Tuesday, October 27, 2015

வானவில்: கமலின் அபிமானம்- அகம் புறம்- பஜ்ரங்கி பாய்ஜன்

பார்த்த படம் - பஜ்ரங்கி பாய்ஜன்

சல்மான் கான் நடித்த இப்படம் இப்போது தான் கண்டேன். பாகிஸ்தானிலிருந்து தவறி வந்த - பேச முடியா குழந்தையை அவரது பெற்றோரிடம் சல்மான் சேர்த்து வைப்பதே கதை.

நிச்சயம் சல்மான்க்கு இது ஒரு வித்தியாச படம் ! எப்போதும் அடி தடி, டூயட் என இருக்கும் அவருக்கு - முழுக்க அமைதியான பாத்திரம் ( 2 சண்டைகள் இருப்பினும் அவையும் விரைவில் முடிகின்றன )

மனதை கொள்ளை கொள்வது பேச முடியாத அந்த சிறுமி தான்  -  வெள்ளந்தி சிரிப்பு- பேசும் விழிகள் என ரசிக்க வைக்கிறாள்

சல்மான் பாத்திரம் - மகாபாரத தர்மன் போலவும், அரிச்சந்திரன் போலவும் எப்போதும் பொய் சொல்லாதது சில நேரம் எரிச்சல் வர வைத்து விடுகிறது.. யோவ் பொய் சொல்லி தொலையேன் என .. ஆனால் இறுதியில் அவர் எல்லா இடத்திலும் ஒரே விதமாய் பேசியதால் மட்டுமே தப்புகிறார் என காண்பித்து ஜஸ்டிபை செய்கிறார்கள்..

சற்று சினிமாட்டிக் இரண்டாம் பகுதி தான்.. நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லை.. இருப்பினும் நிச்சயம் ரசிக்கவும், சில துளி கண்ணீரும் வர வைக்கும் இப்படத்தை நல்ல சினிமா விரும்புவோர் நிச்சயம் காணலாம் !

கிரிக்கெட் பக்கம்

நல்ல வேளை.. இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான கடைசி ஒரு நாள் மேட்ச்  பார்க்கவில்லை (பயணத்தில் இருந்தேன்)

நெருக்கமாக சில மேட்ச் முடிவுகள் சென்றாலும் கடைசி மேட்ச்சில் மரண அடி.. இந்தியா சொந்த மண்ணில் இப்படி ஒரு நாள் சீரிஸில் தோற்பது அரிதான விஷயம்.. வேர்ல்ட் கப் ஜெயித்த அதே அணிக்கு ஏன் இந்த நிலை?

மிக முக்கிய காரணம் - பவுலிங்; வேக பந்து வீச்சு மற்றும் ஸ்பின் இரண்டிலும் சொதப்பினர். அஷ்வின் இல்லாதது பெரும் இழப்பு என்பதெல்லாம் சும்மா; ஒரு தனி நபரை நம்பியா ஒரு டீம் இருக்கும் ?

பீல்டிங் - தோற்ற மேட்ச்களில் சரியாக சொதப்பியது. தவான்- ரைனா இருவரும்  அனைத்து மேட்ச் ஆடி- ஆளுக்கு ஒரு அரை சதம் மட்டும் அடித்தனர். ரோஹித் ஷர்மா முதல் மேட்சுக்கு பின் அடிக்கவே இல்லை.

சரியான ஆள் ரவுண்டர் இல்லாமல் இந்தியா திணறுகிறது- 5 பவுலர்கள் வைத்து கொண்டு ஆடுவது அணியின் பேலன்சை சீர் குலைக்கிறது.

தோனி- காப்டன்சி விட்டு வெளியே வந்து வெறும் கீப்பர் ஆக ஆடலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

டெஸ்ட் மேட்சிலாவது இந்தியா ஜொலிக்கிறதா என பார்ப்போம்.

கமல் நடிக்கும் போத்தீஸ் விளம்பரம் 

இதுவரை விளம்பரமே நடிக்காத கமலின் முதல் விளம்பரம் என அதீத முஸ்தீபுடன் வெளியான போத்தீஸ் விளம்பரம் செம மொக்கையாய் இருந்தது..

கமல் படம் போல - முழுக்க, முழுக்க கமலை சுற்றியே அபிமானம், அபிமானம் என சுழன்று விட்டு - இப்படியாப்பட்ட மாட்டை இந்த மரத்தில் தான் கட்டுவார்கள் என - கடைசியில் போத்தீஸ் என சொல்லி முடித்தார்கள்.. கொஞ்சம் கூட இம்ப்ரசிவ் ஆக இல்லை.

