Saturday, May 3, 2014

வானவில் -நான் சிகப்பு மனிதன்-இறையன்பு -அஞ்சான்

பார்த்த படம் - நான் சிகப்பு மனிதன் 

நிச்சயம் ஒரு வித்யாச முயற்சி தான்.சட்டென்று தூக்கம் வரும் " நார்கோலெப்சி " பற்றி தமிழ் சினிமா இயக்குனர்கள் எப்படி இவ்வளவு நாள் விட்டு வைத்தார்கள் என தெரியவில்லை. பழைய படம் ஒன்றில் நாகேஷுக்கு இதே வித பிரச்சனை உண்டென காமெடி பகுதியில் பயன்படுத்தியிருப்பர்-  நார்கோலெப்சி பற்றியெல்லாம் சொல்லாமல்.. படம் பெயர் நினைவில்லை. ஆயினும் இதையே கதையின் மைய புள்ளியாக வைத்து பின்னப்பட்ட விதம் அருமை (ஆங்கில பட பாதிப்புகள் இருக்கலாம். அறியவில்லை)

ஹீரோவின் பாத்திரத்தின் வித்தியாசத்துடன் திருப்தி அடைந்து விடாமல்,  ஹீரோயின் மற்றும் வில்லி பாத்திரம் இரண்டையுமே இதுவரை தமிழில் பார்த்திராத விதத்தில் படைத்துள்ளார் இயக்குனர். விஷாலை மணக்க எந்த எல்லைக்கும் செல்லும் லட்சுமி மேனன் பாத்திரம் ஆச்சரியப்படுத்துகிறது என்றால் - இனியா பாத்திரம் அதை விட சூப்பர். குறிப்பாக தனது கடைசி காட்சியில் இனியா அறைக்குள் இருந்து கத்தியவாறே வந்து பேசும் டயலாக்.!

இனியா மற்றும் அவர் கணவர் போன்ற ஆட்கள் இருப்பார்களா ?  நிச்சயம் செய்தி தாளில் இது மாதிரி எத்தனையோ கதைகளை வாசிக்க தானே செய்கிறோம்......

இனியாவின் கணவர் பாத்திரம் தான் (நல்லா பார்த்த முகமா இருக்கு... யார் சார் அந்த நடிகர்?) அநியாயத்துக்கு புத்திசாலியாக, ஏமாற்று காரனாக - ஆனால் அனைவரும் அவரை நம்பும்படி அமைத்தது சற்று உறுத்துகிறது

படத்தின் முக்கிய குறை - மிரட்டலான இடைவேளைக்கு பின் 10-15 நிமிடம் படம் படுத்து விடுகிறது. இந்த நேரம் ஹீரோயின் தூங்கிய படி இருக்க ஹீரோ ஒரு பாட்டு பாடுகிறார் பாருங்கள்... அது மட்டும் இன்னும் அரை மணி கழித்து வந்திருந்தால் தியேட்டரில் குறட்டை சத்தங்கள் கிளம்பியிருக்கும் ..

நிச்சயம் ஒரு முறை பார்க்கத்தக்க படம் - வன்முறை மற்றும் " A " காட்சிகள் உண்டு என்பதால் குழந்தைகளை தவிர்த்து விட்டு பார்ப்பது நல்லது.

டிவி பக்கம் - பொதிகையில் இறையன்பு 

ஒவ்வொரு ஞாயிறு மதியம் 3 மணிக்கு பொதிகையில் வெவ்வேறு தலைப்புகளில் மடை திறந்த வெள்ளம் போல - பேசுகிறார் இறையன்பு ஐ. ஏ எஸ். ! கேட்டு முடித்ததும் ஒரு பாக்கெட் குளுக்கோஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு என்றாலும் அப்புறம் மறந்து தான் போகிறோம் என்பது வேறு விஷயம் :)

மாற்று திறனாளிகள் பற்றியும், கிரியேடிவ் திங்கிங் என்பது என்ன என்பது பற்றியும் இவர் பேசியதன் ஒலி வடிவம் கிடைத்தால் கேட்டு பாருங்கள் .. !

