Monday, February 20, 2017

படிப்பில் ஜெயிப்போர் வாழ்வில் தோற்கிறார்களா? ஸ்டேட் பஸ்ட் மாணவன் பேட்டி

மாநிலத்தில் முதல் மாணவனாய் வந்த ஸ்ரீநாத் பேட்டி தொடர்கிறது.

முதல் பகுதி : இங்கே

*****
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்த அறையில் ஒரு ஷெல்ப் - அது முழுக்க ஸ்ரீநாத் வாங்கிய பரிசு பொருட்கள், கோப்பைகள் என நிரம்பி வழிகிறது.


" ஸ்டேட் பர்ஸ்ட் வந்ததுக்கு என்ன பரிசு அம்மா - அப்பா வாங்கி தந்தாங்க? "

" கம்பியூட்டர் பழசாயிடுச்சு. அதனால் புது கம்பியூட்டர் வாங்கி தந்தாங்க. அப்புறம் நிறைய ஷீல்ட் வந்துட்டதால அதை வைக்கிறதுக்கு இதோ இந்த தனி ஷெல்ப் வாங்கி தந்தாங்க"

"டென்த் படிக்கும்போது வேற பொழுதுபோக்கு ஏதும் கிடையாதா ?"

அப்படி எல்லாம் இல்லை; வாலிபால் கிரிக்கெட் ரெண்டுமே சின்ன வயசிலிருந்து தொடர்ந்து ஆடுறேன். இரண்டிலும் தஞ்சை டிஸ்ட்ரிக்டுக்காக ஆடிருக்கேன். பத்தாவதில் கூட மேட்ச் ஆட போனேன் டீச்சர்கள் " ஸ்ரீநாத் மேட்ச் போவதால் மார்க் குறைய கூடாது பாத்துக்க என சொல்லிட்டு அனுமதிச்சாங்க "

" இவ்ளோ ஏன் அங்கிள் .. இங்கிலீஷ் ஒன் பரீட்சை முடிஞ்சு அடுத்த நாள் இங்கிலீஷ் டூ பரீட்சை. நான் மறுநாள் பரீட்சை வச்சிக்கிட்டு ஈவனிங் போயி கிரிக்கெட் ஆடிட்டுருன்தேன். எங்க ஏரியாவில் ஒரு ஸ்கூல் டீச்சர் இருக்கார் கரக்ட்டா அவர் பார்த்துட்டு திட்டினார்"

"பொதுவா பத்தாவதில் முதல் ரேன்க் வருபவர்கள் + 2 வில் மறுபடி முதல் மார்க் வாங்குவதில்லை. இது ஏன்னு நினைக்கிறே ?

ஸ்டேட் பஸ்ட் வந்தோன நிறைய பேர் பாராட்டி பாராட்டி கொஞ்சம் ஓவர் கான்பிடெண்ட் ஆகிடுராங்கன்னு நினைக்கிறேன். அத்தோட ஸ்டேட் பஸ்ட் வாங்க நிறைய உழைப்போட கொஞ்சோண்டு லக்கும் வேணும் அங்கிள். அந்த லக் ஒரு தடவை வரலாம் மறுபடி அதே ஆளுக்கு இன்னொரு தடவை லக் அடிக்கிறது கஷ்டம் தானே?"

முதல்வருடன் பரிசு வாங்குகிற மாதிரி அங்கிருக்கும் படத்தை பார்த்து விட்டு அந்த அனுபவம் பற்றி கேட்க,

முதல்வருக்கு இடப்பக்கம் முதலாவதாக ஸ்ரீநாத்

" முதல் மூணு ரேன்க் வாங்கியவர்கள் முதல்வர் கையால் பரிசு வாங்குவார்கள். என்னை தவிர ரெண்டாவது ரேன்க் வாங்கிய 6 பேர், மூணாவது ரேன்க் வாங்கிய 15 பேர் என அன்னிக்கு மொத்தம் 22 பேர் வந்திருந்தாங்க. முதல்வர் கிட்டே எப்படி நடந்து போகணும், எப்படி கை நீட்டி பரிசு வாங்கணும் என ரிகர்சல் எல்லாம் ரொம்ப நேரம் நடந்தது.

