Friday, May 23, 2014

கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு பார்வை

றிஞர் அண்ணா நூலகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தான் முதல் முறை  செல்ல வாய்த்தது .கோடை விடுமுறை..மகள் மற்றும் விருந்தினர் குழந்தைகளுடன் ஒரு ஞாயிறு காலை நூலகம் சென்றோம். கார் மற்றும் பைக் பார்க்கிங் மிக வசதியாக நிறைய இடம் கொடுத்துள்ளனர். (அண்மையில் தான் கார் ஓட்ட கற்று கொண்டதால் பார்க்கிங் சற்று மிரளுவேன். இங்கு எந்த பிரச்னையும் இல்லை)

நுழையும் போது முழு செக்கிங் செய்கிறார்கள். குடிநீர் தவிர வேறெதுவும் உள்ளே அனுமதி இல்லை. எந்த வித பைகளும் (லேடீஸ் ஹாண்ட் பேக் உட்பட) அனுமதிப்பதில்லை.உள்ளே வந்ததும் துவக்கத்திலேயே பார்வையற்றோர்க்கான ப்ரேய்லி பகுதி... அதன் எதிரில் காம்பெடடிவ் தேர்வுகளுக்கு படிப்போருக்கான பகுதி... இதனை தாண்டி கட்டிடத்தின் மையப்பகுதிக்கு வந்தால் - மேல் தளம் வரை நடுவில் முழுதும் ஓபன் ஆக இருக்கும்படி உள்ள அழகான கட்டமைப்பு வாவ் சொல்ல வைக்கிறது.முதல் தளம் செல்ல மட்டும் எஸ்கலேட்டர். அதன் அருகிலேயே ஸ்நாக்ஸ் சாப்பிட சிறு கடை.. இதனை தவிர இங்கு கேண்டீன் போன்றவை இல்லை ( முழு நாளும் இருந்து படிப்போர்க்கு காண்டீன் இருந்தால் நலமாய் இருக்கும் !

முதல் தளமே மிக அதிக மக்கள் செல்ல கூடிய தளமாக இருக்கும் ! காரணம் இங்கு தான் செய்தி தாள்கள், வார இதழ்கள் பிரிவு ஒரு புறமும், இன்னொரு பக்கம் குழந்தைகளுக்கான பகுதியும் உள்ளது

குழந்தைகள் பகுதிக்கு 14 வயது வரை மட்டுமே அனுமதி என போட்டிருந்தாலும் அதை விட பெரிய பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்கிறார்கள். யாரும் பெரிதாக கேள்வி கேட்பதில்லை. தாய் அல்லது தந்தை ஒருவர் மட்டும் குழந்தையுடன் செல்லலாம் என்பது இன்னொரு விதி. இதுவும் கூட பெரிய அளவு பின்பற்றப்படுவதில்லை. பெற்றோர் இருவருமே உடன் செல்கிறார்கள்

குழந்தைகள் பகுதி மிகுந்த கலை ரசனையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒரு மரம் போல ஆர்ட்வொர்க் செய்து வைத்திருப்பதாகட்டும், அந்த பகுதியில் உள்ள சேர்கள் ஆகட்டும், சுவற்றுக்குள்ள வண்ணம் என அனைத்துமே ரசிக்கும்படி உள்ளன.நம்ம வீட்டி குட்டீஸ் அதிக நேரம் இருந்த பகுதி இதுவே.

ஒரு பக்கம் குழந்தைகள் விளையாட கணினியும் உண்டு ( அதான் வீட்டிலேயே கணினியும் கையுமாய் இருக்கிறார்களே.. இங்கும் அதனை தரணுமா ?). கணினியில் விளையாட்டு விஷயங்கள் மட்டுமே உண்டு என நினைக்கிறேன் (அங்கிருந்த குட்டி பசங்கள் அனைவரும் விளையாட மட்டுமே செய்தனர் !)

" சத்தம் போடாதீர்கள்" என்று எழுதியது ஒரு புறமிருக்க - ஏழெட்டு வயது குட்டி பசங்க அங்கும் இங்கும் ஓடி, அமர்க்களம் செய்கிறார்கள். " தம்பி சண்டை போடாதீங்க" என்று லவுட் ஸ்பீக்கர் வைக்காத குறையாக அங்கிருந்த நூலகர் அடிக்கடி கூவி கொண்டிருந்தார்

Photo


செப்டமபர் 15, 2010 ல் நூலகம் துவங்கப்பட்டுள்ளது  தினம் காலை 9 முதல் 8 வரை திறந்திருக்கும். (ஞாயிறு உட்பட) ; தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம் போன்ற வருடத்தில் 10 தினங்கள் மட்டுமே விடுமுறை.

