Friday, July 15, 2016

பரம்பிக்குளம் : என்ன பார்க்கலாம்.. எங்கு தங்கலாம்?

ரம்பிக்குளம்.. இந்த ஊரின் பெயரோ, அதன் சிறப்புகளோ, இப்பயணம் செல்லும் வரை சிறிதளவும் அறிந்ததில்லை. டாப் ஸ்லிப் செல்லலாம் என்பதே எண்ணமாக இருந்தது. இணையத்தில் டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் சென்று வந்த பலரும், " Skip Topslip and Stay in Parambikkulam only" என்றே எழுதியிருந்தனர்.. இது ஓரளவு உண்மையே !



ஏராள மக்கள் பரம்பிக்குளம் பற்றி எழுதியதால் தான் அங்கு சென்று தங்குவது குறித்து திட்டமிட்டேன்..

பொள்ளாச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் சின்னதாக மலை ஏறினால், டாப்ஸ்லிப் வந்து விடும். அங்கிருந்து இன்னும் சில கிலோ மீட்டர்கள் மலை ஏறினால் பரம்பிக்குளம் !

இங்கு தங்க முன்பே நீங்கள் வனத்துறையிடம் பேசி அனுமதி வாங்க வேண்டும்.

இவர்களின் தொலை பேசி எண் : 94422 01690 / 91

ஹனி கோம்ப், டென்ட், ஐலண்ட் என மூன்று வித தங்கும் அறைகள் உள்ளன.

ஹனி கோம்ப்

சொந்தமாக காரில் வருபவர்களுக்கு இந்த தங்கும் வசதியை  தான் பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் சபாரி (Safari) தங்கள் சொந்த காரில் தான் செல்லவேண்டும்.

பரம்பிக்குளம் ஊரின் மையப்பகுதியில் இந்த தங்கும் விடுதி உள்ளது. நாங்கள் தங்கியது இங்கு தான்.

டென்ட்



கற்களால் ஆன சுவராக இல்லாமல் - துணிகளால் ஆன டென்ட்; மற்றபடி கூரை எல்லாம் ஆஸ்பேஸ்ட்டஸ் ஷீட் அல்லது அதற்கு இணையான ஷீட்டுகளால் ஆனவை.

டென்ட்டில் தங்குவது சில காரணங்களுக்காக  நல்லது.

இங்கு தங்குவோரை மாலை நேரம் சபாரி அழைத்து செல்கிறார்கள். மாலை நேரம் சபாரி சென்றால் மட்டுமே ஏதேனும் விலங்குகளை கண்ணில் காண வாய்ப்பு உள்ளது. பகல் நேர சபாரியை விட மாலை நேர சபாரி நிச்சயம் மிக சிறந்தது.




மேலும் மறுநாள் காலை இவர்களை ட்ரெக்கிங் அழைத்து செல்லும் இடமும் கூட ரொம்ப அழகாக இருக்கும் என்கிறார்கள்.

தங்குவது, சாப்பாடு அனைத்திற்கும் சேர்த்து பணம் முதலிலேயே வாங்கி விடுகிறார்கள்.

டென்ட் மற்றும் ஹனி கோம்ப் இரண்டிலும் - மூவர் அடங்கிய குடும்பத்திற்கு 3 வேளை சாப்பாடு தங்கும் வசதி சேர்த்து 4,000 போல் வரும்.  Reasonable & value for money !

ஹனி கோம்ப் சாப்பாடு மிக மிக அருமை; நான் வெஜ் - வெஜ் இரண்டுமே உண்டு. Unlimited food...Very hygienic !

ஐலண்ட்

இருப்பதிலேயே மிக சிறந்த தங்கும் வசதி என்றால் இது தான் என்கிறார்கள். பெயருக்கு ஏற்றார் போல் ஒரு தீவின் நடுவே தான் தங்கும் இடம் உள்ளது. ஒரே ஒரு காட்டேஜ் தான். அதிக பட்சம் 5 பேர் மட்டுமே தங்க அனுமதி. படகில் ஒன்னரை மணி நேரம் பயணம் செய்து தங்கும் இடத்தை அடைய வேண்டும். சமைத்து தர அங்கேயே ஆட்கள் இருப்பர். சபாரி உள்ளிட்ட மற்ற ஆக்டிவிட்டி அவர்களே அழைத்து செல்வார்கள். மேலும் ஆங்காங்கு இருக்கும் இன்னும் சில குட்டி தீவுகளுக்கு அழைத்து செல்வார்கள் என்கிறார்கள்.
********
பரம்பிகுளத்தில் என்ன விசேஷம் என்று பார்ப்போம் :

உள்ளே நுழையும் போதே நமக்கு ஒரு கைட் (Guide) ஒதுக்கி விடுகிறார்கள். அவர் நம்மோடு தான்   நாம் திரும்பும் வரை வருவார். காட்டில் வழி காட்டுவது/ நம்மை பாது காப்பது ஒரு புறம் என்றால், நம்மை குறிப்பிட்ட இடங்கள் தவிர வேறு எங்கும் இறங்க அனுமதிக்க மாட்டார் ! (அவருக்கு instructions அப்படி)

தங்கும் இடத்திற்கு செல்லும் முன் சிற்சில வியூ பாயிண்ட்களை காட்டுகிறார். அவையெல்லாம் ஓஹோ அல்ல. கொடைக்கானல் சென்றால் கூட்டி சென்று ஆங்காங்கு வியூ பாயிண்ட் என பள்ள தாக்கை காட்டுவார்களே .. அதே மாதிரி தான்.

