Thursday, May 1, 2014

என்னமோ நடக்குது & வேளச்சேரி Luxe Cinema..விமர்சனம்

வீட்டிற்கு விருந்தினர் குழந்தைகள் வந்திருக்க, ... வேளச்சேரியில் தான் தியேட்டர் வந்துடுச்சே Maal &  தியேட்டர் சேர்ந்து செல்லலாம் என பார்த்தால் மே 1- மதியம் & இரவு எல்லா படங்களும் Housefull ! காலை காட்சிக்கு மட்டுமே சில டிக்கெட்டுகள் இருக்க, பார்த்து கொண்டிருக்கும் போதே அவையும் காலியாகி கொண்டே இருந்தது.

ஒரு வழியாய் காலை 8 மணிக்கு முடிவெடுத்து என்னமோ நடக்குது - புக் செய்து - பசங்களை அழைத்து கொண்டு தியேட்டர் சென்று அமர்ந்த பின் தான் வாட்ஸ் அப்பில் நண்பர்கள்  "சென்ட்ரலில் குண்டு வெடிப்பு - வெளியே போகாதீர்கள் " என்று கூறியதை காண முடிந்தது. கூடவே போலிஸ் வெளியில் செல்ல வேண்டாம் என சொன்னதாக தகவல் .. !

வரும்போதே வழக்கமான செக்யூரிட்டி தவிர நிறைய போலிஸ் இருந்தது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அருகில் ஹவுஸ் பாஸ் இல்லை; மற்றவர்களின் குழந்தைகளை வேறு உடன் வைத்திருக்கிறோம் .. என்ன செய்வது என குழம்பியபடி இருந்தேன்...

மீண்டும் வெளியில் வந்து மேனேஜர் போல் இருந்தவரிடம் பேச, " ஆமா சார்... சென்னையில் குண்டு வெடிச்சிருக்கு; நாங்க ரொம்ப கேர் புல்லா இருக்கோம்; ஒரு பிரச்னையும் வராது; தைரியமா படம் பாருங்க " என்றார். சரி படம் மட்டும் பார்த்து விட்டு மால் சுற்றாமல் அப்படியே எஸ் ஆகிடுவோம்.. என முடிவெடுத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.

தியேட்டர் முழுதும் புக் ஆகியிருந்தாலும், கால் வாசி மக்களுக்கு மேல் வெடிகுண்டு பிரச்சனையால் வராமல் இருக்க, இருக்கைகள் காலியாய் இருந்தன...

என்னமோ நடக்குது- கதை 

முதல் காட்சியே விறு விறுவென - நிமிர்ந்து உட்காரும் வகையில் தான் படம் ஆரம்பிக்கிறது.
சட்ட விரோதமான தொழில் செய்யும் ஒரு கூட்டத்தில் பண தேவை காரணமாக ஹீரோ விஜய் வசந்த் சேர்கிறார். ( அது என்ன தொழில் என்பதில் செம வித்யாசம் + சுவாரஸ்யம் உண்டு .. படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ). சேர்ந்து சில நாளிலேயே இவரால் பெரும் இழப்பு வருகிறது. குறிப்பிட பொருளை அவர் தொலைத்து விடுகிறார்.

அந்த பொருளை கொண்டு வர சொல்லி, ஹீரோவின் காதலியை கடத்தி வைத்து கொண்டு மிரட்டுகிறது வில்லன் கூட்டம். ஹீரோ அந்த பொருளை கண்டறிந்தாரா, ஹீரோயினை மீட்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

படத்திற்கு ஓரளவு நல்ல ரிவியூக்கள் வந்த வண்ணம் இருக்க அது தான் படம் பார்க்க வைத்தது. படம் நிச்சயம் ஏமாற்ற வில்லை. திரைக்கதைக்குள்  அதிகம் செல்ல விரும்ப வில்லை; காரணம் பல டுவிஸ்ட்கள் காட்சிகளில் உள்ளது . திரையிலோ, டிவியிலோ எப்போது பார்த்தாலும் திரைக்கதை தெரியாமல் பாருங்கள்.. நிச்சயம் சுவாரஸ்யமாய் இருக்கும்

விஜய் வசந்துக்கு தனி ஹீரோவாக முதல் படமா இது ? பெரிய பெர்சனாலிட்டி இல்லா விடினும் இந்த பாத்திரத்துக்கு சரியே  பொருந்துகிறார்.

