Thursday, October 27, 2016

ஜெயமோகனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

ணையத்தில் ஒரு வீடியோ சில நாட்களாக சுற்றி  வந்தது;வங்கியில் பணி புரியும் ஒரு பெண்மணி மிக மெதுவாக  பணத்தை எண்ணி தருவதை காட்டும் வீடியோ அது.



இதனை யாரோ ஒருவர் ஜெயமோகனுக்கு அனுப்பி  வைக்க,அந்த பெண்மணி ஒரு தேவாங்கு, அடித்து வெளியே துரத்தணும்; வீட்டில் போய் கீரை ஆய்ந்தால் கூட நன்றாக செய்வாரா என  எழுதியிருந்தார்.


ஜெயமோகன் எழுதியது:

தேவாங்கு
“நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல.

இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்.

எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!”.
**********************
ந்நிலையில் இந்த பெண்மணி பற்றி வந்திருக்கும் இந்த தகவலை பாருங்கள்




மீண்டும் ஜெயமோகனுக்கு வருவோம்; தான் யார்.. எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது புரியாமல், இணையத்திற்கு புதிதாய் வந்து சலம்பும் விடலை பையன் போல எந்த ஒரு முதிர்ச்சியும் இல்லாமல் ஜெயமோகன் எழுதியது பெரும் ஏமாற்றம்..

வீடியோவை பார்க்கும் போது நிச்சயம் அந்த பெண்மணி எதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர் என தெளிவாக தெரிகிறது. உடல்நிலை/ மனநிலை சரியில்லாதவர் என்பதை நிச்சயம் ஊகிக்க முடிகிறது; ஒருவரின் அனுமதி இன்றி அவரை வீடியோ எடுப்பதே  தவறு;குறைந்த பட்சம் முகத்தை மறைத்தாவது அதை வெளியிட  வேண்டும்.

பெண் என்பதால் - கீரை ஆய சொல்லி  சொல்கிறார் பாருங்கள் .. அங்கே  தெரிகிறது ஜெயமோகனின் நிஜ மனது.

இப்போது அந்த பதிவை அகற்றி விட்டார்.. இதிலேயே அவர் செய்தது தப்பு என அவர் ஒத்து கொள்வது புரியும்.. ஆனால் அப்படி எழுதியதற்கு குறைந்த பட்சம் மன்னிப்பாவது அவர் கோர வேண்டும் ! அப்போது தான் அவரை ஆளுமை என்றும், ஆசான் என்றும் சொல்ல தகுதி இருக்கும்.

படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோவில் என ஒரு பழமொழி சொல்வார்கள். ஜெயமோகனை வைத்து சொல்லனும்னா : எழுதுறது மஹா பாரதம்; மனசுல இருக்குறது துரியோதனன் தான்  !!

7 comments:

  1. ok ok banking industry is service oriented..
    criticisms are bound to arise...when the customers get affected...

    ReplyDelete
  2. இந்த கமென்டை ஜெயமோகன் தன் பதிவில் சேர்த்திருந்தால் அவர் மனிதர்!! பிரபலங்கள் தங்கள் எழுத்துக்களில் கவனமாக இருக்க வேண்டாமா!
    உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்

    ReplyDelete
  3. அடி சறுக்கியது .....

    ReplyDelete
  4. Jayamohan has gone down from my opinion. I was proud of him, not anymore. He should tender apology for the worse character assassination.

    ReplyDelete
  5. Jayamohan has gone down from my opinion. I was proud of him, not anymore. He should tender apology for the worse character assassination.

    ReplyDelete
  6. இக் காட்சியைப் பார்த்த போது, இப் பெண்மணீக்கு ஏதோ பிரச்சனை உள்ளதென்பது எனக்குப் புரிந்தது. வானத்துக்குக் கீழ் உள்ள எல்லாம் தெரிந்த, அபிப்பிராயம் சொல்லும் இவர் புரியாதது அதிசயம்.
    அவர் வீட்டுப் பெண்களை சொல்வாரா? இவருக்கு மனப்பிரட்சி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...