Friday, July 1, 2016

பீனிக்ஸ் மால்-எத்னி சிட்டி -என்னமா ஏமாத்துறாங்க !!

ண்மையில் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள எத்நிசிட்டி என்கிற துணிக்கடைக்கு சென்றோம்.




"3000 ரூபாய்க்கு துணி வாங்கினால் 1000 ரூபாய் இலவசம்" என்கிற வார்த்தைகள் கண்ணை கவர்ந்தன.

பெரும்பாலான துணிகள் 1400 ரூபாய் வகை; 2 வாங்கினால் 2800 தான் வரும்; மீதம் 200 ரூபாய் வாங்கினால் 1000 தள்ளுபடி என கூடவே நின்று சொல்கிறார்கள் சேல்ஸ் பெண்கள். 200 ரூபாய்க்கு மட்டுமல்ல 1000 ரூபாய் வரை எந்த துணியும் இல்லை !!

ஒரு வழியாய் 2 துணிகளே 3000 வரும்படி வாங்கிவிட்டு வந்தால் தான் அடுத்த சர்ப்ரைஸ்  காத்திருந்தது.

ஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட் இப்போது கிடையாது.  4 வவுச்சர்கள் ஒவ்வொன்றும் 250 ரூபாய்க்கு தருவார்களாம். அதை வைத்து குறிப்பிட்ட சில தினங்களில் வாங்கினால் மட்டுமே டிஸ்கவுண்ட்  (நாம் பர்சேஸ் செய்து 10 கழித்து இந்த ஆபர் துவங்குகிறது; அடுத்த 4 நாளில் முடிகிறது !!)

மட்டுமல்ல.. நீங்கள் அடுத்த முறை வாங்கும் போது - வாங்கும் ஒவ்வொரு 1000 ரூபாய் பில்லுக்கும் 250 ரூபாய் டிஸ்கவுண்ட். அதாவது அடுத்த முறை நீங்கள் நிச்சயம் 4 துணிகளாவது வாங்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் 1000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.

ஆக முதலில் வாங்கும் 3000;  பின்பு மீண்டும் 4000 - மொத்தம் 7000க்கு துணி வாங்கினால் மட்டுமே 1000 ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும் ....அதுவும் 10 நாள் கழித்து சரியாய் 5 நாள்களுக்கு மட்டும் !!

"3000 ரூபாய்க்கு துணி வாங்கினால் 1000 ரூபாய் இலவசம்"  என்று கடைக்கு உள்ளே  வரவைத்து விட்டு பின்ப இப்படி ஏமாற்றுகிறார்கள்.

இதை விட மட்டமான ஸ்கீம் பார்த்ததே இல்லை என பீட் பேக் பார்ம் வாங்கி எழுதி தந்து விட்டு வந்தேன்

குறுகிய கால லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஏமாற்றும் இப்படிப்பட்ட கடைகள் பக்கம் மக்கள் மறுபடி திரும்பி பார்க்கவே மாட்டார்கள் என்பதை இவர்கள் எப்போது உணருவார்கள்? 

2 comments:

  1. சில இடங்கள் window ஷாப்பிங் செய்வதற்கு மட்டுமே. கொஞ்சம் ஆசைக்கு இடம் விட்டால் கதை கந்தலாகி விடும்.

    ReplyDelete

  2. "3000 ரூபாய்க்கு துணி வாங்கினால் 1000 ரூபாய் இலவசம்" என்கிற
    விளம்பர மயக்கத்தில விழாதவங்க எவருமுண்டோ?

    ஒளிந்திருக்கும் ஒளிஒலிப் (Video) படக்கருவியில்...
    http://www.ypvnpubs.com/2016/07/video.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...