முதல்வர் எங்களை வந்து பார்த்து பரிசுகளை கொடுத்தார் ஒரு நிமிஷம் போல தான் அவர் கூட இருக்க முடிந்தது; வேறு விழா இருந்ததால் கிளம்ப வேண்டியாகிடுச்சுன்னு நினைக்கிறேன் "

உனக்கு அண்ணன் தம்பி யாரும் இருக்காங்களா ?

எனக்கு ஒரே அண்ணன். இஞ்சினயரிங் முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டான். அண்ணன் என் அளவு அதிகமா மார்க் வாங்கலை ஆனா அவன் செம புத்திசாலி. எதையும் உடனே கத்துப்பான் சுவிம்மிங், கார் டிரைவிங் இப்படி எதுவுமே டக்கன்னு கத்துக்கிட்டான். அவன் தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்

அண்ணனை பற்றி பேசும்போது அன்பும், மகிழ்ச்சியும் நிரம்ப கண்கள் விரிய பேசுகிறான்

படிப்பில் ஜெயிப்பது ஒரு பக்கம். வாழ்க்கையில் ஜெயிப்பது என்பது இன்னொரு பக்கம். நமக்கு தெரிஞ்ச பிசினஸ் அல்லது பொது உலகில் பிரபலமா இருக்கவங்க யாரும் படிப்பில் முதல் மார்க் வாங்கினவங்க இல்லை. அதே போல் மாநிலத்தில் முதல் மார்க் வாங்கியவங்க அப்புறம் என்ன ஆனாங்க அப்படின்னும் தெரியவே இல்லை. இல்லியா ? இது ஏன்னு நீ யோசிச்சிருக்கியா ?

ம்ம் மே பீ படிப்பு, படிப்புன்னு அவங்க மத்த விஷயத்தில் கான்சென்ட்ரேட் பண்ணாம இருந்திருப்பாங்களோ என்னவோ ? தெரியலை அங்கிள்.

என்னை பொறுத்த வரை நிச்சயம் எஞ்சியரிங் சம்பந்தமா படிக்க போறேன். அது என்ன படிப்பு அப்படிங்கறது நான் அதுக்கான என்ட்ரன்ஸ்சில் வாங்குற மார்க் பொறுத்து தெரியும்

இன்னொண்ணு : நிச்சயம் படிச்சு முடிச்சு வேலைக்கு போனபிறகு மத்தவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி பண்ணனும்னு யோசனை இருக்கு. அது என்ன விதமானதுன்னு தெரியலை. ஆனா நிச்சயம் எதோ ஒண்ணு செய்வேன்.

(அலாக்ரிட்டி என்ற நிறுவனத்தில் பணி புரியும் போது அதன் தலைவரான அமோல் கர்னாட் (சமீபத்தில் தான் புற்று நோய்க்கு இரையானார்) சொல்வார்: " முதல் ரேன்க் வாங்குறவங்க ஆபிசில் ஜெயிக்க மாட்டாங்க என்று சொல்வது ரொம்ப பெரிய தப்பு ! முதல் ரேன்க் வாங்குவது சாமான்ய விஷயம் இல்லை. அதுக்கு எவ்வளவு உழைப்பு, டிசிப்ளின், Focus எல்லாம் வேணும் ! அப்படிப்பட்டவன் கம்பனிக்காக கண்டிப்பா நல்லா உழைக்கவும் தான் செய்வான். அவனால் கம்பனியில் ஷைன் பண்ண முடியலை என்றால் நம்ம சிஸ்டத்தில் தான் எதோ தப்பு !" )

அரசு தேர்வில் நல்ல மார்க் எடுக்க பொதுவா என்ன செய்யணும் ?