என்னா பாட்டுடே - உறவெனும் புதிய வானில்

ராஜவின் மேதைமை ஒவ்வொரு இன்ச்சிலும் தெரிகிற பாடல். நெஞ்சத்தை கிள்ளாதேயில் இடம் பெற்ற " உறவெனும் புதிய வானில்" .

அற்புத மெட்டு, இனிய கிட்டார் இசை என மயக்குது இப்பாட்டு

இயக்குனர் மகேந்திரனுக்கு டூயட் என்பது சுத்தமாக பிடிக்காது. தப்பி தவறி டூயட் இருந்தாலும் அதனை வாயசைத்து பாட மாட்டார்கள். டூயட் ஒரு புறம் சென்ற படி இருக்க - பாத்திரங்களின் உணர்வுகளை நமக்கு கடத்துவதையே இவரது பாடல்கள் செய்யும்

80 களில் பல பாட்டுகளையும் வீ. ஜி. பி கோல்டன் பீச்சில் படம் பிடிப்பது வழக்கம். இப்பாடலிலும் அதனை காண காமெடியாக உள்ளது. பாடல் இன்னும் நன்கு படமாக்காப்பட்டிருக்கலாம்... இதன் ஆடியோ வடிவம் நான் அடிக்கடி கேட்கும் ஒன்று... இப்பாடலை கேட்கும்போது நமக்கு வரும் மகிழ்ச்சியை, பாடலில் உள்ள ஒரே வரி சரியாக சொல்லிவிடும் 

" எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம் "....!ஐ. பி. எல் கார்னர் 

என்ன தான் திட்டினாலும், பிக்சிங்கோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஐ. பி. எல் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. பசங்களும் விரும்பி பார்ப்பதால், நம் வீடோ விருந்தினர் வீடோ எங்கே இருந்தாலும் - ஐ. பி. எல்  காணாமல் ஒரு நாளும் கழிவதில்லை . 

சென்னை மற்றும் பஞ்சாப் செமி பைனல் செல்வது எந்த அளவு நிச்சயமோ, அதே அளவு மும்பை செல்ல முடியாது என்பதும் உறுதி .. (அதிசயங்கள் நிகழ்ந்தால் ஒழிய) 

இந்த ஐ. பி. எல் லில் எனக்கு மட்டுமல்ல லட்சகணக்கான மக்கள் விரும்பும் ஹீரோவாய் மாக்ஸ்வெல்  உருவெடுத்துள்ளார். பஞ்சாப் ஜெயிக்கிறதோ இல்லையோ - அவர் 40 பந்து விளையாடினால் போதும்- மக்களுக்கு முழு entertainment காரண்டி ! அதற்கு குறைவான பந்துகளில் அவர் அவுட் ஆனால்  - ஏராள மக்கள் ஏமாந்து போகிறோம். தஞ்சை சென்றபோதும் இதே உணர்வை பலரிடமும் காண முடிந்தது.

மும்பை தவிர டில்லி அணியும் நிச்சயம் செமி பைனல் வராது என்று நினைக்கிறேன். மற்ற அணிகளில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் வர வாய்ப்புகள் அதிகம். 

கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் இவையும் நல்ல அணிகளே. இரண்டிலும் பவுலிங் நல்ல விதத்தில் உள்ளது, பேட்டிங் தான் அடிக்கடி சொதப்பி விடுகிறது 

மே 18- சென்னை Vs பெங்களூரு மேட்ச் சேப்பாக்கத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர் குழந்தைகளுடன் பார்க்க திட்டமிட்டு வருகிறேன். டிக்கெட் வாங்கணும்... ! 

அஞ்சான் !!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் பட ஸ்டில்கள்  வெளியாகி உள்ளன. அவற்றில் நம்மை பெரிதும் கவர்வது ஹீ ஹீ சமந்தா தான்... சோ கியூட் !படித்ததில் பிடித்தது

ஆங்கிலம் என்றாலும் அவசியம் வாசியுங்கள்.. குறிப்பாக திருமணமான ஆண்கள் அனைவரும்...

Must read for young men and women who got married ....

Brad Pitt About His Wife :

“My wife got sick. She was constantly nervous because of problems at work, personal life, her failures and problems with children.

