆட்டோகிராப் வாங்கியபோது சங்கோஜமாக இருந்தது ! ஆட்டோகிராப் போடும் அளவா வளர்ந்து விட்டோம் ! நம்ப முடிய வில்லை !
*************
வெற்றிக்கோடு புத்தக வெளியீட்டிற்கு முன்பிலிருந்தே - கடந்த 2 நாட்களாக " இத்தனை புத்தகம் வேண்டும்" என எனக்கும் வாசுவிற்கும் மெயில், போன் மற்றும் பின்னூட்டத்தில் வருகிற வரவேற்பை வைத்து பார்க்கிற போது 2 விஷயங்கள் உறுதியாய் தெரிகிறது :

1. கணினி வந்ததால் புத்தகங்கள் விற்பனை குறையும்; புத்தகங்கள் வழக்கொழியும் - என்பது மாயையே ! புத்தகங்களுக்கு அழிவே இல்லை !

2. சரியான முறையில் செய்தால் புத்தக விற்பனை லாபகரமான ஒன்றே

*****************
இரண்டு நாள்; நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் ; நன்றி நண்பர்களே !

*******************
அய்யாசாமி கார்னர்

திருமண நாளன்று அய்யாசாமி முகநூலில் எழுதியது

நாளையுடன் (29 ஆகஸ்ட் ) திருமணமாகி 16 ஆண்டு முடிகிறது !

தி.மு - தி. பி வித்தியாசங்களை நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.

வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் முழுமையடைவது இந்த 16 வருடங்களில் தான் !

" அன்பு எப்போதும் நேர் கோட்டில் இருக்காது; ஒன்று மேலே செல்லும்; அல்லது கீழே செல்லும் " - ஓஷோ

சின்ன சின்ன சண்டைகள் இருந்தாலும் மொத்தத்தில் - எங்கள் காதல் கிராப் அனைத்து விதங்களிலும் மேலே மட்டுமே செல்கிறது !

Life is beautiful !

18 comments:

  1. Life is beautiful !

    and Bountiful too.

    subbu thatha.

    ReplyDelete
  2. அருமை!

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  3. 25 ஆண்டு கால நட்பை நினைவூட்டும் வகையில் சென்னை நண்பர்கள் செப்டம்பர் 8 அன்று சந்தித்தோம்.
    >>
    நல்ல விசயம்தான். அடிக்கடி சந்திக்க முடியாது. காரணம், வேலை பளு, குடும்ப சூழல்ன்னு ஆயிரம் காரணம் இருக்கு, சில வருடங்களுக்கொரு முறையாவது சந்தித்து கொள்ளுங்கள் சகோ! படத்தில் இருப்போர் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சி கோடி கொட்டி கொடுத்தாலும் வராது. உங்க நட்புகளுக்கும் சேர்த்து என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வெற்றிக்கோடு புத்தகம் நன்றாகவும் சற்று வித்தியாசமாகவும் உள்ளது

    ReplyDelete
  5. //இப்படி இந்த பதிவை ஆரம்பிக்க ஆசை தான். ஆனால் ..........முதல் வாரம் அதிகம் பேர் கேட்கலை.//

    'என்னாச்சு?' என்று இன்று கேட்கலாம் என நினைத்திருந்தேன். பதிவு வந்துவிட்டதில் மகிழ்ச்சி!

    ஒரு வாரத்திற்கு முன் பிரபல பதிவர், "புத்தக வெளியீடு மற்றும் பதிவர் சந்திப்பு போன்றவைகளால் கொஞ்சம் ஓய்வு எடுக்கிறார்" என்று என்னிடம் சொன்னார்கள்.

    எல்லோரும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள். 'கொஞ்சம் ஓய்வு' என்பது கொஞ்சம் அதிகமானதால் விசாரிப்புகளும் அதிகமாகி உள்ளது.

    தொடர்ந்து நிறைய எழுதவும்.