Bamboo rafting என ஒரு படகு சவாரிக்கு அழைத்து போகிறார்கள்.. ஆஹா.. சொர்க்கம் போன்ற இடம் அது.. !



சுற்றிலும் பச்சை பசேலென்று புல்வெளி பற்பல ஏக்கர்களுக்கு விரிந்து கிடக்கிறது .. அதன் நடுவில் மிகப்பெரும் ஏரி .. சுற்றிலும் மலைகள்.. புல்வெளியில் இருந்து ஏரி இருக்கும் இடம் சற்று பள்ளத்தில் உள்ளது. இது மிக அழகான ரம்மியத்தை தந்து விடுகிறது.

ஏரி இருக்கும் இடத்தில் நாம் சென்று நின்றால் - சற்று உயரத்தில் எங்கெங்கும் பசும் புல்வெளி. மேலே மலைகள் .. அதன் மேல் படர்ந்து செல்லும் மேகங்கள் என அட்டகாசமாய் இருக்கிறது.



நம்மை படகு சவாரிக்கு தான் இங்கு அழைத்து போவார்கள். அது முடித்து விட்டு அந்த புல்வெளி உள்ளிட்ட இடங்களில் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள். அருமையான கிளை மேட், அற்புதமான சுற்று புறம் என ரொமான்டிக் ஆக இருக்கும் .. !



இந்த படகு சவாரி செய்யும் இடம் நாம் தங்கும் விடுதியான ஹனி பாட் அருகே தான் உள்ளது. நீங்கள் அங்கு தங்கும் ஓரிரு நாளில் - மறுபடி மறுபடி கூட இந்த Bamboo rafting இடத்திற்கு செல்லலாம். தப்பே இல்லை !! நிச்சயம் என்ஜாய் செய்வீர்கள்

படகு சவாரி இங்கு சற்றே வித்யாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூங்கில்களில் ஆன இந்த படகுகள் பாதுகாப்பானவை. மூழ்க வாய்ப்புகள் மிக குறைவு. அண்மை காலமாய் தான் இத்தகைய படகுகள் பயன் படுத்தப்படுகின்றன.

பரம்பிகுளத்தில் தங்குவோரை காலை ட்ரெக்கிங் அழைத்து செல்கிறார்கள். பசுமை, நம்மை தவிர யாரும் இல்லாத காடு .. இங்கு நல்ல கிளைமேட்டில் நடப்பது  சுகமாய் உள்ளது.




பல நூறு  ஆண்டுகள் பழமையான பெரும் மரம் ஒன்றை அழைத்து சென்று காட்டுகிறார்கள். 5 அல்லது 6 பேர் கைகளை முழுவதும் விரித்து சுற்றி நின்று பிடித்தால் தான் மரம் முழுதும் கை கோர்க்க முடியும்.



இந்த மரம் பார்க்க மாலை நேரம் அழைத்து சென்றார் எங்கள் கைட். அப்போது தான் கொஞ்சம் விலங்குகள் காணலாம் என்பதே  காரணம். மான் மற்றும் மிக அருகில் காட்டெருமைகள்  பார்த்தோம்.



நாம் தங்கும் ஹனி கொம்ப் காட்டேஜ்  அருகே மாலை நேரம் பழங்குடியினரின் டான்ஸ் நடக்கிறது. இது அந்த அளவு நன்றாக இல்லை; பாட்டும் சரி நடனமும் சரி... ஆவேரேஜ்.

நிறைவாக..

பரம்பிக்குளம் ஏன் செல்லவேண்டும்?

கிளை மேட் தான் முதல் காரணம். நாங்கள் சென்ற ஜுன் மாதம்  ஓரிரு மணி நேரம் தான் வெய்யில்  வெளியே வந்தது; மற்றபடி இதமான தட்ப வெப்பம். அவ்வப்போது மழை பெய்கிறது; பெய்து முடித்ததும் சூழல் இன்னும் அழகாகி விடுகிறது.

அடுத்த காரணம் பசுமை மற்றும் காடு.. எங்கெங்கு காணினும் பசுமை தான். மேலும் அதிக கூட்டம் இல்லாத இடமாக இவை இருக்கின்றன.

முன்பே எழுதிய படி Bamboo rafting செய்யும் இடம் கொள்ளை அழகு.

விலங்குகள் பார்ப்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் சார்ந்ததே; அதனை போனஸ் ஆக மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

மிக ரிலாக்ஸ்ட் ஆக 1 அல்லது 2 நாள் சென்று கிளை மேட்டை நன்கு என்ஜாய் செய்து வர ஏற்ற இடம்.. பரம்பிக்குளம் !

தொடர்புடைய பதிவுகள்

டாப்ஸ்லிப்- என்ன பார்க்கலாம்? எங்கு தங்கலாம்?

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங்கள் 

டாப் ஸ்லிப்- பழங்குடி மக்கள் + மாணவர்கள் வாழ்க்கை-ஓர் அனுபவம்

4 comments:

  1. தகவலுக்கு நன்றி....August மாதம் இறுதியில் சொந்த காரில் செல்ல திட்டம்..Honeycombஇல் தங்குவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்துகொள்ளலாமா..

    ReplyDelete
    Replies
    1. Around 3000 -4000 for a family per day; Including stay and food expenses

      Delete
  2. Top Slip வரை சென்றிருக்கிறேன். பரம்பிக்குளம் சென்றதில்லை. தகவல்களுக்கு நன்றி மோகன். உதவியாக இருக்கும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...