Tuesday, October 13, 2015

வானவில் : பாகுபலி- அனுஷ்கா- தோனி

பார்த்த படம் : பாகுபலி

சற்று தாமதமாக தான் இப்படம் காண முடிந்தது. மிக மெதுவாக துவங்கி பின் செம வேகம் எடுக்கிறது.

மகாபாரத கதை எனக்கு மிக பிடித்தமான ஒன்று. அதிலும் போர் நடக்கும் பொழுதுகள் ... அதில் உள்ள சதி,  துரோகம்,வெற்றி .. இவை மிக நிறைவை தரும். பாகுபலியின் பிற்பகுதி பாரத போர்க்காட்சிகள் தரும் நிறைவை  தந்தது. அழகான கதை, பிரமாண்டம், தேர்ந்த நடிகர்கள்.. என ரசிக்க வைத்தது.

பொதுவாய் - முதல் பாகம் நன்கு ஓடி - பின் ஓரிரு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் பற்றி யோசிப்பர். இங்கு கதை எழுதும் போதே இரண்டு பாகமாய் எடுப்பது என முடிவெடுத்த ராஜ மவுலியின் தைரியம் .. அடேங்கப்பா !

முதல் பாகத்தை ஒரு முக்கிய கேள்வியுடன் முடித்ததால் - முதல் பாகம் பார்த்த பலரும் இரண்டாம் பாகம் பார்க்க விரும்புவர். மேலும் புதிய மக்களும் கூட தான்.. எனவே இரண்டாம் பாகமும்  நிச்சயம் ஹிட் தான்.

இன்னும் பீனிக்ஸ், சத்யம் திரை அரங்குகளில் தினம் ஒரு காட்சி மட்டும் நடக்கிறது. DVD - ஒரிஜினல் ப்ரிண்ட்டும் கிடைக்கிறது.. அவசியம் கண்டு களியுங்கள் !

ரசித்த ட்விட் :

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட, வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. - (Tea Kadai)

என்ன ஆச்சு தோனிக்கு?

கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம் பெருமளவு குறைந்து விட்டது. பெரும்பாலான மேட்ச்கள் பார்ப்பதும் இல்லை; இருந்தும் இவ்வாரம் ஞாயிறு - வேறு வேலை இன்றி இந்தியா Vs தென் ஆப்ரிக்கா மேட்ச் பார்த்து நொந்தேன்.

கிரிக்கெட் பார்ப்பதில் உள்ள கொடுமை அது தான். நாள் முழுதும் நேரம் செலவிட்டு கடைசியில் இந்தியா ஜெயிக்கா விடில் - வெறுப்பு ஒரு பக்கம் - நாள் முழுதும் வீணாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மறு புறம் என செம காண்டாய் இருக்கும்.

ரோஹித் ஷர்மா - 150 ரன் அடித்தார். இதற்கு மேல் ஒரு மனிதன் என்ன செய்ய முடியும் ? ரஹானே ஆட்டமும் குறை சொல்லும் விதத்தில் இல்லை; ஆனால் மற்ற யாரும் சரிவர ஆடவில்லை.. தோனி தனது கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் இருப்பது தெளிவாய் தெரிகிறது. தேர்வு குழு தூக்கி எறியும் முன்  அவராகவே விலகி விடலாம். அல்லது கேப்டன்சி - கோலி - இடம் தந்து விட்டு ஆட்ட காராரக மட்டும் நீடிக்கலாம். (அவர் அளவு ஆடும் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன் வேறு யாரும் இப்போது இருப்பது போல் தோன்ற வில்லை.. )

அழகு கார்னர் என்னா பாட்டுடே ..!

பசங்க படத்தில் வரும் " ஒரு வெட்கம் வருதே.. வருதே" எப்போது கேட்டாலும் ரசிக்கும் பாடல். கேட்க மட்டுமல்ல, பார்க்கவும் கூடத்தான்.. இந்த ஹீரோயின் (வேகா)  அழகாய் இருந்து, நன்கு நடிக்கவும் செய்த போதும் ஏனோ அதிக பிரபலம் ஆகவே இல்லை !

மருத்துவமும் கடவுளும் குறித்த நீயா நானா 

இந்த நிகழ்ச்சி - ஒளி பரப்பானது சென்ற வாரம் எனினும் நிச்சயம் இது பற்றி சொல்ல வேண்டும்.

இரு புறமும் மருத்துவர்கள்... ஒரு புறம் இருப்போர் மருத்துவர் கையில் தான் நோயாளி சரியாவது உள்ளது என பேச... இன்னொரு பக்கம் இருந்த மருத்துவர்கள்.. சில நேரம் கடவுள் செயலும் உள்ளது என்று பேசினர் ...

நிச்சயம் இரு பக்கமும் பல சுவாரஸ்ய கருத்துகளை கூறினர் ...

இந்தியாவில் மனிதர்கள் சராசரி வாழ்நாள் காலம் - 40 லிருந்து இப்போது 60 ஐ தாண்டி சென்றது மருத்துவ உலகால் தான் என்றது நிச்சயம் ஒப்பு கொள்ள வேண்டிய கருத்து..

கடவுள்  அல்லது நமக்கு மேல் உள்ள சக்தி பற்றி பேசியோர் சில நிஜ சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்..

முடிவு என எதுவும் சொல்லாமல் போனாலும் - நிச்சயம் ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சியாக அது இருந்தது. நேரம் இருப்பின் யூ ய்டியூபில் காண்க !1 comment:

  1. தோனி பார்ம் இன்றி தவிக்கையில் அவரை பலிகடா ஆக்க கூடாது. இந்திய அணியின் பலவீனமான பவுலிங், கடைசிவரிசை ஆட்டக்காரர்களான ரெய்னா,பின்னி போன்றோர் ஒழுங்காக ஆடியிருந்தால் கூட வென்றிருக்கலாம். தற்போது எல்லோருக்கும் கோஹ்லி மாயை பிடித்துக் கொண்டுள்ளது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...