Friday, July 24, 2015

வானவில்- புறம்போக்கு- ப்ரியா பவானி ஷங்கர்- CSK

பார்த்த படம் - புறம்போக்கு

விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் நடித்த புறம்போக்கு தாமதமாக தான் காண முடிந்தது. நிச்சயம் ஒரு மிக வித்யாசமான படம். இப்படி பட்ட படங்கள் ஓடாமல் போவது வருத்த பட வேண்டிய விஷயமே !!

இயக்குனர் ஜன நாதன் - தனது அனைத்து படங்களிலும் கம்மியூனிச தத்துவத்தை அடிநாதமாக வைப்பார் ; அது இங்கும் தொடர்கிறது. இருப்பினும் தூக்கு தண்டனை கைதி ஒருவன் - தூக்கில் இடப்படுவதை இவ்வளவு விரிவாக ஒரு தமிழ் படம் அலசிய நினைவில்லை..

விஜய் சேதுபதி, ஷாம் இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். ஆர்யாவை தீவிர வாதியாக ஏற்க தான் சற்று கடினமாய் உள்ளது. பாடல்கள் ஸ்பீட் ப்ரேக் போடுகிறது...

இரண்டாம் பாதி விறுவிறுப்புடன் சென்று மனதை கனக்க வைத்து முடிகிறது..

சிற்சில குறைகள், lag இருந்தாலும் - வித்தியாச முயற்சி மற்றும் கதை களனுக்காக - அவற்றை பெரிது படுத்த வேண்டாம்..

இதுவரை பார்க்கா விடில் அவசியம் ஒருமுறை பாருங்கள்...

போஸ்டர் கார்னர்தடுமாறும் தங்கம்

தங்கம் விலை தாறுமாறாக குறைந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மிக குறைந்த விலை இப்போது ! இதில் முக்கிய விஷயம் - கடந்த 4 ஆண்டுகளில் தான் தங்கத்தின் விலை மிக மிக அதிகம் உயர்ந்தது !!

கம்பனி ஷேர்களிலும் சரி, தங்கத்திலும் சரி - மிக சரியான நேரம் (Ideal time ) என பார்த்து வாங்க முடியாது. ஓரளவு குறைந்துள்ளது என்ற அடிப்படையில் வாங்க வேண்டியது தான் !

அல்லது இன்னும் சற்று பொறுத்திருந்து மீண்டும் ஏற துவங்கும் நேரத்திலும் தாமதிக்காமல் உடனே வாங்கலாம் !

தனிப்பட்ட முறையில் - என்னை கேட்டால் - நிச்சயம் தங்கம் வாங்க இது நல்ல நேரம் என்பேன்... ஒருவேளை விலை இன்னும் குறைந்தால், அப்போது இன்னும் கொஞ்சேமேனும் வாங்கி ஆறுதல் அடைந்து கொள்ளலாம் :)

டிவி கார்னர் : சார்.... ப்ரியா .. சார் !!!!

தமிழ் சானல்களில் அதிகம் பார்ப்பது - விஜய் டிவி  தான். இனி விஜய் டிவியை பார்க்க இன்னொரு நல்ல காரணம் கிடைத்துள்ளது...

ப்ரியா பவானி ஷங்கர்.. செய்தி வாசிப்பாளராக துவங்கி சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் - இப்போது விஜய் டிவி காம்பியரிங் துவங்கி விட்டார்... அழகிய புது வரவு....!! வாங்கோ.. வாங்கோ.. !!!CSK ...........விசில்???

சென்னை சூப்பர் கிங்க்ஸ் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியாது என்பது சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. முகநூலில் ஆண், பெண் என இரு பாலாரும் புலம்பி தள்ளியதை காண முடிந்தது

இவ்விஷயத்தில் எனக்கு சில கேள்விகள்:

மெய்யப்பன் தவறு செய்தார் எனில் அதற்கு அணியை தடை செய்து என்ன பயன்? தவறு செய்யாத வீரர்களுக்கும் சேர்த்தல்லவா தடை சென்று சேர்கிறது ?

தவறு செய்தவர்க்கு தண்டனை தான் என்ன? அவர் penalty எதுவும் கட்ட வேண்டாமா ? இரண்டு ஆண்டுகள் தடை மட்டும் போதுமா?

நிற்க. வீரர்கள் வேறு புது அணிக்கு ஆட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் - அப்படி நிகழ்ந்தால் - ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் செல்ல கூடும்... சென்னை அணியின் பலம் சிதறி போய் விடும்... மேலும் அப்போது மேட்ச்கள் சென்னையில் நடக்காது ...சேப்பாக்கத்தில் மேட்ச் நடப்பது/ பார்ப்பது தானே நிஜ என்ஜாய் மெண்ட் !

சென்னையை சேர்ந்த வேறு யாரும் அணியை வாங்கி நடத்தினால் நன்றாய் இருக்கும்... அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு தான் :(

எலெக்ட்ரிக் டிரைனில் சென்று BMW  கார் வாங்கியவர் 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும்; சென்னையை சேர்ந்த ஸ்ரீவத்சன் பாலாஜி என்ற மிடில் கிளாஸ் நபருக்கு BMW கார் வாங்கும் ஆசை ! 40 லட்சம் இதன் விலை.. !! இதற்காக பொறுமையாக 40 வருடம் சேமித்து இந்த கார் வாங்கியிருக்கிறார்.. 20 அடி அகலமே உள்ள இவரது தெருவில் இந்த கார் வந்தால் - எதிரில் வேறு கார் வர முடியாது !!

எலெக்ட்ரிக் ட்ரெயினில் சென்று இறங்கி கார் வாங்கிய - இவரது சுவாரஸ்ய கதையை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து வாசியுங்கள்..No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...