நான் என்ன செஞ்சேன்னு சொல்றேன். கிளாசில் நன்கு பாடம் கவனிச்சுடுவேன் அது ரொம்ப முக்கியம். டவுட் வந்தா உடனே எழுந்து கேட்டுடுவேன். சில டீச்சர்ஸ் Flow போயிடும்னு கடைசியா கேட்க சொல்லுவாங்க அப்போ மட்டும் கடைசியா கேட்பேன். இல்லாட்டி தனியா பார்த்தாவது கேட்பேன். நான் டியூஷன் ஏதும் போகலை அதனால் கிளாசில் சொல்லி கொடுப்பது தான் முக்கியம் (முதல் ரேன்க் வாங்கியவன் டியூஷன் ஏதும் போகலை என்கிற தகவல் ஆச்சரியமா இருந்தது )

தினம் கொஞ்ச நேரம் கிளாசில் கவனிச்சதை மறுபடி ஒரு தடவை படிச்சு பார்ப்பேன். சனி, ஞாயிறு நல்லா படிப்பேன். பாடத்தை முதல் முறை படிக்கும் போது கதை புக் படிக்கிற மாதிரி படிச்சு அதில் என்ன இருக்குனு தெரிஞ்சுப்பேன். பள்ளிகளில் வைக்கிற டெஸ்ட், அது டெய்லி டெஸ்ட்டாஇருந்தாலும் அதுக்கு ஒழுங்கா படிச்சிடுவேன்

எல்லா பரிட்சையும் டைம் சரியா மேனேஜ் பண்ணி எழுதணும். அது ரொம்ப முக்கியம். முப்பது நிமிஷம் முன்னாள் எல்லா கேள்வியும் எழுதி முடிக்க திட்டம் போடணும். அப்போ தான் 15 நிமிஷம் முன்பாவது முடிக்கலாம். அந்த 15 நிமிஷம் திரும்ப படிக்க, அண்டர்லைன் செய்ய யூஸ் ஆகும்.

பிளாக், ப்ளூ , வயலட் - இந்த மூணு பேனா மட்டும் வச்சிருப்பேன்; பளுவில் எழுதுவேன் சில நேரம் தலைப்பு ( Heading ) மட்டும் பிளாக் கலரில் தருவேன். வயலட் கலர் முக்கிய பாயிண்ட்ஸ் அண்டர்லைன் செஞ்சு காட்ட பயன்படுத்துவேன்

எழுதும் போது ஒண்ணு 1,2,3 ன்னு பாயிண்ட் வைஸ் எழுதணும். இல்லாட்டி குட்டி குட்டி தலைப்பு போட்டு அதற்குள் மற்ற விஷயங்கள் எழுதணும். அப்ப தான் திருத்துரவங்களுக்கு ஈசியா இருக்கும்

அந்த கேள்விக்கு சம்பந்தமான எல்லா ரிலவன்ட் பாயிண்ட்டும் எழுதிடணும். எதையும் மிஸ் பண்ண கூடாது. அதே நேரம் தேவையில்லாத கதையும் விட கூடாது. எவ்ளோ எழுதுறோம் என்பது முக்கியமே இல்லை. சரியா எழுதுறோமா என்பது தான் முக்கியம்

(ஸ்ரீநாத்தை விட ஓரிரு வயது சிறியவளான என் பெண்ணும் உடன் வந்திருந்தாள். " நீ ஸ்ரீநாத் மாதிரி பஸ்ட் வரணும்னு இல்லை; ஆனா நல்ல மார்க் வாங்க உனக்கு சில ஐடியா கிடைக்கலாம்" என்று சொல்லி தான் அழைத்து சென்றிருந்தேன். பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல அடி தூரம் தள்ளியே நிற்கும் அவள், படிப்பு சம்பந்தப்பட்ட பேட்டி என்பதால் தானாகவே வந்தாள். நிச்சயம் அவளுக்கு இந்த குறிப்புகள் உபயோகமாக இருந்திருக்கும் )

எந்த ஒரு ஸ்டூடன்ட் நினைச்சாலும் ஸ்டேட் பஸ்ட் வர முடியுமா?


