Sunday, November 6, 2016

பெயில் குறித்து : நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும் ...

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

வாரண்ட் இன்றி போலிஸ் எப்போது கைது செய்யலாம்

நீங்கள் கைதானால் உங்கள் உரிமைகள்

**************
ழக்குகளை அதன் தீவிரத்தை பொறுத்து பெயிலில் வரக்கூடிய வழக்கு என்றும் பெயிலில் வர முடியாத வழக்கு என்றும் பிரிக்கலாம்.

பெயிலில் வரக்கூடிய வழக்குகள்

இவை பெரும்பாலும் சிறு குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் காவல் துறை அதிகாரியே காவலில் உள்ளவரை பெயிலில் விடுவிக்கலாம். ஜாமீன் தருவோர் இன்றி கூட குற்றம் சாட்டப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை பெயிலில் விடலாம்

பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்

"பெயிலில் விடுவிக்க முடியாத " என்பதன் பொருள் காவல் துறை அதிகாரியால் பெயிலில் விட முடியாது அதை ஒரு நீதிபதி தான் செய்ய முடியும் என்பதுதான்.

நீதிபதி குற்றவாளி குறித்த முதற்கட்ட முடிந்த பின் அவரை பெயிலில் விடுவிக்க கூடும். அவர் தான் குற்றம் புரிந்தார் என்பதற்கு நியாயமான காரணம் இல்லை என்பதாலும் வழக்கு முடிவதற்கு இடையிலும் பெயிலில் செல்ல நீதிபதி அனுமதிப்பார்

                                                       

பெயிலில் விட  மறுக்க  போலிஸ் பொதுவாக கூறும் காரணங்கள்

 1. குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்

2. சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்

3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்

 4. காவல் துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை

 5. திருட்டு போன பொருட்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை

 6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றபட்வில்லை

 7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

 குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்கவேண்டும். அவற்றை மறுக்கவிடில் பெயில் கிடைப்பது கடினம்

பெயிலில் வர மனு

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப்ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை நியமிப்பது மிக நல்லது. அதற்கான மனு அவர் நீதிபதியின் முன் தரவேண்டும் (பெரும்பாலும் வெளியில் இருக்கும் நண்பர் அல்லது உறவினர் வழக்கறிஞரை பார்த்து விட்டு, அதற்கான கையெழுத்து மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் வாங்குவர் )

வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ள இயலாதென்றால் குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதிக்கு மனுசெய்யலாம் (பொது மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்பதால் தானே வாதிடுவதை பொதுவாய் தவிர்ப்பது நல்லது)

பெயில் மனுவில் பொதுவாய் கீழ்க்காணும் காரணங்கள் சொல்லபடுகின்றன

1. பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்

2. தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது

3. காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்

பெயில் மறுப்பும் மேல் முறையீடும்

பெயிலில் விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.

ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்

ஆண்டிசிபேட்டரி பெயில் (Anticipatory Bail)

ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு

இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யலாம். வாரன்ட் இல்லாமல் போலிசால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது .

*********
அண்மை பதிவுகள் :

வானவில் + தொல்லை காட்சி: எஸ். ரா Vs சாரு, நீயா நானா, பியா இன்னபிற

உணவகம் அறிமுகம் : சுக நிவாஸ் லஸ் கார்னர்

19 comments:

 1. அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய
  தகவல்களுடன் கூடிய பதிவு அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்

   Delete
 2. சட்டத்தைப்பற்றியும் அனைவரும் ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். உங்க பதிவு நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பூந்தளிர் நன்றி

   Delete
 3. Replies
  1. இல்லீங்க ஸ்ரீராம் சார் ; லிங்க் தந்துள்ள மற்ற தான் முன் போட்டவை

   Delete
 4. எங்களுக்கெல்லாம் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என ஆண்டுக்கு மூணு முறை மட்டுமே 'பெயில்' கிடைக்கும்(அப்போ தானே வீட்டுல ஊருக்கு போவாங்க!). இடையில் வேறு யாரு நினைத்தாலும் இடைக்கால நிவாரணம் எதுவும் கிடைக்காது.

  சீரியசான போஸ்ட். பதிலை தப்பா எடுத்துக்காதீங்க மோகன்.

  ReplyDelete
  Replies
  1. கடைசி டிஸ்கி எல்லாம் தரவே வேண்டாம் ஆதி மனிதன் :)

   Delete
 5. இது பதிவு சம்பந்தமாக அல்ல. ஆனால் எனக்கொரு சந்தேகம். டெல்லி வழக்கில், அந்த ஆறு பேர் சார்பாக, வக்கீல் யாராவது வாதாடுவார்களா?

  ReplyDelete
  Replies
  1. Kandippa someone will come...

   Delete
  2. ஆம் ; நிச்சயம் அவர்கள் பக்கமும் யா ரேனும் வழக்கறிஞர் எடுத்து சொல்ல வேண்டும் என்கிறது சட்டம் அரவிந்த் என்கிற வழக்கறிஞர் தானாக அவர்களுக்கு வாதாட முன் வந்ததாக செய்தி தாளில் வாசித்தேன்

   Delete
 6. சிறப்பு பதிவு தொடருங்கள்.

  ReplyDelete
 7. நல்ல தகவல்... சட்டம் பற்றி சாமானிய மக்களும் அறிதல் வேண்டும்... நல்ல முயற்சி

  வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 8. எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள். நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 9. என்னாச்சு ? பதிவு ஒரு மார்க்கமாக உள்ளதே?

  ReplyDelete
 10. அருமையான பதிவு.
  நன்றி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...