போடா போடி என்கிற சுமாரான படம் தந்த விக்னேஷ் சிவனின் இரண்டாவது படைப்பு " நானும் ரவுடி தான்"
விஜய் சேதுபதி, நயன், ராதிகா, பார்த்திபன், RJ பாலாஜி என நட்சத்திர கூட்டம்.. தனுஷ் தயாரிப்பு; பெரிய அளவு எதிர்பார்ப்பின்றி தான் படத்துக்கு சென்றோம்..
கதை
ஹீரோ - விஜய் சேதுபதி ; ஹீரோயின் நயன் இருவருமே போலிஸ் வீட்டு பிள்ளைகள் ...
விஜய் சேதுபதிக்கு ரவுடியாவதே கனவு. நயனுக்கு - தன் தாயை கொன்றவனை கொல்ல வேண்டும் என்பதே லட்சியம். முதல் கனவும் - இரண்டாவது லட்சியமும் ஒன்று சேரும் புள்ளி தான் கதை...
இசை- இயக்கம்
விஜய் சேதுபதி, நயன், ராதிகா, பார்த்திபன், RJ பாலாஜி என நட்சத்திர கூட்டம்.. தனுஷ் தயாரிப்பு; பெரிய அளவு எதிர்பார்ப்பின்றி தான் படத்துக்கு சென்றோம்..
கதை
ஹீரோ - விஜய் சேதுபதி ; ஹீரோயின் நயன் இருவருமே போலிஸ் வீட்டு பிள்ளைகள் ...
நடிப்பு
சந்தேகத்திற்கிடமின்றி படத்தை ரசிக்க வைப்பது விஜய் சேதுபதி தான். என்ன ஒரு இயல்பான நடிப்பு !! மிகையின்றி நகைச்சுவை - நன்கு வெயிட் குறைத்துள்ளது தெரிகிறது. விஜய் சேதுபதியின் அடுத்த படமான மெல்லிசை கூட பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது (மெல்லிசை பாடல்கள் கேட்டீர்களா? அற்புதம் !)
நயனுக்கு இதுவரை ஏற்றவற்றில் - ஒரு வித்தியாச பாத்திரம்... மொழி ஜோதிகா பாத்திரத்தின் சாயல் லேசாக இருப்பினும் - இங்கு நயன் ஊமையல்ல.. பேசுகிறார்.... நயனுக்கு இருக்கும் உடல் குறைபாடு - கதையில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.. அழகு + நடிப்பு - இரண்டிலும் குறை வைக்க வில்லை..
முதல் சில படங்களில்- ரேடியோவில் பேசுவது போல் வேகமாய் பேசிய பாலாஜி இம்முறை சரியான மாடுலேஷனில் ! எப்போதும் வேஷ்டியில் வரும் அவர் கெட் அப்-பே சற்று வித்யாசமாக உள்ளது....தெறிக்க விடலாமா, அட்ராக்ட் பண்ற புலி மாதிரி டைமிங் காமெடிகள் டப்பிங்கில் சேர்த்திருந்தாலும் தியேட்டரில் சவுண்ட் தூள் பறக்கிறது.
கூடவே வரும் நண்பர்கள் கூடத்தில் ராகுல் எனப்படும் பெரியவர் கவனம் ஈர்க்கிறார்... (நான் வாட்ஸ் அப் செய்றேன் என்பதாகட்டும்.. வில்லன் கூட்டத்தில் இருக்கும் போது தன் இடத்தை கூகிள் மூலம் சொல்வதாகட்டும் இந்த பெரியவர் பாத்திரம் ரசிக்க வைக்கிறது)

பார்த்திபன் - வில்லன் ரோல்க்கு ஓகே. மற்ற படி பெரிய அளவு ஈர்க்க வில்லை..
ஆனந்த் ராஜ் - சிறு பாத்திரம் எனினும் ரசிக்க வைக்கிறார்.
இசை- இயக்கம்
அனிருத் இசையில் "தங்கமே " ஹிட். பின்னணி இசை குட்
இயக்குனர் விக்னேஷ் சிவன் - சற்று வித்யாச கதையை எடுத்து கொண்டு முடிந்த வரை சிரிக்கும் படி திரைக்கதை அமைத்துள்ளார்.. முதல் படத்துக்கு நல்ல இம்ப்ரூவ்மென்ட். வசனங்கள் ரசிக்கும் படி இருப்பினும்- சில இடங்களில் வரும் டபிள் மீனிங் டயலாக் தவிர்த்திருக்கலாம்.
முதல் காட்சியில் போலிஸ் என்பதை ரவுடி என மாற்றி எழுதும் சிறுவன் துவங்கி ஆங்காங்கு இயக்குனர் டச் பளிச்சிடுகிறது. கூடவே இயக்குனர் நயனின் பரம ரசிகர் என்பதும்...
முதல் பாதி பெருமளவு பாண்டியில் மிக அழகான பின்னணியில் படமெடுத்துள்ளனர்...
கடைசி 30 நிமிடம் இன்னும் crisp ஆக இருந்திருக்கலாம்.. குறிப்பாக நயன் - வில்லன் இடத்துக்கு தானாகவே கிளம்பி செல்வதெல்லாம் டூ மச்..சுத்தமாய் நம்ப முடியாத காட்சி அது.. போலவே.. விஜய் சேதுபதிக்கு தந்தை இருக்கிறாரா .. இல்லையா- ஒரு தகவலும் இல்லை !
பைனல் அனலிசிஸ்
நல்ல கதை- சிரிக்கும் படியான திரைக்கதை - ஹீரோ, ஹீரோயின், காமெடியன் பெர்பாமேன்ஸ் குட்... ..
சிற்சில குறைகளை ஒதுக்கி விட்டு இந்த ரவுடியை ரசிக்கலாம்.. !
சிற்சில குறைகளை ஒதுக்கி விட்டு இந்த ரவுடியை ரசிக்கலாம்.. !
ஒரு தபா பார்க்கலாமுன்னு சொல்லறீங்க.
ReplyDelete