கடந்த சில வாரங்களில் கண்ட படங்களின் சுருக்கமான விமர்சனம்.. அவ்வப்போது வானவில்லில் எழுதலாம் என வைத்திருந்து - வானவில் தாமதமாகவே - இவ்வடிவில் வருகிறது...
ரோமியோ - ஜூலியட்
ஜெயம் ரவி- பணக்காரர் என்று (தானாகவே) நம்ம்ம்ம்ப்பி காதலிக்கிறார் ஹன்ஷிகா. அவர் பணக்காரர் இல்லை என்று தெரிந்த அடுத்த நொடி " சீ போடா " என்று தூக்கி எறிகிறார். ஆனால் ஜெயம் ரவியோ - அப்படிப்பட்ட தங்கமான குணம் உள்ள பெண் தான் வேண்டும் என அடம் பிடித்து அவரையே எப்படி மணந்தார் என்பதே ரோமியோ ஜூலியட்.
படத்தின் பெரிய மைனஸ்- ஹன்ஷிகா பாத்திரம் தான். பணம் மட்டும் தான் முக்கியம் என என்னும் பெண்கள் எங்கேனும் சிலர் இருக்கலாம்... ஆனால் அத்தகையவரை ஹீரோயினாக ஏற்க தான் கஷ்டமாய் உள்ளது...
மற்றபடி.... ஜெயம் ரவி ஜிம் மாஸ்டராக கச்சிதமாக பொருந்துகிறார். டி ஆரு பாட்டும் அரக்கி பாட்டும் - பட்டையை கிளப்புது....
மேலே சொன்ன குறை இருந்தாலும் ஜாலியான பீல் குட் படமாக ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்...
டி மாண்டி காலனி
படம் குறித்து கொஞ்சம் விமர்சனங்கள் நல்ல விதமாய் வந்ததால் கண்டேன்... ஆனால் படம் என்னை கொஞ்சம் கூட கவரவில்லை...
ஹீரோயின் இல்லாமல் படமெடுத்த தைரியம் - வித்யாசமான கதை + முடிவு ஆகியவற்றை மட்டுமே சற்று பாராட்டலாம்... ஆனால் படம் மொத்தத்தில் ஒரு ரசிக்கும்படியான அல்லது என்ஜாய் செய்யும் விதத்தில் அமைய வில்லை..
100 days of love
அதென்னவோ தெரியவில்லை... இந்த சினிமா ஹீரோக்களுக்கு - நிச்சயம் ஆன பெண் என்றாலே ... ஒரு கிளுகிளுப்பு தான்.. நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு காதல் ஏற்பட்டு வருங்கால கணவரை கழட்டி விடும் கதைகள் தொன்று தொட்டு வருகின்றன... தமிழில் மட்டுமல்ல.. மலையாளத்திலும் அப்படி ஒரு படம் 100 days of love
ஆனாலும்... கதை சொல்லப்பட்ட விதத்தில் - திரைக்கதையில் நிச்சயம் ஒரு வித்யாசம் காட்டி முழுவதையும் நம்மை பார்க்க வைத்து விடுகிறார்கள்...
துல்கர் - நித்யா மேனன் ஜோடி - ஓகே கண்மணிக்கு முன்பே நடித்த படம் இது.. இருவரின் இயல்பான நடிப்பும் பார்க்க வைத்தது. மற்ற படி ரொம்ப சுமாரான படம் இது...
இனிமே இப்படித்தான்
சந்தானம் ரொம்ப நாள் கழித்து கொஞ்சம் பார்முக்கு வந்திருக்கிறார்.அவரது காமெடி பிடிக்கும் நண்பர்கள் படத்தை நிச்சயம் ரசிக்கலாம்...
90 நாளில் கல்யாணம் ஆகணும் என ஜோதிடர் செல்ல, வீட்டில் ஒரு பெண் பார்க்கிறார்கள்... சந்தானம் ஒரு பெண் பார்க்கிறார்.. இறுதியில் யாரை மணந்தார் என்பதில் சுவாரஸ்ய டுவிஸ்ட் உள்ளது.. படத்தில் நான் அதிகம் ரசித்தது அந்த டுவிஸ்ட் தான்...
ஜாலியாக சிரிக்க, நல்ல ஒரு டைம் பாஸ் மூவி. டிவியில் போடும்போது கண்டு களியுங்கள்...

No comments:
Post a Comment