இண்டரஸ்ட்டும், Focus ம் இருந்தால் நிச்சயம் நல்ல மார்க் யாரும் வாங்கலாம். டெண்தை பொறுத்த வரை ஹார்ட் வொர்க் பண்ணா யார் வேண்ணா ஸ்டேட் பஸ்ட் வரலாம்னு சொல்லலாம். ஆனா + 2 வில் Basic Potential -ம் கொஞ்சம் வேணும். அப்போ தான் நல்லா படிக்க முடியும்; மார்க் வாங்க முடியும்னு தோணுது

நிச்சயமா ஸ்டேட் பஸ்ட் வாங்க ஏற்கனவே சொன்ன மாதிரி முதல்ல ஹார்ட் வொர்க். அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம் ரெண்டும் வேணும்.

****
பேசி முடித்து, புகைப்படம் எடுத்து கொண்டு விடை பெற்றேன்.

ஸ்ரீநாத்: தற்போது போனிலும், மெயிலிலும் என்னோடு தொடர்பில் இருக்கிறான். தஞ்சையில் எனக்கு கிடைத்த இன்னொரு நண்பன் !

34 comments:

 1. அரசுத்தேர்வு என்றில்லை, பொதுவாக எந்தத் தேர்வாக இருந்தாலும் ஸ்ரீநாத் கொடுத்த டிப்ஸை கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடியும்... வாழ்த்துக்கள் ஸ்ரீநாத்...

  ReplyDelete
  Replies

  1. ஆம். நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 2. பத்தாம் வகுப்புக்கும் +2 வுக்கும் இடையில் பாடத் திட்டத்தில் பெரிய இடைவெளி உண்டு.அதுவும் குறிப்பாக +1 இல் சட்டென்று பாடத் தரம் அதிகமாகி விடும். இதில் தமிழ் மீடியம் படித்த மாணவர்கள் அதிக கஷ்டப் படுவார்கள். ஆனால் அதையும் தாண்டி மனப்பாடம் மற்றும் பயிற்சி மூலமே அதிக மதிப்பெண் வைத்து விடுவதில் திறமையானவர்கள் நம் ஆசிரியர்கள். அனால புரியாமல் படிப்பதனால் கல்லூரிகளில் முதல் ரேங்க் எடுத்த மாணவர்கள் கூட அரியர் வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.
  தேர்வு நெருங்கும் நேரத்தில் பயனுள்ள நல்ல நேர் கானல்

  ReplyDelete
  Replies
  1. பள்ளி கல்வி துறையில் இருக்கும் உங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி சார்

   Delete
 3. /// கிளாசில் நன்கு பாடம் கவனிச்சுடுவேன் அது ரொம்ப முக்கியம்...

  எவ்ளோ எழுதுறோம் என்பது முக்கியமே இல்லை... சரியா எழுதுறோமா என்பது தான் முக்கியம்... ///

  அதிக மதிப்பெண்கள் எடுக்க ஸ்ரீநாத் அவர்களின் ஆலோசனைகள், அறிவுரைகள் எற்றுக் கொள்ளத்தக்கது... பல குழந்தைகளுக்கும் உதவக்கூடும்...

  /// அண்ணன் தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்... ///

  உனது முதல் பள்ளிக்கூடம் (வீடு) மிகவும் சிறப்பாக உள்ளது... பெற்றோருக்கு எனது இனிய வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றிகள்...

  /// ம்ம் மே பீ படிப்பு, படிப்புன்னு அவங்க மத்த விஷயத்தில் கான்சென்ட்ரேட் பண்ணாம இருந்திருப்பாங்களோ என்னவோ ? தெரியலை அங்கிள்... ///

  படிப்பிற்கும், வாழ்வின் வெற்றி தோல்விற்கும் சிறிது கூட சம்பந்தமேயில்லை... அதுவும் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...

  /// அவனால் கம்பனியில் ஷைன் பண்ண முடியலை என்றால் நம்ம சிஸ்டத்தில் தான் எதோ தப்பு ! ///

  அலாக்ரிட்டி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அமோல் கர்னாட் அவர்களைப் போல், இவ்வாறு எற்றுக் கொள்பவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்...?