அய்யா திறந்த நூலகம் என்பதால் அம்மா அப்புறம் எதுவும் புத்தகம் வாங்க வில்லையாம். முதலில் வந்த புத்தகங்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனவாம். செய்தி தாள்கள், வார இதழ்கள் மட்டும் தொடர்ந்து வாங்குகிறார்கள் போலும்

நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதி மட்டுமே உண்டு. புத்தகத்தை வெளியே எடுத்து செல்லும் வசதி கொண்டு வரப்பட வில்லை.

Photo

நூலகம் முழுவதுமே சென்ட்ரலைசுட் ஏ. சி. ! இப்படி ஏ . சி யுடன் கூடிய அற்புத லைப்ரரி - மக்கள் இன்னும் கூட நன்கு பயன்படுத்தி கொள்ளலாம் என தோன்றியது

நூலகர்கள், செக்கியூரிட்டி ஆட்கள்  என 100 பேராவது பணி புரிவார்கள் என நினைக்கிறேன்.  ... 8 மாடி கட்டிடம் ஆயிற்றே... முதல் மாடி பற்றி தான் சொன்னேன்... மற்ற மாடிகளில் என்னன்னே துறைகள் உண்டு என இந்த புகைப்படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்:(புகைப்படம் மேலே க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம் )நம்ம பசங்க குட்டீஸ் பிரிவில் இருக்கும் போது மற்ற தளங்களுக்கு விசிட் அடித்து ஆர்வமுள்ள பகுதிகளை மட்டும் கண்டு வந்தேன். குறிப்பாக தமிழ் சிறுகதை, நாவல், கட்டுரை  பகுதிகள்...

நிச்சயம் ஏரளாமான நூல்கள் உண்டு எனினும் இன்னும் கூட நிறையவே செய்யலாம்.. இந்நூலகதிற்கு..

ஒவ்வொரு தளத்திலும் கழிவறை இருந்தாலும் அவ்வளவு சுத்தமாக இல்லை என்பது சற்று வருத்ததிற்குரிய விஷயம்.

நூலகத்தை சுற்றி வரும்போது கலைஞரும், ஜெ - வும் மனதில் நிழலாடுகிறார்கள்.

சென்னையில் இருந்தும் இதுவரை செல்லாவிடில் நிச்சயம் ஒரு நல்ல விஷயத்தை மிஸ் செய்கிறீர்கள்.. ஒரு முறை மட்டுமல்ல மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய அற்புத இடம் அண்ணா நூலகம்..

கலைஞர் செய்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று... அம்மா இதனை உதாசீனம் செய்யாமல் - கவனித்தால் நன்று !

10 comments:

 1. அரசுத் தேர்வு மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் வருகிறார்கள். மடிக்கணினி அனுமதிக்கிறார்கள், சிலரை மடிக்கணினி பையுடன் பார்த்தேன். ஒருவேளை சில தளங்களில் அனுமதிக்கலாமா இருக்கலாம். இரண்டாம் தளத்திலும் ஞ்சம் மறைவான இடத்தில் எஸ்கலேட்டர் உள்ளது .

  கழிப்பறையின் சுகாதாரம் அரசாங்க அடயாளம் :-)

  தரமான பல புத்தகங்கள் உள்ளன... அரசியல் தாண்டி நூலகத்தை பராமரிக்கலாம்

  ReplyDelete
 2. அரசியல் தாண்டி நூலகத்தினை பராமரிக்கலாம்.....

  அதே. அதே.... ஒரு அரசு கொண்டுவரும் திட்டங்களை அடுத்த அரசு தொடர்வதில்லை - அவை மக்களுக்கு பயன் தரும் வகையில் இருந்தாலும்..... :(

  ReplyDelete
 3. அடுத்த முறை வரும் போது செல்ல வேண்டும்...

  ReplyDelete
 4. பல நாட்களாக முயற்சிக்கிறேன்.. விரைவில் ஒரு விசிட் அடிக்க வேண்டும் !!!

  ReplyDelete
 5. பல அரசு அலுவலகங்களில் கழிப்பறையே இல்லை.இருந்தாலும் பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கப் படுவதில்லை. கழிவறைகளில் தண்ணீர் இல்லை இப்போதெல்ல்லாம் பணம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. காந்தியடிகளின் கோட்பாட்டின் படி நமது கழிப்பறையை நாமே சுத்தம் செய்ய வேண்டும் என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மதியுரையை வரவேற்கிறேன்.

   Delete
 6. சென்னையின் அறியப்படாத முத்துக்களுள் இந்த நூலகம் நிச்சயம் இடம்பெறும். பதிவிற்கு நன்றி....

  ReplyDelete
 7. சென்னை வரும் போது செல்ல வேண்டும்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...