    ReplyDelete
  6. உங்களின் who moved my cheese - ன் தமிழாக்கம் அருமையான பதிவிலிருந்து அதைப் போன்ற பதிவுகளை விரும்பிப் படித்தேன்...உங்கள் வெற்றிக்கோடு மற்றுமொரு தன்னம்பிக்கை நூலாக இருக்கும் என நம்புகிறேன்.வாங்கி வந்துவிட்டேன்....படித்துப் பகிர்கிறேன்... மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. தொடர்ந்து நிறைய எழுதவும்.

    ReplyDelete
  8. "நாளையுடன் (29 ஆகஸ்ட் ) திருமணமாகி 16 ஆண்டு முடிகிறது !

    தி.மு - தி. பி வித்தியாசங்களை நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.

    வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் முழுமையடைவது இந்த 16 வருடங்களில் தான் !"
    உங்கள் கருத்து 100 சதவீதம் சரி என்பதை ஒத்துகொள்கிறேன் . வீட்டில் கடைக்குட்டியாக பிறந்து கவலை இல்லாமல் இருந்த என்னை ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக ஆக்கியது திருமணம் என்றால் மிகையாகாது .
    முடிந்தவரை வாரம் 2 அல்லது 3 முறையாவது பதிவிட முயற்சி செய்யுங்கள் .
    திருமண நாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  9. அருமை.பாராட்டுகள். வாழ்த்துகள்.

    புத்தகம் தில்லி வரை சென்றுள்ளது. என் கையில் கிடைக்கும் போது என் கருத்துக்களை தெரிவிக்கிறேன்....:)

    ReplyDelete
  10. மோகன்-ஜி...... ஓய்வில்லாது உழைத்து நீங்களும், நமது நண்பர்களும் இந்த பதிவர் திருவிழாவை அமர்க்களபடுத்தி விட்டீர்கள், அதற்க்கு மிக்க நன்றி ! அடுத்த வருட பதிவர் திருவிழாவை இப்போதே நினைக்கிறது மனது, அதுதான் இந்த முறை நடத்தியதன் வெற்றி !


    வெற்றி கோடு புத்தகம் அட்டை டு அட்டை படித்து முடித்துவிட்டேன், விரைவில் எனக்கு தெரிந்ததை எனது பதிவில் பகிர்கிறேன் !

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் மோகன் சார்

    வெற்றி கோடு படித்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  12. வெற்றிக் கோடுகள் படித்து முடித்துவிட்டேன்! உற்சாக டானிக்காய் இனிக்கிறது புத்தகம்! அதில் உள்ள சில வழிமுறைகளை பின்பற்றவும் ஆரம்பித்துள்ளேன்! நன்றி!

    ReplyDelete
  13. தங்கள் பதிவு தொடரவும், பதிவர் விழா & வெற்றிக்கோடு புத்தகம் வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. புத்தக வெளியீடு வாழ்த்துகள்.

    25 வருட நட்புகள் என்றும் தொடர வாழ்த்துகள்.

    ஊதா கலரு ரிப்பன் பாடல் எனக்கும் பிடித்தமானது.

    ReplyDelete
  15. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்களது பகிர்வு. நானே கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்!

    புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் மோகன். சீக்கிரம் கிளம்பி விட்டதால் பதிவர் சந்திப்பு அன்று மாலையில் உங்களுடன் பேச முடியவில்லை.

    ReplyDelete
  16. கொஞ்சம் இடைவெளி விட்டால் எழுத போரடித்துவிடும்.. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  17. (1)முதலில் தொழில் தான் முக்கியம். பிறகு தான் வலைபதிவுகள் – என்பது தான் சரியான மனப்பாங்கு. எனவே உங்கள் பதிவுகளுக்காக்ப் பொறுத்திருக்கத் தயார். (2) பதிவர் விழாவில் தங்களோடு அதிகம் பேச முடியவில்லை. முதல் புத்தக வெளியீடானது, முதலிரவு அறைக்குள் நுழையும் புது மாப்பிள்ளையின் நெளிவைத் தங்களிடம் உண்டாக்கியிருந்ததால், ‘அது’ முடியும் வரை உங்களைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. (3) நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது ‘அபுசி-தொபசி’ யில் மதிப்பீடு வரும். - கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.

    ReplyDelete
  18. பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...