படம் முழுக்க, முழுக்க  ஹீரோ மீது ட்ராவல் ஆகாமல் ரகுமான்- பிரபு- சரண்யா - தம்பி ராமையா - சுகன்யா என அனுபவ சாலிகளை மையமாய் வைத்து நகர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அந்த பாத்திரத்துக்கு apt !ஹீரோயின் ... மஹிமா ..  சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக வந்தவர்.. இப்படத்தில் நர்ஸ் ஆக சற்று மெச்சூர்ட் கேரக்டர். அழகாக இருப்பதுடன் நன்கும் நடிக்கும் இவருக்கு தமிழ் சினிமா என்ன வாய்ப்புகளை வழங்குகிறது என பார்க்க வேண்டும் .

காமெடி என்று தனியே எதுவும் இல்லை;; ஆயினும் முதல் பகுதியில் காட்சிகளே சற்று புன்னகைக்க வைக்கிறது.

படத்தின் மைனஸ் என்றால் முக்கியமாக பாடல்களை தான் சொல்ல வேண்டும்...  குறிப்பாக செகண்ட் ஹாபில் வரும் 2 பாட்டுகளும் கொட்டாவி வர வைக்கின்றன... அவை வரும் நேரமும் கூட...

லாஜிக் மீறல்கள் மற்றும் நம்ப முடியாத தன்மை சற்று உண்டு எனினும் - கதையோட்டத்தில் அவ்வளவாக உறுத்த வில்லை..

புதிய இயக்குனர் ராஜ பாண்டிக்கு பாராட்டுகள்.. குறிப்பாக நல்ல திரைக்கதை மற்றும் இயக்கத்துக்கு... அம்மா-மகன் & அப்பா - மகள் நட்பையும் கிடைத்த நேரத்தில் அழகாய் தொட்டு செல்கிறார்.

சுஜாதா சொல்வார்... கதையின் ஆரம்பத்தில் துப்பாக்கி சுவற்றில் மாட்டியிருந்தது என்று சொன்னால், கதையில்  எங்கேனும் ஓரிடத்தில் அது வெடிக்க வேண்டும் என்று.. அந்த லாஜிக்கை கிளைமாக்சில் மிக சரியாக பயன்படுத்தியிருக்கும் ராஜபாண்டிக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுகள் !

என்னமோ நடக்குது - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !

Luxe ..தியேட்டர்  - ஒரு பார்வை 

மொத்தம் 11 ஸ்க்ரீன்கள்... முதல் ஸ்க்ரீன் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. ஐ மாக்ஸ் எனப்படும் இந்த முதல் ஸ்க்ரீன் மட்டும் டிக்கெட் விலை சற்று அதிகமாம்.. விரைவில் திறக்கப்படும்.. !

முதல் 3 ஸ்க்ரீன்கள் 300 - 400 பேர் அமரலாம். மற்றவை அனைத்தும் மொத்தம் 180 இருக்கைகள் .. 10 வரிசைகள். ஒவ்வொன்றிலும் 18 சீட்டுகள் அவ்வளவே.டிக்கெட் விலை 120 ( ஆன் லைன் எனில் 30 ரூபாய் அதிகம்)

சத்யம் தியேட்டர் க்ரூப் என்பதால் அரங்கினுள் எல்லா திரை அரங்க வசதிகள் ( திரை மறைக்காத  சீட், நல்ல சவுண்ட் சிஸ்டம் ) இங்கும் உண்டு. மொத்தம் 10 வரிசை என்பதால் சற்று சீக்கிரம் டிக்கெட் புக் செய்ய வேண்டும். இல்லாவிடில் அருகில் அமர்ந்து பார்க்க வேண்டி வரும்..

Luxe அரங்கில் இன்டீரியர் மிக அழகாக உள்ளதால் ஏராள மக்கள் சுவர் அல்லது வித வித கண்ணாடி அருகே நின்று புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள்.

Luxe திரை அரங்கம்.. வேளச்சேரிக்கு  ஒரு இனிய வரவு ! 

பின்குறிப்பு : சென்னையில் தான் இதுவரை குண்டு வெடிப்புகள் நிகழாமல் இருந்தன. இங்கும் நடந்துள்ளது சற்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் காவல் துறை தடுக்கும் என்று நம்புகிறேன்... இன்று எல்லா இடங்களிலும் மிக தீவிரமாக போலிஸ் வலம் வருகிறார்கள் !

3 comments:

 1. Intha vaaram bore adichathu.... unga review padicha piragu kandippaa parthidaren, Thanks Sir !

  ReplyDelete
 2. நான் படம்லாம் பார்க்குறதில்ல. சென்னையில் குண்டு வெடிப்பு கொஞ்சம் மனசு பதறத்தான் செய்யுது

  ReplyDelete
 3. சென்னையில் குண்டு வெடிப்பு - அடுத்ததாய் சிதம்பரத்திலும்..... :(((((

  என்னதான் நடக்குது?

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...