ஆனால் தீபாவளி ஸ்பெஷல் என வெளியிட்ட கமல் வேட்டியுடன் வரும் விளம்பரம் - ஓரளவு ஓகே. ஒரே ஷாட்டில் எடுத்தது ரசிக்க வைக்கிறது... மேலும் கமல் இங்கு தீபாவளி என்ற பண்டிகை பற்றி தான் பேசுகிறார்- தன்னை பற்றியல்ல.

இரண்டையும் விட கார்த்தி மற்றும் காஜல் நடிக்கும் சென்னை சில்க்ஸ் விளம்பரம் - சுவாரஸ்யம். காஜல் ஒவ்வொரு உடையாய் போட்டு கொண்டு வர, அதற்குள் கார்த்தி வேறு ட்ரெஸ் மாறியிருப்பார் - சென்னை சில்க்ஸில் இவ்வளவு வெரைட்டி கிடைக்கும் என்கிற மெசேஜ் சரியாக சென்று சேர்கிறது.. மேலும் கார்த்தி & காஜல் எப்பவுமே செம காம்பினேஷன்..

அகம் புறம் - குறும்பட விமர்சனம் 

பதிவர் குடந்தையூர் சரவணன் எழுதி இயக்க - பதிவர் நண்பர்கள் பலரும் நடித்திருக்கும் குறும்படம்  - அகம் புறம்.

கதை சற்று ஆர்வத்தை எற்படுத்துகிறது.. முடிவு இன்னும் சற்று தெளிவாகவும் நச்சென்றும் இருந்திருக்கலாம்.

சில நண்பர்கள் நடிப்பு இயல்பு - இன்னும் சிலர் புதிதாய் நடிப்பதால் சற்று செயற்கை தன்மை தெரிகிறது. அடுத்தடுத்து நடிக்க, நடிக்க இந்த பிரச்சனை சரியாகி விடும். .

பதிவர்கள் நட்பு - இப்படி ஒரு கூட்டு முயற்சியாய் வந்திருப்பதை காண மகிழ்ச்சியாய் உள்ளது.

இக்குறும் படத்தை இங்கு காணலாம்:ஹெல்த் பக்கம் 

உடல் எடை கூடுவதற்கு ஒரு மிக முக்கிய காரணம் - வெளியில் சாப்பிடுவது !

உடல் எடை குறைப்பு என்கிற எண்ணம் சற்று தீவிரமான பின், முடிந்த வரை வீட்டில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது நல்லது. வெளியில் சாப்பிடும் போது - உணவு வகைகள் அதிகம் என்பதாலேயே சற்று அதிகம் சாப்பிடுவது இயல்பான ஒன்று என்கிறது பல்வேறு ஆய்வுகள்.. வீட்டில் அந்த அளவு வெரைட்டி இருக்காது. மேலும் நாம் நிஜமாகவே சீரியஸ் என்றால் - மனைவி அல்லது அம்மா - நம் உடல் எடை கூடாத நல்ல உணவுகளாக  சமைக்க துவங்குவர்..

அழகு கார்னர் டிவி பக்கம் : சூப்பர் சிங்கர்  

இந்த முறை சூப்பர் சிங்கர் சற்று வேகமாய் நடப்பதாய் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு வாரம் முழுக்க போட்டி, போட்டி என சொல்லி கடைசியில் - இந்த வாரம் நோ எலிமினேஷன் என ஜல்லியடிப்பார்கள்.. இப்போது அப்படி இல்லை. அரிதாக  எலிமினேஷன் இல்லா விடில் அடுத்த வாரம் நிச்சயம் இருவரை வெளியே அனுப்புகிறார்கள். இதனால் இன்னும் 3  மாதத்தில் சூப்பர் சிங்கர் இறுதி கட்டம் எட்டும் என நம்புகிறேன்..

பதக்கம் வெல்வது இம்முறை ஒரு பெண்ணாய் இருக்குமா? வரும் வாரங்களில் பேசுவோம்...
*****
10 எண்றதுக்குள்ளே .. சினிமா விமர்சனம் - இங்கு 

நானும் ரவுடி தான் - சினிமா விமர்சனம் : இங்கு 

4 comments:

 1. அனைத்தும் சுவாரஸ்யமாக உள்ளன.


  நண்பர் குடந்தை சரவணன் இயக்கிய குறும்படம் கண்டேன்.
  ஒரு சில குறைகள் இருந்தாலும் நிச்சயம் இரசிக்கத்தக்கது என்பதில்
  சந்தேகம் இல்லை!!!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...