She has lost 30 pounds and weighted about 90 pounds in her 35 years. She got very skinny, and was constantly crying. She was not a happy woman.

She had suffered from continuing headaches, heart pain and jammed nerves in her back and ribs. She did not sleep well, falling asleep only in the morning and got tired very quickly during the day.

Our relationship was on the verge of break up. Her beauty was leaving her somewhere, she had bags under her eyes, she was poking her head, and stopped taking care of herself.

She refused to shoot the films and rejected any role. I lost hope and thought that we’ll get divorced soon…

But then I decided to act on it. After all I’ve got the most beautiful woman on the earth. She is the idol of more than half of men and women on earth, and I was the one allowed to fall asleep next to her and to hug her shoulders.

I began to pamper her with flowers, kisses and compliments. I surprised her and pleased her every minute. I gave her lots of gifts and lived just for her. I spoke in public only about her. I incorporated all themes in her direction. I praised her in front of her own and our mutual friends.

You won’t believe it, but she blossomed. She became even better than before. She gained weight, was no longer nervous and she loved me even more than ever. I had no clue that she CAN love that much.

And then I realized one thing: The woman is the reflection of her man.

If you love her to the point of madness, she will become it. ” – Brad Pitt, A Secret of Love.

****
Relevant link is available here:

http://www.facebookquotes4u.com/2013/09/brad-pitt-secret-of-love.html

ரசித்த கவிதை 

மின்னைப்போல் நான் மறைய இருந்தேன்
விளக்கைப்போல் எனைச் சுடர வைத்தாய்

பொன்னைப்போல் நான் புதைந்திருந்தேன்
புடம் போட்டாய் - நகை ஆக்கி விட்டாய்

என்னைப்போல் நான் இருக்க நினைத்தேன்
ஏதோ வேதியல் செய்து விட்டாய்

உன்னைப்போல் எனை மாற்றி விட்டாய்
உன் உருவத்தில் என்னை வார்த்துவிட்டாய்

 - அப்துல் ரகுமான்

படித்ததில் பிடித்தது - ரசித்த கவிதை எல்லாமே "ஒரு மார்க்கமா " இருக்கே என நினைக்கிறீர்களா ? கரீட்டு... நாளை ஹவுஸ் பாஸ் பிறந்த நாள்.. அம்மணிக்கே இந்த கவிதை அர்ப்பணம் !


8 comments:

 1. சிகப்பு மனிதனுக்கு வித்தியாசமான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. நீண்ட நாட்களாயிற்று தங்கள் வலைப் பக்கம் வந்து.
  அப்துல் ரகுமான் கவிதையும்,ஆங்கிலக் கதையும் உண்மையில் ரசிக்க வைத்தது.
  இறையன்புவின் பேச்சைக் கேட்டு மலைத்ததுண்டு.

  ReplyDelete
 3. Anonymous9:35:00 PM

  Brad letter is fakehttp://www.ibtimes.com/brad-pitt-secret-love-letter-fake-note-angelina-jolie-captures-hearts-online-1521614

  ReplyDelete
 4. இறையன்பு அவர்களின் பேச்சு என்றும் இனிமை என்பதை விட எளிமை...

  ReplyDelete
 5. //Brad Pitt About His Wife :

  “My wife got sick.//

  மனைவின்னா முன்னாள் மனைவி ஜெனிஃபர் ஆனிஸ்டனைப் பற்றி சொல்கிறாரோ?
  இன்னாள் இணைவி ஆஞ்சலீனா ஜோலியை இன்னும் மணம் முடிக்கவில்லை.

  ReplyDelete
 6. வானவில் - வழமை போல அருமை.

  பிறந்த நாள் காணும் உங்கள் மனைவிக்கு எங்களது வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete
 8. ///சென்னை மற்றும் பஞ்சாப் செமி பைனல் செல்வது எந்த அளவு நிச்சயமோ, அதே அளவு மும்பை செல்ல முடியாது என்பதும் உறுதி .. (அதிசயங்கள் நிகழ்ந்தால் ஒழிய)
  // it happened :-) MI is playoffs

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...