  /// (முதல் ரேன்க் வாங்கியவன் டியூஷன் ஏதும் போகலை என்கிற தகவல் ஆச்சரியமா இருந்தது) ///

  டியூஷன் யாரும் விரும்பி செல்வதில்லை... டியூஷன் அனுப்பப்படுகிறார்கள்... வீட்டில் அவ்வளவு வேலை ! ஒவ்வொரு வருடமும் மாநிலத்தில் / மாவட்டத்தில் வரும் மாணவ மாணவியர் பேட்டிகளை பார்க்கும் போது அவர்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை "டியூஷன்"... அதை விட அவர்களின் வீட்டில் பெற்றோர்கள் செய்யும் பல தியாகங்கள் இருக்கிறதே...

  இரண்டு மாதம் முதற் கொண்டு-சுருக்கமாக... முக்கியமானது மட்டும் : 1) Cable cut 2) Cinema cut 3) Function / Tour cut... etc.,


  /// நிச்சயம் படிச்சு முடிச்சு வேலைக்கு போனபிறகு மத்தவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி பண்ணனும்னு யோசனை இருக்கு. அது என்ன விதமானதுன்னு தெரியலை. ஆனா நிச்சயம் எதோ ஒண்ணு செய்வேன். ///

  இது தான் முக்கியம்... இது தான் வாழ்விற்கு தேவை... நல்ல எண்ணம் ஸ்ரீநாத்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. விரிவான அருமையான கருத்துக்கு நன்றி தனபால் சார்

   Delete
 4. சூப்பர் பேட்டி!

  படிக்கும் மாணவக் கண்மணிகளுக்கு பயன் தரும் பதிவு.

  (டீச்சர் என்ற வகையில்) மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி டீச்சர் மகிழ்ச்சி

   Delete
 5. சமயத்தில் தெரிஞ்சோ தெரியாமலோ

  உருப்படியான பதிவுகளும் போடுறிங்க . .
  பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி குரங்கு பெடல்; நம்ம கெப்பாசிட்டி அம்புட்டு தான் குரங்கு பெடல்; எப்பவாவது மட்டும் தான் நல்ல பதிவு வரும் :)

   Delete
 6. Replies
  1. நன்றிக்கு நன்றி ஹரி

   Delete
 7. மிக அருமையான பேட்டி சார் . ஆழமான கேள்விகள்.. அழகான பதில்கள். இது வரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல உந்துதல் தரும் பேட்டி..

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சண்முகராஜன்

   Delete
 8. மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த பேட்டி! முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் டியுசன் செல்லவில்லை என்பது ஆச்சர்யம் ! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ்; நன்றி

   Delete
 9. //முதல் ரேன்க் வாங்கியவன் டியூஷன் ஏதும் போகலை என்கிற தகவல் ஆச்சரியமா இருந்தது//

  SSLC யில் நான் 80, 90 சதவீதம் வாங்கிய மாணவன் அல்ல. ஆனால் கண்டிப்பாக 70-75 ரேஞ்சில் இருந்தேன்.

  +2வில் ட்யூஷன் சேர்ந்தே ஆகவேண்டும் என்பது பள்ளியில் எழுதப்படாத விதி. Maths, Physics, Chemistry என அனைத்துக்கும் தனி தனி ட்யூஷன். கிட்டத்தட்ட படிப்பின் மீது அப்படியொரு வெறுப்பு வந்தது எனக்கு. வாரம் முழுதும் காலையிலும் ட்யூஷன், மாலையிலும் ட்யூஷன். இப்போ நினைச்சு பார்த்தா, நான் +2 பாஸ் பண்ணியதே பெரிய விஷயம்தான்னு தோணுது.

  ReplyDelete
  Replies
  1. ரகு: கரக்ட்டு; எனக்கும் கூட பள்ளியின் சென்றபோது போன டியூஷன்கள் மகிழ்ச்சியாய் இல்லை

   Delete
 10. அருமையான பேட்டி. மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 11. Very helpful for my son appearing in 10th this year! Thanks.

  ReplyDelete
 12. ஸ்ரீநாத் சொல்லிய அனைத்தும் சரியே!

  அவர் +2 விலும் முதல் மதிப்பெண் வாங்குவார் என்று நம்பலாம். அவருடைய பேச்சிலிருந்து யதார்த்தமானவர் என்று புரிகிறது. தங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் இனி அவர் நண்பர் தான். அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்வோம்.

  அப்படியே, என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி வையுங்கள். நான் தஞ்சாவூர் செல்லும் பொழுது அவரை சந்திக்கிறேன்.

  நண்பர்கள் பலரும் சொன்னது போல் மிகவும் சிறப்பான பேட்டி. தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி அமைதி அப்பா

   Delete
 13. பெரும்பாலும் அதிகம் படித்து எங்காவது அமெரிக்க கல்லூரியில் வேலை செய்வார்கள் .. இன்று உள்ள எவ்வளவோ தொழில் அதிபர்களில், ஆராய்ச்சி நிறுவனங்களில் உயரத்தில் இருப்பவர்கள் முதல் மார்க் வாங்கியவர் இல்லை என்பது உண்மை. விதி விலக்கு இருக்கலாம். படிப்பு என்பது அறிவை துலங்க செய்யும் விசயம் மட்டுமே அது மட்டுமே வாழ்கை இல்லை. வாழ்வில் வெற்றி பெற இது ஒரு லைசன்ஸ் போல. மற்ற திறமைகள் மட்டுமே தீர்மானிக்கும்..

  ReplyDelete
  Replies
  1. விரிவான கருத்துக்கு நன்றி SSK

   Delete
 14. அருமையான பேட்டி. 'ஏதாவது செய்யணும் பாஸ்'ன்னு துடிப்போட இருக்கும் ஸ்ரீநாத்தின் கனவுகள் அனைத்தும் பலிக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அமைதி சாரல் மகிழ்ச்சி நன்றி

   Delete
 15. மிகமிக சிறப்பான உபயோகமான அருமையான உருப்படியான தகவல்களைக் கொண்ட கோடியில ஒரு பதிவு இது (சும்மா நச்சுன்னு இருக்குப்பா)..படிக்கப் படிக்க மெய்சிலிர்க்குதுப்பா..(20 வருசத்துக்குமுன்னாடி இந்தப்பதிவு வந்திருந்து அதை நான் அதை படிச்சிருந்தா .....ஹி...ஹி.. நானும் மாநிலத்தில் முதலாவதா வந்திருப்பேன்பா)....வாழ்த்துக்கள் ஸ்ரீநாத் மற்றும் மோகன்குமார்....என்னோட 6வது படிக்கிற பொண்ணுக்கு இதை படிச்சிக்காட்டி விளக்கியிருக்கேன்....மீண்டும் மிக்க நன்றி......

  ReplyDelete
 16. அருமையான பேட்டி.

  ஸ்ரீநாத் +2 விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தான் நினைக்கும் துறை கிடைத்து படிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. ஸ்ரீநாத் +2 விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிட வாழ்த்துகள்.

  நமது கல்வி மற்றும் தேர்வுமுறைகளில் உள்ள குறைபாடுகளே வாழ்வில் வெற்றிபெறமுடியாமைக்கு காரணமாகும். 10ஆம் வகுப்பு தேர்வு என்றாலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு என்றாலும் ஆறாம் வகுப்பில் படித்த பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்க்கப்படவேண்டும். சாய்ஸ் என்ற ஒன்று இருக்கவேகூடாது கேட்க்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவேண்டும். கல்வி என்பது கற்றது தன் வாழ்னாள் முழுதும் பயன்படும்படி இருக்கவேண்டும் ஆனால் இங்கோ வயிறு கொள்ளாமல் தின்று வாந்தியெடுப்பதாக இருக்கிறது.

  ReplyDelete
 18. This is for Srinath!
  Excellent Sri! A bouquet!

  This is for u
  A bouquet for this inspiring interview!

  ReplyDelete
 19. அருமையான பேட்டி.

  ReplyDelete
 20. உபயோகமுள்ள பேட்டி.. என் மகளை வாசிக்கச் செய்யவேண்டும்.(முதல் ரேங்க் வாங்க இல்லைம எப்படி படிக்க வேண்டும் என தெரிந்து கொள்ள)

  ReplyDelete
 21. good job Srinath keep up the good work

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...